Jump to content

பத்மநாபா – வலி நிறைந்த மரணமும் மாற்றங்களும் : சபா நாவலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பத்மநாபா – வலி நிறைந்த மரணமும் மாற்றங்களும் : சபா நாவலன்

அங்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று குண்டுவீச்சு விமானங்களுக்கு மட்டும் அவ்வப்போது தெரிந்திருக்கும். புன்னனாலைக் கட்டுவன் கடந்து பலாலி இராணுவமுகாமின் வேலியை எட்ட நின்று பார்த்துத் திரும்பியர்களிலிருந்து துப்பாக்கியால் சுட்டு சில இராணுவச் சிப்பாய்களைக் கொன்றவர்களுக்கும் கூட மத்தாளோடையைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

முன்னொரு காலத்தில் மரணம் தெருக்களில் துப்பாக்கியோடு அலைந்த போது அதனை வழி நடத்தியவர்கள், இன்று எல்லாம் முடிந்து போனது என ‘இந்திய இறக்குமதிச் சரக்கான தலித்தியம் என்ற’ சாதி வாதத்தை வழி நடத்துவதை இன்னும் எந்த மத்தாளொடை வாசியும் கேள்விப்பட்டிருக்க மாட்டான்.

புலிகளின் அழிவிற்குப் பின்னர் இன்று வடக்கில், கடைவிரித்திருக்கும் எந்தச் சாதிவாதிக்கும் மத்தாளொடையின் பாரம்பரியம் தெரிந்திருக்காது என நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம்.

சாதிக் கொடுமையும் யாழ்ப்பாண புன்னாலைக்கட்டுவன் வெள்ளாளர்களும் சிதைத்துத் தனிமைப்படுத்திய கூலி விவசாயிகள் உழைத்து மடியும் கிராமம் தான் மத்தாளோடை.

84 ஆம் ஆண்டு மத்தாளொடையில் சில மாதங்கள் தங்கியிருக்க சந்தர்பம் கிடைத்தது. தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்ட்டுக்கொல்லப்பட்ட விமலேஸ்வரன் வாழ்ந்த கிராமங்களில் மத்தாளொடையும் ஒன்று.

அபோதெல்லாம் ‘நாங்களும் போராட உரிமை தரவேண்டும்’ என்று இயக்கங்களை நோக்கி உள்ளக ஜனநாயகப் போராட்டங்கள் ஆரம்பித்திருந்த காலம்.

தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வாறு அணிதிரள வேண்டும் என்று சில ஆர்வம் மிக்க மத்தாளொடை இளைஞர்களோடு விவாதித்துக்கொண்டிருந்தேன். ஏனைய சமூகப்பகுதிகளிலிருந்து தனிமைப்பட்ட அந்தக் கிராமம் எழுச்சி பெற்ற காலத்தில் தான் ‘யாழ்ப்பாணம் வியட்னாமாகிறது’ என்று “மூத்த தேசியத்தலைவர்” அமர்தலிங்கம் குழு இலங்கை அரசிற்கு பாரளுமன்றத்தில் போட்டுக்கொடுத்தது.

கிராமத்தவர்கள் “பொடியள் விடமாட்டங்கள்” என்பதைத் தவிர தேசிய விடுதலைப் போராட்டம் குறித்துப் பெரிதாக எதுவும் அறிந்திருக்கவில்லை. அங்கிருந்து 5 கிலோமிட்டர் தொலைவில் தான் முன்பொரு காலத்தில் பிரபாகரன் உமாமாகேஸ்வரன் போன்றவர்கள் தலைமறைவாக இருந்தார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.

இயக்கங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் குறித்துப் கிராமத்து இளைஞர்களோடு ஒன்று கூடல் நடத்திய போது அவர்களின் வெளியீடுகளையும் எடுத்துச் சென்றிருந்தேன்.

ஈ.பி.ஆர்.எல்.எப் இன் நூல் ஒன்றின் அட்டைப்படத்தைப் பார்த்ததும் அங்கிருந்த ஒருவர் “இது ரஞ்சன் தோழர்” என்று உரக்கச் சத்தமிட்டார். இல்லை இது பத்மநாபா, ஈ.பி.ஆர்.எல்.எப் << ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி>> என்ற இயக்கத்தின் செயலாளர் என்றதும், அவர் நம்ப மறுத்துவிட்டார். இல்லை இது ரஞ்சன் தோழர் தான், எனது மகனுக்குப் பெயர் வைத்தது கூட இவர் தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர். இவர் ஈ.பி.எல்.ஆர் இல் சேர்ந்துவிட்டது தனக்குத் தெரியும் என்றும் சொன்னார். அவரது மகன் கூட சமரன் என்றே பெயர் சூட்டப்பட்டிருந்தார்.

இப்போது நான் அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருப்பதாக உணர்ந்தேன். அவர்கள் ரஞ்சன் தோழரைப் பற்றிக் கூறத் தொடங்கினர். கிராமியத் தொழிலாளர் சங்கத்திற்கு வேலை செய்தவர். அப்போதே தாடி வைத்திருந்தார். எங்களைக் கூலிப் போராட்டங்களுக்குத் தயார் படுத்தினார். தன்னைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டார். அவர் எங்களவர். எங்களோடு வாழ்ந்தவர். ஈ.பி.எல்.ஆர் இற்காக எங்களைவிட்டுப் போய்விட்டார் என்றார்கள். இப்படி பலவற்றைக் கூறிய போது ரஞ்சன் தோழர்தான் “பிரபல” பத்மனாபா என உறுதிப்படுத்திக்கொள்ள எனக்கு நேரமெடுக்கவில்லை.

எல்லாவற்றையும் மர்மக்கதை போல கேட்டு முடித்துத்ததும், நான் கண்ட பத்மநாபா குறித்த பிரதி பிமபம் வேறானது என உணரத் தொடங்கினேன்.

மத்தாளொடையில் பத்தமானாபாவை மக்கள் அறிமுகப்படுத்தும் முன்பதாக 1983 இல் தமிழ் நாட்டில் அவரைச் சந்தித்திருந்தேன். எபிக் (EPIC) அலுவலகத்தில் எஸ்.ஜி(S.G) தோழர் என்று அடைமொழியில் அழைக்கப்பட்டார். அதிகம் பேசாமல் கல்லாப்பெட்டி முதலாளி போல அவர் உட்காந்திருக்க சுரேஷ் பிரமச்சந்திரம் அவரது குரலாக ஒலிப்பார்.

ஈழத்து ‘சே’ என்று அழைக்கும் அளவிற்கு கவர்ச்சிகரமானவர். சில வேளைகளில் தாடியும் , நட்சத்திரத் தொப்பியுமாக பத்மனாபாவைப் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு புரட்சிக்காரன் என்று சொல்லிவிடலாம்.

மக்களைப் பொறுத்தவரையில் பிரபாகரனுக்கு S.M.G போல பத்மனாபாவிற்கு தாடி! நெடிய உருவத்தைக் கொண்ட அமைதியான மனிதர். என்னைப் போன்ற சிறுவர்களைக் கூட தனது தலைமையகத்திற்கு அழைத்து வரவேற்றவர்.

இந்தியாவில் அவரைச் சந்தித்த போது ரெலோ இயக்கத்தில் உள்முரண்பாட்டில் சிக்குண்டு விலகியிருந்தேன். நாளாந்தம் அவர்களது அலுவலகத்திற்கு அரசியல் பேசுவதற்காக மட்டுமல்ல பசித்த போது சாப்பிடுவதற்காகவும் செல்வது வழமை.

enlfleaders.jpg

ஒரு நாள் என்னை அங்கு வந்தால் மாலை வரை காத்திருக்குமாறு இன்னோரு ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரிடம் கூறிவிட்டுச் சென்றிருந்தார். அவர் அங்கு வந்ததும் மோட்டார் சைக்கிளில் தன்னோடு வருமாறு அழைத்தார். அவரே அதனைச் செலுத்தினார். போகும் வழியிலேயே என்னிடம் பேசினார். அவர் தமது இரகசிய இடம் ஒன்றை எனக்கு அறிமுகப்படுத்தப் போவதாகவும் அங்கே இந்திய மார்க்சிய லெனினிய குழு தோழர் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தப் போவதாகவும் கூறினார்.

அரை மணி நேரப் பயணத்தின் பின்னர் நெருக்கமான வீடுகள் கொண்ட பகுதி ஒன்றைச் சென்ற்டைந்தோம். வாகனத்தை நிறுத்திவிட்டு மூன்றாவது அல்லது நான்காவது மாடிவரை சென்று தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்தார். அங்கே ஏற்கனவே அறிமுகமான சுரேஷ் பிரேமச்சந்திரனோடு ஒல்லியான நெடிய உருவம் கொண்ட தமிழ் நாட்டுத் தமிழரும் அமர்ந்திருந்தார். தாம் இந்தியாவில் வேலை செய்கின்ற மார்க்சியக் குழு என்றும் ஈழத்தில் மார்க்சிய அமைப்புக்களோடு இணைந்து வேலை செய்ய விருப்புக் கொண்டுள்ளதாகவும் சொன்னார்.

