Jump to content

இலங்கை தமிழர் நலனை நான் யாருக்கும் எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை,வெளிநாட்டுத் தமிழர்களின் ஆதரவு அவசியம்-கருணாநிதி


Recommended Posts

இலங்கை தமிழர் நலனை நான் யாருக்கும் எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை பிரச்னையில் திமுக நிலை கெலிடாஸ்கோப் மாதிரி ஒவ்வொரு அசைவுக்கும் நிறம் மாறும், டிசைன் மாறும் என்று துக்ளக் சோ எழுதியுள்ளார்.

அதற்கு பதில் அளித்துள்ள விடுதலை ஏடு, ஈழ பிரச்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எடுத்து வந்திருக்கிற முரண்பாடுகள் பற்றி சோ ஒரு வரி கூட எழுத அஞ்சுவது ஏன் என்று கேட்டுள்ளது.

இலங்கை பிரச்னை பற்றி ஜெயலலிதா முதன் முதலாக கூறியது என்ன? சிங்கள ராணுவமும், காவல் துறையும் இலங்கையில் தமிழ் இனத்தை அழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை புலிகள் இயக்கம் சிங்கள ராணுவத்தை எதிர்த்து தீரத்துடன் போர் நடத்தி வருகிறது. புலிகள் அழிக்கப்பட்டால் இலங்கையில் உள்ள தமிழினம் முழுவதும் அழிந்து விடும். புலிகளின் வெற்றி இலங்கை தமிழர்களின் வெற்றி. புலிகளை இந்திய அரசு நூற்றுக்கு நூறு ஆதரிக்க வேண்டும் என்று சொன்னார்.

அதன்படி தான் அவர் நடந்து வருகிறாரா? அல்லது, புலிகளிடம் ஜெயலலிதா கொண்ட பாசம் தான் நீடித்ததா? விடுதலை புலிகளுக்கு நான் ஆதரவாக இல்லை என்று என்னை குறைகூறிய அதே ஜெயலலிதா, அன்றைய குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமனை சந்தித்து, திமுக அரசு விடுதலை புலிகளுக்கு உடந்தையாக உள்ளது என்று புகார் மனு கொடுத்தார்.

பின்னர் திமுக ஆட்சி வந்ததும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கருணாநிதி முயல்கிறார். விடுதலை புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கி விட்டார்கள் என்று அறிக்கை விடுத்தார். பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புலிகளின் இயக்கத்தை சேர்ந்த எவரையும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது. இந்திய இராணுவத்தை அனுப்பி பிரபாகரனை பிடித்துவர வேண்டும்என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா இலங்கை பிரச்னையில் நிலையான கொள்கை உடையவராக சோ கண்ணுக்கு தெரிகிறாராம்.

சிங்கள படையினர் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததை கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்ற போது, தமிழர்களை கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் நடக்கும்போது அப்பாவிகள் கொல்லப்படுவதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. உண்மையில் தமிழர்களை விடுதலை புலிகள் பிடித்து வைத்து ராணுவத்தின் முன்னால் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று அறிக்கை விடுத்த ஜெயலலிதா நிலையான கொள்கை உடையவராக சோ பேனாவுக்கு தோன்றுகிறாராம்.

இலங்கையில் போர்நிறுத்தம் அறிவிக்க வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியபோது, புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்று ஜெயலலிதா கூறியதை சோ வசதியாக மறந்து விட்டாரா?

இலங்கை தமிழர் உரிமைகளுக்காக 1956 முதல் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திமுகவையும் என்னையும் குறை கூறுவதற்கு சோவும் அதிமுகவும் தகுதி உடையவர்களா? இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்றபோது அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம் ஏற்பாடு செய்து அழைப்பு அனுப்பினேன். அந்த கூட்டத்தை ஜெயலலிதா கண் துடைப்பு நாடகம் என்று கூறி புறக்கணிப்பு செய்தது சோவுக்கு தெரியாதா?

