Jump to content

சிக்கலான அரசியல் காஷ்மீர்


Recommended Posts

Tamil_News_large_107496820140920195521.j

 

ஷேக் அப்துல்லா புகழின் உச்சியில் இருந்ததிலிருந்து ஆரம்பித்து இந்திய எதிர்ப்பு அலை ஓங்கி ஒலித்தது வரையிலான காலகட்டத்தை சோஃபி குலாம் முகமது கடந்துவந்துள்ளார். தன் இளமைக்கால அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார். இந்தியாவுடன் காஷ்மீர் இணையவேண்டும் என்ற ஷேக் அப்துல்லாவின் விருப்பத்துக்குப் பெரும்பாலான காஷ்மீரிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால், அரை நூற்றாண்டுக்குப் பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
 
தால் ஏரிக்கு அருகில் இருக்கும் தன் அருமையான வீட்டின் தோட்டத்தில் அமர்ந்துகொண்டு பேசும்போது அவர் சொன்னார்:
பெரும்பாலான காஷ்மீரிகள் இப்போது சுதந்தரமான ஒரு நாட்டில் வாழவே விரும்புகிறார்கள். காஷ்மீர் மீது கண் பதித்திருக்கும் பிராந்தியச் சக்திகளான இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரிகளின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்தால்தான் அது சாத்தியம் ஆகும். இந்திய ஆட்சி அவ்வளவு நல்லதாக இல்லை. பாகிஸ்தானின் உரிமை கோரலோ சுயநலனை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது.
 
தனித்த அடையாளம்:
 
பாகிஸ்தான், காஷ்மீர் என்ற இரண்டு இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன. இரண்டுமே வித்தியாசமானவை. காஷ்மீர் முஸ்லிம்களாகிய நாங்கள், எங்களுக்கென்று தனி அடையாளத்தைக் கொண்டவர்கள். எங்களுடைய பிரார்த்தனை வழிமுறைகள் வித்தியாசமானவை. எங்கள் சிந்தனைப் போக்கு, நிறம், உடை எல்லாமே பாகிஸ்தானிகளிடமிருந்து மாறுபட்டது. காஷ்மீரிகளை அவர்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடிந்ததில்லை.
 
காஷ்மீரி முஸ்லிமுக்குத் தனித்த அடையாளமும் கலாசாரமும் இருப்பதை அவர்கள் உணரவே இல்லை. நான் கொல்கத்தாவுக்கு, கேரளாவுக்கு, கராச்சிக்குப் போயிருக்கிறேன். என் தோற்றத்தையும் பேசும் விதத்தையும் வைத்து எல்லாருமே நான் ஒரு காஷ்மீரி என்பதை எளிதில் புரிந்துகொண்டுவிடுகின்றனர். நான் பேசும் உருது வித்தியாசமானது. கலாசாரமும் மதமும் இரு வேறுபட்ட அம்சங்கள். காஷ்மீரிகள் தங்களுடைய கலாசாரத்தை மிகவும் பெருமையோடு மதிக்கிறார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் அதை மதிப்பதில்லை. இரு நாட்டினருமே எங்கள்மீது ஆதிக்கம் செலுத்தவும் ஆக்கிரமிக்கவுமே விரும்புகிறார்கள்.
 
டோக்ரா வம்சத்தினர்:
 
காஷ்மீரை டோக்ரா வம்சத்தினர் 1947 வரை ஆண்டனர். அந்த வம்சத்தைச் சேர்ந்த இளவரசர் குலாப் சிங் பஞ்சாப் சமவெளியின் வடக்குப் பகுதியில் இருந்த ஜம்முவைத் தலைமையிடமாகக் கொண்டிருந்தார். அவர் பிரிட்டிஷாரிடமிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஆளும் உரிமையை 1846ல் வாங்கியிருந்தார். பிரிட்டிஷாருக்கும் லாஹூரில் இருந்த சீக்கிய அரசுக்கும் இடையிலான சண்டையில் அவர் நடுநிலை வகித்த காரணத்தால்தான் பிரிட்டிஷாரால் வெற்றி பெற முடிந்தது. தோற்ற சீக்கியர்கள் கையிலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு நழுவிப்போனது. குலாப் சிங் 75 லட்ச ரூபாய் கொடுத்து பிரிட்டிஷாரிடமிருந்து அந்தப் பகுதியின் ஆட்சி உரிமையை வாங்கிக்கொண்டார்.
 