எனக்கு அந்த வயதில் எந்த அனுபவமும் இருந்ததில்லை. ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எப் உடன் ஏன் உடன்பட முடியாது என்பதை நான் தெளிவாகக் கூறினேன். சுரேஷ் எதிர்வாதம் புரிய ஆரம்பித்தார். நாபா எதுவும் பேசவில்லை. ஒரு மணி நேர உரையாடலின் பின்னர். மீண்டும் நாபாவோடு மோட்டார் சைக்கிளில் எபிக் அலுவலகத்தை நோக்கிச் சென்றோம். நான் பேசியவற்றில் நியாயம் இருக்கிறது என்றும் இது குறித்து இன்னொரு நாளில் பேசவேண்டும் என்றார்.

இதற்கிடையில் ரெலோ இயக்கம் எம்மை தேட ஆரம்பித்திருந்தது. நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டோம். வேதாரணியத்திற்குப் போகவேண்டியதாயிற்று. அதற்குப் பிறகு நாபாவைச் சந்திக்கவில்லை. நாபா, சுரேஷ் போன்றவர்களை மறப்பதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது.

பின்னர் மத்தாளோடை மக்கள் பத்மநாபா குறித்த இது வரை அறிந்திராத புதிய பரிணாமம் ஒன்றைத் தந்திருந்தார்கள். பத்மாநாபாவை தமிழ் நாட்டிலிருந்து படகில் ஏறுவதற்கு முன்பதாக ஒரு முறை சந்தித்திருக்கலாம் என்று தோன்றியது அப்போதுதான்.

மத்தாளோடையில் இருந்து மட்டுமல்ல ஏனைய கிராமங்களிலிருந்தும் ஈ.பி.ஆர்.எல்.எப் அன்னியப்பட்டிருந்தது. அவர்களின் கிராமியத் தொழிலாளர் சங்கம் என்ற அமைப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அத்தனை சீரழிவுகளையும் நியாயப்படுத்தும் பிரச்சாரக் குழுவாக மாற்றமடைந்திருந்தது.

மக்கள் மத்தியில் வெகுஜன வேலைகளை முன்னெடுத்தவர்கள் தலைவர்களாவிருந்த அமைப்பே இந்த மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்தால் ஏனைய அமைப்புக்கள் குறித்து கற்பனை செய்தே முடிவிற்கு வந்துவிடலாம்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துக்கள் தலைமைதாங்கும் அமைப்பாகவே ஈ.பி.ஆர்.எல்.எப் உருவாகியிருந்தது.

83 இல் இந்திய அரசின் உளவுத்துறை வழங்கிய இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்காக தமது பலத்தை நிறுவிக்காட்டுவதற்காக அனைத்து இயக்கங்களும் முயற்சித்தன. புலிகள் திருனெல்வேலியில் இராணுவத் தொடர்மீது தாக்குதல் நடத்தி, தமது பலம் இது தான் எனக் கூறினர். தனது பங்கிற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் வெளிப்படையாக இயங்கிய எல்லா வெகுஜன அமைப்புக்களையும் ‘தமது’ என சுவரொட்டிகள் மூலம் தெரிவித்தனர்.

வெளிப்படையாக வெகுஜன வேலைகளை மேற்கொண்ட பலர் காட்டிக்கொடுக்கப்பட்டனர். பலர் தலை மறைவாகினர்.

அன்றிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற இயக்கத்தின் ஒவ்வொரு அங்கமும் இந்திய உளவுத் துறையின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது. பத்மநாபா வெறும் கைப்பொம்மை போல உருவாகிவிட்டார்.

83 இற்குப் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் வெறும் ஆயுதக் குழு மட்டும் தான். அவர்கள் பேசிய அரசியல் என்பது தமது ஆயுதக் குழுவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக மட்டுமே அமைந்திருந்தது.

வெறுமனே ஆயுதங்களை மட்டும் நம்பியிருக்கும் எந்தக் குழுவும் அழிக்கபடும் என்பதற்கு இறுதி உதாரணம் புலிகள்என்றால் அதன் முதலாவது உதாரணங்களில் ஈ.பி.ஆர்.எல். ஐ இணைத்துக்கொள்ளலாம். 1986 இறுதிப்பகுதியில் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளால் ஈ.பி.ஆர்.எல்.எப் அழிக்கப்பட்டது.

புலிகளின் முகாம்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களாலும் ஆதரவாளர்களாலும் நிரம்பி வழிந்தது. முகாம்களில் மரண ஓலம் கேட்டது. பலர் ஏன் கொல்லப்படுகிறோம் என்று அறியாமலே கொல்லப்படனர். போராட வேண்டும் என்ற தியாக உணர்வோடு அனைத்தையும் துறந்து தெருவிற்கு வந்த இளைஞர்கள் தெருவோரத்தில் பிணமாக்கப்பட்டனர். யாழ்ப்பாணத் தெருக்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களைச் சரண்டையுமாறு ஒலி பெருக்கியில் புலிகள் கட்டளையிட்டனர்.

அப்போது இலங்கை குண்டுத் தாக்குதல்களை நிறுத்தியிருந்தது. இந்திய அரசு தனக்கு துணைக்குழு ஒன்றை உருவாகிறது என்ற பூரிப்பில் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது.

அதன் பின்னர் இந்திய இராணுவத்தின் துணைக் குழுவாக இணைந்து கொண்ட அந்த இயக்கம் மத்தாளொடைக்கு மட்டுமல்ல ஈழத்தின் ஒவ்வோடு மனிதனுக்கும் எதிரானதாக மாற்றம் பெற்றது.

இந்திய இராணுவம் வட – கிழக்கை ஆக்கிரமித்த போது அவர்களோடு இன்னொரு சமூகவிரோதக் குழுவாக ஈ.பி.ஆர்.எல்.எப் மீண்டது. கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என்ற அனைத்து சமூகவிரோத செயற்பாடுகளையும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டது. சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமை தாங்கிய “மண்டையன் குழு” புலிகள் என்று சந்தேகப் பட்ட அனைவரையும் கோரமாக வெட்டிக் கொன்றது.

வரதராஜப் பெருமாள் இலங்கை அரச தொலைக்காட்சியில் தோன்றி மக்களை மிரட்டினார். புத்தகங்களோடு பள்ளிக்குப்போன சிறுவர்களைப் பிடித்து கட்டாய இராணுவப் பயிற்சி கொடுத்து இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணைப்படையாக மாற்றியது பத்மநாபா தலைமை தாங்கிய இயக்கம்.

நாபாவின் பெயர் வெளியே வரவில்லை. யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத் தளாமாகவிருந்த அசோக் ஹோட்டலில் தங்கியிருந்ததாகக் கூறினர்.

ஒரு மனிதனின் வாழ்க்கை தான் அவனது சிந்தனையைத் திர்மானிக்கும் என்பார்கள். இப்போது நாபாவின் வாழ்க்கை ஆக்கிரமிப்பு அதிகாரத்தைச் சார்ந்ததாக மாறியிருந்தது. அவரது சிந்தனை மக்கள் சார்ந்ததாக அப்போது இல்லை என்பதே உண்மை.

ஒரு கட்சியை, போராட்ட இயக்கத்தை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்ற கேள்வியிலிருந்தே அவற்றின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. போராட்ட அமைப்பொன்று ஒழுங்கமைக்கப்பட்ட பலமான மக்களின் கண்காணிப்பில் இருக்கும் வரை தவறுகள் தவிர்க்கப்படும். அன்று சோவியத் ஒன்றியத்திலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் உட்பட நேபாளம் வரைக்கும் கட்சி தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படும் பொறிமுறையின்மையே தவறுகள் நிறுவனமயமாவதற்குக் காரணமானது.

1990 யூன் 19ம் திகதி தமிழ்நாடு, சென்னை, கோடம்பாக்கத்தில் சக்காரியா காலனி இல் புலிகளால் ஈழ மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா மற்றும் சிலரோடு கொல்லப்பட்டார். நாபா எனக்கு அறிமுகப்படுத்திய அவர்களின் இரகசிய வீட்டில் வைத்தே ஒன்று கூடல் ஒன்றின் போது ஏனைய உறுப்பினர்களோடு சேர்த்துக் கொல்லப்பட்டார்.