இந்த 55 ஆண்டுகளில் இலங்கை தமிழர் விஷயத்தில் நான் எந்த நேரத்திலும் யாருக்கும் விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால் ஜெயலலிதாவின் முரண்பாடு பற்றி எதைக் கொண்டு பார்ப்பது என்று சோ தான் சொல்ல வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் ஏப்ரல் 30-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ரெசோ கூட்டத்தில் தனித் தமிழீழம் விரைவில் அமைந்திட ஐ.நா. சபை, தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொதுவாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும் அதற்கு இந்தியா எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் ஏப்ரல் 30-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ரெசோ கூட்டத்தில் கி.வீரமணி, பேராசிரியர் க. அன்பழகன்,சுப. வீரபாண்டியன், கவிஞர் கலி.பூங்குன்றன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தனித் தமிழீழம் விரைவில் அமைந்திட ஐ.நா. சபை, தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும் அதற்கு இந்தியா எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மே 1985-இல் கருணாநிதி, வீரமணி மற்றும் பழ நெடுமாறன் இணைந்து ரெசோ என்கிற தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு என்று தமிழிலும், Tamil Eelam Suporters Organization (TESO) என்று ஆங்கிலத்திலும் பெயர் சூட்டப்பட்டு குறித்த அமைப்பு உருவாக்கப்பட்டது. குறுகிய காலத்திற்குள் குறித்த அமைப்பு செயலிழந்தது.அமைப்பின் தலைவராக கலைஞரும், உறுப்பினர்களாக நெடுமாறன் மற்றும் வீரமணி இருந்தார்கள். இருவருக்கும் முன்னறிவித்தல் கொடுக்காமலே ரெசோ இனி இயங்காது என்று கருணாநிதி அப்போது அறிவித்தார்.

சமீபத்தில் இடம்பெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது கலைஞர் தலைமையிலான தி.மு.க. இந்தவொரு சூழ்நிலையிலேயேதான் மீண்டும் ரெசோவை இயங்க வைப்பதென்றும், தமிழீழமே இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தரும் என்று சமீபத்தில் அறிக்கை விட்டார் கலைஞர். அறிக்கை வெளிவந்த சில தினங்களுக்குள்ளேயே அமைப்பின் முதலாவது கூட்டத்தையும் கூட்டினார். ரெசோவின் அதிகார பூர்வமான அறிக்கை உலகத் தமிழர்களுக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு புறத்தில் கலைஞரின் செயற்பாடுகளுக்கு பின்னால் ஏதேனும் உள்விவகாரம் இருக்குமோ என்கிற பீதியும் இருக்கிறது.

வெளிநாட்டுத் தமிழர்களின் ஆதரவு அவசியம்:

தமிழ் நாட்டு அரசியல் என்பது அது உள்விவகாரமாகவே வெளிநாடு வாழ் தமிழர்கள் பார்க்க வேண்டும். தமிழகத்தில் இயங்கும் அரசியல் கட்சிகள் கலைஞரின் முயற்சிகளை வசை பாடலாம். வெளிநாடு வாழ் தமிழர்கள் கலைஞரின் முயற்சிகளை பாராட்டுவதன் மூலமாக இந்திய மக்களின் ஆதரவை ஈழத் தமிழர்கள் சார்பாக திருப்பலாம் என்பது ஒரு கருத்து.

அத்துடன், இது போன்ற செயற்பாடுகள் ஈழத் தமிழர்கள் வெளிநாடுகளில் செயற்படுத்தும் ஜனநாயக செயற்பாடுகளுக்கு உந்து சக்தியாக அமையும். கலைஞர் போன்றவர்களின் கரங்களை பற்றி அவர் வழி சென்று ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்றவாறு இராஜதந்திர நகர்வுகளை செய்வதனாலேயே தமிழர்களின் எதிரியை தண்டிக்க முடியும்.

