Jump to content

துன்னாலைப் பொடியன்


Recommended Posts

நடந்து முடிந்த ஆறாம் வகுப்புக் கணிதப்பரிட்சையில் வெறும் எண்பது புள்ளிகள் மட்டும் எடுத்திருந்தமை சிறுவனின் வீட்டில் கலம்பகமாகியிருந்தது. ஆர்ப்பாட்டங்கள், திட்டல்களின் பின்னர், கணக்கில் நூறு எடுக்கவேண்டியதன் அவசியம் எடுத்தியம்பப்பட்டு அன்றைய இரவு ஓய்ந்திருந்தது. விக்கிக்கொண்டு சிறுவன் தூங்க முயன்றுகொண்டிருந்தான். உலகை நோக்கி ஒரு ஆவேசம் அவனுள் உணரப்பட்டது. "நெற்றிக்கண் பெறுவதற்கு வழியிருப்பின்…" பெருமூச்சு விட்டபடி, நெற்றியினைச் சுருக்கி, அறையின் ஜன்னல் மீது தனது கற்பனைக் கண்ணைப் பிரயோகித்தான். வீடே அதிர்ந்தது. குறிப்பாக ஜன்னல் கண்ணாடி நொருங்கி விழுவது திண்ணம் என்பது போல் அந்த அதிர்வு இருந்தது. வீட்டை உடைத்துவிட்டோமோ என்ற பதைபதைபதைப்பில், மேலும் அடிவாங்காது தப்பிக்கொள்வதற்காக, கண்களை இறுக்க மூடிக்கொண்டு நித்திரை போல் பாசாங்கு செய்ய ஆரம்பித்தான்.
 
வீடு மீண்டும் களேபரப்பட்டது. கூடத்தில் அப்பாவும் அம்மாவும் தாத்தாவும் பரபரக்கப் பேசிக்கொண்டிருந்தார்கள். சில கணத்தில் வேறும் சில குரல்கள். பக்கத்து வீட்டு அன்ரியும் அம்மம்மாவும் வந்துவிட்டார்கள். முன்வீட்டு அண்ணையும் அவர்கள் பக்கத்துவீட்டு அண்ணையும் கூட வந்துவிட்டார்கள். அதிர்ந்தது இவர்கள் வீடு மட்டுமல்லவாம். அயலே அதிர்ந்ததாம். உடல் தெப்பமாய் நனைந்திருந்தது, உடலில் இருந்து பல்வேறு திரவங்கள் அவ்வெள்ளத்தை உருவாக்கியிருந்தன. குழறி அழுதுவிடவேண்டும் போல் தோன்றியது. வேண்டுமென்று நான் செய்யவில்லை என விம்மி அழவேண்டும் போலிருந்தது. இன்னமும் எவரும் தன்னை எழுப்ப வராதமை சற்று நம்பிக்கை தந்தபோதிலும், தனது அழிவுக்கான நேரம் நொடிகள் மட்டுமே என மனம் மிரட்டிக்கொண்டிருந்தது. "நாசமாப்போன கணிதம்" என்று பற்களை நறும்பிக்கொண்டு சிறுவன் குலுங்கி அழத் தொடங்கினான். அவனது அழுகையின் ஒலியினை இதற்குமெலால் அவனால் கட்டுப்படுத்தமுடியவில்லை. குரலெடுத்து அழத்தொடங்கினான். யாரோ ஓடி வருவது கேட்டது.
 
அம்மாவந்து அணைத்துக்கொண்டார். 
 
"அப்பன் அழாதை, சண்டை இஞ்சையில்லையப்பு, அது எங்கையோ தூர நடக்குது. நீ பயப்பிடாத."
 
அம்மா சமாதானப்படுத்தினார். சுவிட்ச்சைப் போட்டது போல் அழுகை நின்றது. அம்மாவிற்குத் தனது அணைப்பின் பெருமை தலைக்கனம் தந்தது. சிறுவன் எழுந்து அம்மாவுடன் கூடத்திற்கு வந்து கூட்டத்தில் சேர்ந்து கொண்டான். அடுத்த ஒரு மணிநேரம் வரை, மேலும் ஒலிகளிற்காய் காது குடுத்தபடி கூட்டம் கூடியிருந்தது. எதுவும் இல்லாது போக. இரவு தூக்கத்துள் புகுந்து கொண்டது.
 
கூடத்தில் பரபரப்புக்கேட்டு, சிறுவன் பதைத்து எழுந்தான். அப்பா பத்திரிகை வாங்கக்கடைக்குச் சென்று, பத்திரிகை தீர்ந்துபொனதால் தான் செய்தி காவிப் பத்திரிகையாய் மீண்டிருந்தார். 
 
"துன்னாலைப் பொடியனாம், நெல்லியடி அமோக வெற்றியாம்" என்பது சாராம்சயமாய இருந்தது.
 
----------------------------
 
சொந்தத் தோட்டத்தில் விளைந்த சின்ன வெங்காயத்தை, இரவில் தெரியும் நட்சத்திரங்கள் அளவிற்குச் சின்னதாய் வெட்டி, கொல்லையில் நின்ற செடியில் இருந்து அப்போது தான் பிடுங்கி வந்த பச்சை மிழகாயினை நீழக்கோடுகளாய் அரிந்து, வீட்டுக்கோழி போட்ட சிவத்தை முட்டையில் இரண்டை நல்லெண்ணையோடு சேர்த்துத் தான் சிறுமியின் அம்மா அவளிற்காய் எப்போதும் முட்டை பொரிப்பார். அதை அரிசிமாப் புட்டோடு சேர்த்து உண்பது சிறுமிக்கு மிகப்பிடித்த உணவு. உண்ணும் போது புராணக் கதைகளை அம்மா அவளிற்குச் சொல்லிக் கொண்டிருப்பாள். அருகே இருக்கும் அம்மம்மா ஒவ்வொரு கதைக்குள்ளும் உதிரிக்கதை சொல்லுவார். அன்றிரவும் அவ்வாறு தான் சிறுமிக்கு அவர்கள் உணவூட்டிக்கொண்டிருந்தார்கள். அநீதி எப்போதும் தோற்கும் என்று நரசிம்மன் கதை தத்ரூபமாகச் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது. 
 
முகட்டில் எலி கலைத்துச் சென்ற பூனைக் குட்டி தவறிக் கோப்பைக்குள் விழுந்து சிறுமியின் புட்டும் முட்டைப்பொரியலும் கொட்டிப்போனது. ஆத்திரத்தில் சிறுமி நரசிம்மனாகி, இடுப்பில் கைவைத்த படி, பூனையினைப் பார்த்துக் கோரப்பார்வையினைப் பிரயோகித்தாள். பூனை தாவி ஜன்னலில் இருந்தது. சிறுமி பார்வையால் பூனையினைத் தொடர்ந்து ஜன்னலை அடைந்தபோது, வீடு அதிர்ந்தது. ஜன்னல் உடைந்து நொருங்கி விடும்போல் இருந்தது…
 
-----------------------------------------
 
ஆழ்மனதின் ஆழத்தில், எங்கோ ஒரு மூலையில், மில்லரின் வெடிப்பில் தன் நெற்றிக்கண் ஆற்றிய பங்கு நம்பிக்கையாய் சிறுவனிற்குள் வளர்ந்தது.
 
ஆழ்மனதில் ஆழத்தில், எங்கோ ஒரு மூலையில், மில்லரின் வெடிப்பில் தன் நரசிம்மன் அவதாரம் ஆற்றிய பங்கு நம்பிக்கையாய் சிறுமிக்குள் வளர்ந்தது.
 
------------------------
 
முதற்பனி தூவியிருந்த கனேடிய மாலை. பருவத்தின் மிழிர்ச்சிகள் அத்தனையும் உச்சத்தில் இருந்த பல்கலைக்கழக மண்டபம். தமிழ் மாணவர் மன்றத்தின் கலையிரவு ஆரம்பமாகியிருந்தது. என்னதான் வெள்ளச்சியாய் வாழினும் சேலைகட்டிப் பொட்டு வைத்ததும் தமிழிச்சிக்குள் ஏதோ ஒன்று நடந்து தான் விடுகிறது. “தந்தன தந்தன தாளம் வரும் ஒரு ராகம் வரும்" பாடல் ஏ.ஆர்.றகுமானால் றீமிக்ஸ் செய்யப்பட்டு அவளிற்குள் ஓலித்துக் கொண்டிருந்தது. விளக்குகள் அணைந்திருந்த அறைக்குள் யாரோ பிந்தி வந்தவர்கள் திறந்த கதவின் நீக்கலிற்குள்ளால் நுழைந்த ஒளி அவள் முகத்தில் பட்டபோது, கடைசி வரியில் நண்பர் மத்தியில் அமர்ந்திருந்த அவனின் கண்கள் பாலுமகேந்திராவின் கமராவாய் ஆகி அவள் முகத்தை மந்த ஒளியில் கவ்விக் கொண்டன. “வளையோசை கலகலகலவென…" பாடல் ஏ.ஆர்.றகுமானால் றீமிக்ஸ் செய்யப்பட்டு அவனிற்குள் ஒலிக்கத் துவங்கின.
 
“Excuse me, is that seat taken?”, மாதக்கணக்கில் மறைந்திருந்து பார்ப்பதற்கு அவனென்ன தண்ணியில்லாக் காட்டிலா இருக்கிறான். பின்வாங்குப் பையன் இப்போ அவளருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்து கலைநிகழ்வு பார்க்கத் தொடங்கினான்.
 