மத்தாளோடையில் கிராமத்தவர்கள் விபரித்த ரஞ்சன் தோழராக அன்றி வெறும் ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற இந்திய இராணுவத்தின் துணைகுழுவின் தலைவராக அவர் இறந்துபோனார். எது எவ்வாறாயினும் தனது லண்டன் வாழ்வைத் துறந்து மக்களுக்காகப் போராட என்று ஆரம்பித்த சமூகப்பற்றுள்ள போராளியின் மரணமும் மாற்றங்களும் வலி மிகுந்தவை.

http://inioru.com/?p=29224

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பத்மநாபாவின் அழிவு.. பற்றி சபா நாவலன் போன்றவர்கள் கவலைப்படுவதும்.. அதை வைச்சு சாதியம் கதைப்பதும் அவர்களின் இருப்புக்கு அவசியம். இவர்கள் இன்னும் 1984 ஐ விட்டு வெளிவரவில்லை.

ஆனால்.. பத்மநாபாவை.. நான் அடையாளம் காணும் போது.. எங்கள் யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியரை பள்ளியில் வைத்தே சுட்டுக்கொன்ற ஒரு கொடூரனாகவே அடையாளம் காண்கிறேன். சிறு வயதில் அந்தச் சம்பவம் என்னை மிக மிக பாதித்திருந்தது.

புலி.. அழிவு.. புலி சுட்டது... கொன்றது என்று வரிக்கு வரி எழுதும்.. நாவலன்கள்.. ஏன்.. இவர்களின் அராஜகங்களை எழுதத் தலைப்படுவதில்லை..????????!

இப்படியான எழுத்தாளர்களே.. பாசிசத்தின் இருப்புக்கு முக்கிய காரண கர்த்தாக்கள்..! :icon_idea:

The Principal, who had also been in his office the Vice—Principal, Mr. Mahesan and some 3 others went into the corridor to see what had happened. They were followed by the same gunman and some IPKF soldiers. Three teachers who had received gunshots were lying on the floor, one of whom said that they needed medical attention. Mr. Mahesan remonstrated with the gunmen, who proceeded to belabour him with a rod. The Vice Principal protested and the gunman hit him with the butt on the part of his skull at the back. The gunman then raised his gun as if to shoot him. Immediately, an Indian soldier put his boot to his back and pushed him into a class—room, where he joined the Principal and some others. On looking back over the events, the Vice Principal is convinced that this -act saved his life.

It was the discovered that Mr Shanmugalingam, the teacher in the corridor lying closest to the outside entrance had died. A little later, they came outside and saw the officer coming their way. When they told him that there were wounded who had to be taken to hospital, the officer asked them to get a vehicle. When the Vice Principal made to go, the gunman moved threateningly. The Vice—Principal appealed to the officer, who told him to ignore the gunman and proceeded to lead him by the hand. Other soldiers stopped a vehicle and the two wounded were taken away.

Shortly after the shooting; a gunman came upstairs and: asked everyone in the library to go down. While& going downstairs, the gunman asked a senior staff member whether the’ person killed was a teacher. The staff member said that, he did not know anything and he was going doing for the first time. The young man sat on the stairs pensively, letting his chin drop on his fist. The staff member asked if he could go back to close the, library and then return. “There is no need”, replied the young man worriedly,. “we are the only ones about”.

http://www.padippakam.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சபா நாவலன் 2009 மேக்கு முன்பு எங்கிருன்தவர் அப்போது இவர் எந்த ஊடகங்களிலும் வந்ததில்லையே இப்போது இதனை எழுதுவதால் எதாவது நல்லது நடந்துவிடுமா ? பதில் நிச்சயமாக இல்லை மேலும் சிக்கல்களையே மக்கள்மத்தியில் உருவாக்கும் என்பதனை இந்த ஆள் உணரமாட்டாரா ?

புலி.. அழிவு.. புலி சுட்டது... கொன்றது என்று வரிக்கு வரி எழுதும்.. நாவலன்கள்.. ஏன்.. இவர்களின் அராஜகங்களை எழுதத் தலைப்படுவதில்லை..????????!

எனக்குள்ளும் இதேகேள்விகள் தோன்றுகின்றது !

[size=4]இப்படியான எழுத்தாளர்களே.. பாசிசத்தின் இருப்புக்கு முக்கிய காரண கர்த்தாக்கள்..! [/size] :icon_idea:

உண்மைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமைபோல கட்டுரையைச் சரியாக வாசிக்கவில்லைப் போலிருக்கின்றது!

நாவலனின் வரலாறும் அவராலாயே எழுதப்பட்டுத்தான் இருக்கின்றது. தேடினால் கிடைக்கும்!

கட்டுரையில் சுட்டப்பட்ட தற்போதைய தமிழ்த் தேசியவாதி சுரேஸ் பிரேமச்சந்தினைப் பற்றி வாய் திறக்காமல் இருப்பது தமிழ்த் தேசியத்தை உய்யவைக்கும் என்பது தெரிந்ததுதானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக் கல்லூரி ஆசியரை நாபா சுட்டுக் கொண்டார் என்டால் சென் ஜோன்ஸ் அதிபர் ஆனந்தராஜாவை புலிகள் சுட்டுக் கொண்டார்கள் தானே...இப்படியே தாங்கள் கண்ட‌வற்றை வைத்து மாறி,மாறி பிழை பிடித்துக் கொண்டு இருக்கலாம்

Link to comment
Share on other sites

சபா நாவலன் இனியோருவில் தொடர்ந்து எழுதிவருபவர் .

இந்து ஆசிரியரை சுட்டது இந்தியன் ஆமி வருகைக்கு பின்னர்தான் .நாபாவின் பரிதாப நிலை பற்றித்தான் இந்த கட்டுரையே சொல்லி இருக்கின்றது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக் கல்லூரி ஆசியரை நாபா சுட்டுக் கொண்டார் என்டால் சென் ஜோன்ஸ் அதிபர் ஆனந்தராஜாவை புலிகள் சுட்டுக் கொண்டார்கள் தானே...இப்படியே தாங்கள் கண்ட‌வற்றை வைத்து மாறி,மாறி பிழை பிடித்துக் கொண்டு இருக்கலாம்

வரலாறு தெரிஞ்சு எழுதனும். இல்லை ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்க வேண்டும்.

ஆனந்தராஜா கொல்லப்பட்டது புலிகளால் அல்ல (இன்றும் புலிகள் மீது தான் அந்தக் குற்றச்சாட்டு உள்ளது). வேறு ஒரு இயக்கத்தினரால். இதனை ஈபிடிபி அற்புதனே எழுதி இருந்தார்...! அற்புதன் பின்னர் டக்கிளஸ் தேவானந்தாவால் கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். காரணம்.. அவர் புலி சார்ப்பாக உண்மைகளை எழுதுகிறார் என்று. ஆனால் அவர் எழுதியவை புலிகள் மீது போடப்பட்ட அபாண்டப் பழிகளின் உள்வீட்டு ரகசியங்கள் என்பதால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும் ஆனந்தராஜா அன்று சுட்டுக்கொல்லப்பட சொல்லப்பட்ட காரணங்கள்.. சரியானவையாகவே இருந்தன. அவர் எமது மக்களை எதிரிக்குக் காட்டிக் கொடுத்தார்..!

ஆனால் இந்த ஆசிரியர் மாணவர்களை துப்பாக்கி ரவைகளில் இருந்து பாதுகாக்க முற்பட்ட வேளை கொல்லப்பட்டார். இது இரண்டும் ஒன்றா..????!

ஒரு விடயத்தை முழுமையா தெரிந்து கொண்டாவது கருத்தை எழுதுங்கள்.. தயவுசெய்து..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபா நாவலன் இனியோருவில் தொடர்ந்து எழுதிவருபவர் .

இந்து ஆசிரியரை சுட்டது இந்தியன் ஆமி வருகைக்கு பின்னர்தான் .நாபாவின் பரிதாப நிலை பற்றித்தான் இந்த கட்டுரையே சொல்லி இருக்கின்றது .

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பலவீனப்படுத்தும் நோக்கில்.. சுரேஸ் மீது பழியைப் போட்டு பத்மநாபாவை.. வரதராஜப் பெருமாளை.. டக்கிளஸை புனிதர்களாக்கும் வேலை தான் இந்தக் கட்டுரை.

சுரேஸ் மீது பழி விழும் அளவிற்கு அதிகமாகவே பத்பநாபா மீதும்.. வரதராஜப் பெருமாள் மீதும்.. டக்கிளஸ் தேவானந்தா மீதும்.. (மண்டையன் குழு முக்கியமாக ஈ என் டி எல் எவ் வால் டக்கிளசின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்ட ஒன்று...!) போடப்பட முடியும். ஈ என் டி எல் எவ் பரந்தன் ராஜனை.. சபா நாவலன் மறந்த கொடுமையை என்னென்பது..!!!