தமிழர்களின் எதிரிகள் சிங்கள அரசியல்வாதிகள் என்கிற கருத்தை ஏற்று, தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை விமர்சிப்பதனாலையோ அல்லது அவர்களுடைய செயற்பாடுகளை கண்டிப்பதனாலையோ தமிழர்களுக்கு விடிவு பிறக்காது. நரித் தந்திரப் புத்தியைக் கொண்டவரே கலைஞர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

இவர் போன்ற தந்திரவாதிகளினால்தான் அரசியலில் நிரந்தரமாக இருக்க முடியும் என்பதனை இவர் உறுதிப்படுத்தியுள்ளார்.தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் குறிப்பாக எதிர்க் கருத்துக்கள் உள்ள கட்சிகள் இவரை வசைபாடுவதினால் ரெசோவின் செயற்பாடுகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

கலைஞரின் செயற்பாடுகளை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் விமர்சனம் செய்வதனால் மேலும் பின்னடைவையே நாம் சந்திக்க வேண்டிவரும். தமிழர்களின் ஒற்றுமையை வெளிநாடுகளில் பறைசாற்றுவதனால் பிற இனத்தவர்களும் எம்மை மதிக்க மாட்டார்கள். அத்துடன், எமக்கு தரும் ஆதரவுகளை நிறுத்திவிடும் சந்தர்ப்பமும் அதிகமாக இருக்கிறது.

இந்தியாவைப் பகைத்துக் கொண்டு தமிழ் ஈழம் அடைவதென்பது பகல் கனவு. இந்தியாவின் தார்மீக ஆதரவு ஈழத் தமிழர்களுக்கு எப்போதும் தேவை. தமிழ் நாட்டின் ஆதரவினாலேதான் இந்தியா ஈழத் தமிழர்கள் சார்பான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கும்.

மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அரசியல் செய்யும் பக்குவம் அடைபவர்களே அரசியல் தலைவர்களாக இருக்க முடியும். கடந்த தேர்தலில் ஜெயலலிதா வெல்லுவார் என்று கலைஞர் எண்ணியே இருந்திருக்க மாட்டார். தனது ஆட்சியே இருக்கிறது, தனது அனைத்து செல்வாக்கையும் வைத்து மீண்டும் சுலபமாக ஆட்சிக் கட்டில் ஏறிவிடலாம் என்று கருதினார் கலைஞர்.

அமைதியாக இருந்த ஜெயலலிதா கச்சிதமாக மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அதற்கேற்றவாறு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்து வெற்றியும் கண்டார். ஆகவே, அரசியல் தலைவர்கள் காலத்திற்கு ஏற்றவாறு செய்யும் வேலைகளை நாம் உதாசீனம் செய்துவிடக் கூடாது.

தமிழீழமே இறுதித் தீர்வு:

ரெசோவின் வெளியிடப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:�பல்லாண்டுகளாகப் பாரம்பரியமான முறையில் இலங்கையின் தேசிய இனமாக இருந்து வரும் தமிழினம்;மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டு, இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு, அணிஅணியான அல்லல்களால் தினமும் அலைக்கழிக்கப்பட்டு வரும் பிரச்சினை தீர்வதற்கு தனித் தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மை நிலையை இந்தியத் திருநாட்டின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் உணரச் செய்வதற்கும், தக்க ஆதரவு திரட்டுவதற்கும் உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்."

�இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக ஜ.நாவின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்குரைஞரைத் தலைவராகக் கொண்ட விசாரணைக் குழு, இலங்கை இராணுவத்தினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. வாழ்வுரிமைக்காகப் போராடிய ஈழத் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களைக் குண்டு போட்டுக் கொன்றதோடு போர்க் கைதிகளையும் கொடூரமாகச் சுட்டு அழித்தது என்றும், வீராங்கனைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன."

"இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தி, குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழு மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் வாயிலாகக் கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கையில் போர் முடிந்த பிறகு தமிழர் பகுதிகளை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது. தமிழர் பகுதிகள் எல்லாம் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாகவும்; தமிழ் ஊர்ப் பெயர்கள் கூட சிங்களப் பெயர்களாக மாற்றப்படுவதாகவும் இந்துக் கோவில்கள், கிறிஸ்தவத் தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமியர் மசூதிகள் ஆகியவை புத்த விகாரங்களாக மாற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன."

