Jump to content

இறுதி யுத்தத்தின் முடிவில் கிழக்கிலிருந்த தப்பிச்சென்ற இரு பொறுப்புவாய்ந்த போராளிகள் தற்போது எங்கே? இவர்களின் தற்போதைய நிலை என்ன?


Recommended Posts

இறுதி யுத்தத்தின் போது கிழக்கின் நிலை?

இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காளில் முடிவடையும் பொழுது கிழக்கிற்கான தொடர்புகளும், போராளிகளிற்கான அனைத்து வளங்கல்களும் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன.

அக் காலகட்டத்தில் கிழக்கில் செயற்பட்டுவந்த புலிகளின் இராணுவச் செயற்பாடுகளிற்கு தலைவர்களாக இருந்த சால்ஸ் அன்ரனியின் சிறப்புப் படையணியின் கட்டளைத் தளபதி கேணல் நகுலன்;, கேணல் றாம், கேணல் உமாறாம், மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளராக பதவிவகித்த லெப். கேணல் தரப் போராளி தாயாமோகன், மட்டு அம்பாறை மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளராக பதவி வகித்த லெப். தரப் போராளி கேணல் ரவிமோகன் மற்றம் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பிரபா ஆகியோரே கிழக்கிலிருந்த இராணுவத்தினருக்கு சிம்மசொற்பனமாக விழங்கிய புலித்தலைவர்களாவார்.

கேபி தன்னைத் தானே தலைமையென அறிவித்தார்

யுத்தம் கட்டம் கட்டமாக முடிவுற்றுக்கொண்டிருந்த வேளையில் புலிகளின் சர்வதேச ஆயுதக் கடத்தலுக்கு பொறுப்பாகவிருந்த கேபி என்று அழைக்கப்படும் திரு. பட்மநாதன் தானே புலிகளின் அடுத்தகட்ட தலைமைப் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துக்கொண்டு மேற்குறிப்பிட்ட கிழக்கின் புலித்தலைவர்களோடு தொடர்வுகளை பேணியிருந்தார்.

கேபி யின் இப் புதிய தலைமை நிர்வாகத்தை புலிகளின் கிழக்கின் மருத்துவர் ரவிமோகன் மற்றும் அரசியற்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோரைத் தவிர ஏனைய புலித் தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை.

தாயாமோகன் மற்றும் ரவிமோகன் வெளியேற்றம்

கேபியின் தலைமையை ஏற்றுச் செயற்பட்ட தயாமோகன், ரவிமோகன் ஆகிய இருவரும் கேபியின் ஏற்பாட்டுடன் அடுத்த கட்டத் தயார்ப்படுத்தல் சார்ந்து கேபியுடன் நேரடிக் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு சிறீலங்கா கட்டுநாயக்கா விமானநிலையம் ஊடக இஸ்லாமியர்கள் போன்று தம்மை தோற்றம் மாற்றிக் கொண்டு வெளியேறிச் சென்றனர்.

கட்டுநாயக்கா விமாணநிலையம் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின்னர் அரச படைகளால் உச்சகட்ட பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டிருந்ததை அனைவரும் அறிந்தபோதும் எப்படி? யாருடைய? பின்னணியோடு இவர்கள் நாடு கடந்து சென்றார்கள் என்ற விடையம் இன்றுவரை அரச புலனாய்வுப் பிரிவினருக்கு புரியாத புதிராகவே உள்ளது.

இது இப்படியிருக்க மலேசியா சென்ற தயாமோகன், ரவிமோகன் ஆகிய இருவரும் கேபியின் நேராடி மேற்பார்வையில் இரகசியமான முறையில் இயக்கிரவப்பட்ட புலிப்பாசறை ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

தாயாமோகன், ரவிமோகன் குடும்பத்தினர்

போரின் முடிவில் வன்னிப் பகுதியில் வாழ்ந்து வந்த இவ்விருவரின் குடுப்பத்தினரும் மக்களோடு மக்களாக வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த முகாம் ஓன்றில் தஞ்சம் புகுந்தனர். இதை அறிந்த அரச புலநாய்வுப் பிரிவினர் ஒலிபெருக்கி ஊடக பெயர்களை அறிவித்து சரனடையுமாறு பயமுறுத்தினர்.