-------------------------------------
 
"Grit தான் வாழ்வில் வெற்றிக்கு அத்தியாவசியம். அறிவு ஆற்றல் என்பனவெல்லாம் வெறும் அலட்டல்கள். Grit இல்லாத எவரும் வாழ்வில் அடையக்கூடிய அனைத்தையும் அடைந்துவிடுவதில்லை. கணக்கில் தொண்ணூற்றைந்து காணாது. நீ நூறு எடுப்பது முற்றிலும் சாத்தியம். அதற்கு நீ கடினமாய் சீராய் உழைக்கணும். "
 
ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த பையனிற்கு மேசையில் இருந்து அவன் அப்பா பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
 
“அம்மா I just can't get enough of your முட்டைப் பொரியல்"
 
 தாயால் உணவு தீத்ததப் பட்டுக்கொண்டிருந்த சிறுமி தாயோடு செல்லம் கொட்டிக்கொண்டிருந்தாள்.
 
ரொனேடோ ஒன்று எங்கோ கடந்து செல்வதன் குறியாய் காற்றுச் சுழன்று அடித்தது. திடீரென கோடை இடி முழங்கி வீடு அதிர்ந்தது. நெற்றிக்கண்ணனின் முகத்திலும் நரசிம்மியின் முகத்திலும் அதே யோசனை ரேகைகள், எப்போதும் போல் படர்ந்தன. 
 
துன்னாலை என்பது எங்கிருக்கிறது என்று தெரியாது வளர்கின்ற சிறுவனும் சிறுமிறும் என்றோ ஒரு நாள் வியந்து கேட்க இருக்கின்ற துன்னாலைப் பொடியனின் கதை பல்கலைக்கழக்க கலைவிழாவில் சந்தித்து அம்மா அப்பாவாகியிருக்கும் சிறுவனிற்குள்ளும் சிறுமிக்குள்ளும் அடைகாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன…
Link to comment
Share on other sites

இன்னுமொருவன்,

நான் இந்த கதையை ஒரு மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்குள் வாசித்து முடித்துவிட்டேன்.

ஆனால் என்னமோ ஒரு மூன்று மணித்தியாலம் படம் பார்த்த உணர்வாக என்னுள் எழுகிறது. காலவேகம் மாறி மன உலகம் விரைவாக சுழலுகிறதோ.

கதையை (வடமராச்சி சிறுவனையும் சிறுமியையும்)இணைக்க போகிறீர்கள் என்பது முன்கூட்டியே தெரிந்தாலும், முடிவு அருமையாக இருந்தது.

நல்ல திரைகதைக்குரிய எழுத்து. ஒரு சிறுகதையிலேயே நேர்த்தியான எடிட்டிங் கதையை இன்னொரு படி நிலைக்கு எடுத்து செல்கிறது.

உங்கள் பதிவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்து தெரிந்த ஒரு விடயம் உங்களின் பார்வையூடாய்ப் பார்க்கும்போது இன்னுமொரு  இதமாய்  இருக்கின்றது...! :)

Link to comment
Share on other sites

வழமையான உங்கள் பாணியில் நல்லதொரு ஆக்கம்.

அடைகாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று முடியும் இந்த படைப்பு சிந்திக்க ஒரு தொடக்கத்தை ஏற்படுத்துகின்றது. அந்தவகையில் இந்தப் படைப்பு தனது நோக்கத்தில் நேர்த்தியாக உள்ளது.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு காலம் விதையாய் புதைந்துள்ளது. அவை முளைத்தால் பெரும் விருட்சங்கள். அந்த உண்மைகளை உணர்ந்தாலே இக்காலத்தின் வெற்றியாக அது அமையும். இவ்வாறன ஆக்கங்கள் அதற்கு ஏதுவானது என்பதில் ஐயமில்லை. நன்றி

Link to comment
Share on other sites

கதை சிறிதாக, சுவையாக இருக்கின்றது.

 

 

 
-------------------------------------
 
"Grit தான் வாழ்வில் வெற்றிக்கு அத்தியாவசியம். அறிவு ஆற்றல் என்பனவெல்லாம் வெறும் அலட்டல்கள். Grit இல்லாத எவரும் வாழ்வில் அடையக்கூடிய அனைத்தையும் அடைந்துவிடுவதில்லை. கணக்கில் தொண்ணூற்றைந்து காணாது. நீ நூறு எடுப்பது முற்றிலும் சாத்தியம். அதற்கு நீ கடினமாய் சீராய் உழைக்கணும். "
 
ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த பையனிற்கு மேசையில் இருந்து அவன் அப்பா பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
 
“அம்மா I just can't get enough of your முட்டைப் பொரியல்"
 
 தாயால் உணவு தீத்ததப் பட்டுக்கொண்டிருந்த சிறுமி தாயோடு செல்லம் கொட்டிக்கொண்டிருந்தாள்.
 
ரொனேடோ ஒன்று எங்கோ கடந்து செல்வதன் குறியாய் காற்றுச் சுழன்று அடித்தது. திடீரென கோடை இடி முழங்கி வீடு அதிர்ந்தது. நெற்றிக்கண்ணனின் முகத்திலும் நரசிம்மியின் முகத்திலும் அதே யோசனை ரேகைகள், எப்போதும் போல் படர்ந்தன. 
 
துன்னாலை என்பது எங்கிருக்கிறது என்று தெரியாது வளர்கின்ற சிறுவனும் சிறுமிறும் என்றோ ஒரு நாள் வியந்து கேட்க இருக்கின்ற துன்னாலைப் பொடியனின் கதை பல்கலைக்கழக்க கலைவிழாவில் சந்தித்து அம்மா அப்பாவாகியிருக்கும் சிறுவனிற்குள்ளும் சிறுமிக்குள்ளும் அடைகாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன…

 

 

சில கேள்விகள் எழுகின்றன.

 

காலங்களும் தேசங்களும் கடந்தாலும் ஈழத் தமிழர்கள் தம் பிள்ளைகளை பாடங்களுக்கு 100 மார்க்ஸ் எடுச்சச் சொல்லி அழுத்தம் கொடுக்கும் மனநிலை மாறாது என்கின்றீர்களா? Grit பற்றிய அறிவுரையுனூடாக சொல்வது பிள்ளைகளை போட்டிக்கு தயார்படுத்தும் குதிரைகளாக வளர்க்கும் முறையில் தானே அமைகின்றது.

 

காலமும் தேசமும் மாறினாலும் முட்டைப் பொரியலும், 100 மார்க்ஸும் மாறவில்லை தமிழர்களும் மாறவில்லை. மாற்றங்களை உள் வாங்காத ஒரு மலட்டு சமூகமாகவா இருக்கின்றோம்?

 

அன்று ஊரில் சிறுமிக்கு அன்று அம்மா புராணக் கதைகளை முட்டைப் பொரியலுடன் சாப்பிடும் போது கூறுகின்றார். பின் கனடாவிலும் அவரது மகள் அதே முட்டைப் பொரியலை உண்கின்றார். இங்கு அவர் துன்னாலைப் பெடியனின் கதையை சொல்லும் சந்தர்ப்பம் வருகின்றதே? கதையின் கோட்டில் பயணித்தால் கனடாச் சிறுமியின் அம்மா இந்தக் கணத்தில் தானே தான் அடைகாத்து வைச்சு இருக்கும் துன்னாலை பெடியனின் கதையைச் சொல்லியிருப்பார்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் எழுத்தாற்றல் பலமுறை என்னைப் பிரமிக்க வைத்துள்ளது. அவ்வகையில் காலநதியின் வேகத்துடன் கதை சொல்வதின் புதிய பரிமாணம் இவரின் எழுத்தாற்றலுக்கு இன்னுமொரு மகுடமாய். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் கதை பரிணாமங்களை சொல்லி நிற்கிறது.ஆனால் நான் முக்கியமாக விளங்கிக் கொண்டது நாம்[என்னையும் சேர்த்து]பலவீனமான நிலையில் இருக்கும் போது எமக்கு மீறிய சக்தியால் எம்மை காப்பாற்றிக் கொள்வது மாதிரி கனவு காண்கிறோம்.எமது எதிரிகளை அடிப்பது மாதிரி,ஒழிப்பது மாதிரி....நிஜத்தில் முடியாததை கனவிலாவது நடத்திப் பார்க்கிறோம்:)

Link to comment
Share on other sites

இன்னுமொருவன்,
துன்னாலை மில்லரை அப்படியே கதைக்குள் கொண்டு வந்து கனடாவிலும் அந்த வேரை பதியமிட்டுள்ளீர்கள். நிழலி சொன்னது போல 100புள்ளியும் முட்டைப்பொரியலும் அடுத்த அடியை நகர்ந்து செல்ல முடியாதபடி தமிழன் எங்கும் எப்போதும் சில இயல்புகளை அப்படியே சந்ததிக்கும் காவுவான் என்பது மீண்டும் நிரூபணமாகிறது. 
Link to comment
Share on other sites

வெள்ளைகரு மட்டும் உயிர்ப்புடன் மஞ்சள் கரு கூழாகிவிட்டது .அடை வைத்த முட்டை இனி பொரிக்காது.

