Jump to content

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கோ

Recommended Posts

யாருக்காவது கட்லட் பண்ணத்தெரியுமா? தெரிந்தால் செய்முறையை இந்த திரியில் இணைத்து விட முடியுமோ..? மரக்கறி கட்லட் செய்முறைதான் வேண்டும் :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி கேக்கிறன் எண்டு குறை நினைக்காதீங்கோ.. இலை,குழைக்கு கோடை கால விடுமுறை குடுத்துட்டியள் அப்படியோ ?ஏன் கேக்கிறன் எண்டால் சைவக் கட்லட் செய்முறை கேக்கிறயள் அது தான்.. :(:(

Link to comment
Share on other sites

யாருக்காவது கட்லட் பண்ணத்தெரியுமா? தெரிந்தால் செய்முறையை இந்த திரியில் இணைத்து விட முடியுமோ..? மரக்கறி கட்லட் செய்முறைதான் வேண்டும் :( :(

எனக்கு கட்லெட் செய்வது தெரியாது ஆனால் கட்லெட் என்றபெயரில் கல்லுலட் செய்பவர்களை தெரியும் அவர்கள் விலசம் வேனுமா?

Link to comment
Share on other sites

யாருக்காவது கட்லட் பண்ணத்தெரியுமா? தெரிந்தால் செய்முறையை இந்த திரியில் இணைத்து விட முடியுமோ..? மரக்கறி கட்லட் செய்முறைதான் வேண்டும் :( :(

மரக்கறி கட்லட் செய்வத்தற்கு நீங்கள் உங்களுக்கு விருப்பமான மரக்கறிவகைகளை தெரிவு செய்யலாம். உதாரணத்திற்கு, பட்டாணி அவத்தது, இனிப்புச் சோளம் ரின், சிவப்பு அவரை ரின் (red kidney beans)

இவற்றை சேர்த்தால் சோயா இறைச்சி தேவை இல்லை.

தேவையான பொருட்கள்

சோயா இறைச்சி- அவித்தது 1கப்

(சோயா இறைச்சி சிலருக்கு அலர்ஜி ஆக இருக்கும், வீட்டில் யாருக்கும் அலர்ஜி இருக்கா என்று நன்கு

அறிந்த பின் இவற்றை சேர்ப்பது நல்லது)

உருளைக் கிழங்கு அவித்தது-5

கரட் துருவியது-3

லீக்ஸ் / வெங்காயத் தாள்- 1 மிகச் சிறிதாக வெட்டியது

வெங்காயம்-1 /2 சிறிதாக வெட்டியது

பச்சை மிளகாய்-4 சிறிதாக வெட்டியது

கருவேப்பிலை-சிறிதாக வெட்டியது

கொத்தமல்லி இலை-சிறிதாக வெட்டியது

மிளகு தூள்

மஞ்சள் தூள்

முட்டை -2

பாண் துகள்கள் (bread crumbs)

எண்ணெய்

செய்முறை

அவித்த உருளைக் கிழங்கை உருத்தி அதனுடன் துருவலாகிய கரட், சிறிதாக வெட்டிய லீக்ஸ்/வெங்காயத் தாள், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை இவற்றுடன் தேவைக்கு ஏற்ப உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள் (வேணும் என்றால் மிளகாய் தூள்) அதனுடன் முட்டை மஞ்சள் கருவையும் சேர்த்து பிசைந்தது எடுக்கவும். (முட்டை வெள்ளைக் கருவைத் தனியாக எடுத்து நுரை வரும் வரை அடித்து வைக்கவும்)

அளவான உருண்டைகலாகவோ அல்லது உங்கள் தேவைக்கு ஏற்ப அளவில் உருட்டி எடுத்து முட்டை வெள்ளைக் கருவில் இரு பக்கங்களும் தோய்த்து அதன் பின் பாண் தூளை மேலே தூவி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

vegetableCutlet.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காவது கட்லட் பண்ணத்தெரியுமா? தெரிந்தால் செய்முறையை இந்த திரியில் இணைத்து விட முடியுமோ..? மரக்கறி கட்லட் செய்முறைதான் வேண்டும் :lol: :lol:

-------

தேவையான பொருட்கள்

முட்டை -2

செய்முறை

அவித்த உருளைக் கிழங்கை உருத்தி அதனுடன் துருவலாகிய கரட், சிறிதாக வெட்டிய லீக்ஸ்/வெங்காயத் தாள், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை இவற்றுடன் தேவைக்கு ஏற்ப உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள் (வேணும் என்றால் மிளகாய் தூள்) அதனுடன் முட்டை மஞ்சள் கருவையும் சேர்த்து பிசைந்தது எடுக்கவும். (முட்டை வெள்ளைக் கருவைத் தனியாக எடுத்து நுரை வரும் வரை அடித்து வைக்கவும்)

அளவான உருண்டைகலாகவோ அல்லது உங்கள் தேவைக்கு ஏற்ப அளவில் உருட்டி எடுத்து முட்டை வெள்ளைக் கருவில் இரு பக்கங்களும் தோய்த்து அதன் பின் பாண் தூளை மேலே தூவி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

eier.jpg

இந்த கட்லற்றுக்கு முட்டை சேர்ப்பதால் கோயில் திருவிழா, நவராத்திரி, சிவராத்திரி போன்ற விரதம் பிடிக்கும் நாட்களில் சாப்பிட முடியாது.

முட்டையும் போடாமல்..... கட்லற் செய்ய ஏலாதா?

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ernaehrung002.gifloves-chocolate-51.gif

நன்றி குட்டி இணைப்பிற்க்கு... சிறி அண்ணை சொன்னது போல் முட்டை இல்லாமல் பண்ண முடியதோ? முட்டை பார்த்தாலே சாப்பிடுவதை அப்படியே கிழே போட்டு விடுவன்... :lol:

நன்றி இணையவன் அண்ணா இணைப்பிற்க்கு...

Link to comment
Share on other sites

eier.jpg

இந்த கட்லற்றுக்கு முட்டை சேர்ப்பதால் கோயில் திருவிழா, நவராத்திரி, சிவராத்திரி போன்ற விரதம் பிடிக்கும் நாட்களில் சாப்பிட முடியாது.

முட்டையும் போடாமல்..... கட்லற் செய்ய ஏலாதா?

.

நன்றி குட்டி இணைப்பிற்க்கு... சிறி அண்ணை சொன்னது போல் முட்டை இல்லாமல் பண்ண முடியதோ? முட்டை பார்த்தாலே சாப்பிடுவதை அப்படியே கிழே போட்டு விடுவன்... :lol:

...

அது சரி... :lol: விரதம் பிடிக்கிற நாட்களிலையே கட்டாயம் கட்லட் சாப்பிட வேணும்? :lol: நல்லாத் தான் விரதம் போகுது போல இருக்கு... :lol: :lol: (சும்மா பகிடிக்கு)

கட்லட்க்கு முட்டை சேர்ப்பதன் காரணம், இரண்டு பதார்த்தை சேர்ப்பதற்கு... முட்டை இல்லாமல் என்றால்....

மஞ்சள் கரு இல்லாமல், செய்து பார்க்கலாம்... வெள்ளைக்கருவுக்குப் பதிலாக இரண்டு பக்கமும் பூசுவதற்கு சோளம் மா/ அல்லது கோதுமை மாவை சிறிதளவு நீரில் கரைத்து அதில் தோய்த்து அதன் பிறகு பாண் துகள்களை தூவி பொரித்துப் பாருங்கள், கொஞ்சம் மெதுமை குறைந்தே வரும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாவூற வாயூற வில் 3 ம் பக்கத்தில் 9 ம் வரியில் " சைவ ரோல் செய்வது எப்படி " என்று போட்டிருக்கு. அதில் நல்ல செய் முறைகளும் முட்டைக்கு பதில் மரக்கறி சோஸ் செய்யும் முறையும் போட்டிருக்கு! பார்த்துச் செய்யவும்! :lol:

ரதியும் ஒரு நல்ல செய்முறை அதில் போட்டிருக்கிறா, ஆனால் பொருட்களின் அளவுகள் இல்லை, எல்லாம் தனது கை அளவுகலாம், முடிந்தால் அதை இரவல் வாங்கி உபயோகித்து விட்டு கொடுக்கவும்! :lol:

குட்டியின் செய்முறையும் நல்லம், கட்லட், ரோல், போண்டாவுக்கு காரட், பூசணி போடுவது எனக்கு ருசியில்லை! காரத்தை கெடுத்து விடும்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் முட்டை சைவமா அசைவமா

பண்ணை அறிவியல் துறையின் டாக்டர்.அஜீத் ரானடே அவர்கள் பண்ணைக் கோழி முட்டைகள் நிச்சயம் சைவம் என்றும் நாட்டுக் கோழி முட்டைகள் அசைவமாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்.மேலும் சொல்கிறார், "ஒரு பெட்டைக் கோழி முட்டையிட சேவலின் துணை தேவையில்லை. குறிப்பிட்ட பருவத்திற்குப் பின் சேவல் துணையின்றி முட்டை போட முடியும். இவ்வகையான முட்டைகள் சைவம். இவை உயிரற்ற முட்டைகள் (Non-fertile eggs.) என அறியப்படுகின்றன.இவை பண்ணைக் கோழிகளில் (English Hens) மிகப்பொதுவானவை.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சேர்மன் M.B.தேசாய் அவர்களுக்ம் இதை ஆமோதிக்கிறார். மேலும் வர்த்தகரீதியில் கோழிப்பண்ணைகள் இவற்றை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்கிறார்.அண்ணல் காந்தி அடிகளும் முட்டையை சைவம் என ஏற்றுக் கொண்டுள்ளார். " சுத்தமான பால் சைவமாக இருக்கும் போது நிச்சயம் முட்டையும் சைவம்தான் என்றார்.

என்ன வேறுபாடு?

நாட்டுக் கோழி பிறந்து 22-28 நாளிலிருந்து முட்டையிடும். இவை சேவலுடன் இணைந்த பிறகே முட்டையிடுகின்றன. இத்தகைய முட்டையின் வளர்ச்சியானது சேவலுன் இணைந்த மூன்றாவது நாள் முதல் தொடங்குகிறது. நாட்டுக் கோழி முட்டையை 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இருபத்து ஒரு நாட்களுக்கு வைத்தால் கோழிக்குஞ்சு உருவாகி விடும் இத்தகைய கருவுள்ள முட்டைகள் அசைவம். ஆனால் பண்ணைக் கோழிகள் பிறந்த 18 நாளிலிருந்தே முட்டையிடத் தொடங்கி விடுகின்றன. இதனால் இவை உயிரற்ற முட்டைகளாதலால் சைவம் என்கிறார். டாக்டர்.ராணடே.

முட்டையின் சிறப்புகள்

ஒரு 100 கிராம் எடையுள்ள முட்டையில் புரோட்டீன் 12.04 கிராம், கொழுப்பு 11.15 கிராம் மற்றும் 158 கலோரி தாதுச்சத்து மற்றும் கார்போஹைடிரேட் 1.2 கிராம். மேலும் 74.57 அளவுக்கு உயர் வளப்புத்தன்மையானது.

மேலும் டாக்டர்.ராணடே "இதனால்தான் மருத்துவர்கள் முட்டையை சிறந்த ஆகாரமாக பரிந்துரைகின்றனர்." என்கிறார்.

மருத்துவக் குறிப்பு

டாக்டர்.ராணடே, தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலின் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என்ற கூற்றை ஆதாரங்களுடன் மறுத்துள்ளார். உடலுக்குத் தேவையான தாதுச்சத்தையும் விட்டமின்-சி தவிர்த்த அனனத்து விட்டமின்களையும் முட்டை வழங்குகிறது" என்கிறார்.

சைவமுட்டையை எப்படி அறிவது?

ஒரு முட்டையை மின்சார பல்பின் அருகில் வைத்துப்பார்த்தால் முட்டையின் உள்ளே வெள்ளைக் கோடுகள் படலமாக தெரிந்தால் அது அசைவம். தெரியாவிட்டால் சைவம். நன்றி: மிட்டே

நன்றி: http://www.yarl.com/forum/index.php?showtopic=6971&pid=132430&mode=threaded&show=&st=&#entry132430

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.