Jump to content

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை. பாகம் 6


sathiri

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பழைய கதைகளை ஆதாரத்துடன் வைத்து என்ன செய்யப் போகின்றீர்கள்???? 29 வருடங்களுக்கு முன்பு நடந்த திருநெல்வேலிச் சம்பவம் 3 நாளுக்கு முன்பு நடந்த மாதிரிக் கதைக்கின்றீர்கள். உப்பிடித் தான் தமிழ் மொழி 2500 வருடங்கள் பழமை வாய்ந்தது, தமிழன் இத்தனை வருடங்களாய் இலங்கையில் இருந்தான் என்று அன்று தொடக்கம் இன்று வரை சொல்லிக் கோண்டே இருக்கின்றோம். எல்லாமே வாய் தான். மற்றும்படி எந்த மண்ணாங்கட்டியும் இல்லை, அதையும் சிங்களவன் தான் கொண்டு போறான்!!!!!!

சும்மா ஒரு கதைக்கு உங்கள ஒருவன் பாலியல் ரீதியாக வன்புணர்ந்திட்டார் என வையுங்கோ[தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கோ இப்படி எழுதுவதற்கு] அவனைப் பிடிக்க வேண்டும்,அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்டால் உங்களுக்கு அது எப்ப நடந்தது எனத் தெரிந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் எப்படி அவனை குற்றவாளி என நிரூபிப்பீங்கள்?...திகதியை,ஆண்டை மாத்திச் சொன்னால் ஆட்கள் உங்களைத் தான் பிழையாய் நினைப்பினம் அது முப்பது வருடத்திற்கு முன்னால் நடந்தாலும் சரி,மூன்று மாதத்திற்கு முன்னால் நடந்தாலும் சரி

Link to comment
Share on other sites

  • Replies 303
  • Created
  • Last Reply

கடந்துவந்தபாதை.

23 ந்திகதி யூலை மாதம் 83 ம் ஆண்டு வழைமைபோலவே விடிந்தது அவனும் காலை வழைமைபோல பாடசாலைக்கு புறப்பட்டு போயிருந்தான். பெடியள் நேற்று இரவு தின்னவேலிச் சந்தியிலை ஆமி றக்கை பிரட்டிப் போட்டாங்களாம். ஆமி கனக்க செத்திட்டாங்களாம். சந்தியில் செய்தியொன்று வதந்தியாக பரவிக்கொண்டிருந்தது. செத்த ஆமிக்காரரின் தொகையை ஆளிற்கொன்றாய் மாறி மாறி சொல்லிக்கொண்டிருந்தார்கள். குண்டு வெடிச்ச இடத்திலை தண்ணி வாற அளவு பெரிய கிடங்கு எண்டும் ஒருத்தர் சொன்னார். எதுக்கும் பள்ளிக்கூடம் முடிய சைக்கிளை தின்னவேலிப்பக்கம் ஒருக்கா விட்டுப்பாப்பம் எண்டு நினைத்தபடி பள்ளிக்கூடத்தடி சந்திக்கு வந்திருந்தான் .யாழ்ப்பாணம் ரவுணுக்கை ஆமிக்காரர் சனத்துக்கு அடிக்கிறாங்களாம் என்று சைக்கிளில் வந்தவர்கள் சொல்லிக்கொண்டு போனார்கள்.அங்கு அவனது மற்றைய பள்ளி சினேதங்களும் அந்த சம்பவத்தை பற்றித்தான கதைச்சு கொண்டு நின்றார்கள். டேய் செய்தி தெரியுமோ யாராயிருக்கும் என்றார்கள் . தெரியேல்லையடா உவங்களுக்கு வேறை வேலையில்லை உப்பிடித்தான் சொட்டிப்போட்டு எங்கையாவது ஓடிடுவாங்கள் பிறகு அவங்கள் வந்து நிக்கிறவன் போறவன் எல்லாரையும் இழுத்துக்கொண்டு போவாங்கள். எதுக்கும் மத்தியானம் தின்னவேலிப்பபக்கம் போய் பாக்கலாம். என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு இருநூறு மீற்றர் தூரத்தில் சிவா சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். சிவா வாறான் அவனிட்டையும் ஏதும் புதினம் கொண்டருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மினபஸ் வந்துகொண்டிருந்தது. அதே நேரம் மாதகல் பக்கமிருந்து சண் மினிபஸ்சும் வந்து கொண்டிருந்தது யாழ்ப்பாணம் ரவுணில் ஆமி அடிக்கிறான் என்கிற செய்தியை எதிரேயாழ்ப்பாணம் நோக்கி போகும் பஸ்சிற்காக சொல்வதற்காக அவர் கோணடித்து வேகத்தை குறைத்தபொழுது எதிரே வந்துகொண்டிருந்த சண்பஸ் நின்றது அதிலிருந்து கீழே குதித்த ஒரு ஆமிக்காரன் மற்றைய பஸ்சை நோக்கி சட்டதோடு மட்டுமல்லமல் றோட்டில் நின்றிருந்தவர்களையும் நோக்கி சுடத்தொடங்கினான். அதே நேரம் பஸ்சில் இருந்த மற்றைய இராணுவத்தினரும் யன்னலால் கண்டபாட்டிற்கு சுட்டனர். சண் பஸ்சில் வந்தது ஆமி அவங்கள்தான் சுடுகிறாங்கள் என்று தெரிந்து திகைத்து நின்றவன் சைக்கிளை போட்டுவிட்டு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுக்கட்டைகளிற்கு பின்னால் பாய்ந்து பதுங்கிக் கொண்டான் சனங்கள் அலறும் சத்தமும் யார் எங்கே போவது என்று தெரியாமல் சிதறிஓடியபடி இருந்தனர்.