இந்தப் புதிய அரச வம்சத்தினர், இந்துக்கள். டோக்ராக்கள். டோக்ரி மொழி பேசுபவர்கள். பஞ்சாபி மொழியின் ஜம்மு வடிவம் என்று அதைச் சொல்லலாம். ஆனால், இவர்கள் எவ்வகையிலும் காஷ்மீரிகள் அல்லர். அந்தப் பகுதி மக்களைப் பொருத்தவரை அந்நியர்களாகவே கருதப்பட்டனர். ஆனால், இவர்கள் தொலைவில் இருந்து ஆட்சி செய்யாமல் உள்ளூரிலிருந்தே ஆட்சி செய்தனர். இளவரசர்கள் ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளர்களாக அறியப்படாமல் காஷ்மீரின் மகாராஜா என்றே அறியப்பட்டனர்.
 
பொது தன்மை கிடையாது:
 
பரம்பரை உரிமையாகவும் பிரிட்டிஷாரின் நல் அனுமதியோடும் டோக்ரா அரச வம்சம் ஒருங்கிணைத்துக்கொண்ட பகுதிகளுக்கு அதன் மகாராஜா ஒருவரைத் தவிர வேறு எந்தப் பொது அம்சமும் கிடையாது. ஐ.நா மத்தியஸ்தக் குழுவின் பிரதான உறுப்பினரும் ஆஸ்திரேலிய சட்ட நிபுணருமான சர் ஓவன் டிக்ஸன், ஐ.நா பாதுகாப்புக் குழுவுக்கு 1950ல் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில், ஜம்மு காஷ்மீர் பொருளாதாரரீதியாகவோ, புவியியல் ரீதியாகவோ, மக்கள்திரள்ரீதியாகவோ ஒற்றை அலகு அல்ல என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். மகாராஜா தன் அரசியல் செல்வாக்கின்மூலம் விலைக்கு வாங்கி ஒன்று சேர்த்த தனித்தனியான இரு நிலப்பரப்புகள் அவை. அந்த இரு பகுதிகளுக்கு இடையே இருக்கும் ஒரே ஒற்றுமை, அந்த ஓர் அம்சம் மட்டுமே. இப்படி இணைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதி, 1947க்கு முன்பு வரை 77% இஸ்லாமியர்கள் இருந்த ஒரு பகுதியாக இருந்தது.
 
ஆங்கிலேய மிஷனரி ஒருவர் ஸ்ரீநகருக்கு முதன்முதலாக வந்தபோது அங்கு சக்கரங்களில் ஓடும் வாகனங்கள் எவையுமே இல்லாததைக் குறிப்பிட்டிருக்கிறார். அதே நேரம் அந்தப் பகுதி, மத்திய ஆசியா, தெற்கு ஆசியா, சீனப் பேரரசின் எல்லைப் பகுதி என்ற மூன்று பெரும் சக்திகளின் சங்கமப் பகுதியாக இருந்தது. அந்த நிலப்பரப்பின் இருப்பு, அழகு ஆகியவற்றால் பெருமளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆக்கிரமிப்புச் சக்திகளின் கண்களிலிருந்து தப்ப முடியாத ஒன்றாகவும் இருந்தது.
 