Link to comment
Share on other sites

சுபேஸ், பகலவன், நிழலி, நொச்சி, சண்டமாருதன், வாத்தியார், நந்தன், ரதி. சாந்தி, காவலூர் கண்மணி உங்கள் அனைவரது வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
 
பகலவன்,
எழுத்துப் படமாவது வாசகனில் பெரும்பங்கு தங்கியுள்ளது. உங்கள் ரசனைக்கு நன்றி.
 
சுகன்,
உங்கள் கருத்தோடு ஒத்த எனது கருத்தினை, நிழலியின் கேழ்வி சார்ந்து கீழே உள்ளடக்குகிறேன்.
 
காவலூர்கண்மணி அவர்களின் கனிவான கருத்திற்கு மிக்க நன்றி.
 
நன்றி ரதி மற்றும் சாந்தி. 
 
குறியீடுகள் பற்றி நானே பேசுவது ஒருவேளை வினைத்திறன் குறைப்பதாய் இருக்கலாம். இருப்பினும், ஒன்றுக்கு மேற்பட்டவர்களிற்குள் இக்கேள்வி எழுந்ததால் அதைச் செய்கிறேன்.
 
நிழலி,
முதலில் உங்கள் வாதத்திற்கு மிக்க நன்றி.
நூறு மாக்ஸ் விடயத்தைத் தனிப்பின்னூட்டமாகப் பதிகிறேன், ஏனெனில் அது சற்றுப் பெரியது. மற்றையவைக்கான எனது கருத்து இப்படி இருக்கிறது:
 
மில்லரின் வெடிப்பில் எனக்கும் உங்களிற்கும் உள்ளடங்கலாய் அனைவரிற்கும் பங்குண்டு. ஆனால், எங்கள் வாழ்வில் இதையெல்லாம் இருந்து சிந்திக்க எங்களிற்கு அவகாசம் அதிகம் கிடைப்பதில்லை.
 
நெற்றிக்கண்ணனும் நரசிம்மியும் அன்றைய இரவில் வெடிப்பிற்கு முன்னதாக அனுபவித்த விடயங்களை முற்றுமுழுதான குறியீடுகளாக மட்டும் எடுத்துக்கொள்ளின், ரதி சொன்னதைப் போல, இருவரது மனதிலும் அநீதி சார்ந்த சிந்தனை பூதாகரமாக இருந்தது. பூதாகரமான அநீதியினை எதிர்கொள்வதற்கு அவர்கள் பூதாகரமான ஆயுதங்களை விரும்பினார்கள்--ஒன்று நெற்றிக் கண், மற்றையது நரசிம்ம அவதாரம். அவர்களது விருப்பம் வெறும் விருப்பமாக மட்டும், சாத்தியப்படமுடியாதாகவே அவர்களிற்குள்ளாவும் நப்பப்பட்டு இருந்தபோதிலும், மில்லர் வெடித்த கணத்தில், அவர்களே அவர்களை நம்பமுடியாதபடி, தங்கள் ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டதன் விளைவினை உணரும் சந்தர்ப்பம் அவ்விருவரிற்கும் கிடைத்தது. அதனால், என்னையும் உங்களையும் போலன்றி, மில்லரின் வெடிப்பில் அவர்களின் பங்கு அவர்களிற்குள் மறக்கமுடியாப் பரிமாணத்தில் பதிவாகிப்போனது.
 
இவ்விரு சிறார்களும் அடைந்த மேற்படி உணர்விற்குக் காரணமான வெடிப்பின் காரணகர்த்தா மில்லரும் கூட, ஒரு வகையில் பார்க்கையில், அவர்களை ஒத்த மனநிலையிலேயே செயற்பட்டிருந்தார். அதாவது, மனமெங்கும் ஆக்கிரமித்து உறுத்திய பூதாகரமான அநீதிக்கு எதிரான பூதாகரமான ஆயுதமாகவே மில்லரின் தாக்குதல் இருந்தது.  அவ்வகையில், தனது வெடிப்பின் பின்னால் தனது பூதாகர ஆயுதத்தின் விளைவுசார்ந்து இரைமீட்கும் சாத்தியமிழந்த மில்லரிற்காகவும் இவ்விரு சிறார்களும் வாழத் தலைப்படுகின்றனர். இத்தகைய மனவொற்றுமையுடைய இருவர் உரிய நேரத்தில் சந்திப்பின், அவர்கள் கணவன் மனைவியாவதற்கான சாத்தியம் நிச்சயம் அதிகம்.
 
மில்லைரை வீரனாகப் புகழ்ந்து, கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் புகழ்பாடிக் கதைகூறிச் சென்றுவிடக்கூடிய என்னையும் உங்களையும் போன்று இவ்விருவராலும் அவர்கள் குழந்தைகளிற்குக் கதைசொல்ல முடியாது. தாமுள்ளுர உணர்ந்த வீரியத்தில், தத்ருபமாக, வானவில்லின் அனைத்து நிறங்களையும் உள்டக்கிக் கதைசொல்வதற்கு, அவர்களின் குழந்தைகளிற்கு இன்னும் வயதும் பக்குவமும் வந்து விடவில்லை. அதனால் தான், அவர்கள் வளரும் வரை உணர்வை அடைகாக்கிறார்கள். ஆனால் நிச்சயம் ஒருநாள் பேசுவார்கள்.
 
இனி கனடா வந்தபின்னும் அதே புட்டும் முட்டைப்பொரியலுந்தானா என்பது, ஒரு முனையில் பார்கும் போது பலத்த முற்போக்கான கோபமாகத் தெரியினும், உண்மையில் விமர்சனத்திற்குரியது. இன்று ஊடகங்களில் ஒரு செய்தி முன்னணியில் உலாவருகிறது: அதாவது, பத்து நாளைக்கு ஒரு மொழி என உலகில் மொழிகள் அழிந்துவருவதால் இலத்திரனியல் இம்முனையில் பாதுகாப்பாளனாய் பங்காற்ற விளையும் திட்டம் ஒன்று சார்ந்தே இன்று இந்தப் பேச்சு ஊடகங்களில் வலம்வருகிறது. இந்தக் கலந்துரையாடலில் வந்த ஒரு உதிரித் தகவல், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதியினர் அப்பிரதேசக் காடுகளில் உள்ள நானூறுக்கு மேற்பட்ட தாவர வகைகளை சர்வசாதாரணமாக இனம்பிரித்து அடையாளப்படுத்துகிறார்களாம். மேற்கின் நன்கு கல்விகற்ற தாவரவியலாளரிற்குக் கூடச் சாத்தியப்படாதை இந்தக் கிராமமக்கள் செய்வதற்கு ஏதுவாய் இருக்கும் ஒரே காரணி அவர்களது மொழி. அந்த மொழி அத்தனை தாவரங்களையும் இலகுவில் இனம்பிரித்து அடையாளப்படுத்திப் பரிடசயமாய் வைத்திருக்கிறது. அந்த மொழி அழியின் அந்த அறிவும் அழிந்து போகும்.
 
உணவும் அப்படித்தான். புட்டையும் முட்டைப் பொரியலையும் பின்தங்கியவர்களின் மடைத்தனமாய்ப் பார்ப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. மொழியினை உருவாக்கிய மூதாதையின் மூச்சு மொழிக்குள் இருப்பது போன்றே உணவிற்குள்ளும். ஆலங்கொழுக்கட்டை தருகின்ற கிறக்கத்தை ஆங்கிலத்தில் எந்தக்கொம்பனாலும் சித்தரிக்க முடியாது. புலம் பெயர்ந்த தமிழ் சந்ததியினை ஊரொடு பிணைத்து வைத்திருப்பதில் வாராந்த தமிழ் வகுப்புக்களிற்கு இல்லாத பங்கு வீட்டில் சமைக்கப்படும் தமிழ் உணவுகளிற்கு உள்ளது. எனக்குத் தெரியத் தக்கதாய், பிரஞ்சுக் காதலனுடன் கிளிமஞ்சாரோ ஏறச் சென்ற கனடாவில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழ் பெண் மருத்துவர், கறியும் சோறும் குழைத்து அடிக்கும்போது தான் மூச்சுவருவதாய்க் கூறுவார். இந்தப்பெண்ணில் நானறிந்தவரை லைற்றடிச்சுத் தேடினாலும் கட்டுப்பட்டித்தனத்தைக் காணமுடியாது. சோறு உண்பதனால் கிணற்றுத் தவளை என்றாகாது. அடையாளம் பல கோணங்களில் பரிணமிக்கும். பாதுகாப்புணர்வும் தன்னம்பிக்கையும பல காரணிகளால் வளர்க்கப்படும். 
 
புட்டும் முட்டைப்பொரியலும் கட்டுப்பட்டித் தனம் என்றால், எதை உண்ணலாம் என்று பரிந்துரைப்பீர்கள்? நீங்கள் பட்டியலிடும் ஆரோக்கியமான எந்தப் பதார்த்தமாகினும் கனடாவில் கிடைக்கிறது என்றால், அதைக் கொண்டுவந்தவன் கதை கூடவே கிடைக்கும். காட்டில் வேட்டையாடும் மூஸ் இறைச்சி முதல் நாகரிகத்தின் உச்சாணிக்கொப்பாய் எவரேனும் கருதக்கூடிய எந்த உணவாகினும் அதில் எமக்குச் சம்பந்தமே இல்லாத எவனோ ஒருவனுடைய பெருமை பொதிந்திருக்கும். தமிழன் யாழ்ப்பாணத்தின் உணவை உண்கிறான் என்றால் அதில் மலட்டுத் தனம் ஏதும் இல்லை. முற்றுமுழதான விழைச்சல் நிலமே வெளிப்படுகிறது என்பது எனது அபிப்பிராயம்.
 