எல்லாமே ஒரு சில நிமிடங்கள்தான் சண்பஸ் யாழ்ப்பாணம் நோக்கி போய்க்கொண்டிருந்தது. மெதுவாக தலையை நிமிர்த்தி பார்த்தான் சனங்கள் ஓடிக்கொண்டேயிருந்தனர். சிலபேர் நிலத்தில் விழுந்து கிடந்தனர். தோள்பட்டையில் காயமடைந்த வயதான ஒருத்தர் தேத்தண்ணி கடைக்குள் தண்ணி தண்ணி எண்டு கத்தியபடியே ஓடிவந்து மயங்கி விழுந்தார் இரத்தம் சீறிக்கொண்டிருந்தது. ஒரு வினாடியில் இந்த உலகத்திலிருந்து யாரோ அவனை யாரோ வேறொரு உலகத்திற்கு தூக்கி எறிந்து விட்டதுபோன்றதொரு பிரமை. துப்பாக்கியால் சுடுவதையும் மனிதர்கள் விழுந்து இறந்து போவதையும் அன்றுதான் முதன் முதலில் நேரே கண்களால் கண்டிருந்தான்.ஒரே ஓலமும் இரத்தமுமாயிருந்த வீதியில் தன்னை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு முயன்றுகொண்டிருந்தான் கை காலெல்லாம் உதறியது விழுந்து கிடந்தவர்களிடையே அவனது வகுப்புத் தோழன் சிவாவும் ஒருத்தன். அவனது வெள்ளைச் சீருடை சிவப்பாகிப் போயிருந்தது.இவன் சண்டிலிப்பாய் மாகியம்பதி(மாசியப்பிட்டி) யை சேர்ந்தவன்.அவனோடு சேர்த்து வேறும் மூன்று மாணவர்கள் பொதுமக்கள் சிலரும் இறந்து போயிருந்தனர்.சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடியவன் மருதடி பிள்ளையார் கோயில் தேர்முட்டி படிகளில் போய் குந்திக்கொண்டிருந்தான். அவனைச்சுற்றி நின்று கதைத்த மனிதர்களெல்லாம் மங்கலாகத் தெரிந்ததோடு சத்தம் மெதுவாக கேட்டது. சண்டிலிப்பாயிலையும் கனபேரை சுட்டுப் போட்டிருக்காம் மாதகல்லையிருந்து வெளிக்கிட்ட ஆமி றோட்டு றோட்டா சுட்டுகொண்டு போறாங்கள்.சைக்கிளை எடுத்து சண்டிலிப்பாய் பக்கமாக மிதித்தான் கட்டுடை சந்தியில் ஒருத்தரின் சடலம் கிடந்தது சண்டிலிப்பாய் சந்தியை கடந்தான் ஒரு மினி பஸ் நின்றிருந்தது அதில் ஏழுஉடல்களிற்கு மேல் கிடந்தது கொஞ்சத் தூரம் தள்ளி தலைசிதறி இறந்து கிடந்த ஒரு பெண்ணின் முளையை காகம் ஒன்று கொத்தி இழுத்துக்கொண்டிருந்தது.ஊர் இளைஞர்கள் உடலங்களை வைத்தியசாலைக்கு கொண்டுபோவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர். ஊரெல்லாம் இதேபேச்சுத்தான்.

அன்றைய காலத்தில் ஊரில் யாராவது ஒரு கிழவனோ கிழவியோ எப்படா போய்ச்சேரும் எண்டு எதிர்பார்த்துக்கொண்டிருந்து அவர் செத்துப் போனாலே ஊர் ஒரு கிழைமையாவது சோகமாயிருக்கும் அப்படியான காலகட்டத்தில் இந்தக் கொலைகள் யாழ்ப்பாணத்தையே உலுக்கியிருந்தது. அவன் மனதில் மட்டும் ஒரே கேள்வி திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்தது ஏன்?? இவர்கள் கொல்லப்படுமளவிற்கு செய்த குற்றம் என்ன?? மறுநாள் மாகியம்பதிக்கு நண்பனின் மரணவீட்டிற்கு சென்றிருந்தான் அவனது அம்மா அவனது நண்பர்களை ஒவ்வொருத்தராய் கட்டிப்பிடித்து பாருங்கோ ஜயோ இவன் என்னடா செய்தவன் உங்களை மாதிரித்தானே பள்ளிக்கு வந்தவன். இவனுக்கு மட்டும் ஏன் இப்பிடி ?? கடவுளே உனக்கு கண்இல்லையா என்று மண்ணை அள்ளி ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்து அவர் போட்ட ஓலம் பலநாட்களாகியும் காதிற்குள்ளேயே தங்கிவிட்டிருந்தது. தொடர்ந்து கொழும்பிலிருந்து செய்திகள் வெலிக்கடை என்று தொடங்கி மலையகம் அனுராதபுரம்வரை படுகொலைச் செய்திகள்தான். இலங்கை வானொலியிலும் றூபவாகினியிலும் தமிழ் செய்திகள் வாசித்தவர்கள் கூட காணாமல் போயிருந்தனர். காங்கேசந்துறையில் கப்பலில் தமிழர்கள் வந்திறங்கத் தொடங்கியிருந்தனர். அப்பொழுது பல இளவயதுக்காரர்களைப் போலவே அவனும் யோசித்தான் இவையெல்லாம் ஏன்?? தடுக்க முடியாதா??அடிக்கிறவனை திருப்பி அடிக்க முடியாதா?? முடியும் என்று ஊரில் சில இளைஞர்கள் சொல்லித் திரிந்தனர் நீங்களும் எங்களோடை சேருங்கோ கட்டாயம் திருப்பி அடிக்கலாம். அப்பதான் அவங்களுக்கு புத்திவரும் என்றனர்.. அவனும் முடிவெடுத்தான் இயக்கதில் சேரலாம்.

00000000000000000000000000000

அன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்பிற்கே இளைஞர்கள் அள்ளுப்பட்டு போக்கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் யாழ்ப்பாண சமூகம் எப்பொழும் சாதி கல்வி இவை இரண்டையும் அடிப்படையாக வைத்தே மற்றைய அனைத்தையும் எடைபோடும். அதன்படி புளொட் அமைப்பின் தலைவர் உயர் சாதிக்காரனாகவும் கல்வி கற்றவருமாகவும் இருந்தார். இவற்றிக்கு முன்னுரிமை கொடுத்தும். அதே நேரம் சந்ததியாரின் ஆளுமை மிக்க அரசியல் வேலைகள் பேச்சாற்றல் என்பவற்றாலும் புளொட் பெரும் வளர்ச்சியை கண்டிருந்ததுஇவனிற்கு புளொட்டிற்கு போக முடியாது காரணம் அவனது உறவுகள் பலர் புளொட்டின் முக்கியமானவர்களாக இருந்தனர் இவனை கண்டாலே போய் ஒழுங்கா படியடா என்று குட்டி அனுப்பிவிடுவார்கள். அடுத்த தெரிவு ஈ.பி.ஆர்.எல்.எவ். நவாலிப்பகுதியில் பகுதியில் போய் ஜேம்சை சந்தித்தான். வாங்கோ தோழர் என்று வரவேற்றவன் அவனது கையில் செஞ்சீனம்.கியூபாவிடுதலைப் போராட்டம் எண்டு இரண்டு புத்தகங்களை குடுத்து இதை படிச்சிட்டு வாங்கோ தோழர். அதிலை சில கேள்வியள் கேட்பன் சரியா பதில் சொன்னால் உங்களை பயிற்சிக்கு அனுப்பலாம். அடிக்கடி எங்கடை அரசியல் கூட்டத்துக்கும் வாங்கோ என்று வழியனுப்பிவைத்தான். கோயில் மடத்தில் வந்து குந்தியிருந்து செஞ்சீனத்தை புரட்டினான். அதை விளங்கிக் கொள்ள இன்னொரு தமிழ் அகராதி தேவைப்பட்டது. கியூபா புரட்சியை தூக்கிப்பார்தான் . புத்தகம் மொத்தமாயிருந்தது.

