Jump to content

"தமிழ் ஈழம்" ஆவணப் படம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=AwlW5mtC33U

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், தமிழ் சிறி!

 

பல விடயங்களை முன்பே ஓரளவுக்குக் 'கேள்வியறிவால்' அறிந்திருந்த போதும், இந்தக் காணொளியில் சான்றுகளுடன் தொகுக்கப்பட்ட விதம் மிகவும் நன்றாக உள்ளது!

 

இந்தக் காணொளியை, சாதாரணமாக வெறுமே வெளியிடுவதிலும் பார்க்க, ஒரு பல்கலைக்கழகம் அல்லது ஆய்வு மையம், ஆகியவை மூலம் வெளியிட்டால், இதன் பெறுமதி அதிகரிக்கும்! அத்துடன் வேறு மொழிகளிலும் வெளியிடப்பட்டு, தொலைக்காட்சிகளின் மூலம், ஆவணப் படங்களாக அதிகப் படியான மக்களைச் சென்றடைய வழி செய்ய வேண்டும் என்பதே எனது அவா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு. ஈழ வரலாறுகளுடன் ஒப்பிடுகையில், ஒரு சிறிய பகுதி என்றாலும், இந்த 60 ஆண்டுகள் எம் கண் முன் நடந்தவை மிகக் கொடூரம். நாம் சாமர்த்தியமாக காய் நகர்த்தினால் வெற்றி நிச்சயம். கால சுழற்சியில் பல மாற்றங்கள் வரும்.

இந்த கால சுழற்சியின் பிரதான காரணிகள்: இயற்கை, அரசியல், பொருளாதாரம். சுற்று சூழலை பாது காக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனினது கடைமையாகும். நிலம் இல்லா விட்டால் அரசியல் செய்யவும் ஏலாது, பணம் இருந்தும் பிரயோசனம் இல்லை.

நாம் இப்ப மும்முரமாக செய்ய கூடியது, அரசியலும் பொருளாதார முன்னேற்றமுமே. தமிழர் சிங்களவரை விட மிக உயர்ந்த நிலையில் இருந்தால், அடுத்த 25-50 வருடங்களில் இலங்கை தீவின் கட்டமைப்பு எமக்கு சாதகமாக மாறலாம்.

80 வருடங்களாக தாம் இழந்த மண்ணை சிங்களவர்கள் திரும்பவும் பெற்றனர் என்றால், அவர்களும் கடுமையாக சோழ பேரரசுக்கு எதிராக போராடி இருக்க வேண்டும். 100 வருடங்களாக தமிழருக்கு ஆதரவாக இருந்த ஆங்கிலயேர், விட்டு செல்லும் பொது ஏன் எமக்கு சாதகமான தீர்ப்பை தரவில்லை. நாம் எமது அரசியல் பொருளாதார தளங்களை சரியாக சீரமைக்கவில்லை. இப்போது திரும்பவும் எமக்கு சாதகமான சூழல் உருவாகிறது, இதில் உட்கார்ந்து சுக போகம் அனுபவிக்காமல், இதை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.

எமக்கு நேர்ந்த நேர இருக்கும் ஆபத்துகளை அடுத்த சந்ததிக்கும் எடுத்து செல்ல வேண்டும், எப்போதும் விழிப்பு நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த வரலாறுகள் எல்லாம் எமக்கு நல்ல படிப்பினையை விட்டு சென்று இருக்கிறது. ஒரு சிறு தீவில் மட்டும் வாழ்ந்த ஆங்கிலயேர் உலகம் முழுக்க ஆண்டு, இப்போது உலக அரசியல், பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக நிலைத்து நிக்கிறார்கள் என்றால், நாம் ஏன் இலங்கை ஆழ முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா? எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ?? அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !! கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம் கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான் உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான் கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் .. உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர் உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று அந்த நாடு தான் இஸ்ரேல்.

 

FB

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.