ஏகப்பட்டதை எழுதவேண்டும் என்று தோன்றுகிறது, நீண்டுகொண்டே செல்வதால் நிறுத்திக்கொள்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை, இன்னுமொருவனின் தனித்துவத்தைச் சொல்லி நிற்கின்றது...!

 

அத்துடன் விடை பகல இயலாத வினாக்களையும் விட்டுச் செல்லுகின்றது....!

 

தொடர்ந்து எழுதுங்கள், இன்னுமொருவன்!

Link to comment
Share on other sites

நன்றி, சுவி, புங்கையூரான், சுவைப்பிரியன், தும்பளையான், அபராஜிதன் உங்கள் வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நேர்த்தியாகக் கதை சொல்லப்பட்ட விதம் எனக்கும் இப்படி ஏன் எழுத வரவில்லை என்ற ஏக்கமே எழுகிறது. நீங்கள் எழுதுவதே அரிது. அதற்குள் நீண்டுவிட்டது என்று எழுதாமல் விடாது எழுத முடிந்தவற்றை எழுதுங்கள் இன்னுமொருவன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ...தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை படையுங்கள்.....

Link to comment
Share on other sites

 

 

 
இனி கனடா வந்தபின்னும் அதே புட்டும் முட்டைப்பொரியலுந்தானா என்பது, ஒரு முனையில் பார்கும் போது பலத்த முற்போக்கான கோபமாகத் தெரியினும், உண்மையில் விமர்சனத்திற்குரியது. இன்று ஊடகங்களில் ஒரு செய்தி முன்னணியில் உலாவருகிறது: அதாவது, பத்து நாளைக்கு ஒரு மொழி என உலகில் மொழிகள் அழிந்துவருவதால் இலத்திரனியல் இம்முனையில் பாதுகாப்பாளனாய் பங்காற்ற விளையும் திட்டம் ஒன்று சார்ந்தே இன்று இந்தப் பேச்சு ஊடகங்களில் வலம்வருகிறது. இந்தக் கலந்துரையாடலில் வந்த ஒரு உதிரித் தகவல், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதியினர் அப்பிரதேசக் காடுகளில் உள்ள நானூறுக்கு மேற்பட்ட தாவர வகைகளை சர்வசாதாரணமாக இனம்பிரித்து அடையாளப்படுத்துகிறார்களாம். மேற்கின் நன்கு கல்விகற்ற தாவரவியலாளரிற்குக் கூடச் சாத்தியப்படாதை இந்தக் கிராமமக்கள் செய்வதற்கு ஏதுவாய் இருக்கும் ஒரே காரணி அவர்களது மொழி. அந்த மொழி அத்தனை தாவரங்களையும் இலகுவில் இனம்பிரித்து அடையாளப்படுத்திப் பரிடசயமாய் வைத்திருக்கிறது. அந்த மொழி அழியின் அந்த அறிவும் அழிந்து போகும்.
 
உணவும் அப்படித்தான். புட்டையும் முட்டைப் பொரியலையும் பின்தங்கியவர்களின் மடைத்தனமாய்ப் பார்ப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. மொழியினை உருவாக்கிய மூதாதையின் மூச்சு மொழிக்குள் இருப்பது போன்றே உணவிற்குள்ளும். ஆலங்கொழுக்கட்டை தருகின்ற கிறக்கத்தை ஆங்கிலத்தில் எந்தக்கொம்பனாலும் சித்தரிக்க முடியாது. புலம் பெயர்ந்த தமிழ் சந்ததியினை ஊரொடு பிணைத்து வைத்திருப்பதில் வாராந்த தமிழ் வகுப்புக்களிற்கு இல்லாத பங்கு வீட்டில் சமைக்கப்படும் தமிழ் உணவுகளிற்கு உள்ளது. எனக்குத் தெரியத் தக்கதாய், பிரஞ்சுக் காதலனுடன் கிளிமஞ்சாரோ ஏறச் சென்ற கனடாவில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழ் பெண் மருத்துவர், கறியும் சோறும் குழைத்து அடிக்கும்போது தான் மூச்சுவருவதாய்க் கூறுவார். இந்தப்பெண்ணில் நானறிந்தவரை லைற்றடிச்சுத் தேடினாலும் கட்டுப்பட்டித்தனத்தைக் காணமுடியாது. சோறு உண்பதனால் கிணற்றுத் தவளை என்றாகாது. அடையாளம் பல கோணங்களில் பரிணமிக்கும். பாதுகாப்புணர்வும் தன்னம்பிக்கையும பல காரணிகளால் வளர்க்கப்படும். 
 
புட்டும் முட்டைப்பொரியலும் கட்டுப்பட்டித் தனம் என்றால், எதை உண்ணலாம் என்று பரிந்துரைப்பீர்கள்? நீங்கள் பட்டியலிடும் ஆரோக்கியமான எந்தப் பதார்த்தமாகினும் கனடாவில் கிடைக்கிறது என்றால், அதைக் கொண்டுவந்தவன் கதை கூடவே கிடைக்கும். காட்டில் வேட்டையாடும் மூஸ் இறைச்சி முதல் நாகரிகத்தின் உச்சாணிக்கொப்பாய் எவரேனும் கருதக்கூடிய எந்த உணவாகினும் அதில் எமக்குச் சம்பந்தமே இல்லாத எவனோ ஒருவனுடைய பெருமை பொதிந்திருக்கும். தமிழன் யாழ்ப்பாணத்தின் உணவை உண்கிறான் என்றால் அதில் மலட்டுத் தனம் ஏதும் இல்லை. முற்றுமுழதான விழைச்சல் நிலமே வெளிப்படுகிறது என்பது எனது அபிப்பிராயம்.
 
ஏகப்பட்டதை எழுதவேண்டும் என்று தோன்றுகிறது, நீண்டுகொண்டே செல்வதால் நிறுத்திக்கொள்கிறேன்.

 

 

இன்னுமொருவன் நீங்கள் என் கேள்வியை புரிந்து கொண்ட கோணம் தவறாக இருக்கின்றது என்று நினைக்கின்றேன். முட்டைப்பொரியலை உண்பது பிற்போக்கானது என்ற பொருளில் அதை எழுதவில்லை.

 

இங்கு முட்டைப் பொரியல் என்பது வெறுமனே ஒரு உணவாக உங்கள் கதையில் காட்டப்படவில்லை. அதை இருமுறை குறிப்பிட்டுள்ளீர்கள். ஒன்று, ஊரில் சிறுமி சாப்பிடும் போதும், இன்னொரு முறை அதே சிறுமி வளர்ந்து தாயாகி தன் குழந்தைக்கு ஊட்டும் போதும் என்று இரு தடவைகள். இவ்விரு தடவைகளிலும் இதனை தனித்தே எழுதாமல் 100 மார்க்ஸ் எடுக்கும் விடயத்துடனும் இணைத்துள்ளீர்கள்.  இதனை Visualize பண்ணிப் பார்க்கும் போது (ஒரு காட்சியாக மனசுக்குள் கதையை விரித்துக் கொள்ளும் போது), அக் காட்சி இரு தடவைகள் வருகின்றன. இரு காட்சிகளின் வேறுபாடு காலமும், தேசமும் மட்டுமே.

 

வெறுமனே நீங்கள் முட்டைப் பொரியலை மட்டும் இரு தடவைகள் எழுதியிருந்தால் அதற்கான அர்த்தம் உணவும் அது தொடர்பான கலாச்சார பின்னனியும் பற்றி மட்டும் பிரக்ஞை கொண்டு இருந்திருக்கும். ஆனால் இதனுடன் கணிதத்துக்கு 100 மார்க்ஸ் எடுக்கும் விடயமும் வருகின்றது. இரண்டையும் பொருத்திப் பார்க்கும் போது விளைவாக தமிழர் சமூகம் தன்னை மாற்றத்துக்குள்ளாக்காமல் அப்படியே உறைந்து கிடக்கின்றதாக எழுதுகின்றீர்களோ என்ற கேள்வி வருகின்றது.

 

எனக்குத் தெரிந்து அநேக தமிழ் குடும்பங்கள் இங்கு கனடாவில் ஊரில் செய்தது போன்றே பிள்ளைகளை ஒன்றுக்கு இரண்டு ரியூசன் கிளாசுக்கு அனுப்புகின்றார்கள். பிள்ளைகள் பாடத்தில் B அல்லது B+ அல்லது A எடுத்தால் கூட "நீ ஏன் உன் நண்பனை மாதிரி A+ எடுக்கவில்லை என்ற கேள்விகளுடன் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை காண்கின்றேன். இது நாம் ஊரில் இருந்து இங்கும் எடுத்துக் கொண்டு வந்த  'போட்டி' மனப்பான்மையுடனான ஒரு வெறி. இதை இன்னும் கைவிடாமல் இங்கும் பரப்பிக் கொண்டு இருக்கின்றோம்.