என்ன செய்யலாம் சுதுமலை பக்கம் போய் புலிகளின் அன்புவை சந்தித்தான். இடுப்பிலிருந்து கைக்குண்டு ஒன்றை எடுத்த அன்பு இதுதான் கிளிப் இதை இழுத்திட்டு கையை நல்லா மேலை தூக்கி கிறிக்கற் பந்து எறியிறமாதிரி எறிஞ்சிட்டு விழுந்து படுக்கவேணும். என்றவன் இடுப்பு பக்கம் இருந்து எடுத்த றிவோலவரை அவன் கையில் கொடுத்து இப்பிடி நீட்டி ஒற்றைக்கண்ணை மூடி தலையை சரிச்சு குறிவைந்து இந்த ரிகரை அமத்தவேணும். செஞ்சீனத்தைவிட அது இலகுவாக அவனிற்கு புரிந்தது. கியூபா விடுதலை புதக்கத்தை விட பாரம் குறைந்தாகவும் இருந்தது. அன்புவின் அரசியலே பிடித்திருந்தது. எப்ப றெயினிங்குக்கு அனுப்புவியள்??. முதல் எங்களோடை சேந்து வேலையள் செய் அதே நேரம் இங்கையே வினோத் உனக்கு பயிற்சியளும் தருவான்.எல்லாத்துக்கும் முதல் நீ சோதினையை எடுத்தால் பிறகுதான் றெயினிங்குக்கு அனுப்பலாம்.

0000000000000000000000000000000000

பரந்து விரிந்து கிடந்த கொளத்தூர் மணிஅவர்களின் பண்ணையின் ஒரு பகுதிதான் அவர்களது பயிற்சி முகாம். முதல்நாள் பயிற்சி பற்றிய சில விளக்கங்களுடன் பயிற்சிக்கான முதல் விசிலை பயிற்சிஆசிரியர் ஊதினார். உடம்பில் எங்கெங்கு எத்தினை மூட்டுக்கள் இருந்ததோ அத்தனையும் நோவெடுக்கத்தொடங்கியது. ஏனடாவந்தோம் என்றிருந்தது. அவனுக்கு மட்டுமில்லை அங்கை பயிற்சியெடுக்க வந்த அனைவருக்குமே இதுதான் நிலைமை. சிலபேர் தப்பியோடலாமா எண்டு யோசிச்சினம். ஆனால் அது முடியாது அந்த ஒதுக்குப்புறமான கிராமபகுதிலை எங்கை ஓடினாலும் பிடிபடவேணும். . அப்பிடி பிடிபட்டால் தண்டனையை பற்றி சொல்லத்தேவையில்லை. ஆரம்பத்தில் பயிற்சி களைப்பு எல்லாரும் உடைனையே நித்திரையாயிடுவாங்கள். சிலநான் செல்லத்தான் பிரச்சனை தொடங்கியது.அப்பதான் அந்த ஆசிரியர் வந்து உனக்கு பிரச்சனையெண்டால் வந்து என்ரை இடத்திலை படுஎன்றார்.அவர்தான் அந்த முகாமில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பற்றி விளக்கும் பாடம் நடத்துபவர். மற்ற பயிற்சி வாத்திமார் மாதிரி கடுமையாக நடக்கமாட்டார். பயிற்சி ஆசிரியர்களிற்கு தனித்தனியாக கொட்டில்கள் இருக்கும். வசதியாக படுக்கலாமெண்டு அவனும் அவரின் கொட்டிலிற்குள் போய் படுத்தான். பின்னை காலத்தில் அவன் இயக்கத்தில் வெடிபொருட்பிரிவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்ததில் அவரின் பங்கு முக்கியமானது. அதற்காக அவனை தயார்படுத்தியவர் அவரே.

நிருவாகத்தின் வேண்டுகோளிற்கிணங்க இப்பதிவில் மாற்றங்களை செய்து இணைத்துள்ளேன்

இப்படியெல்லாம் என்னை புகழக்கூடாது அது எனக்கு பிடிக்கதது ஆனாலும் கூகிள் ஆண்வரின் துணையோடு நிருபிக்காமல் அந்த தாக்குதலில் பங்கு கொண்டவர்களை கொண்டு வந்து நிரூபிக்கவும்.

போராட்டமே பலரின் கற்பனையாகிவிட்டது இதுக்கை நான் மட்டும் போட்டாலென்ல போடாட்டிலென்ன??

இதைத்தான் கற்பனையென்பது அது உங்களிற்கும் வருகின்றது முயற்சி செய்யுங்கள் :lol: :lol:

சாத்திரி நான் ஒரு விஷயம் சொன்னால் கோவிக்க மாட்டீங்களே. ? 23 ஆம் திகதி ஜூலை 1983 ஆண்டு ஒரு சனிக்கிழமை. அண்டைக்கு உங்களுக்கு யார் பாடசாலை வைச்சது என்று சொல்லுவீங்களே. :lol: :lol: :icon_idea:

இனி வந்து அது பின்னேர வகுப்பு. மேலதிக வகுப்பு என்று எல்லாம் கதை விடாதீங்கப்பா. ஏற்கனவே ரயர் பஞ்சர் . இதுக்குமேல தாங்காது. :lol: :lol:

இதுகெல்லாம் கூகிள் ஆண்டவர் துணை தேவை இல்லை சாத்திரி. கொஞ்சம் common sense / பொது அறிவு இருந்தால் போதும்.

நல்லகாலம் சாத்திரி நீங்கள் பாடசாலை முடிஞ்சு திருநெல்வேலி பக்கம் போகவில்லை. போயிருந்தால் அன்றைக்கு தாக்குதலுக்கு பதுங்கி இருந்த புலிகள் உங்களுக்கேள்ளே கிளைமோர் வைச்சிருப்பார்கள் :lol: :lol: :icon_idea:

பிறகு யார் வந்து எங்களுக்கு புலிகளை பற்றி கற்பனை கதை எழுதிறது. ஹ்ம்ம் ..