மலைப்பகுதிகளின் நிலை:
 
மகாராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட பிற பகுதிகளில் மிகவும் முக்கியமானது ஜம்மு. காஷ்மீர் பள்ளத்தாக்குக்குத் தென்பகுதியில் இது உள்ளது. பயங்கரமான மலைத்தொடர்களால் இது பள்ளத்தாக்கிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதி புவியியல்ரீதியாகவும் கலாசாரரீதியாகவும் பஞ்சாப் சமவெளியின் நீட்சியாகவே இருக்கிறது. 1947க்கு முன்பாக, இங்கு மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் இருந்தனர். இப்போது இந்தப் பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
 
காஷ்மீர் பள்ளத்தாக்கைவிட இங்கு மக்கள்தொகை சிறிது குறைவாகவே இருக்கிறது. இந்துக்கள் மிகுதியாக இருக்கின்றனர். எனினும் சிறுபான்மையினரில் இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கின்றனர். பள்ளத்தாக்கை அடுத்திருக்கும் மலைப் பகுதிகளில் சிலவற்றில் மட்டுமே காஷ்மீரி மொழி பேசப்படுகிறது. இந்திய காஷ்மீரின் ஓர் அங்கம் என்ற நிலையை ஜம்மு வேண்டாவெறுப்பாகவே ஏற்றுக்கொண்டிருக்கிறது. காஷ்மீருக்கும் ஜம்முவுக்கும் இடையிலான பிணைப்பு வலுவானதல்ல. மொழி, கலாசாரம், மத அடையாளம் ஆகியவற்றில் ஜம்முவுக்கும் ஸ்ரீநகருக்கும் இடையில் பொதுவான அம்சம் எதுவுமே இல்லை.
மிகவும் குறுகிய வரையறையின்படிப் பார்த்தால், காஷ்மீர் என்றால் சுமார் ஐம்பது லட்சத்துக்கும் மேலான மக்கள்தொகை கொண்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு மட்டும்தான். விரிவான வரையறையின்படிப் பார்த்தால், அதைவிட மூன்று மடங்கு மக்கள் தொகையும் 14 மடங்கு அதிகமான நிலப்பரப்பையும் உள்ளடக்கிய பகுதி.6
 
ஒன்றுக்கொன்று முரண்:
 