சபா நாவலனின் பாசிச எழுத்துக்களும் சாதிய வெறியாட்டக் கருத்துக்களும்.. பற்றி மக்கள் நன்கு அறிவார்கள். இவர் எல்லாம் முள்ளிவாய்க்காலின் பின் முளைத்த.. அரசியல் சாணக்கியர்கள். இவர்களால் செய்ய முடிந்தது.. புலிகளில் குறை கண்டு கொண்டிருப்பதும்.. தமிழ் மக்களின் அரசியல் பலத்தை எப்படியாவது சிதைத்து சின்னாபின்னமாக்கி.. இணக்க அரசியலுக்குள் தமிழனை கொண்டு சென்று அடிமைப்படுத்தி வைத்து.. சாதிய வெறியூட்டலோடு.. சாதிய ஒழிப்பை.. சாட்டி.. தம்மை புரட்சியாளர்களாக.. முன்னிறுத்திக் கொள்வது.

இதெல்லாம் சங்கரி காலத்து.. காலம் கடந்த.. தந்திரோபாயங்கள். இவை பற்றி மக்கள் நன்கே பாடம் படித்துவிட்டார்கள். எனவே ஒட்டுக்குழு ஆதரவாளர்கள்.. மாற்றுக்கருத்து மாணிக்கங்கள்.. வேறு வழிகளில் தான் எனி மக்களை அணுக வேண்டும். புலி அழிப்பு.. சாதியம்.. எல்லாம் எனி வேர்க்கவுட் ஆகாது..! :icon_idea::lol:

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான் நீங்கள் ஒன்றை உணர்ந்துகொள்ளவில்லை, தனது இனமே அழிந்தாலும் பரவாயில்லை ஆனால் தங்களது பழியை தீர்க்கவேண்டும் என்று அலையும் இனம் தான் தமிழ் இனம், அதனால தான் இன்னமும் புலி புலி என்று கூவி கூவியே பிழைப்பு நடத்தீனம்.அதைவிட இப்ப புதிசாக சிலர் சொல்லீனம், மக்கள் இப்ப நிம்மதியாக யாழ்பாணத்தில் இருக்கீனமாம், அப்படியானால் 150,000 தமிழ் மக்களை சிங்களவனுக்கு பலிகொடுத்தாலும் பரவாயில்லை தாங்கள் நிம்மதியாக CHECK POINT இல் இறங்கி ஏராமல் யாழ்ப்பாணம் போக வேண்டும்.அதுக்காக யால் மக்கள் எல்லம் சிங்களவனுடன் சக வாழ்வு நடத்த விரும்பவில்லை, வேறு வழி இல்லாமல் அடங்கி போகிரார்கள் என்பது தான் உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபா நாவலனின் பாசிச எழுத்துக்களும் சாதிய வெறியாட்டக் கருத்துக்களும்.. பற்றி மக்கள் நன்கு அறிவார்கள். இவர் எல்லாம் முள்ளிவாய்க்காலின் பின் முளைத்த.. அரசியல் சாணக்கியர்கள். இவர்களால் செய்ய முடிந்தது.. புலிகளில் குறை கண்டு கொண்டிருப்பதும்.. தமிழ் மக்களின் அரசியல் பலத்தை எப்படியாவது சிதைத்து சின்னாபின்னமாக்கி.. இணக்க அரசியலுக்குள் தமிழனை கொண்டு சென்று அடிமைப்படுத்தி வைத்து.. சாதிய வெறியூட்டலோடு.. சாதிய ஒழிப்பை.. சாட்டி.. தம்மை புரட்சியாளர்களாக.. முன்னிறுத்திக் கொள்வது.

இதுதான் அரைகுறையாக விளங்கிக்கொண்டு கதைப்பது என்பது. தூற்றுவதற்கு முன்னர் குறைந்தபட்சம் அவரது பின்னணியை அறிந்துகொண்டிருக்கலாம். கட்டுரையை வாசித்திருந்தால் முள்ளிவாய்க்காலிற்குப் பின்னா, முன்னா முளைத்தவர் என்று தெரிந்திருக்கும் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவரும் உங்கட கூட்டாளியாகிட்டாரோ கிருபண்ணா.நாங்கள் அரைகுறையாக இருக்கலாம். நீங்கள் நிறையாக இருக்கலாம். அது பிரச்சனை அல்ல. ஆனால் கட்டுரை தொட்டுச் செல்லும் விடயம் பத்மநாபாவை புனிதராகவும்.. புலி அழிப்பை நினைத்துக் கொண்டும் சாதியத்தை விதைத்துக் கொண்டும் இருக்கிற பாசிசத்தைச் சொல்வதை விட வேற என்னத்தைச் சொல்லுது.

பத்மநாபாவின் தலைமையின் கீழ் இயங்கிய சுரேஸின் மீது பழிபோடும்.. நாவலன்.. பத்மநாபாவை புனிதராக்க நீங்கள் அனுமதிப்பீர்கள்.. மக்கள்..???????????!

இது தொடர்பாக.. நீங்க விளங்கினதைச் சொன்னீங்கன்னா.. நாங்க விளங்கினது அரைகுறையா.. நிறையாண்ணு புரியும்.

அதுமட்டுமல்ல.. இவர் ஒன்றும் சர்வதேச அரசியல் விமர்சகர் அல்ல.. சபா.நாவலன் தேடுவாரற்றுக் கிடந்த ஒரு மாற்றுக் கருத்து மாணிக்கம். தீபத்தின் மூலம்.. முள்ளிவாய்க்காலின் பின்.. முளைத்த அரசியல் சாணக்கியவாதி. இணையத்தில் கிறுக்கிறவனை எல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கனுன்னு அவசியம் இல்லையே..!

புலி அழிப்பு என்று முள்ளிவாய்க்கால் பேரழிவை.. வெளிப்படையாக வரவேற்கும் ஒரு பாசிசவாதி. இவர் எல்லாம்.. உங்களுக்கு சர்ச்சையைக் கிளப்ப உதவலாமே தவிர.. (உங்கட மற்றக் கூட்டாளி.. சோபாசக்தி.. அவரை கொஞ்ச நாளாக் காணேல்ல..).. வேற ஒன்றுக்கும் உதவமாட்டார்கள்.

நீங்கள் ஏலவே சர்ச்சையாளர்களை ஆதரிப்பதன் மூலம்.. மாறுபட்டவர் என்ற தோற்றத்தைக் காட்ட விரும்பிற ஒரு ஆள்.

எனக்கு அந்த தோற்றத்தால் மக்கள் என்ன நன்மை அடைகிறார்கள் என்பது புரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை.. சபா நாவலனும் ஒன்று தான்.. பத்மநாபாவும் ஒன்று தான்.. டக்கிளசும் ஒன்று தான். மக்கள் தொடர்பாக மக்களின் தேவை.. தேச விடுதலை தொடர்பாக தெளிவான கொள்கை அற்றவர்கள்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவரும் உங்கட கூட்டாளியாகிட்டாரோ கிருபண்ணா.நாங்கள் அரைகுறையாக இருக்கலாம். நீங்கள் நிறையாக இருக்கலாம். அது பிரச்சனை அல்ல. ஆனால் கட்டுரை தொட்டுச் செல்லும் விடயம் பத்மநாபாவை புனிதராகவும்.. புலி அழிப்பை நினைத்துக் கொண்டும் சாதியத்தை விதைத்துக் கொண்டும் இருக்கிற பாசிசத்தைச் சொல்வதை விட வேற என்னத்தைச் சொல்லுது.

நீங்க விளங்கினதைச் சொன்னீங்கன்னா.. நாங்க விளங்கினது அரைகுறையா.. நிறையாண்ணு புரியும்.

சபா.நாவலன் தேடுவாரற்றுக் கிடந்த ஒரு மாற்றுக் கருத்து மாணிக்கம். புலி அழிப்பு என்று முள்ளிவாய்க்கால் பேரழிவை.. வெளிப்படையாக வரவேற்கும் ஒரு பாசிசவாதி. இவர் எல்லாம்.. உங்களுக்கு சர்ச்சையைக் கிளப்ப உதவலாமே தவிர..

நீங்கள் ஏலவே சர்ச்சையாளர்களை ஆதரிப்பதன் மூலம்.. மாறுபட்டவர் என்ற தோற்றத்தைக் காட்ட விரும்பிற ஒரு ஆள்.

எனக்கு அந்த தோற்றத்தால் மக்கள் என்ன நன்மை அடைகிறார்கள் என்பது புரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை.. சபா நாவலனும் ஒன்று தான்.. பத்மநாபாவும் ஒன்று தான்.. டக்கிளசும் ஒன்று தான். :icon_idea:

கட்டுரை நாபாவை ஒன்றும் புனிதராகக் காட்டவில்லை!