"இந்த நிலையில் தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்பது தான் இலங்கைத் தமிழர்கள் பால் அன்பும், அக்கறையும் கொண்டுள்ள அனைவரது கருத்தாக இருக்கிறது. ஐ.நாவின் தலையீட்டினையடுத்து இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை ஏற்கெனவே பெற்றிருக்கின்றன.

அதன் அடிப்படையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; இலங்கையில் தமிழர் பகுதிகளில் புதியதாகக் குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்குரிமை வழங்கப்படக் கூடாது நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தனி ஈழம் அமைவதற்கு ஐ.நா.முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஒத்துழைப்பினையும் ஆதர வினையும் நல்குவதோடு ஐ.நா. சபையிலும், உலக அமைப்புகளின் மூலம் சர்வதேச அரங்கிலும் உரிய அழுத்தத்தையும் தர வேண்டும்."

மீண்டும் பிறப்பெடுத்துள்ள ரெசோ தமிழர்களின் கனவை தகர்க்காமல், தமிழீழ தனியரசை நிறுவ அனைத்து வழிகளிலும் உதவ வேண்டும். எட்டுக் கோடித் தமிழர்கள் வாழும் இந்தியாவினால் மட்டுமே ஈழத்தைப் பெற்றுத்தர முடியும் என்கிற கருத்து பல ஈழத்தமிழர்களிடையே பல காலமாக இருந்தது. இந்திரா காந்தி இறந்த பின்னர் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வந்தார்கள்.

தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்துவிடக் கூடாது என்கிற மனப்பாண்புடனேயே செயற்பட்டது இந்திய அரசு. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமிழகம் ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சினையில் ஆர்வம் கொண்டு தமது ஆதரவை அளித்தே வந்தார்கள். ராஜீவின் மரணத்தின் பின்னர் இந்திய மத்திய அரசு எதனை செய்ய வேண்டுமென்று முன்னர் கருதியதோ அதனை கச்சிதமாக செய்தது.

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது பழமொழி. இது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையே. ஒருவருடைய சாவிற்காக ஏறத்தாழ ஒரு லட்சம் மக்களை தமிழீழம் இழந்தது. பல்லாயிரம் மக்கள் சொல்லொணாத் துயரை அனுபவித்தார்கள். இந்தியாவின் சதிவலைகளை அறுத்தெறிய, கலைஞர் போன்ற அனுபவமுடைய அரசியல் தலைவர்களினால் தான் முடியும்.

பிற அரசியல் கட்சிகளையும் உள்வாங்கி பேதங்களை மறந்து தமிழீழ விடுதலையை துரிதப்படுத்த இதய சுக்தியுடன் செயல்வடிவம் கொடுத்தால் தான் கலைஞர், வீரமணி, நெடுமாறன், வைகோ, திருமாவளவன், ராமதாஸ் உட்பட பல கோடி தமிழர்களின் அணையாத தாகமாக இருக்கும் தமிழீழ தனியரசு வெகு விரைவிலையே கிடைக்கும்.

-அனலை நிதிஸ் ச. குமாரன்-

http://www.seithy.co...AAFmP0.facebook

Link to comment
Share on other sites

இவரிடம் என்ன ராஜதந்திரம் இருக்கிறது. அண்மைக்காலமாக கண்ணை மூடிக்கொண்டு ஜெயலலிதாவை கொப்பி அடித்து தன்னைத்தான் மக்கள் முன் முட்டாள் ஆக்குகிறார். காங்கிரசுடன் சேராதிருப்பதற்காக ஜெயலலிதா இலங்கை பயணத்தை தவிர்த்தார். சோனியாவின் காங்கிரசுடன் இறுக ஒட்டிக்கொண்டிருக்கும் கருணாநிதி ஏன் தவிர்த்தார்? இளங்கோவனை விட்டுவிட்டு டி.ஆர். பாலு மாதிரி ஒரு கொஞ்சம் புகழ் உள்ள ஆளை பயணத்தில் போட்டிருந்தால், இன்று பயணத்தால் சுஸ்மா எழுப்பியிருக்கும் சலசலப்பின் பாதி கிரடிற் தி.மு.காவிற்கு போயிருக்கு மல்லவா? இவரின் ராஜதந்திரமெல்லாம் கொள்ளை அடிக்கும் கள்ளத்தனத்தில் மட்டுமே.