 

இதனடிப்படையில் பார்க்கும் போது தான் உங்கள் கதையில் வரும் இரு மாறாத நிகழ்வுகளும் ஒருங்கு சேர்ந்து என் கேள்வியை உருவாக்கின்றது.

 

நீங்கள் 100 மார்க்ஸ் எடுக்கும் விடயத்தினை இன்னொரு பின்னூட்டமாக எழுதப் போகின்றேன் என்று கூறிய பின்னும் அதனை இங்கு மீண்டும் குறிப்பிட வேண்டி வந்தமை அது ஒரு தனித்த நிகழ்வாக இல்லாமல் ஒரு கூட்டு நிகழ்வாக முட்டைப் பொரியலுடன் சேர்ந்துள்ளமையால்.

 

இவற்றுக்கும் மேலாக உணவு என்பதை கலாச்சார பின்னனியுடன் அணுகுவது தவறான வாதமாக எனக்கு படுகின்றது.

நானும் என் மனைவியும் இன்னும் புட்டும் மாம்பழமும் சாப்பிடுவதில் இன்புறுவது என்பதன் அடிப்படைக் காரணம் அது நாம் வளர்ந்த போது எமக்கு தரப்பட்ட ஆரம்ப கால உணவு என்பதால் தீராக் காதல் போன்று நாக்கின் அடியில் உறைந்து சுவையாக அது இருப்பதே ஆகும். அச் சுவையை தீர்மானித்தவை ஊரின் மண், ஊரின் கால நிலை, ஊரின் தட்ப வெட்பம், அது சார்ந்த தொழில் என்பனவாகும். "என்னதான் இருந்தாலும் ஊரில் சாப்பிட்ட புட்டும் மாம்பழமும் போல இங்கு வராது" என்று சலித்துக் கொளவதன் அடிப்படைக் காரணமும் இவைதான்.

 

ஆகவே உணவு என்பது அம் மண்ணின் காலநிலை, தட்ப வெட்பம், மண் மற்றும் அது சார்ந்த வாழ்க்கை முறையின் மூலம் தீர்மானிக்கப்படுவது. அதை அம் மண்ணுக்கு முற்றிலும் வேறான ஒரு மண்ணில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்துவது என்பது காலபோக்கில் சாத்தியமாகாமல் போய் வருடத்தில் ஒன்றிரண்டு நாட்களில் சாப்பிடும் உணவாகப் போய்விடும். உங்கள் கிளிமஞ்சாரோ ஏறச் செல்லும் நண்பி சோறும் கறியும் சாப்பிடுவது ஆச்சரியமான ஒரு விடயம் அல்ல. ஆனால் அவரது குழந்தையும் நாளை அல்ப்ஸ் மலையில் ஏறும் போது இதையே சாப்பிடும் நம்புவது பிழைத்துப் போகும் சந்தர்ப்பங்களே அதிகம்.

 

நெற்றிக்கண்ணனும் நரசிம்மியும் அன்றைய இரவில் வெடிப்பிற்கு முன்னதாக அனுபவித்த விடயங்களை முற்றுமுழுதான குறியீடுகளாக மட்டும் எடுத்துக்கொள்ளின், ரதி சொன்னதைப் போல, இருவரது மனதிலும் அநீதி சார்ந்த சிந்தனை பூதாகரமாக இருந்தது. பூதாகரமான அநீதியினை எதிர்கொள்வதற்கு அவர்கள் பூதாகரமான ஆயுதங்களை விரும்பினார்கள்--ஒன்று நெற்றிக் கண், மற்றையது நரசிம்ம அவதாரம். அவர்களது விருப்பம் வெறும் விருப்பமாக மட்டும், சாத்தியப்படமுடியாதாகவே அவர்களிற்குள்ளாவும் நப்பப்பட்டு இருந்தபோதிலும், மில்லர் வெடித்த கணத்தில், அவர்களே அவர்களை நம்பமுடியாதபடி, தங்கள் ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டதன் விளைவினை உணரும் சந்தர்ப்பம் அவ்விருவரிற்கும் கிடைத்தது. அதனால், என்னையும் உங்களையும் போலன்றி, மில்லரின் வெடிப்பில் அவர்களின் பங்கு அவர்களிற்குள் மறக்கமுடியாப் பரிமாணத்தில் பதிவாகிப்போனது.

 

 

அருமையாக இருக்கின்றது இது. நான் முதல் தரம் வாசிக்கும் போது, இதனை இப் பரிமாணத்தில் அணுகவே இல்லை. இதனை வாசித்த பின் மீண்டும் அதனூடாக அணுகும் போது புதிய புரிதல்களும் வாசித்தல்களும் கிடைக்கின்றன.

 

தொடர்ந்து உரையாடுங்கள்.

Link to comment
Share on other sites

இங்கு முட்டைப் பொரியல் என்பது வெறுமனே ஒரு உணவாக உங்கள் கதையில் காட்டப்படவில்லை. அதை இருமுறை குறிப்பிட்டுள்ளீர்கள். ஒன்று, ஊரில் சிறுமி சாப்பிடும் போதும், இன்னொரு முறை அதே சிறுமி வளர்ந்து தாயாகி தன் குழந்தைக்கு ஊட்டும் போதும் என்று இரு தடவைகள். இவ்விரு தடவைகளிலும் இதனை தனித்தே எழுதாமல் 100 மார்க்ஸ் எடுக்கும் விடயத்துடனும் இணைத்துள்ளீர்கள்.  இதனை Visualize பண்ணிப் பார்க்கும் போது (ஒரு காட்சியாக மனசுக்குள் கதையை விரித்துக் கொள்ளும் போது), அக் காட்சி இரு தடவைகள் வருகின்றன. இரு காட்சிகளின் வேறுபாடு காலமும், தேசமும் மட்டுமே.

 

வெறுமனே நீங்கள் முட்டைப் பொரியலை மட்டும் இரு தடவைகள் எழுதியிருந்தால் அதற்கான அர்த்தம் உணவும் அது தொடர்பான கலாச்சார பின்னனியும் பற்றி மட்டும் பிரக்ஞை கொண்டு இருந்திருக்கும். ஆனால் இதனுடன் கணிதத்துக்கு 100 மார்க்ஸ் எடுக்கும் விடயமும் வருகின்றது. இரண்டையும் பொருத்திப் பார்க்கும் போது விளைவாக தமிழர் சமூகம் தன்னை மாற்றத்துக்குள்ளாக்காமல் அப்படியே உறைந்து கிடக்கின்றதாக எழுதுகின்றீர்களோ என்ற கேள்வி வருகின்றது.

...

 

இதனடிப்படையில் பார்க்கும் போது தான் உங்கள் கதையில் வரும் இரு மாறாத நிகழ்வுகளும் ஒருங்கு சேர்ந்து என் கேள்வியை உருவாக்கின்றது.

...

 

இவற்றுக்கும் மேலாக உணவு என்பதை கலாச்சார பின்னனியுடன் அணுகுவது தவறான வாதமாக எனக்கு படுகின்றது.

நானும் என் மனைவியும் இன்னும் புட்டும் மாம்பழமும் சாப்பிடுவதில் இன்புறுவது என்பதன் அடிப்படைக் காரணம் அது நாம் வளர்ந்த போது எமக்கு தரப்பட்ட ஆரம்ப கால உணவு என்பதால் தீராக் காதல் போன்று நாக்கின் அடியில் உறைந்து சுவையாக அது இருப்பதே ஆகும். அச் சுவையை தீர்மானித்தவை ஊரின் மண், ஊரின் கால நிலை, ஊரின் தட்ப வெட்பம், அது சார்ந்த தொழில் என்பனவாகும். "என்னதான் இருந்தாலும் ஊரில் சாப்பிட்ட புட்டும் மாம்பழமும் போல இங்கு வராது" என்று சலித்துக் கொளவதன் அடிப்படைக் காரணமும் இவைதான்.

 

ஆகவே உணவு என்பது அம் மண்ணின் காலநிலை, தட்ப வெட்பம், மண் மற்றும் அது சார்ந்த வாழ்க்கை முறையின் மூலம் தீர்மானிக்கப்படுவது. அதை அம் மண்ணுக்கு முற்றிலும் வேறான ஒரு மண்ணில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்துவது என்பது காலபோக்கில் சாத்தியமாகாமல் போய் வருடத்தில் ஒன்றிரண்டு நாட்களில் சாப்பிடும் உணவாகப் போய்விடும். உங்கள் கிளிமஞ்சாரோ ஏறச் செல்லும் நண்பி சோறும் கறியும் சாப்பிடுவது ஆச்சரியமான ஒரு விடயம் அல்ல. ஆனால் அவரது குழந்தையும் நாளை அல்ப்ஸ் மலையில் ஏறும் போது இதையே சாப்பிடும் நம்புவது பிழைத்துப் போகும் சந்தர்ப்பங்களே அதிகம்.

 

நன்றி சாத்திரி, சுவைப்பிரியன், சுமேரியர், புத்தன், தமிழினி, இணையவன், நந்தன் உங்கள் வரவிற்கும் கருத்திற்கும்.