கேக்கிறவன் கேனையாக இருந்தால் ...................

தயவு செய்து இப்போ ஆவது உங்கட சுயசரிதைக்கு கீழே. யாவும் கற்பனை என்று போட்டுவிடுங்கள் பிளீஸ்..

திருத்தம்: ஜூலை விடுபட்டிருந்தது. நன்றி காதல்.

Link to comment
Share on other sites

சாத்திரி நான் ஒரு விஷயம் சொன்னால் கோவிக்க மாட்டீங்களே. ? 23 ஆம் திகதி ஜூலை 1983 ஆண்டு ஒரு சனிக்கிழமை. அண்டைக்கு உங்களுக்கு யார் பாடசாலை வைச்சது என்று சொல்லுவீங்களே. :lol: :lol: :icon_idea:

இனி வந்து அது பின்னேர வகுப்பு. மேலதிக வகுப்பு என்று எல்லாம் கதை விடாதீங்கப்பா. ஏற்கனவே ரயர் பஞ்சர் . இதுக்குமேல தாங்காது. :lol: :lol:

சாத்திரி அண்ணா கேட்டதற்கிணங்க ஓர் நல்ல ஆதாரம். அதுவும் அவர் கூறியவற்றிலிருந்தே....

ஜூலை என்பதை போட்டு விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

23திகதி தான் கலவரம் ஆரம்பமாகின..அவசரமாக அவசரமாக அந்த உடல்கள் 23ம் திகதியே கொழும்பு கொண்டு வரப்பட்டன் ..சாத்திரி சொன்ன மாதிரி 22ந்திகதி நள்ளிரவு கடந்த நிலையில் தான் நடைபெற்றது ..தமிழாக்கள் வெள்ளைக்காரன் மாதிரி சரியாக 12 மணி கடந்தாப் பிறகு திகதியை டாண் என்று மாத்திற மாதிரி மாத்திறதில்லை ..விடிந்தாப்பால் தான் அவர்களுக்கு திகதியே தொடங்கிறது ..இதாலை சாத்திரி சொன்ன திகதி பிழை இல்லை..என்று தான் நினைக்கிறன்

Link to comment
Share on other sites

தகவற்களஞ்சியம் விக்கிபிடியாவை பார்த்தேன், மோதல் சம்பவம்பற்றிய திகதியில் விடயங்களில் தெளிவு இல்லை, குழப்பங்கள் உள்ளன. ஆனால், இங்கு பகலவன் கூறிய‌ சனிக்கிழமை விடயம், அதை நாட்காட்டியில் பார்க்கும்போது ஜூலை 23, 1983 ஓர் சனிக்கிழமை என்பதை உறுதிசெய்யமுடிகின்றது.

 

இங்கே வேறோர்விடயத்தையும் கூறலாம் என நினைக்கின்றேன். சாத்திரியின் பள்ளிக்காலம் பற்றி எனக்குத்தெரியாது (மழைக்காவது பள்ளிக்கூடப்பக்கம் ஒதுங்கினாரா என்பது கேள்விக்குறி (சாத்திரி கோவிக்கக்கூடாது, சும்மா பகிடிக்குத்தான்)). ஆனால், நாங்கள் ஐந்தாம், ஆறாம், ஏழாம், எட்டாம் வகுப்பு படித்த காலங்களில் பொதுவாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விளையாட்டுக்கள், கிரிகெட், உதைபந்து மச்சுகள், விசேட வகுப்புக்கள், மற்றும் பல்வேறு விடயங்களுக்காக பள்ளிக்கூடம் செல்வது வழமை. சனி, ஞாயிறுகளில் சுமார் காலை எட்டு, எட்டு அரைக்குப்போனால் மதியம் ஒன்று, இரண்டு மணி சொச்சம் அல்லது அலுவல்கள் இல்லையென்றால் சற்றுமுன்பாகவே வீடு திரும்புவோம். பள்ளிக்கூடம் இல்லாத வாரவிடுமுறை, விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்போய் வேறுயாரும் முரட்டுபையன்கள் அங்குவந்து வாங்கு, மேசை, கதிரைகளை உடைத்து, பூ மரஞ்செடிகொடிகளை நசித்து, புடுங்கிவிட்டுப்போனால் கடைசியில் அப்பாவிகளான நாங்கள் குழப்படிகள் செய்தோம் எனும் குற்றச்சாட்டின்பேரில் திங்கட்கிழமை அதிபர்முன்னும், ஒழுக்கத்துக்கு பொறுப்பான ஆசிரியர்கள் முன்னும் விசாரணைக்கு செல்வதும் வழமை.

 

இங்கே  ஜூலை 23, 1983 சனிக்கிழமை பள்ளிக்கூடத்தில் எவ்வாறான விடயத்திற்கு தான்சென்றார் என்பதை தற்போது நினைவு இருந்தால் நினைவுபடுத்தி சாத்திரிதான் விளக்கம் கூறவேண்டும்.

 

இங்கு பகலவன் மேற்கோள் மூலம் சுட்டிக்காட்டிய "பள்ளிக்கூடம் முடிய" என்று சாத்திரி எழுதியபதத்தை, வழமையான பாடசாலை நாள் என்றும் நாம் கொள்ளத்தேவையில்லை. நாங்கள் எமது பேச்சுவழக்கில் கதைக்கும்போது பள்ளிக்கூடத்திற்கு வாரவிடுமுறையில் போனாலும் 'பள்ளிக்கூடம் முடிய' எனும் பதத்தை பாவிப்பது வழமை.

 

கறுப்பு ஜுலை சம்பவங்கள், திகதிகள்பற்றி தகவல் களஞ்சியத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை யாராவது நேரம் இருக்கும்போது பாருங்கள். தவறுகள் காணப்படின் அவற்றை நீங்களும் திருத்தலாம்.

Link to comment
Share on other sites

கடந்துவந்தபாதை.