சங்கரங்கோவில் இடைத்தேர்தலால், இடை தேர்தல்களையே சந்திக்கப் பயந்து நடுங்குகிறார். இரண்டு ரவுடி பிள்ளைகளினால் நிம்மதி இன்றி அலைகிறார். இவர் போக முதலிலேயே கட்சிக்கு என்ன நடக்க போகிறது என்பது தெரியாது. இது என்ன வகை ராஜதந்திரம்?.

ஆசிரியரே கூறும் வாசகமான "கங்கிரஸ் 89ல் அடைய முடியாததை இப்போது அடைந்துவிட்டது" என்பதை கருணாநிதியும் கூறுவாரா? அது நடந்த நேரம், தான் யாருடன் கூட்டு வைத்திருந்தேன் என்றும் கருணாநிதி கூறுவாரா?. எந்த வகை ராஜதந்திர மேதை, மகள், மகன் மனைவி, எல்லோருமே காங்கிரசிடம் வகையாக மாட்டி அதன் கால் கழுவ வேண்டிய நிலை வரும் வரைக்கும் கண்மூடி அரசியல் செய்து பணம் கொள்ளை அடிக்கப் போவார்கள். மானமே இல்லாமல் அல்லவா கனி மொழியை அனுப்பி தாம் காங்கிரசிடம் பிடிபட்ட களவுக்களுக்கு மகிந்தாவிடம் தகப்பனும் மகளுமாக மன்னிப்பு கேட்க முயன்றது. அதுதான் போகுது என்றால் எவ்வளவு அவமானம் பொன்சேக்கா இவரை கோமாளி என்று கூப்பிட்ட பின்னரும் அவரால் காங்கிரசிடம் அதை எடுத்து சொல்ல முடியாமல் விக்கி விம்மிப்போட்டு இருக்க நேர்ந்தது.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்றுவிட்டு சென்னை ஒட்டல்களில் போயிருந்து குடித்து வெறியாடிய சிங்கள அரசியல்வாதிகள் இப்போ சென்னை போவதாக இருந்தால் ஜெயலலிதாவுக்கு அறிவிக்க வேண்டும். ஆசிரியரே சொல்கிறார், கருணாநிதி தான் பதவிக்கு வரலாம் என்று நப்பியிருந்தவர் என்றும் ஆனால் ஜெயலலிதா இலங்கை-காங்கிரஸ் உறவை சரியாகப் பயன் படுத்தி தி.மு.காவை விழுத்திவிட்டதாகவும். இலங்கையில் நடந்தவற்றை கண்டு கொந்தளித்த தமிழ்நாட்டு மக்களை அடக்கிவிட்டு தான் தேர்தலில் வெல்வேன் என நினைத்த கருணநிதிக்கும், முள்ளிவாய்க்காலை அழித்துவிட்டு யாழ்ப்பாணம் போய் தான் அங்கே தேர்தல் வெல்லாம் என்று நினைத்து யாழ்ப்பாணம் போன மகிந்தாவின் ராஜதந்திரத்திற்கும் இடையில் நிறையத்தான் பேதம் இருக்கா?

இந்தியாவின் தார்மீக ஆதரவு தேவையாக இருக்கலாம். ஆனால் அது காங்கிரஸ் பதவியில் இருக்கும் போது வராது. தமிழருக்கு ஒரு தீர்வு வர காங்கிரஸ் போயே ஆக வேணும். இல்லையேல் மேற்குநாடுகள், ஐ.நா எல்லாம் தொடர்ந்து குளப்பத்தை சந்திக்க போகின்றன. காங்கிரசை ஒருவார்த்தை நோக கதைக்கமுடியாத ராஜதந்திரத்தை கருணாநிதி தன்னோடு வைத்திருக்கட்டும். ஆனால் காங்கிரசின் அடிவருடிப் பாதுகாவலன்(தமிழ்நாட்டில்) போகவேண்டியது இப்போது தேவையின் நிமித்தம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.