 
நிழலி,
இந்தப் பின்னூட்டமும் நீண்டுவிட்டதால், நூறுமாக்ஸ் பற்றி இன்னுமொரு பின்னூட்டம் தேவைப்படுகிறது, இப்போதைக்கு, உங்கள் கேள்விக்காகச் சேர்த்து அணுகின்:
 
நூறுமாக்சும் முட்டைப்பொரியலும் இரண்டு தடவை கதையில் வந்தமை, நேர அச்சின் தொடர்ச்சியில் அதே இரு மனிதர்களைத் தொடர்கிறோம் என்பதைக் காட்டவே. ஆனால், இது மாற்றமின்மையினையோ தேங்குநிலையினையோ குறிக்கவில்லை. தந்தை ஆறாம் வகுப்புப் படிக்கும் போது 80 புள்ளிகளை வாங்கியதால் நூறு மாக்ஸ் பற்றிய பிரச்சினை எழுந்தது. இன்று மகன் 95 புள்ளிகளை வாங்கி நூறு மாக்ஸ் உபதேசம் எழுகிறது. இந்தப் புள்றி வித்தியாசம் எதேச்சையாய் அமைந்ததில்லை. நூறு மாக்ஸ் ஏன் அவசியம் என்பது அன்று போல் வெறுமனே எடுத்தியம்பாமல் இன்று grit உள்நுழைக்கப்படுகிறது. முட்டைபொரியலின் வித்தியாசங்கள் தொக்கிநின்று பேசப்படுகின்றன. இவையில்லாமல் இந்த மனிதர்களிடம் மில்லரின் கதையினைக் காவும்படி எதிர்பாhக்க முடியாது.  'நாங்கள் எமது பெற்றோர்கள் ஆகிவிடுகிறோம்' என்பது கலாச்சாரங்களைக் கடந்து குழந்தைகள் உணர்ந்து கொண்டிருக்கும் ஒரு விடயம். ஆனால், அந்தக்கூற்று  மேலோட்டமாகப் பார்க்கப்படமுடியாதது. ஒவ்வொரு குழந்தையினதும் பெற்றோராய் மாறுதலில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருந்தே தீரும். எனவே தான் எடுத்த எடுப்பில் தேக்கநிலை, மலட்டுத்தன்மை, மாறிலிகள் என்ற கருத்தை நிராகரிக்கவேண்டியேற்படுகிறது.
 
ஊரிற்குப் போய்வந்த எனது பதிவில் குறிப்பிடப்பட்டது போன்று, ஞாபகவீதி உள்ளுரத் தான் இருக்கிறது. இது தான் கடத்தப்படுகிறது. எடுத்த எடுப்பில் இனந்தெரியா அளவிற்கு இந்த மருவல்கள் ஒவ்வொரு  iterationனிலும் மாறும் என்றபோதும், அறுத்துப் பார்த்தால் ஆணிவேரைக் காணமுடியும். உணவு கலாச்சாரத்தைக் காவும் இலத்திரனியல் chipபாக புலத்தின் ஒவ்வாhரு குழந்தைக்குள்ளும் இணைக்கப்படுகிறது. கலாச்சாரத்தைக் காவுவதில் உணவின் பங்கு அப்பட்டமானது.
 
தட்பவெட்பத்துடன் மட்டும் உணவு அடையாளப்படுத்தப்படுவதில்லை. ஒவ்வொரு கலாச்சாரமும் உடலின் தேவைகள் சார்ந்த ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய பதார்த்தங்களை உணவில் தேடிச் சேர்த்துக்கொண்டார்கள் என்பதும், காலநிலை சார்ந்து தேவைகள் மாறுபடும் என்பதும் உண்மைதான் என்றபோதும் அது உணவின் ஒரு அங்கம் மட்டுமே. கிடைத்ததை உண்டது தான் உணவுப் பழக்கத்தின் அடிப்படை. என்ன கிடைத்தது என்பது எங்கே இருந்தார்கள் என்ற தரவை உள்ளடக்கியே வெளிப்படும். எங்கே இருந்தார்க்ள் என்பதில் எப்படி வாழ்ந்தார்கள் என்ற செய்தி பொதிந்திருக்கும். 'கடத்தப்படும் பிரக்ஞை' என்பதை ஆன்மீகத்திற்கு அப்பால் ஆராய்வதற்கு உதவும். 
 
புட்டும் மாம்பழமும் கிடைத்தது இருந்த நிலத்தைப் பொறுத்ததாய் இருந்திருக்கலாம். ஆனால் அதை உண்டதும் அனுபவம் சிறைப்பட்டு விடும். புட்டும் மாம்பழமும் உண்ணும் அனுபவத்தை புட்டையும் மாம்பழத்தையும் அகற்றி உண்டவரால் எடுத்துச் செல்லமுடியும். 'கடந்த காலங்கள் தான் ஒருவனை உருவாக்கின' என்பதில் அனுபவங்கள் அடிப்படை. புட்டையும் மாம்பழத்தையும் உண்டவரைத் தூக்கி அலாஸ்க்காவில் வைத்தாலும் அனுபவம் கூடவே தான் செல்லும். அவர் தனது குழந்தைக்கு, கிடைத்தவரையில் அதைக்கொடுப்பதன் நோக்கம், தனது அனுபவத்தைக் கடத்துவதற்கான மொழியின் தேடலில் பிறக்கிறது. தன்னைத் தனது குழந்தைக்கு எடுத்தியம்புவதற்குத் தனது அனுபவத்தைப் பேசும் தேவை எழுகிறது. இதில் உணவு பெரும்பங்காற்றுகிறது.
 
மேலும் கனடாவில் நடு வின்ரறில் சறத்தோடு வீட்டிற்குள் இருக்க முடியும். சூரியன் தந்ததா தொழில்நுட்பம் தந்ததா என்பது இங்கு உதிரித் தகவல். குளிர் நாடு என்பதால் 24 மணிநேரமும் குளிருக்குள் முடியெல்லாம் பனியாகி எவரும் திரிவதில்லை. ஊரில் குளிரூட்டிகளும் சர்வசாதாரணமாகவே வந்துகொண்டிருக்கின்றன. உலகமயமாக்கலில் மனிதன் ஒவ்வொரு இஞ்சி நிலத்தையும் தான் வாழத் தகுதியானதாய் மாற்றுவது சார்ந்து முனைந்து கொண்டிருக்கிறான். உலகு துண்டாடிக்கிடந்து காலங்கள் பல. தோல் கண் தலைமுடி நிறம், உயரம் பருமன் போன்ற விடயங்கள் தாண்டி அடையாளம் இன்று அதிகப்படி உளவியல் பரப்பில் தான் தொங்குகிறது. ஒரு தெருவில் வசிக்கும் பத்து நாட்டுப் பிரசைகள் தங்களைத் தங்கள் குழந்தைகளிற்குக் கடத்திக்கொண்டு தான் இருக்pறார்கள். இக்கடத்தல்கள் அனைத்தும் நேரடி அனுபவங்களை மட்டும் உள்ளடக்கவில்லை. ஆறாம் ஏழாம் தலைமுறையினரும் முன்னையோர் கதைகளைக் காவித் தான் வாழ்கிறார்கள். கனடாவில் எந்நாட்டு உணவும் அதன் அடிப்படை நிலையில் இல்லை. ஞாபகவீதி போன்று உணவுகளும் மருவிக்கொண்டு தான் இருக்கின்றன. தேவையானவை சேர்க்கப்பட்டும் தவிர்க்கப்படவேண்டியன தவிர்க்கப்பட்டும் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால். அறுத்துப் பார்த்தால் ஆணிவேரைக் காணக்கூடிய வகையில் தான் தொடர்கின்றன.
 
கிளிமஞ்சாரோவிற்கு பிரெஞ்சுக்காதலனனுடன் சென்ற சோறு விரும்பியின் குழந்தை நாளை இரு பாரம்பரியத்ததாய்ப் பிறப்பின் கூட, அதற்குள் யாழ்ப்பாணத்தின் வேர் உணவுவழியாகத் தொடரும். இனம் புரியா ஈர்ப்பு சில சுவைகளை நோக்கி அதை ஈர்க்கும். கதைகளை விரும்பும். தொடர்ச்சி தொற்றிக் கொள்ளும்.
Link to comment
Share on other sites

நிழலி எழுப்பிய 'நூறுமாக்ஸ்' பிரச்சினை சார்ந்து இப்பின்னூட்டம்:
 
'சும்மாயிருப்பதே சுகம்' என்பது என்ன ஆழத்தில் எவ்வாறு எதற்காகச் சொல்லப்பட்டது என்ற ஆராய்ச்சிகள் எல்லாத்தையும் விட்டுவிட்டு ஒன்றை ஒத்துக்கொள்ளலாம். மேற்படி கூற்று அதன் மேலோட்டமான அர்த்தத்தில் இனம்புரியா மகிழ்ச்சியினை ஏகப்பட்டோரிற்குள் உருவாக்கத் தவறுவதில்லை. சதா கழைப்பினை உணரும் வாழ்வு பலரிற்கு வாய்த்துவிடுவதால், அந்தக் கூற்றிற்கு ஒரு மயக்குதிறன் இருக்கிறது. அந்தவகையில் வாழ்வில் கழைப்பு அதிகமதிகம் உணரப்படுகிறது என்பதை முதலில் ஏற்றுப் பதிவுசெய்து கொண்டு, நூறு மாக்ஸ் விடயத்திற்குள் வருகிறேன்.
 