மேலும் நான் கட்டுரையாளரை ஆதரிப்பதாகச் சொல்லவில்லை. கட்டுரையில் சொல்லப்பட்ட விடயம் எமது அரசியல் வரலாற்றை அறிய உதவும் என்பதால்தான் இணைத்தேன்.

தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல் கட்டுரை என்ன சொல்லியது என்பதைப் பற்றிய அக்கறையை விட்டுவிட்டு அதை எழுதியவரை பாசிசவாதி (அவர் தன்னை மார்க்கசியவாதி என்று நம்புகின்றவர்!) என்று சும்மா சகட்டுமேனிக்குத் திட்டிவிட்டுப் போகலாம். அது கட்டாயம் தமிழ்த் தேசியத்திற்கு உரமாக அமையும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்சியவாதிகள்.. மனிதப் படுகொலைகளை அங்கீகரிக்கும் காட்டுமிராண்டிகளா. என்னைப் பொறுத்தவரை இவர் ஒரு பழிக்குப் பழி.. பேசும்.. பாசிசவாதியே தவிர... மார்க்சியவாதியாகத் தெரியவில்லை.

இதே சபா.நாவலன்.. இன்று வரை முள்ளிவாய்க்கால் பேரழிவை.. புலி அழிப்பாக காட்டி வரும் தார்ப்பரியம் தானா மார்க்சிய சிந்தனை.

பத்மநாபாவும் தான் அந்தச் சிந்தனையில் இருந்து படுகொலைகளை அடுக்கடுக்காக அரங்கேற்றியவர். ஏன் டக்கிளஸ்.. ஏன்.. வரதராஜப் பெருமாள். அவர்களை எல்லாம் விட்டிட்டு.. இவர் சுரேஸை மட்டும் தனக்கு போட்டியான மார்க்சியவாதியாக இனங்காண என்ன காரணம்...???!

உங்கட மார்க்சியம்.. இன்னும் இருக்குதா.. உலகத்தில..????????????! அதுவே செத்துக்கிட்டு கிடக்குது.. அதனால... தமிழ் மக்களுக்கு என்ன பயன். அதனால.. தமிழ் தேசியம் உரம் பெற்றிடுமா..???!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே சபா.நாவலன்.. இன்று வரை முள்ளிவாய்க்கால் பேரழிவை.. புலி அழிப்பாக காட்டி வரும் தார்ப்பரியம் தானா மார்க்சிய சிந்தனை.

இதுக்கு ஒரு ஆதாரத்தைத் தந்தால் உதவியாக இருக்கும்!

மேலும் இணைத்த கட்டுரை என்ன சொல்ல வருகின்றது என்பதற்கு நீங்கள் ஒரு பொழிப்புரை எழுதினால் நான் விளங்கியதற்கும் நீங்கள் விளங்கியதற்கும் உள்ள வேறுபாட்டையும் அறிந்து எனது விளக்கத்தின் ஓட்டையை அடைத்துக்கொள்ளலாம் என்று நம்புகின்றேன். இல்லாவிட்டால் தேவையில்லாமல் தனிநபர்களைப் பற்றிய ஆராய்ச்சியில்தான் போகும் இந்தத் திரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக் கட்டுரையில் இருந்து நான் விளங்கிக் கொண்டது...

பத்மநாபாவை நம்பி... ஒரு பகுதி மக்கள் இருந்தவை. அவர் ஆமிய உள்ளவிட மாட்டார் என்று,

அப்படி இருந்ததா தெரியல்ல. பொடியள் என்ற செல்லப் பெயர் புலிகளை நோக்கியே மக்களால் பாவிக்கப்பட்டது. ஈபி.. நாய்பி.. என்பது தான் பத்மநாபாவின் இயக்கத்துக்கு மக்கள் வழங்கிய அந்தஸ்து.

பத்மநாபா ஏதோ.. தவறே செய்யாத மனிதர் போலவும்.. இந்திய உதவி இன்றி உதித்தவர் போலவும் காட்ட வெளிக்கிட்டு.. பின்னர்... அவர் இந்திய உளவுத்துறையின் வஞ்சக வலையில் சிக்கியே.. மக்கள் விரோதச் சிந்தனைக்கு உட்பட்டார் என்பது போலவும்..

அதற்கு அவரோடு கூட இருந்த.. சுரேஸ் போன்ற மண்டையன் குழுக்களை இயக்கியோரும் காரணம் என்பது போலவும்...

இறுதில்.. தானும்.. பத்மநாபாவும் மார்க்சிய சிந்தனை கொண்டவர்கள் என்ற கணக்கில்.. நல்ல நண்பர்கள்.. அதுமட்டுமன்றி... நாங்கள் எல்லாம் வெளிநாட்டு சுகத்தை திறந்து போராடிய போராளிகள் என்பது போலவும் சொல்லி முடிகிறது கட்டுரை..!

வழமையான புலி எதிர்ப்பு நிலைப்பாடுகளும்.. பிரபாகரன் ஒரு ஆயுதப் பிரியர்.. பத்மநாபா தாடிப் பிரியர் (கொள்கைப் பிரியர்) என்பது போலவும் எல்லாம் எழுதி முடித்து.. தான் வாழ வைக்க நினைக்கும் சாதியத்தையும்.. இழுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

எல்லாம் இறுதியில் புலிகளால் முடித்து வைக்கப்பட்டு விட்டது.. புலிகள் ஆயுதம் தூக்கி தொலைந்தார்கள்.. அந்த வரிசையில்.. இவரும் தொலைந்தார்.. ஆனால் ரெலோவில் இருந்து தப்பி வந்த தான் மட்டும் இன்னும் தொலையவில்லை. காரணம்...????? தான் தீவிர மார்க்ச்சியவாதி.. தோழர்.. பத்மநாபா.. தனக்கு அடுத்தது.

இவர் உங்களுக்கு மார்க்சியவாதி.. எனக்கு பாசிசவாதி.

இவர் கலந்து கொண்ட.. தீபம் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.. முள்ளிவாய்க்காலை.. புலி அழிப்பாக எண்ணி கருத்துரைத்த கீழ்த்தரமான ஜீவன்கள் வரிசையில் இவரும் ஒருவராக இருந்ததை உணர்வீர்கள்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக் கட்டுரையில் இருந்து நான் விளங்கிக் கொண்டது...

பத்மநாபாவை நம்பி... ஒரு பகுதி மக்கள் இருந்தவை. அவர் ஆமிய உள்ளவிட மாட்டினம் என்று,

அப்படி இருந்ததா தெரியல்ல. பொடியள் என்ற செல்லப் பெயர் புலிகளை நோக்கியே மக்களால் பாவிக்கப்பட்டது.

பத்மநாபா ஏதோ.. தவறே செய்யாத மனிதர் போலவும்.. இந்திய உதவி இன்றி உதித்தவர் போலவும் காட்ட வெளிக்கிட்டு.. பின்னர்... அவர் இந்திய உளவுத்துறையின் வஞ்சக வலையில் சிக்கியே.. மக்கள் விரோதச் சிந்தனைக்கு உட்பட்டார் என்பது போலவும்..

அதற்கு அவரோடு கூட இருந்த.. சுரேஸ் போன்ற மண்டையன் குழுக்களை இயக்கியோரும் காரணம் என்பது போலவும்...

இறுதில்.. தானும்.. பத்மநாபாவும் மார்க்சிய சிந்தனை கொண்டவர்கள் என்ற கணக்கில்.. நல்ல நண்பர்கள்.. அதுமட்டுமன்றி... நாங்கள் எல்லாம் வெளிநாட்டு சுகத்தை திறந்து போராடிய போராளிகள் என்பது போலவும் சொல்லி முடிகிறது கட்டுரை..!

வழமையான புலி எதிர்ப்பு நிலைப்பாடுகளும்.. பிரபாகரன் ஒரு ஆயுதப் பிரியர்.. பத்மநாபா தாடிப் பிரியர் (கொள்கைப் பிரியர்) என்பது போலவும் எல்லாம் எழுதி முடித்து.. தான் வாழ வைக்க நினைக்கும் சாதியத்தையும்.. இழுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

எல்லாம் இறுதியில் புலிகளால் முடித்து வைக்கப்பட்டு விட்டது.. புலிகள் ஆயுதம் தூக்கி தொலைந்தார்கள்.. அந்த வரிசையில்.. இவரும் தொலைந்தார்.. ஆனால் ரெலோவில் இருந்து தப்பி வந்த தான் மட்டும் இன்னும் தொலையவில்லை. காரணம்...????? தான் தீவிர மார்க்ச்சியவாதி.. தோழர்.. பத்மநாபா.. தனக்கு அடுத்தது.