23 ந்திகதி யூலை மாதம் 83 ம் ஆண்டு வழைமைபோலவே விடிந்தது அவனும் காலை வழைமைபோல பாடசாலைக்கு புறப்பட்டு போயிருந்தான். பெடியள் நேற்று இரவு தின்னவேலிச் சந்தியிலை ஆமி றக்கை பிரட்டிப் போட்டாங்களாம். ஆமி கனக்க செத்திட்டாங்களாம். சந்தியில் செய்தியொன்று வதந்தியாக பரவிக்கொண்டிருந்தது. செத்த ஆமிக்காரரின் தொகையை ஆளிற்கொன்றாய் மாறி மாறி சொல்லிக்கொண்டிருந்தார்கள். குண்டு வெடிச்ச இடத்திலை தண்ணி வாற அளவு பெரிய கிடங்கு எண்டும் ஒருத்தர் சொன்னார். எதுக்கும் பள்ளிக்கூடம் முடிய சைக்கிளை தின்னவேலிப்பக்கம் ஒருக்கா விட்டுப்பாப்பம் எண்டு நினைத்தபடி பள்ளிக்கூடத்தடி சந்திக்கு வந்திருந்தான் .யாழ்ப்பாணம் ரவுணுக்கை ஆமிக்காரர் சனத்துக்கு அடிக்கிறாங்களாம் என்று சைக்கிளில் வந்தவர்கள் சொல்லிக்கொண்டு போனார்கள்.அங்கு அவனது மற்றைய பள்ளி சினேதங்களும் அந்த சம்பவத்தை பற்றித்தான கதைச்சு கொண்டு நின்றார்கள். டேய் செய்தி தெரியுமோ யாராயிருக்கும் என்றார்கள் . தெரியேல்லையடா உவங்களுக்கு வேறை வேலையில்லை உப்பிடித்தான் சொட்டிப்போட்டு எங்கையாவது ஓடிடுவாங்கள் பிறகு அவங்கள் வந்து நிக்கிறவன் போறவன் எல்லாரையும் இழுத்துக்கொண்டு போவாங்கள். எதுக்கும் மத்தியானம் தின்னவேலிப்பபக்கம் போய் பாக்கலாம். என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு இருநூறு மீற்றர் தூரத்தில் சிவா சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். சிவா வாறான் அவனிட்டையும் ஏதும் புதினம் கொண்டருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மினபஸ் வந்துகொண்டிருந்தது. அதே நேரம் மாதகல் பக்கமிருந்து சண் மினிபஸ்சும் வந்து கொண்டிருந்தது யாழ்ப்பாணம் ரவுணில் ஆமி அடிக்கிறான் என்கிற செய்தியை எதிரேயாழ்ப்பாணம் நோக்கி போகும் பஸ்சிற்காக சொல்வதற்காக அவர் கோணடித்து வேகத்தை குறைத்தபொழுது எதிரே வந்துகொண்டிருந்த சண்பஸ் நின்றது அதிலிருந்து கீழே குதித்த ஒரு ஆமிக்காரன் மற்றைய பஸ்சை நோக்கி சட்டதோடு மட்டுமல்லமல் றோட்டில் நின்றிருந்தவர்களையும் நோக்கி சுடத்தொடங்கினான். அதே நேரம் பஸ்சில் இருந்த மற்றைய இராணுவத்தினரும் யன்னலால் கண்டபாட்டிற்கு சுட்டனர். சண் பஸ்சில் வந்தது ஆமி அவங்கள்தான் சுடுகிறாங்கள் என்று தெரிந்து திகைத்து நின்றவன் சைக்கிளை போட்டுவிட்டு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுக்கட்டைகளிற்கு பின்னால் பாய்ந்து பதுங்கிக் கொண்டான் சனங்கள் அலறும் சத்தமும் யார் எங்கே போவது என்று தெரியாமல் சிதறிஓடியபடி இருந்தனர்.

இங்கு பகலவன் மேற்கோள் மூலம் சுட்டிக்காட்டிய "பள்ளிக்கூடம் முடிய" என்று சாத்திரி எழுதியபதத்தை, வழமையான பாடசாலை நாள் என்றும் நாம் கொள்ளத்தேவையில்லை. நாங்கள் எமது பேச்சுவழக்கில் கதைக்கும்போது பள்ளிக்கூடத்திற்கு வாரவிடுமுறையில் போனாலும் 'பள்ளிக்கூடம் முடிய' எனும் பதத்தை பாவிப்பது வழமை.

நன்றி கலைஞன் உங்கள் தேடல்களுக்கும் தகவல்களுக்கும்.

மேலே சாத்திரி கூறிய "அவனும் காலையில் வழமை போல" என்ற பதம் ஒரு பிரத்தியேக வகுப்பிற்கு, அல்லது விடுமுறை வகுப்பிற்கு, அல்லது விளையாட்டு பயிற்சிக்காக சென்றார் என்று கொள்ள முடியுமா.?

இதை வைத்தே வழமையான பாடசாலை நாளாக அவர் கூறியதாக நான் எடுத்து கொண்டேன்.

மேலும் உங்கள் தகவல் களஞ்சிய விடயத்துக்கு வருகிறேன்.

On the July 23 was a quiet day in Jaffna, even though there were political activity in Mannar. That day at the Army Camp at Gurunagar under the command of Brigadier J.G. Balthazar, the army was preparing an ambush for a LTTE leader Sellakili, who had been engaged in terrorist activities. It was to be carried out by a group of Commandos with the call sign Four Four Charlie, at Kondavil.

At 2340 hours a message was sent to Brigadier Balthazar that radio contact with the patrol was lost and that a sentry had heard gunfire and explosions in the distance. The Army camps in Palali, Madagal, Thondamanar and Velvettiturai were alerted and the ambush prepared for Four Four Charlie was canceled by the Brigadier. It was sent in search of Four Four Bravo.

Four Four Charlie located the destroyed vehicles at 0009 hours and reported in. Cpl. R. A. U. Perera also telephoned from the Kondavil CTB Depot about that time

http://en.wikipedia.org/wiki/Four_Four_Bravo

The events dubbed Black July began after members of the rebels Liberation Tigers of Tamil Eelam (the Tamil Tigers or the LTTE) organization ambushed the military convoy Four Four Bravo in Thirunelveli, Jaffna on the evening of July 23rd, 1983. This was the latest of a string of Tamil rebels attacks targeting Sinhalese policemen. In the July 23rd massacre of 13 soldiers, initially, a road-side bomb was detonated beneath the jeep that was leading the convoy, injuring at least two soldiers on board

In order to avoid a violent backlash from the population due to the ambush,[7], the government decided to quietly bury the 15 soldiers at the Kanatte cemetery in Colombo[citation needed]. They would therefore be going against standard procedure where the fallen members of the armed forces were buried in their home villages.[7] On July 24th, the day the 15 servicemen were to be buried, some Sinhalese civilians who had gathered at the cemetery, angered by news of the ambush, which was magnified by wild rumor,[8] formed mobs and started attacking and assaulting Tamils, while looting and burning their properties in retribution for what happened. Members of the underworld criminal gangs then joined in.

http://en.wikipedia.org/wiki/Black_July

நான் நினைக்கிறேன், இங்கு சில விடயங்கள் தெளிவாகி இருக்கும் என்று. ஸ்டாலின் உங்களுக்கும் தான்.