நூறுமாக்ஸ் என்பது போட்டிதான். ஆனால், அது அடுத்தவருடனான போட்டி மட்டுமல்ல. தன்னுடனான தனது போட்டியும் கூட. சில மனிதர்கள் இருக்கிறார்கள், சதா சர்வகாலமும் படித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களது படிப்பு எதையும் வெளியீடு செய்வதாய் இருக்காது—அந்தவகையில் படிப்பு என்ற உள்ளீடும் சந்தேகத்திற்கிடமாகிறது. படிப்பது இலகு என்று படித்துக் கொண்டிருப்பார்கள். துறை துறையாய் மாறி மாறிப் பரிட்சை எழுதிப் பட்டங்கள் பெறுவார்கள். தாய்தந்தையினைத் தமது படிப்பிற்காய் காசு செலவழிக்கும் வகை கூறி, தாய் தந்தை இருக்கும் வீட்டை அடைமானம் வைத்துப் பணங்கொடுக்க, எந்த உருப்படியான வெளியீடும் தராத படிப்புக்களை சோதனைகள் வடிவில் எடுத்துக்கொண்டிருப்பார்கள். 
 
இப்போதெல்லாம் அநேகம் பார்க்கக் கூடிய ஒன்று, பொறியியலில் இளநிலை கற்பார்கள், சில மாதம் பொறியியல் வேலை செய்ய முனைவார்கள், பின்னர் விட்டுவிட்டு MBA செய்வார்கள், பின் CFA இற்குத் தாவுவார்கள். பின்னர் அனைத்தையும் றெசுமியில் போட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாத வேலைக்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வில் வந்து முழி பிதுங்கி வியர்த்து வெளியேறுவார்கள். படிப்பில் உத்தியோகத்தில் மட்டுமல்ல, காதலில் குடும்பத்தில் என்று பல பரிமாணங்களில் பலர் தப்பித்துக்கொள்வதை வாழ்வாக வாழ்வதைப் பார்க்க முடிகிறது. இதன் தார்ப்பரியம் என்ன?
 
அப்பா அம்மா இருக்கும் வரை, அடைமானம் வைப்பதற்கு அவர்களிடம் வீடு இருக்கும் வரை, தாவுகின்ற பரிட்சைகள், அதன் பிறகு என்னவாகும்?
 
sense of entitlement என்பது பல மட்டங்களில் எதிர்மறையாகவே தொழிற்படுகிறது. நீ விரும்பிய எதுவாயும் நீ வரலாம் என்று குழந்தைகளிற்குச் சொல்லி வழர்க்கும் பெற்றோர், கதையினைப் பாதியில் விடுவதால் ஏற்படும் விபரீதம் இது. அது மட்டுமல்ல, திறமை இருந்தால் மட்டும் உழைப்பு அவசியமில்லை என்றாகிவிடாது. இளையறாஜா தொட்டு மைக்கல் ஜாக்சன் ஊடாக, உலகில் திறமைகள் எல்லாம் உழைப்புடன் கூடியே வெளித்தெரிகின்றன. வைரம் என்பது பட்டைதீட்டப்பட்டபின்பே கவனம் பெறும். தவம் என்ற கீழைத்தேய சிந்தனையில் grit உள்ளடக்கம்.
 
போட்டி உலகில் தவிhக்க முடியாதது. அது தாவரங்கள்,சிங்கம், புலி தொட்டு மனிதன் வரை நாளாந்தம் வலுப்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இது காலதிகாலமாக இருந்து தான் வருகிறது. மனிதன் யானையினைப் பார்த்துப் பெருமூச்சுவிடமுடியாது. ஆனால், ஒவ்வொரு மனிதனிற்குள்ளும் திறக்கப்படாத றங்குப்பெட்டிகள் இருக்கத்தான் செய்கின்றன. நூறுமாக்ஸ் என்பது முதற்படி தனது கருவிகளைத் தானறிவது. கழைப்பு என்பது ஓட்டத்தால் மட்டும் பிறப்பதல்ல. பயத்தால், மன உழைச்சலால், புரியாமையால், கோபத்தால் இன்னும் எத்தனையோ எதிர்மறை உணர்வுகளால் தான் கழைப்பு அதிகம் பிறக்கிறது. கழைப்பை எதிர்கொள்வது என்பது, எந்தப் பிரச்சினையினையும் போல, புரிதலில் இருந்து ஆரம்பிக்கப்படவேண்டியது. 'சும்மாயிருப்பதே சுகம்' என்பது அதன் மேலோட்டமான அர்த்தத்தில் தருகின்ற மகிழ்வு நிலைக்க முடியாதது. வாழ்வு என்பது நகர்வது. எந்த அச்சில் எந்தப் பரிமாணத்தில் என்பதை விட்டுவிடுவோம், நகர்தல் என்பது இருக்கும் வரை தான் அதை வாழ்தல் எனமுடியும்.
 
மேற்கிற்கும் கிழக்கிற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் எவ்வாறு பிரச்சினைகள் அணுகப்படுகின்றன, கண்டறிதல்கள் எவ்வாறு ஆவணப்படுத்தப்படுகின்றன என்பதில் தான் இருக்கிறது. கிழக்கில் நிகழாத கண்டறிதல்களா என்ன. ஆனால். துரதிஸ்ரவசமாக, கிழக்குக் கண்டறிந்த பல விடயங்கள் மேற்கால் கிரமமாக விளக்கப்படும் போது தான் பலரிற்குச் சூட்சுமம் புரிகிறது. Grit என்பது யாழ்ப்பாணத்தானுடன் காலாதிகாலமாக இருந்தது. ஆனால், அதன் அனைத்துப் பரிமாணங்களும் பேசப்படுவதில்லை என்பதால் அது அநாகரிகமாக நிராகரிக்கப்படுகிறது. வளங்கள் முதலியன சார்ந்து முயற்சி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், கீழத்தேய சிந்தனையில், தவம் முதலான பல விடயங்கள் ஒரு மனிதனிற்கு focus மற்றும் உழைப்பு சார்ந்த சாத்தியங்களைக் கூறித்தான் வந்துள்ளன.
 
ஒரு காலத்தில் இந்தியரும் சீனரும் தான் கோடி மக்களுடன் வாழ்வதற்காய்ப் போட்டிபோவேண்டியிருந்தது. இன்று உலகே ஏழு பில்லியன் மக்களுடன் ஒவ்வொரு விடயத்திற்கும் போட்டி போடத் தான் வேண்டி ஏற்படுகிறது. படிப்பு மட்டுமல்ல, வாழ்வு என்பது வாழ்வதற்கான முயல்தலாக, முடிவிடங்கள் மட்டுமன்றிப் பயணங்களும் அனுபவிக்கப்படவேண்டியது தவிர்க்கமுடியாததாகிறது.
 
B- எடுத்த பிள்ளையினை ஏன் திட்டுகிறார்கள் என்பது நேர்மையான கோபமாகத் தான் இருக்pறது. அன்பின் வெளிப்பாடாகத் தான் இருக்கிறது. ஆனால், இங்கு பி-மைனஸ் மட்டுமல்ல பிரச்சினை பல பரிமாணங்களில் பிரச்சினை இருக்கிறது:
 
ஓன்று, நீ முடிஞ்சவரை படிடா கண்ணா அப்பா பாத்துக் கொள்ளுறன் என்று சொல்வதற்கு ஒவ்வொரு தந்தையும் நிரந்தரத் தொழிலதிபர்கள் இல்லை. தலைமுறைகளிற்குச் சேர்த்துவைக்கப்பட்ட சொத்துக்களை ஒரு மனிதன் இழப்பது நடந்துகொண்டிருக்கிறது. தந்தை சூப்பர் ஸ்ரார் என்பதாலோ அல்லது பெரும் புறடியூசர் என்பதாலோ மகனிற்கு நடிப்பு சொறுபோடும் என்று விட முடியாது. அனிமேசன் நடிகனைத் தேவையின்றி ஆக்கலாம். தொழில்நுட்பம் தயாரிப்பாளரிற்குப் போதாமையினை உணர்த்தலாம். பரம்பரைத் தொழில் என்பதே டைனசோராகிக் கொண்டிருக்கிறது. நிலையின்மை மறுக்கப்படமுடியாது. 
 
ஆனால், எல்லாம் மாயை என்று அமர்ந்துவிட முடியாது. குண்டலினி சக்தியினைக் கிழப்பிப் பாயில் பறந்துசெல்லாம் என்று சொல்வது கேட்பதற்கு இனிக்கலாம், ஆனால் பி-மைனஸ் தான் நமக்குச் சாத்தியப்படுகிறது என்றால் குண்டலினி இருக்கோ இல்லையோ என்ற விவாதத்திற்கப்பால் இருந்தால் அதை அடையும் உழைப்பு நம்மிடம் இல்லை என்பது உறைக்கத் தான் செய்யும். நூறு மாக்ஸ் என்பதைத் தெரிந்தோ தெரியாதோ அனைத்துப் பெற்றோரும் குறியீடாகத் தான் பாவித்து வருகிறார்கள். போதாமைகள் தருகின்ற பயத்திலிருந்து எழுகின்ற கண்டுபிடிப்பிற்கான தேவையினைத் தான் இது குறியீடு செய்கிறது. அது குவியத்தையும், உழைப்பையும், தேடலினையும் பேசுவது.
 