இச் செய்தியை அறிந்த தயாமோகன் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணாவின் உதவியை நாடவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டார். இதன் பின்னர் கருணாவே தயாமோகனின் குடுப்பத்தினருக்கு பாதுகாக்கு வழங்கி வைத்திருந்தார் என்பது பல ஊடகங்களில் பலமுறை வெளிவந்த பலரும் அறிந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்தியே.

கேபி பிடிபட்டார் (ரா)??

இத் தருணத்தில் கேபி அவர்கள் இலங்கை அரசபுலனாய்வுத்துறையின் பொறிக்குள் அகப்பட்டு நாடுகடத்தப்பட்டார். இதன் பின்னர் ரவிமோகன் மற்றும் தயாமோகன் ஆகியோர்கள் கைவிடப்பட்ட நிலையில், இலங்கைக்கும் செல்ல முடியாமல் இருந்த காரணத்தால் கேபியின் சகாக்களின் உதவியுடன் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்துக்கு விமாணம் மூலம் சென்று அரசியல் தஞ்சம் கோரினர்.

தயாமோகன் குடும்பம் சுவிஸில்

தற்பொளுது தாயமோகனின் குடும்பத்தினர் கடந்த 26.03.2012 அன்று சிறீலங்கா கட்டுநாயக்கா விமானநிலையத்தின் ஊடாக சுவிட்சர்லாந்துக்கு சென்றடைந்துள்ளனர். புலிகளுடன் சிறிய தொடர்புகளை பேணிவந்த சாதாரன மக்களைளே சிறீலங்கா அரசாங்கம் துன்புறுத்தி, சில சமயத்தில் கொலை செய்து வரும் நிலையில் புலிகளின் அரசியற்துறைப் பதவி வகித்த லெப் கேணல் தயாமோகன் குடும்பத்தினர் பத்திரமாக நாடு கடந்தமை எப்படி? இது தாமோகன் தற்பொளுது அரச புலனாய்வுத் துறையின் பிண்ணனியோடு இயங்கி வருகிறார் என்று ஏற்கனவே இருந்த சந்தேகத்தை மேலும் வலுப்பெற வைத்துள்ளது.

புலம்பெயர் நாடுகளில் புலிகள் கட்டமைப்பை சிதைக்கப் பொறி

ஐரோப்பிய நாடுகளில் இன்றும் வலுவான முறையில் இயங்கிவரும் புலிகளின் கட்டமைப்பை இலங்கைப் புலனாய்வுத்துறை அடியோடு அழிப்பதற்கு பல திட்டங்களைத் தீட்டி செயற்படுத்தி வருகிறது. அதன் ஓர் கட்டமாக தகுதிவாய்ந்த தயோமோகன் போன்ற போராளிகளை புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பி தற்பொளுது இயங்கிவரும் புலிகளின் கட்டமைப்புகளுக்க நிகராக வெறொரு கட்டமைப்பை உருவாக்க முயற்சித்து வருகிறது. இதற்கென புலிகளில் நீண்ட காலம் செயற்பட்டுவந்த போராளிகளை ஐரோப்பிய நாடுகள் முழுவதும் அனுப்பி வைத்தள்ளது.

முதற்கட்டமாக மாவீரர் தினங்கள் குறிவைப்பு / செயற்படும் நபர்கள்

இவ்வாறான சிலரே இத்தனை காலமும் ஓர் குடையின் கிழ் நாடத்தப்பட்டடுவந்த மாவீரர்நாளை இரண்டாகப் பிளவு படச் செய்தனர். மாவீரர்களை கடவுள்களுக்கு நிகராக பூசித்துவரும் தமிழ் மக்கள் இக்கபட நாடகத்தை விளங்கிக்கொள்ளாமல் உணர்வுபூர்வமான தமது ஆதரவை வழங்கினர்.