Link to comment
Share on other sites

ஜூலை இன அழிப்பு கொழும்பில் ஆரம்பமானது ஒரு சனிக்கிழமைதான். அன்று நான் பள்ளிக்குச் செல்லவேண்டிய தேவை இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

23திகதி தான் கலவரம் ஆரம்பமாகின..அவசரமாக அவசரமாக அந்த உடல்கள் 23ம் திகதியே கொழும்பு கொண்டு வரப்பட்டன் ..சாத்திரி சொன்ன மாதிரி 22ந்திகதி நள்ளிரவு கடந்த நிலையில் தான் நடைபெற்றது ..தமிழாக்கள் வெள்ளைக்காரன் மாதிரி சரியாக 12 மணி கடந்தாப் பிறகு திகதியை டாண் என்று மாத்திற மாதிரி மாத்திறதில்லை ..விடிந்தாப்பால் தான் அவர்களுக்கு திகதியே தொடங்கிறது ..இதாலை சாத்திரி சொன்ன திகதி பிழை இல்லை..என்று தான் நினைக்கிறன்

கறுப்பு யூலை நினைவு நாளே 23 தொடங்கி 26 வரைதான் கொழும்பில் 23 ந்திகதியே கலவரம் ஆரம்பமாகி விட்டிருந்தது

Link to comment
Share on other sites

ஜூலை இன அழிப்பு கொழும்பில் ஆரம்பமானது ஒரு சனிக்கிழமைதான். அன்று நான் பள்ளிக்குச் செல்லவேண்டிய தேவை இருக்கவில்லை.

கலவரம் ஆரம்பமானது சனிக்கிழைமைதான் அதில் பாதிக்கப்பட்ட அனைவரிற்குமே அந்த சனி நினைவில் வரும் ஆனால் சனிக்கிழைமை பாடசாலைக்கு போகவேண்டியதில்லையென்று நீங்கள் உறுதியாக சொல்ல முடியாது ஏனெனில் மானிப்பாய் இந்துவில் சாறி அதிபராக இருந்த காலத்தில் படித்த பலர் இங்கு யாழ் களத்திலேயே இருக்கிறார்கள். அவர்களே வந்து எழுதுவார்கள் சனிக்கிமைமைகளில் என்ன நடப்பதென்று ஏனெனில் நான் சொன்னவற்றை நிறுவுவதற்காக நானே வாதாடுவதாக மற்றையவர்கள் நினைத்து விடுவார்கள் மற்றும் கலைஞன் சொன்னது போல் விக்கி பீடியா தகவல்களில் பல பிழைகள் உள்ளது அதுதான் 100 வீதம் என கூகிள் ஆண்டவரின் துணையோடு வரலாறு படிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது <_<

தமிழ் விக்கி ஊடகப் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன

கறுப்பு ஜூலை http://tawp.in/r/9qv

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

Blackjuly.jpg

சிங்கள ஓளிப்பட வல்லுநர் சந்திரகுப்த அமரசிங்க, இந்த தமிழ் இளைஞன் கொல்லப்படுவதற்குச் சற்றுமுன் எடுத்த ஒளிப்படம்

கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு துன்பவியல் நிகழ்வாகும் [மேற்கோள் தேவை]. இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

கலவரம் ஆரம்பமானது சனிக்கிழைமைதான் அதில் பாதிக்கப்பட்ட அனைவரிற்குமே அந்த சனி நினைவில் வரும் ஆனால் சனிக்கிழைமை பாடசாலைக்கு போகவேண்டியதில்லையென்று நீங்கள் உறுதியாக சொல்ல முடியாது ஏனெனில் மானிப்பாய் இந்துவில் சாறி அதிபராக இருந்த காலத்தில் படித்த பலர் இங்கு யாழ் களத்திலேயே இருக்கிறார்கள். அவர்களே வந்து எழுதுவார்கள் சனிக்கிமைமைகளில் என்ன நடப்பதென்று ஏனெனில் நான் சொன்னவற்றை நிறுவுவதற்காக நானே வாதாடுவதாக மற்றையவர்கள் நினைத்து விடுவார்கள் மற்றும் கலைஞன் சொன்னது போல் விக்கி பீடியா தகவல்களில் பல பிழைகள் உள்ளது அதுதான் 100 வீதம் என கூகிள் ஆண்டவரின் துணையோடு வரலாறு படிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது <_<

சாத்திரி அண்ணா.. நீங்கள் போனதைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல வரேல்ல.. :unsure: கொழும்பில அடிவாங்கிக் கொண்டிருந்த எனக்கு நீங்கள் மானிப்பாயில ஸ்கூல் போனது எப்பிடித் தெரியும்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா.. நீங்கள் போனதைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல வரேல்ல.. :unsure: கொழும்பில அடிவாங்கிக் கொண்டிருந்த எனக்கு நீங்கள் மானிப்பாயில ஸ்கூல் போனது எப்பிடித் தெரியும்? :lol:

இதைப் பார்த்து என்னாலே சிரிப்பை அடக்கவே முடியல்ல :lol: :lol: :lol::D :D :D :D :D

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணா.. நீங்கள் போனதைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல வரேல்ல.. :unsure: கொழும்பில அடிவாங்கிக் கொண்டிருந்த எனக்கு நீங்கள் மானிப்பாயில ஸ்கூல் போனது எப்பிடித் தெரியும்? :lol:

போக முதல் போனடிச்சு சொல்லிட்டுத்தானே போனனான். :lol: நீங்கள் பள்ளிக்கூடம் போகாதது பிரச்சனையில்லை நான் போனதுதான் பிரச்சனை இங்கு <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி இன்றுதான் உங்கள் அனுபவபகிர்வினை முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முதலில் சமூக விதிகளை உடைத்தெறிந்து புதிய சகாப்தம் படைத்திருக்கும் உங்களுக்கு தலைவணங்குகிறேன்.புலம்பெயர்ந்த நாடு ஒன்றில் வாழ்ந்துவந்தாலும் எந்தவொரு இடத்திலும் ஆங்கில சொற்களை பயன்படுத்தாமல் யாழ்ப்பான பேச்சுநடை மாறாமல் நீங்கள் எழுதியிருப்பதில் இருந்தே நீங்கள் தமிழையும் யாழ்ப்பாணத்தையும் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை அறியமுடிந்தது. இப்படி அழகாக எழுதுவது உங்களுக்கு இறைவன் தந்த கொடையே. உங்களிடம் இருந்து இன்னும் நிறைய ஆக்கங்களை எதிர்பார்க்கின்றேன். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சாத்திரி இன்றுதான் உங்கள் அனுபவபகிர்வினை முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முதலில் சமூக விதிகளை உடைத்தெறிந்து புதிய சகாப்தம் படைத்திருக்கும் உங்களுக்கு தலைவணங்குகிறேன்.புலம்பெயர்ந்த நாடு ஒன்றில் வாழ்ந்துவந்தாலும் எந்தவொரு இடத்திலும் ஆங்கில சொற்களை பயன்படுத்தாமல் யாழ்ப்பான பேச்சுநடை மாறாமல் நீங்கள் எழுதியிருப்பதில் இருந்தே நீங்கள் தமிழையும் யாழ்ப்பாணத்தையும் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை அறியமுடிந்தது. இப்படி அழகாக எழுதுவது உங்களுக்கு இறைவன் தந்த கொடையே. உங்களிடம் இருந்து இன்னும் நிறைய ஆக்கங்களை எதிர்பார்க்கின்றேன். வாழ்த்துக்கள்.

வெட்டி ஒட்டினதை படிச்சா இப்பிடி தான் தோணும். வெட்டாததை முழுமையா படிச்சிட்டு உங்கட கருத்தை சொல்லுங்கோ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு யூலை நினைவு நாளே 23 தொடங்கி 26 வரைதான் கொழும்பில் 23 ந்திகதியே கலவரம் ஆரம்பமாகி விட்டிருந்தது

இந்த விடுமுறை நாட்களில் எனக்கு ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக தனியார் கல்வி நிலையத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை.ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் என்னை நித்திரையால் எழுப்பிய என் அண்ணன் என் நிலமையை அறிந்து கொண்டு இன்றும் நீ வர வேண்டாம் நான் போகின்றேன் என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.அவர் முகத்தைக் கூடச் சரியாகப் பார்க்காமல் நான் மீண்டும் உறங்கிவிட்டேன்.

முற்பகல் 9 மணியளவில் வீட்டில் ஒரே பரபரப்பு.இரண்டாவதாக வீட்டிலிருந்து வெளியே சென்ற சின்னக்கா பேரூந்துகள் ஓடவில்லை என்றும் யாழ்ப்பாணத்தில் ஏதோ பிரச்னை என்றும் யாழ் சென்ற பஸ்கள் எல்லாம் திரும்பி வருகின்றன என்றும் கூறினார். ரியூசனுக்குப் போன என் அண்ணன் சென்ற பஸ் என்ன ஆனது என்று எவருக்கும் தெரியவில்லை.பிரதான வீதியில் நின்று திரும்பி வரும் பயணிகளையும் பஸ் ஓட்டுனர்களையும் விசாரித்தோம்.

யாராலும் சரியான பதிலைத் தர முடியவில்லை.

அப்போது அதே பஸ்ஸில் சென்ற ஒரு மாணவன் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரின் பாதுகாப்புடன் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார்.

அவர் கூறிய தகவலின் படி மானிப்பாயில் வைத்து என் அண்ணன் உட்பட 9 பேர் பஸ்ஸால் இறக்கி விடப்பட்டு சிங்கள இன வெறி பிடித்த ராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்தோம்................

Link to comment
Share on other sites

அதில் இறந்து போன வர்களில் 3 பேர் மாணவர்கள் ஒருவர் மாகியம்பதியை சேர்ந்தவர் மற்றையவர் கட்டுடை .அடுத்தவர் சித்தங்கேணி இவை எனக்கு ஞாபகம் இருக்கிறது இதில் உங்கள் அண்ணர் யார்?? கட்டுடையை சேர்ந்தவரா??

நீங்கள் சொல்லும் பாதரியார் மானிப்பாய் மெமோறியல் சிறுவர் விடுதியின் பொறுப்பாளராகஇருந்த ஜெபநேசன் அவர்கள். அவர்தான் சம்பவ இடத்திற்கு போய் அங்கிருந்த உடல்கள் மற்றும் காயப்பட்டவர்களை வைத்திய சாலையில் சேர்த்துவிட்டு இறந்தவர்களின் அடையாள அட்டையினை வைத்து தகவல்கள் சொல்லியவர். அப்பிடித்தான் நானும் கிழே கிடந்த மாணவர் அடையாள அடடையை எடுத்து கொண்டு போய் கட்டுடை பகுதியில் ஒரு வீட்டில் கொடுத்ததும் அவர்கள் செத்தவீடு கொண்டாட தொடங்கி விட்டார்கள் பின்னர் அந்த மாணவன் உயிருடன் திரும்பி போன பொழுது எல்லாரிற்கும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியாகி போனது அது கட்டுடை தபால் கந்தோருக்கு பக்கத்து வீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில் இறந்து போன வர்களில் 3 பேர் மாணவர்கள் ஒருவர் மாகியம்பதியை சேர்ந்தவர் மற்றையவர் கட்டுடை .அடுத்தவர் சித்தங்கேணி  இவை எனக்கு ஞாபகம் இருக்கிறது  இதில்  உங்கள் அண்ணர் யார்??  கட்டுடையை சேர்ந்தவரா??

நீங்கள் கூறிய எந்த இடத்தையும் நான் சேர்ந்தவன் அல்ல. நான் கூறவந்தது 23ம் திகதியே திருநெல்வேலித் தாக்குதல் நடந்தது.விடிந்ததும் ராணுவத்தினர் எல்லா முகாம்களிலும் இருந்து வெளியேறி வீதி வீதியாகச் சரமாரியாகச் சுட்டுக்கொண்டு வந்தார்கள்.அப்போது மானிப்பாயில் அவர்களின் கண்ணில்பட்ட பேரூந்தை மறித்து உள்ளிருந்த பலரை இறக்கி அருகே இருந்த கடையின் வாசலில் வரிசையாக நிற்க வைத்துச் சுட்டார்கள்.அந்த சம்பவத்தில் எனது அண்ணனும் இறந்தார். இது நடந்தது 24 ம் திகதி காலை கிட்டத்தட்ட எட்டு மணியளவில்