இவர் உங்களுக்கு மார்க்சியவாதி.. எனக்கு பாசிசவாதி.

இவர் கலந்து கொண்ட.. தீபம் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.. முள்ளிவாய்க்காலை.. புலி அழிப்பாக எண்ணி கருத்துரைத்த கீழ்த்தரமான ஜீவன்கள் வரிசையில் இவரும் ஒருவராக இருந்ததை உணர்வீர்கள்..! :icon_idea::)

உங்கள் பொழிப்புரையை எழுதியதற்கு நன்றி. இதுவே போதும் ஓட்டைகளைக் கண்டுபிடிக்க!

நான் தீபம் தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை. எனினும் நாவலன் தொடர்ந்து எழுதும் இனியொருவில் உள்ள கட்டுரைகளைப் படித்தே வருகின்றேன் ( அதற்கு முன்னரும் படித்திருக்கின்றேன்). அந்த வகையில் உங்கள் புரிதல் வெறும் குறுக்கப் பார்வையானது என்பதைத் தெளிவாகச் சொல்லமுடியும். அதற்காக நீங்கள் பார்வையை மாற்றவேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பொழிப்புரையை எழுதியதற்கு நன்றி. இதுவே போதும் ஓட்டைகளைக் கண்டுபிடிக்க!

நான் தீபம் தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை. எனினும் நாவலன் தொடர்ந்து எழுதும் இனியொருவில் உள்ள கட்டுரைகளைப் படித்தே வருகின்றேன் ( அதற்கு முன்னரும் படித்திருக்கின்றேன்). அந்த வகையில் உங்கள் புரிதல் வெறும் குறுக்கப் பார்வையானது என்பதைத் தெளிவாகச் சொல்லமுடியும். அதற்காக நீங்கள் பார்வையை மாற்றவேண்டாம்.

நீங்க கேட்க... நான் பொழிப்புரை எழுதினன்.. சரி.

ஓட்டைகளை வேற கண்டுபிடிச்சிருக்கீங்க...???!

எங்க என்னென்ன ஓட்டைகள் என்றும் சொல்லேல்ல.. நீங்கள் இனியொருவுக்கு விளம்பரம் செய்து அதில நாவலனின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பதன் வாயிலாக தொடர் நீண்ட புரிதலை வளர்த்து வைத்திருப்பதாகச் சொல்கிறீர்கள்..

ஆனால்.. நானோ.. இவரின் முள்ளிவாய்க்காலின் பின்னான (அதுக்கு முதல் இவர் யார் என்றே எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டிய தேவையும் இருக்கல்ல. அந்தளவுக்கு இவர் மக்களோடு நெருங்கிய ஆளாவும் இருக்கல்ல.) தொடர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கிறன்.. எனக்கோ..... இவர் முள்ளிவாய்க்கால் பேரழிவை.. புலி அழிப்பாகக் காட்ட நிற்கும்.. ஒரு பாசிசவாதியாகத் தான் தெரிகிறார்.

இந்தக் கட்டுரையில் கூட.. புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதில் தொடங்கி புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதில் முடிக்கிறார். ஏதோ புலிகளால் தான் எல்லாக் கொலைகளும் செய்யப்பட்டது என்ற கணக்கா..????! இவர் என்ன.. புலிகளோடு நின்று அதனை செய்துவிட்டு வந்து சாட்சியமா அளிக்கிறார்..???!

நீங்கள்.. சோபாசக்தியையும் மார்க்சிய வாதின்னு சொல்லி..நம்பிற ஆள்..! அது உங்கட நிலைப்பாடு. ஆனால்.. இவர்கள் எல்லாருமே புலி விரோத நிலைப்பாட்டில் நிற்கிறது தானா.. மார்க்சியம்..????! அது பாசிசமே தவிர வேறல்ல. ஏதோ.. இவை எல்லாம் தப்பே செய்யாத கொள்கை வாதிகள் போலவும்.. புலிகளே கொலைக்கலாசார சக்திகள் என்பது போல நீழும் இவர்களின் வியாக்கியானங்கள்.. முள்ளிவாய்க்கால் பேரழிவைக் கூட புலி அழிவாகக் காட்டி திருப்திப்படும் நிலைக்கு கொண்டு செல்கிறது இவர்களின் மூளையை...!! அதை நீங்கள் அவதானிக்கல்ல என்பது பொய். அதை நீங்கள் வெளிகாட்ட விரும்பல்ல என்பது மெய்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்பியக்கங்களும் பாசிசமும் - இதுவும் உந்த சபா நாவலன் தான் எழுதினது....

புலிகள் ஆரம்பத்தில் வெறுமனே ஆயுதங்களைச் சேர்த்துக்கொண்டு மக்களிலும் அதிகமாக்ப் பலம் பெற ஆரம்பித்ததன் விளைவே தன்னளவில் பாசிசத் தன்மையைப் பெற்றுக்கொண்டது.

LTTEogo.jpg

அதன் தொடர்ச்சியான தவறுகளுடனான வளர்ச்சி இறுதியில் பெருந்திரளான மக்கள் மீது தாக்குதலை நிகழ்த்துகின்ற அளவிற்கு அவர்களை நகர்த்திச் சென்றது. இறுதியில் போராட்டங்களின் மீதான வெறுப்புணர்வையும் நம்பிக்கையீனத்தையும் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

பாசிசமாக எதிர்ப்பியக்கங்கள் வளர்ச்சி பெற்ற நிகழ்சிப் போக்கானது இலங்கையில் மட்டுமன்றி பல நாடுகளில் காணப்படுகிறது.

அல்ஜீரியாவில் உருவாகி அழிந்து போன அரசியல் இயக்கமான ஜீ.ஐ.ஏ(Groupe Islamique Armé) போன்ற ஆயுதக் குழுக்களிலிருந்து ஆபிரிக்க நாடுகளின் ஆயுதக் குழுக்கள் வரை உதாரணமாக முன்வைக்கலாம்.

ஆக மக்களிடம் அவர்களின் தலைவர்களிலும் அதிகமாகப் பலமிருந்தால் மட்டுமே கட்சியும் விடுதலை அமைப்புக்களும்,அரசுகளும் பாசிசமாக வளர்ச்சியடைவதைத் தவிர்க்க வாய்ப்புண்டு.

http://inioru.com/?p=10576

இதுவும் இவற்ற கட்டுரையில இருந்து தான் வருகுது...

இவர் சொல்லுறார்.. பெருமளவிலான மக்களை தாக்குதல் நடத்த கூடிய அளவுக்கு நகர்த்திச் சென்றது.. புலிகளாம்..????!

புலிகளே தங்களை கையாள முடியாத நிலையில மக்களின்ர கையைப் பிடிச்சு இழுத்துக் கொண்டு போனதா இவர்.. வன்னில போய் நின்று பார்த்திட்டு வந்து எழுதிறாராக்கும்...

ஆக்கிரமிப்பில.. உள்ள வன்னி மக்களே.. போராளிகளின் உருவப்படங்களை வீட்டில வைச்சிருக்குதுகள்.. இவர் வெளிநாட்டில இருந்து எழுதிறார்.. முள்ளிவாய்க்காலுக்க மக்கள் போனதால.. மக்கள் புலிகளை வெறுக்கினமாம்...!

இதையே கிளிநொச்சிக்க மக்கள் தங்கி இருந்தா.... கடல்வழியாக வெளியேறிய.. செஞ்சிலுவை உதவி வாங்கின மக்களுக்கு அது கூடக் கிடைத்திருக்காது..???!

இப்பவும்.. புலி மீது தான் குற்றச்சாட்டு. போரை நிறுத்தச் சொல்லி புலிகள்.. ஆரம்பம் முதல் சொல்லி வந்ததை.. இந்த மார்க்சிய பாசிசவாதி ஏன் மறைக்கிறார்..???????????????????????!

இவரின் புலி எதிர்ப்பு என்பது.. தீவிர புலி எதிர்ப்பாளர்களிலும் இருந்து சற்று மாறுபட்டது. அதுக்கு மார்க்சிய சாயம் வேற.

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே..! :icon_idea:

Link to comment
Share on other sites

... தடம்புரண்ட புரட்சியாளனை பற்றிய நல்லதொரு ஆக்கம்! ... ஆனால் ..

1986 இறுதிப்பகுதியில் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளால் ஈ.பி.ஆர்.எல்.எப் அழிக்கப்பட்டது.

புலிகளின் முகாம்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களாலும் ஆதரவாளர்களாலும் நிரம்பி வழிந்தது. முகாம்களில் மரண ஓலம் கேட்டது. பலர் ஏன் கொல்லப்படுகிறோம் என்று அறியாமலே கொல்லப்படனர். போராட வேண்டும் என்ற தியாக உணர்வோடு அனைத்தையும் துறந்து தெருவிற்கு வந்த இளைஞர்கள் தெருவோரத்தில் பிணமாக்கப்பட்டனர். யாழ்ப்பாணத் தெருக்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களைச் சரனடையுமாறு ஒலி பெருக்கியில் புலிகள் கட்டளையிட்டனர்.