நான்கு துறைகளில் எத்தனையோ பட்டங்களை அடுக்கி வைத்துக் கொண்டு உருப்படியா எந்தத் துறையிலும் வேலை செய்யமுடியாத மனிதன் அவனிற்கு மட்டுமல்ல, அவன் பெற்றோரிற்கு மட்டுமல்ல சமூகத்திற்கே ஒரு குயில் முட்டைதான். அந்த முட்டை கூட்டில் இருந்து உருட்டித் தள்ளப்படுவதற்கான சாத்தியம் நிஜமானது. எந்தப் பெற்றோரும் தமது குழந்தை நிலைக்க வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள் என்பதனால் போட்டி புதினமானது அல்ல. குழந்தையின் வெற்றிக்காய் உந்தும் பெற்றோரின் அனைத்து வெளிப்படைக் காரணங்களிற்கும் அப்பால், குழந்தை என்பது நாம் ஏற்கிறோமோ இல்லையோ பெற்றோர் தம்மை தம்மைக் கடந்து நிலைநாட்டி விட எடுக்கின்ற ஒரு முனைப்பும் கூடவே. தமது அனுபவங்கள் சார்ந்து, தம்மை தக்கனவாக்க நினைப்பது தான் போட்டி. வாழ ஆசைப்படின் அது அவசியம் தான். தேடலும் உழைப்பும் வெற்றிகளைக் குவிப்பதற்காக மட்டுமல்ல. உள்ளதை அனுபவிப்பதற்கும்  சரியான மனநிலை அவசியம்.
 
நாசமாப்போன படிப்பு என்று திட்டியபடியோ, பக்கத்துவீட்டுக் காரன் படிக்கிறானே என்பதற்காகவோ, பெருமூச்சுவிடும் பெற்றோரின் நச்சரிப்பிற்காகவோ படித்தால் நூறுமாக்ஸ் பிரச்சினைதான். ஏனெனில் முதலில் அது கைவராது. முதலில் படிப்பு என்ற சொல்லின் பொருளைப் புரிந்து கொள்ளவேண்டும்.
 
புலத்தில் பல பெற்றோர்கள், பல்கலைக்கழகம் செல்லமுடியாத தமது கனவினைத் தமது குழந்தைகள் வாயிலாக அடைந்து விட முனையும் நிலையிருக்கிறது. இந்தப் பின்னணியில் பல பிரச்சினைகள் எழுகின்றன. ஆனால், அருவருப்பு நமக்குள் பிற்கின்ற தருணங்களில் எல்லாம் நாம் ஒன்றை மனதிருத்த வேண்டும், அருவருப்பிற்குள் எப்போதும் அறியாமை இருந்தே தீரும்.
 
நூறுமாக்ஸ் என்பதை நாம் ஒரு விதத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது. தனக்கு வழிநடத்தத் தெரியாத பெற்றோர் ரியூசனிற்குத் தான் அனுப்ப முடியும். ஆனால், ரியூசன் குடுப்பவர்கள் தக்கவர்களா என்பது அடுத்த பிரச்சினையாக நீட்டவே செய்கிறது. இம்முனையில் பல பிரச்சினைகள் உள்ளதை மறுக்கவில்லை. ஆனால், பிரச்சினைகளைக் கண்டு அருவருத்து, அதனால் நூறுமாக்ஸ் என்ற குறியீட்டை நாம் நிராகரித்து விட முடியாது. அது மிக முக்கியமானது.
 
இது வெறும் முகவுரை தான். இம்முனையில் ஒவ்வொன்றாய்ப்பேசின் நாட்கணக்கில் எழுதிக்கொண்டிருக்க நேரும். இது சொல்லி அறியப்பட்டால் கடிவாளம் இடப்பட்டதாகவே பார்க்கப்படும். எனவே அவரவர் தங்களிற்கு ஏற்ற முறையில் தேடித் தெரிந்துகொள்வது தான் சரியாய் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் கதையில் சொல்லப்பட்ட விடயங்கள் எனக்கு மிகவும் பரிச்சயமானவை. மில்லர் லொறியோடு போய் வெடித்தபோது வந்த வெளிச்சத்தை ஒரு மைல் தொலைவில் உள்ள வீட்டில் இருந்து பார்த்ததும், இரவிரவாக வந்து விழுந்த ஆட்டிலறி, ஷெல் மழைகளுக்கும், ஹெலியில் இருந்து 50 கலிபர் அடிகளுக்குள் உறங்கிப் போய் அடுத்தநாள் ஆட்டிலறி அடியோடு திடுக்கிட்டு முழிப்பு வந்ததும், ஊரைவிட்டு அகதியாக தென்மராட்சி நோக்கி உப்புகழிக்குள்ளால் சைக்கிளில் போனதும், எமது ஊரையும் வீட்டையும் பார்க்கவேண்டும் என்ற உந்துதலால் வீட்டுக்காரருக்குக் சொல்லாமல் சைக்கிளில் மந்துவிலின் பின்பக்கமுள்ள சிறு பற்றைக்காடுகளுக்குள்ளால் அந்தணத்திடல் பகுதிக்கு வந்து பயத்துடனும் ஏக்கத்துடனும் ஊரின் திசையைப் பார்த்துத் திரும்புவதும் ஞாபகவீதியில் வந்து போயிற்று.

100 மார்க்ஸ் எடுக்கவேண்டும் என்பது cutoutக்கு மேலாக எடுக்காவிட்டால் எதிர்காலமே இல்லையென்ற இலங்கைத் தரப்படுத்துதல் நிலையால் தமிழர்களுக்குள் ஊடுருவிய விடயம். எஞ்சினியர், டொக்டர், அக்கவுண்டண்ட் ஆகாவிட்டால் மேற்படிப்பு என்று எதுவுமே அந்தக்காலத்தில் இருக்கவில்லை. தற்போது இவற்றையும் தாண்டிப் பல்வேறு விடயங்களைப் படிக்கும் நிலையில் மேற்குலக நாடுகளில் இருந்தாலும் தமிழர்களிடம் விதைக்கப்பட்டது நன்றாகவே வளர்ந்துவிட்டது. இயல்பாகவே படிப்புத்தான் ஒரே மூலதனம் என்று கருதும் தமிழர்கள் தமது பிள்ளைகளை எல்லாவற்றிலும் முதலாவதாக வரவேண்டும் என்று விரும்புவதும் அதற்காகத் தமது உழைப்பின் பெரும்பகுதியைச் செலவழிப்பதும் நாள்தோறும் கண்கூடாகப் பார்க்கும் விடயம்தான்.

பதின்ம வயதில் புலம்பெயர்ந்து வந்து திக்குத் திசை தெரியாமல் திணறிய இடங்களில் முயன்றால் முடியாது எதுவுமில்லை என்று காட்டிய தலைவர் பிரபாகரனும் அவர் வழிவந்த புலிகளும் என்னாலும் எதையும் செய்யமுடியும் என்ற மன வைராக்கியத்தையும் ஓர்மத்தையும் தந்ததால்தான் எவருக்கும் குனியாமல் நிமிர்ந்து நிற்கும் மனநிலையைத் தந்தது. அதையே எமது சந்ததிகளும் பின்பற்றவேண்டும் என்று ஒவ்வொரு தமிழனும் விரும்பத்தான் செய்வான்.

நான் மச்சம் மாமிசத்தைச் சாப்பிடாமல் ஊரில் வளர்ந்ததால் முட்டைப் பொரியலைப் பற்றி சொல்லத் தெரியவில்லை!

Link to comment
Share on other sites

நன்றி இசைக்கலைஞன், ஈசன் மற்றும் கிருபன்.
 
கிருபன் உங்கள் அனுபவத்திற்கு மிக்க நன்றி. எங்கள் வீடு தென்மராட்சியில் இருந்தும் கூட, இந்தத் தாக்குதலில் கண்ணாடிகள் நொருங்கும் அளவிற்கு வீடு அதிர்ந்தது இன்றுவரை ஞாபகத்தில் இருக்கிறது. 
 
ஆன்மீகம், தத்துவம் போன்றவற்றில் நான் என்பதன் எல்லை எதுவரை என்று பொதுவாக ஒரு விடயம் பேசப்படும். ஒரு துண்டு பாண் வெளியில் இருக்கும் போது அது எனக்குப் புறம்பானது, அதை எடுத்து நான் உண்டதும் அது நானாகிவிடுகிறது--பாண் என்ற சக்தி நான் என்பதற்குள் ஒன்றித்துப் போகிறது. மில்லர் வெடித்தபோது எழுந்த அதிர்வு, அந்த அதிர்வின் வீச்செல்லைக்குள் இருந்த எங்கள் எல்லோரிற்குள்ளும் பரவிக் கொண்டது. மில்லர் என்ற சக்தி எங்கள் எல்லோரிற்குள்ளும் அந்த அதிர்வால் ஒரு பாகமாகியது. இது மில்லரிற்கு மட்டுமல்ல, அந்த மண்ணும் அதில் நடந்த அனைத்தும் எங்களிற்குள் அங்கமாகவே இருக்கிறது. ஊரில் இருந்தவர்கள் உலகெலாம் பரவி யாழ்களம் போன்ற வேர்ச்சுவல் திண்ணையில் ஒருவர் சொல்லவதை மற்றையவர் அப்படியே புரிந்துகொள்ளும்வகை இருப்பது இதனால் தான்.
 
மேற்படி சிந்தனையில் தான் கதை பிறந்தது. உங்கள் பின்னூட்டம் அதை உறுதிப்படுத்தியுள்ளது. நன்றி.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.