முன்னாள் சமஸ்தானத்தின்மீது இந்தியாவும் பாகிஸ்தானும் முழு உரிமை கோருகின்றன. இது தொடர்பாகக் குழப்பமே நிலவுகிறது. இப்போது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் முஸ்லிம் அல்லாதவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே இருக்கிறது. எனவே, அவர்கள் இந்தியாவுடன் இணைவதை விரும்பவே மாட்டார்கள். அதுபோல, இந்துக்கள் அதிகமாக இருக்கும் ஜம்மு பகுதியிலும் சரி, பவுத்தர்கள் அதிகமாக இருக்கும் லடாக் பகுதியிலும் சரி, பாகிஸ்தானுடன் சேர ஒருவருக்குமே விருப்பம் கிடையாது. பல்வேறு பிரிவினைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், காஷ்மீரை துண்டாடக்கூடாது என்பதிலும் அது சுயாட்சி அதிகாரம் கொண்ட ஒரே பகுதியாகவே இருக்கவேண்டும் என்பதிலும் மிக உறுதியாக இருக்கின்றனர். இந்த நிலப்பரப்பின் சிக்கலான அரசியலையும் மக்கள் பரவலையும் பொருத்தவரையில் இது மிகவும் அபாயகரமான ஒரு செயல்.
========================
காஷ்மீர் : முதல் யுத்தம்
ஆண்ட்ரூ வைட்ஹெட்
தமிழில் : மகாதேவன்
கிழக்கு பதிப்பகம்
இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/kashmir.html
தொலைபேசி வழியாக இந்தப் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது உறுதியானமையினால் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/two-indian-students-arrested-in-the-us-1713462403
    • இல்லை, தமிழர்கள் கொழும்பிலே பெருமளவு நிதியைக்கொட்டியே வாழ்கிறார்கள். யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் சிங்களவர்கள் படைபலத் துணையோடு தமிழரது நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள். கடைசியாகத் தமிழரது மேய்ச்சற்தரைகளும் பறிக்கப்படுகின்றன. புத்தர்சிலைகள் வைத்தல். தமிழரது பாரம்பரிய வாழிடங்களோடு வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்படுகிறது. தமிழர் கொழும்பில் வாழ்வதையும் வட-கிழக்கில் சிங்களம் திட்டமிட்டுக் குடியேற்றம் செய்வதையும் ஒன்றென்பவர்களுக்கு எமது தேசம் குறித்த தெளிவீனம் கரணியமாக இருக்கலாம். அல்லது சிங்களத்திற்கு வக்காலத்து வாங்கும் நோக்கமாகவும் இருக்கலாம்.  நன்றி  
    • கமாசையே ஒன்றும் செய்ய முடியவில்லை. ஈரானுடனான தாக்குதலில் அநேகமாக  அணு ஆயுதம் பயன்படுத்தப்பட சாத்தியமுண்டு. ஆயுதங்களை விற்று தள்ளுவதே எமது குறிக்கோள். நண்பனெல்லாம் பிறகு தான். --யாராக இருக்கும்?   According to a survey performed by The Hebrew University of Jerusalem, 74% of the Israeli public opposes an Israeli counter-attack in Iran if it would undermine the security alliance between the United States, the United Kingdom, France, and several moderate Arab countries, including Jordan and Saudi Arabia.   7 பத்தும் ஒரு 4ம் சேர்ந்தால் 74. முதல் பந்தியில்  74 என குறிப்பிடபட்டுள்ளது. அவசரகுடுக்கைகளாக .......
    • கோஷான் த‌ன்னை தானே கோமாளி என்று ப‌ல‌ இட‌த்தில் நிரூபித்து காட்டி விட்டார் நீங்க‌ள் ச‌ரியா சொன்னீங்க‌ள் ஓணாண்டி இத‌ற்கு கோஷானிட‌ம் இருந்து ப‌தில் வ‌ராது.........................கோஷான் தேர்த‌ல் க‌ணிப்பு ச‌ரியா க‌ணிப்பார் என்று யாழிக் சிறு கூட்ட‌ம் இருக்கு...................பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல்க‌ள் வ‌ரும் போது இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் ஓட்டு போடும் உரிமை அவைக்கு கிடைச்சிடும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் சீமானுக்கு தான் ஓட்டு போடுவின‌ம் என்று க‌ட‌ந்த‌ ஜ‌ந்து வ‌ருட‌மாய் எதிர் க‌ட்சி ஆட்க‌ளே வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம்.................... அதோட‌ அவ‌ர்க‌ளின் பெற்றோர‌ கூட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட‌ வைக்கின‌ம்.....................இந்த‌ 20 நாளில் அண்ண‌ன் சீமானின் தொண்டை  கிழிஞ்சு போச்சு குர‌லை கேட்க்க‌ முடிய‌ வில்லை தொண்டை எல்லாம் அடைச்சு க‌டும் வெய்யிலுக்கு ம‌த்தியில் ப‌ர‌ப்புர‌ செய்து ச‌ரியா க‌ஸ்ர‌ப் ப‌ட்டு விடார்............................இன்றுட‌ன் சிறிது கால‌ம் ஓய்வெடுக்க‌ட்டும்🙏🥰......................................................................
    • தம்பிகள் தோற்க கொடுக்கும் அட்வான்ஸ் காரணங்கள் இவை. இவை பல தடவை இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன - டாக்டர் காந்தராஜ் பேட்டியை கூட இணைத்தேன் 57இல் திமுக வுக்கு உதயசூரியன் கிடைக்காமல் சுயேற்சைக்கு கிடைத்தது. முதலில் கேட்பவருக்கே சின்னம் எனும் போது நாதக முதலில் கேட்காமல் - குறட்டை விட்டு விட்டு தேர்தல் ஆணையம் மீது பழி போடுகிறார்கள். வாங்கு எந்திரத்தில் அப்படி ஒரு சின்னமும் மங்கலாக தெரியவில்லை என என் நண்பர்கள் பலர் இன்று சொன்னார்கள். இதுவும் தேர்தல் நாளுக்கு முதலே நாதக கட்டி விட்ட புரளி.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.