இப்படி புலிகளின் கட்டமைப்பை சிதைத்கவென சிறீலங்க அரச புலனாய்வுத் துறையினரால் கட்டமைக்கப்பட்டுள்ள குளுவினர் தாமே உன்மையான விடுதலைப் புலிகளின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், தாமே தலைமைச் செயலகமென்றும் குறிப்பிட்டுச் செயற்படுகின்றனர். இவர்களின் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் சில நாடுவாரியாக ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

  • சுவிஸ்;: தயாமோகன் (பொறுப்பாளர்), நீலன் ( துணைப் பொறுப்பாளர்) மோகன், றாம்குமார், nஐயம் ( 2009 இற்கு முன் சுவிஸ் சூறிச் மானில புலிகளின் பொறுப்பாளராக இருந்துவிட்டு தற்பொளுது தலைமைச்செயலகம் என செயற்படும் தயாமோகன் அணிலில் தாவிச் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது), வேந்தன் என பலர் கவிஸில் இயங்கி வருகின்றனர்.
  • பிரான்ஸ்: அறிவு, சுரேஸ்
  • லண்டன்: சங்கீதன்

ஒட்டுமொத்த நீர்வாகத்தையும் கட்டுப்படுதஇதம் பொறுப்பில் பாண்டியன் (நியூஸ்லாந்து) சுபன்; சுரேஸ்.

தயாமோகன் பின்னணியில் கருணா மற்றும் இலங்கைப் புலனாய்வு

புலிகளின் புலம்பெயர் கட்டமைப்பை சீர்குலைக்கும் பெருமுயற்சியில் பங்குவகிக்கும் சூத்திரதாரிகளில் தயாமோகனும் இடப்பிடித்துள்ளதாக எமக்கு உள்ளகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்கது. தலைமைச்செயலகம் எனும் பெயரில் தாம் அதியுச்ச தமிழீழத் தெசியவாதிகள் என அடையாளப்படுத்திக்கொண்டு இக் கும்பல் செயற்படுத்தப்படவேண்டும் என இலங்கையிம் பாதுகாப்புச் செயலரும், அதிபர் றாNஐபக்சேயின் சகோதரருமான கோத்தபாயவால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுளதெனவும் உள்ளகத் தகவல்கள் தெருவிக்கின்றன.

ரவிமோகன் பொட்டுவின் ஆளாகச் செயற்பட்டார்

மருத்துவப் போராளியான ரவிமோகன் அவர்கள் கருணா புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற காலப்பகுதியில் கருணாவின் குகைக்குள் விடுதலைப்புலியாகச் செயற்பட்டவர். கருணா தன் ஆயுத பலத்தையும் ஆளானிப் வளத்தையும் பாவித்து கிழக்கின் தலைமைத்துவத்தை முற்றாக தானே கைப்பற்றச் செயற்பட்டார்.

கருணாவின் இத் திட்டத்தை முறியடிப்பதற்கும், கிழக்கை மீண்டும் கருணாவிடமிருந்து கைப்பற்றுவதற்கும் புலிகள் அமைப்பின் புலநாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்களின் நேரடி வழிநடத்தலில் ரவிமோகன் அவர்கள முதுகெலும்பாகவிருந்து செயற்பட்டார் என்பது இன்றுவரை வெளிவராத உன்மை.

புலிகள் அமைப்பிலிருக்கும் தனது விசுவாசம் காரணமாக ரவிமோகன் அவர்கள் தலைமைச் செயலகம் எனும் தனித்தியங்கும் செயற்பாட்டை இன்றைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தலைமைச்செயலகத்தின் பின்னணியில் கருணாவும் இருப்பதால் ரவிமோகனை வன்னிப்புலி என்று பட்டியலிட்டு அடியோடு ஓரங்கட்டிவிடப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் முற்றுப்பெறவழில்லை எனும் கருத்தை ரவிமோகன் வெளிப்படுத்தி வருகின்ற போதிலும் இவரின் தற்போதைய உண்மையான நிலைப்பாடு கேள்விக் குறியாகவே உள்ளது.

http://www.thinasari.com/?p=7866

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.