1) நாம் அக்காலங்களில் அங்குதான் இருந்தோம், ஈபிஆர்எல்எப் இல் இருந்தோர் சரணடைந்ததும், பலர் பின் விடுவிக்கப்பட்டு பொதுவாழ்வில் ஈடுபட்டதும், அவர்களில் பலர் பின் இந்திய இராணுவ காலங்களில் மீண்டும் ஈபிஆர்எல்எப் இல் இணைந்து அட்டகாசங்களில் ஈடுபட்டதையும் கண்டோம். ஒரு சிலர் கந்தன் கருணையில் பின் கொல்லப்பட்டதை தவிர, தெருவோரங்களில் பிணங்கள்???? ... ஆட்டை மாட்டுக்குள் சொருகுகிறாரா (ரெலோ அழிப்பை ஈபிஆர்எல்எப் ஆக!! ரெலோ அழிப்பும் முந்தியவர்கள் வென்றார்கள்! ரெலோ புலிகளை அழிக்க தயார்படுத்தலில் ஈடுபட்ட காலமது!), நாவலன்????

2) "நாய்களுக்கு எங்கு அடி விழுந்தாலும் ஏதோ ஒரு காலைத்தான் தூக்குமாம்" .. அப்படி எங்கள் மாக்ஸீஸவாதிகளுக்கு சாதீயம்/மேல்மட்டம் தான் அந்தக்கால்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு தெரிஞ்சு எழுதனும். இல்லை ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்க வேண்டும்.

ஆனந்தராஜா கொல்லப்பட்டது புலிகளால் அல்ல (இன்றும் புலிகள் மீது தான் அந்தக் குற்றச்சாட்டு உள்ளது). வேறு ஒரு இயக்கத்தினரால். இதனை ஈபிடிபி அற்புதனே எழுதி இருந்தார்...! அற்புதன் பின்னர் டக்கிளஸ் தேவானந்தாவால் கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். காரணம்.. அவர் புலி சார்ப்பாக உண்மைகளை எழுதுகிறார் என்று. ஆனால் அவர் எழுதியவை புலிகள் மீது போடப்பட்ட அபாண்டப் பழிகளின் உள்வீட்டு ரகசியங்கள் என்பதால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும் ஆனந்தராஜா அன்று சுட்டுக்கொல்லப்பட சொல்லப்பட்ட காரணங்கள்.. சரியானவையாகவே இருந்தன. அவர் எமது மக்களை எதிரிக்குக் காட்டிக் கொடுத்தார்..!

ஆனால் இந்த ஆசிரியர் மாணவர்களை துப்பாக்கி ரவைகளில் இருந்து பாதுகாக்க முற்பட்ட வேளை கொல்லப்பட்டார். இது இரண்டும் ஒன்றா..????!

ஒரு விடயத்தை முழுமையா தெரிந்து கொண்டாவது கருத்தை எழுதுங்கள்.. தயவுசெய்து..! :):icon_idea:

ஆனந்தராஜா ஈபிடிபியால்[நீங்கள் சொன்னது] சுடப் பட்டாலும் சுடப்பட்டதற்கான காரணங்கள் உங்களை பொறுத்த வரை சரி ...உங்களுக்கு பிடிக்காதவர்களை யார் கொண்டாலும் அது சரி ஆனால் உங்களுக்கு பிடித்தவர்களை யார் கொண்டாலும் அது பிழை...இதற்காக இந்துக் கல்லூரி ஆசிரியரை நாபா சுட்டது சரியென்று நான் வாதிடவில்லை

இனி மேலாவது சின்னப் பிள்ளைகள் மாதிரி எழுதாமல் கட்டுரையோ அல்லது பதிவுகளையோ வடிவாக வாசித்து விளங்கி கருத்தெழுதினால் நன்றாக இருக்கும்...புலிகளுக்கு ஆதரவாய் எழுதப் போய் அவர்களுக்கு சங்கடத்தைத் தான் தேடிக் கொடுக்கிறீர்கள் :icon_idea:

Link to comment
Share on other sites

1989களில் எனது நண்பன் ஈபிஆர்எல்எவ் (ஈப்பி) இனால் பலாத்காரமாக பிடிக்கப்பட்டு மொட்டை அடிக்கப்பட்டு வேலணையில் வைத்து கட்டாய ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட்டான். அப்போது பல தடவைகள் ஈப்பியிடம் இருந்து தப்புவதற்கு முயற்சித்தான். ஒரு தடவை அவனுக்கு தண்டனையாக பத்மநாபாவின் சப்பாத்தை துடைத்துவிடுமாறு கட்டளையிடப்பட்டதாகவும், பத்மநாபா சப்பாத்துடன் கம்பீரமாக நிற்க தான் சப்பாத்தை துடைத்துவிட்டதாகவும் கூறினான். இது ஓர் உதாரணம் மாத்திரமே.

ஒருவித கொடுக்கல் வாங்கல்கள் இல்லையாயினும் எனக்கு பத்மநாபா ஒரு வகையில் தூரத்து மாமா முறை. ஆனால், பத்மநாபா இறந்தபோது அதையறிந்து அப்போது அதிக மகிழ்ச்சி அடைந்த பல இலட்சம்பேரில் நானும் ஒருவன். அந்தளவிற்கு ஈப்பியின் அட்டகாசத்தினால் பாரதூரமாகப்பாதிக்கப்பட்டு காணப்பட்டோம்.

பத்மநாபாவின் வரலாற்றை அலசிப்புரட்டி எடுத்து ஆராய்ந்து விளக்குப்பிடிக்கலாம் என்றால்... சனல்4 சிறீ லங்காவின் கொலைக்களம் காணொளியில் வருகின்ற சிறீ லங்கா ஆயுததாரிகளின் வாழ்வையும் அலசிப்புரசி ஆராய்ந்து நியாயம் கற்பித்து வரலாற்று நாயகர்களாக காண்பிக்கமுடியும்.

இந்தக்கட்டுரை மூலம் சபாநாவலனின் சுயதம்பட்டம் தவிர வேறு ஒன்றையும் அறியக்கூடியதாக இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தராஜா ஈபிடிபியால்[நீங்கள் சொன்னது] சுடப் பட்டாலும் சுடப்பட்டதற்கான காரணங்கள் உங்களை பொறுத்த வரை சரி ...உங்களுக்கு பிடிக்காதவர்களை யார் கொண்டாலும் அது சரி ஆனால் உங்களுக்கு பிடித்தவர்களை யார் கொண்டாலும் அது பிழை...இதற்காக இந்துக் கல்லூரி ஆசிரியரை நாபா சுட்டது சரியென்று நான் வாதிடவில்லை

இனி மேலாவது சின்னப் பிள்ளைகள் மாதிரி எழுதாமல் கட்டுரையோ அல்லது பதிவுகளையோ வடிவாக வாசித்து விளங்கி கருத்தெழுதினால் நன்றாக இருக்கும்...புலிகளுக்கு ஆதரவாய் எழுதப் போய் அவர்களுக்கு சங்கடத்தைத் தான் தேடிக் கொடுக்கிறீர்கள் :icon_idea:

இதை நீங்க சொல்லப்படாது. குத்துமதிப்பில கருத்தெழுதிற ஆள் நீங்க..! இப்ப வந்து நான் அப்படிச் சொல்லேல்ல.. இப்படிச் சொன்னனான்.. என்று சடையிறது.

மாணவர்களின் உயிரின் மேல் அக்கறை செய்து செயற்பட்ட.. ஒரு அப்பாவி ஆசிரியரின் படுகொலையை.. ஆனந்தராஜாவோடு ஒப்பிட்டதே தவறு. முதலில் அதனை திருத்திக் கொள்ளுங்கள்.

மேலும்.. ஆனந்தராஜா.. வழங்கப்பட்ட எச்சரிக்கைகளை மீறி.. சென் ஜோன்ஸ் அணியை யாழ் கோட்டைக்குள் கிரிக்கெட் விளையாட அனுப்பினவர். சனம்.. ஆமி சுட்டுச் செத்துக் கொண்டு இருக்குது.. இவருக்கு சுடுறவனோட.. கிரிக்கெட்டா அவசியம்...???!

இந்தப் பின்னணி பற்றி ஒரு கட்டுரை வாசித்திருந்தேன். சென் பற்றிக்ஸ் மாணவர்கள் சிலர் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை திசை திருப்பவே.. சென் ஜோன்ஸ் அணியை இராணுவம் அழைத்ததாகவும் ஆனந்தராஜா சிங்கள அரச அடிவருடியாக இருந்து அதை எச்சரிக்கைகள் மத்தியில் நிறைவேற்ற முனைந்ததாகவும். இது தான் உண்மையும் கூட..!