Link to comment
Share on other sites

நீங்கள் கூறிய எந்த இடத்தையும் நான் சேர்ந்தவன் அல்ல. நான் கூறவந்தது 23ம் திகதியே திருநெல்வேலித் தாக்குதல் நடந்தது.விடிந்ததும் ராணுவத்தினர் எல்லா முகாம்களிலும் இருந்து வெளியேறி வீதி வீதியாகச் சரமாரியாகச் சுட்டுக்கொண்டு வந்தார்கள்.அப்போது மானிப்பாயில் அவர்களின் கண்ணில்பட்ட பேரூந்தை மறித்து உள்ளிருந்த பலரை இறக்கி அருகே இருந்த கடையின் வாசலில் வரிசையாக நிற்க வைத்துச் சுட்டார்கள்.அந்த சம்பவத்தில் எனது அண்ணனும் இறந்தார். இது நடந்தது 24 ம் திகதி காலை கிட்டத்தட்ட எட்டு மணியளவில்

நல்லது நீங்கள் சொல்லும் திகதிப்படி அது ஞயிற்றுக் கிழைமை ஆனால் சனிக்கிழைமையே கொழும்பில் கலரவரம் தொடங்கி விட்டிருந்தது இது பொது தகவல். எனது நினைவுப்படி அது சனிக்கிழைமை ஆனால் இறந்து போன உங்கள் அண்ணர் மானிப்பாய் சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர் அல்ல ஆனானாலும் எங்கேயோ இருந்தவர் மானிப்பாய் சந்தியில் இறந்து போன சோகம் கவலைதான் அவர் சிலநேரம் மானிப்பாய் இந்து விடுதியில் அல்லது மெமேறியல் விடுதியில் இருந்தவராக இருந்திருக்கலாம். ஆனால் உங்களை காலை எழுப்பி கதைத்ததாக கூறியிருககிறீர்கள். அப்பொழுது அதன் சுற்று வட்டாரமும் இல்லை எது எப்படியோ அண்ணனை இழந்த உங்கள் குடும்பத்தினரிற்கு எனது அனுதாபங்கள். வாத்தியார் அவை மறக்க முடியாத நாட்கள்

Link to comment
Share on other sites

நூல் :- "விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு (1975 - 1984)"

வெளியீடு :- விடுதலைப் புலிகள் வெளியீட்டு எண்; 11

முதல் பதிப்பு :- மார்ச் 1985

விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட இந்த நூலின் சில பக்கங்களை இணைத்துள்ளேன்

post-831-0-90614800-1334526650_thumb.jpg

post-831-0-01819000-1334526655_thumb.jpg

post-831-0-72990600-1334526662_thumb.jpg

post-831-0-90359600-1334526665_thumb.jpg

Link to comment
Share on other sites

சிறி அண்ணா, நன்றி பகிர்வுக்கு. இதோடயாவது தான் எழுதினது பிழை என்று சாத்திரி அண்ணா ஒப்புக்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

நான் இணைத்துள்ள பக்கங்கள் 3, 4, 1, 2 என்றதொடர் 1,2,3,4 தொடரிலே வரவேண்டும் தயவு செய்து மட்டுறுத்தினர் அதை சரிப்படுத்தி விடவும்.

4 பக்கத்தில் ஜூலை 24 இல் இருந்து தமிழர்களுக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதாக எழுதியுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

சாத்திரி, கண்ணிவெடி சனிக்கிழமை இரவு வெடித்தது என்பதே உலகின் பிரபலமானதும், பழையதுமான நியூயார்க் டைம்ஸ் தகவல் ஆகும். ஜூலை மாதம் இருபத்தேழாம் திகதி ஆயிரத்து தொழாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு பதிப்பு செய்தியை கீழே பாருங்கள். இங்கு கடைசி வசனம் இவ்வாறு உள்ளது: 

Tamil extremists have been waging a campaign of terror for a separate state. The latest violence began with a Tamil ambush Saturday night that killed 13 men in an army patrol in Jaffna.

முழுச்செய்தி: Published: July 27, 1983

AROUND THE WORLD; 100 Are Believed Dead In Rioting in Sri Lanka

COLOMBO, Sri Lanka, July 26— More than 100 people are believed dead in rioting in Sri Lanka, according to a survey of police stations and other sources. Meantime, arson and looting lessened today in Colombo as troops and police officers patrolled the capital.

The dead in fighting between the minority Tamils and the Sinhalese included 35 Tamil prisoners killed Monday by other inmates in a Colombo jail, the Government radio station said.

A curfew went into effect in Colombo and other areas Monday and was extended today to the rest of the island nation off the southern tip of India.

Tamil extremists have been waging a campaign of terror for a separate state. The latest violence began with a Tamil ambush Saturday night that killed 13 men in an army patrol in Jaffna.

http://www.nytimes.com/1983/07/27/world/around-the-world-100-are-believed-dead-in-rioting-in-sri-lanka.html?scp=3&sq=sri+lanka&st=nyt

Link to comment
Share on other sites

ஆதாரங்களை நேரடியாக இணைத்த சிறி பகலவன் கலைஞனிற்கு நன்றிகள்.நான் என் ஞாபகங்களை மட்டுமே பதிவாக்குதால் நீண்ட கால நிகழ்வு என்பதாலும் திகதியில் தவறு ஏற்பட்டுவிட்டது வருந்துகிறேன். மற்று;ம் பின்னர் பல பதிவுகளையும் இணையத்தில் தேடிய பொழுது பதிகவுளில் திகதி குழப்பம் தொடரவே செய்தது பல இடங்களில் 23 ந்திகதி என்றும் பல இடங்களில் 24 என்றும் இருந்தது பின்னர் வாத்தியாரின் இணைப்பும் என்னை மீண்டும் சம்பவங்களை அசைபோட வைத்தது .பதிவிலும் திகதி திருத்தம் செய்து விடுகிறேன் நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறிய எந்த இடத்தையும் நான் சேர்ந்தவன் அல்ல. நான் கூறவந்தது 23ம் திகதியே திருநெல்வேலித் தாக்குதல் நடந்தது.விடிந்ததும் ராணுவத்தினர் எல்லா முகாம்களிலும் இருந்து வெளியேறி வீதி வீதியாகச் சரமாரியாகச் சுட்டுக்கொண்டு வந்தார்கள்.அப்போது மானிப்பாயில் அவர்களின் கண்ணில்பட்ட பேரூந்தை மறித்து உள்ளிருந்த பலரை இறக்கி அருகே இருந்த கடையின் வாசலில் வரிசையாக நிற்க வைத்துச் சுட்டார்கள்.அந்த சம்பவத்தில் எனது அண்ணனும் இறந்தார். இது நடந்தது 24 ம் திகதி காலை கிட்டத்தட்ட எட்டு மணியளவில்

எனது நண்பர்களின் அப்பாவும் இதில ஒருவர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.