அன்றைய காலப்பகுதிகளில் எல்லாம் மக்களை இராணுவம் கண்டபடி.. ரோந்து செல்லும் வேளையில் அடித்துத் துன்புறுத்துவது.. சுடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்க.. இவர் அந்த மக்களின் விருப்பை மீறி.. நடந்து கொண்டது.. அந்த மக்களால் அன்று அருவருப்பாகவே பார்க்கப்பட்டது.

ஆனந்தராஜாவின் கொலைக்கு மக்கள் கண்ணீர் விடல்ல..! ஆனால் யாழ் இந்து ஆசிரியரின் இழப்புக்கு ஒட்டுமொத்த மாணவ சமூகமும் அழுதது.! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒருதரும் சபா நாவலனை தூக்கி பிடிக்கவில்லை என்றே நினைக்கிறேன் அதே நேரத்தில் ஈபிடிபிக்கு ஆதரவாகவும் ஒருத்தரும் வக்காலத்து வாங்கவுமில்லை வாங்கவும் முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1989களில் எனது நண்பன் ஈபிஆர்எல்எவ் (ஈப்பி) இனால் பலாத்காரமாக பிடிக்கப்பட்டு மொட்டை அடிக்கப்பட்டு வேலணையில் வைத்து கட்டாய ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட்டான். அப்போது பல தடவைகள் ஈப்பியிடம் இருந்து தப்புவதற்கு முயற்சித்தான். ஒரு தடவை அவனுக்கு தண்டனையாக பத்மநாபாவின் சப்பாத்தை துடைத்துவிடுமாறு கட்டளையிடப்பட்டதாகவும், பத்மநாபா சப்பாத்துடன் கம்பீரமாக நிற்க தான் சப்பாத்தை துடைத்துவிட்டதாகவும் கூறினான். இது ஓர் உதாரணம் மாத்திரமே.

இதனுடைய மறுவடிவம் தானோ நிமலரூபனை, வவுனியாவில்/அனுராதபுரத்தில் உள்ள சிங்கள காவலர்கள் செய்தது...எங்களது போரியல் உத்திகளை சிங்களவன் பாவிப்பது இது மாத்திரமல்ல

பத்மநாபாவின் வரலாற்றை அலசிப்புரட்டி எடுத்து ஆராய்ந்து விளக்குப்பிடிக்கலாம் என்றால்... சனல்4 சிறீ லங்காவின் கொலைக்களம் காணொளியில் வருகின்ற சிறீ லங்கா ஆயுததாரிகளின் வாழ்வையும் அலசிப்புரசி ஆராய்ந்து நியாயம் கற்பித்து வரலாற்று நாயகர்களாக காண்பிக்கமுடியும்.

இதை நீங்க சொல்லப்படாது. குத்துமதிப்பில கருத்தெழுதிற ஆள் நீங்க..! இப்ப வந்து நான் அப்படிச் சொல்லேல்ல.. இப்படிச் சொன்னனான்.. என்று சடையிறது.

இந்தப் பின்னணி பற்றி ஒரு கட்டுரை வாசித்திருந்தேன். சென் பற்றிக்ஸ் மாணவர்கள் சிலர் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை திசை திருப்பவே.. சென் ஜோன்ஸ் அணியை இராணுவம் அழைத்ததாகவும் ஆனந்தராஜா சிங்கள அரச அடிவருடியாக இருந்து அதை எச்சரிக்கைகள் மத்தியில் நிறைவேற்ற முனைந்ததாகவும். இது தான் உண்மையும் கூட..!

ஆனந்தராஜாவின் கொலைக்கு மக்கள் கண்ணீர் விடல்ல..! ஆனால் யாழ் இந்து ஆசிரியரின் இழப்புக்கு ஒட்டுமொத்த மாணவ சமூகமும் அழுதது.! :icon_idea:

நான் st johns இல் படிக்கவில்லை, ஆனால் ஒரு கறுப்பு பட்டி குத்திக்கொண்டு போனது ஞாபகம் இருக்கு. குத்து மதிப்பு என்பது என்னிடம் இருந்து தொடங்குகிறது :)

Link to comment
Share on other sites

Volcanoஇன் மேற்கோள் இணைப்புக்கள் புரியவில்லை. எனக்கு அப்போது வயது மிகவும் குறைவு, எனவே ஆனந்தராசாவின் கொலை சம்மந்தமான விடயங்கள் தெரியவில்லை. கொலை நடைபெற்றபோது பாடசாலை மைதானத்தில் நின்ற ஒருவரின் தகவலின் அடிப்படையில் அவர் கூறிய சில விசயங்கள்:

கொலை செய்வதற்கு முதல் நாள் அதிபர் ரெலோ இயக்கத்தினால் அவருக்கு த.வி.பு மூலம் உயிராபத்து உள்ளது என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டார். அவர் அப்போது சீற்றம் அடைந்து ரெலோவை கண்டபடி திட்டியுள்ளார். த.வி.பு தன்னை கொல்வார்கள் என அவர் நினைக்கவில்லை.

அப்போது கிரிக்கெட் காலம் இல்லை (இராணுவத்துடன் நெடுக்காலபோவான் கூறுவதுபோல் கிரிக்கெட் ஆட்டத்தில் பாடசாலை அணி பங்குபற்றவில்லை), ஆனால் உதைப்பந்தாட்ட ஆட்டங்களை இராணுவத்துடன் விளையாடுவது சம்மந்தமாகவும், பாடசாலையின் சுற்றுமதிலை (குறிப்பாக பழையபூங்காப்பக்கமாக உள்ள மதிலை) வெளியார் (பழைய பூங்காவில் உள்ள த.வி.பு) உள்ளே பாடசாலையினுள் இலகுவாக வராமல் இருப்பதற்காக) உயர்த்திக்கட்டியமைக்காகவும் த.வி.பு மூலம் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் சுட்டவரின் பெயர் ரிச்சார்ட் என்றும் கூறினார்.

தாம் பாடசாலை மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது அதிபர் ஆனந்தராசா ஸ்கூட்டரில் போனதைக்கண்டதாகவும், பின்னர் பாடசாலையில் பணிபுரியும் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என பொய்த்தகவல் கூறப்பட்டு த.வி.பு வினால் அதிபர் வேறோர் இடத்திற்கு வரவழைக்கபப்பட்டு சுடப்பட்டதாகவும் கூறினார்.

அதிபரைச் சுட்டுக்கொன்றது த.வி.பு என ஏதோவகையில் பாடசாலை சமூகத்தில் உள்ள த.வி.புவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள சிலர் கண்டறிந்து த.வி.புவிற்கு அழுத்தம் கொடுத்தபின்னர் த.வி.பு காரணங்களைக்கூறி கொலையைத்தாம் செய்ததை அப்போது அவர்களிடம் ஒத்துக்கொண்டதாகவும் கூறினார். கொலை செய்யப்படமுன்னர் அதிபர் பற்றிய பல்வேறு தகவல்களை பாடசாலை சமூகத்தைச்சேர்ந்த த.வி.புவிற்கு நெருக்கமானமானவர்களே வழங்கியதாகவும் கூறினார்.

இராணுவத்துடன் மாணவர்களை சினேகபூர்வமாக உதைபந்தாட்டம் விளையாடவைப்பதற்கு இராணுவம் மூலம் கைதுசெய்யப்பட்ட பல மாணவர்களை தனது செல்வாக்கு மூலம் வெளியே எடுத்துவிட்டதை ஓர் காரணமாக அதிபர் காட்டியதாகவும் கூறினார்.

அதிபர் ஆனந்தராசா கொல்லப்பட்டபோது தான் கவலைப்படவில்லை எனவும், சென்.ஜோன்ஸ் பாடசாலை சமூகத்தின் குறிப்பிட்டதோர் வட்டம் தவிர மிகுதியானவர்கள் கவலைப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

நான் சென்.ஜோன்சில் இணையவதற்கு ஓரிரு வருடங்கள் முன்னரே ஆனந்தராசா கொல்லப்பட்டுவிட்டார். என்னைப்பொறுத்தவரையில் இந்தக்கொலையை யார் செய்திருப்பினும் அதிபரைக்கொலைசெய்தது மிகத்தவறே. யாழ் சமூகம் கல்விக்கு அதிஉயர்ந்த மதிப்பும், அக்கறையும் கொடுப்பது. நிச்சயம் அதிபர் ஆனந்தராசாவின் கொலை கல்விச்சமூகத்திற்கு நீண்டபாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.