Jump to content

கால்மேல் கால் போட்டு ..........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10009297_486249184833880_445635743175060

 

பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்..

இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்...
சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம்
முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை..
கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர்,
ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும்,
அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால்
போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை
நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்...

இது அவர்களது நன்மைக்காகத்தான்...
என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க் கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!!

 

FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் கூறியது... ஏற்கக் கூடிய கருத்து என்றாலும்,
மேற்கு நாட்டு பெண்கள் முழங்கால் தெரியும் சட்டைகளுடன்... கால்மேல் கால் போட்டு இருப்பதைக் கண்டால், அதே ஆண்களின் கண்கள்... வ‌யது வித்தியாசமில்லாமல், மேலும் ஏதாவது... தெரிகின்றதா? என்று, முழங்கால் பகுதியை... மேய்வதை கண்டுள்ளேன்.

 

இதற்காகத் தன்னும்... பெண்கள் கால் மேல் கால் போடுவதை, தவிர்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியும் ஒன்று இருக்கா. இதைத் தெளிவாச் சொல்லியிருந்தா சனம் கேட்டிருக்கும் தானே.

Link to comment
Share on other sites

கைவிட்டு தொலைக்கவேண்டிய எல்லா மூடப்பழக்கங்களுக்கும் பழமைவாதிகள் புதிய அர்த்தம் என்ற பெயரில் ஏதோ ஒன்றை கூறுவது வாடிக்கையாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியல :D ! ஆண் பெண் உடலமைப்பைப் பார்த்தால் , ஆணுக்குத் தான் உடற்குழிக்கு வெளியே பிரதான இனப்பெருக்க உறுப்பான விதைகள் உள்ளன. அதிகம் சைக்கிள் ஓடும் ஆண்களில் விந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. அப்படியானால் ஆண்கள் தான் தங்கள் விதைகளைக் காக்க கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது!  இதை யாராவது இந்த முகநூல் விஞ்ஞானிக்குச் சொல்லி விடுங்கப்பா! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாங்கடா உலகம் ? உலகம் எங்கேயோ போயிட்டிருக்கு இவங்க இப்போவும் கால் போடாதை கைபோடாதை சே...திருந்துங்க மக்களே.


எம்மவர் கூறியது... ஏற்கக் கூடிய கருத்து என்றாலும்,
மேற்கு நாட்டு பெண்கள் முழங்கால் தெரியும் சட்டைகளுடன்... கால்மேல் கால் போட்டு இருப்பதைக் கண்டால், அதே ஆண்களின் கண்கள்... வ‌யது வித்தியாசமில்லாமல், மேலும் ஏதாவது... தெரிகின்றதா? என்று, முழங்கால் பகுதியை... மேய்வதை கண்டுள்ளேன்.

 

இதற்காகத் தன்னும்... பெண்கள் கால் மேல் கால் போடுவதை, தவிர்க்க வேண்டும்.

 

சிறியண்ணா இத முதல்ல உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பியுங்கள்.

Link to comment
Share on other sites

என்னாங்கடா உலகம் ? உலகம் எங்கேயோ போயிட்டிருக்கு இவங்க இப்போவும் கால் போடாதை கைபோடாதை சே...திருந்துங்க மக்களே.

 

சிறியண்ணா இத முதல்ல உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பியுங்கள்.

 

வீட்டில் இருந்து ஆரம்பிப்பது என்றால் துறவறம் போக  சொல்கின்றீர்களா முதல்வன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் இருந்து ஆரம்பிப்பது என்றால் துறவறம் போக  சொல்கின்றீர்களா முதல்வன்.

முயற்சி திருவினையாகுவது என்றால் பக்கத்து வீட்டிலா பரீட்சிக்க முடியும் ?

Link to comment
Share on other sites

காலுக்கு கால் மேல் என்று சொல்ல BASIC INSTINCT தான் நினைவிற்கு வருகின்றது .ssm24-02.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கால்மேல் கால் போட்டிட்டு.. ரெயிலில போற பொம்பிளையளுக்கு அவங்க காலை எங்கட காலால தட்டிவிட்டிட்டு சொறி சொல்லாமலே.. நடந்து போயிருக்கிறம். அவை குந்த ஒரு தொகுதி இடம்.. கால் மேல கால் போட்டிட்டு.. நுனி நீண்ட பாதணியை.. நீட்டிப் புடுச்சுக் கொண்டிருக்க.. ஒரு தொகுதி இடம் என்று பார்த்தால் 3 பேர் அந்த இடத்தை நிரப்பலாம். குறிப்பாக பொதுப்போக்குவரத்து ஊடகங்களில்.. இவர்களால் பெரிய இடர்.

 

வீட்டில ஆபிஸில..எங்கையாவது கால் மேல காலத் தூக்கிப் போட்டிட்டு இருக்கட்டும்.. இல்ல தலையில தூக்கி போட்டிட்டு என்றாலும்.. இருக்கட்டும்.. ரெயில் போன்ற ஒடுக்கமான மக்கள் நடக்க வைக்கப்பட்டுள்ள இடங்களை ஆக்கிரமிச்சு கால் போட்டிட்டு இருக்கிறவையை தடை செய்யனும். அதனால மக்கள் அநாவசிய நெரிசல்களை சந்திப்பதோடு நெரிசல் நேரங்களில் தரிப்பிடங்களில் இறங்க நேரமும் ஆகிறது. இது பல சமயங்களில் மக்கள் சரியான இடத்தில் இறங்காமல் போகவும் அசெளகரியங்களை சந்திக்கவும் செய்கிறது. :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அந்த பெண்களது காலால் தடக்குப்பட்டு விழுந்தும் இருக்கிறீங்கள் இல்லையா:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கால்மேல் கால் போட்டிட்டு.. ரெயிலில போற பொம்பிளையளுக்கு அவங்க காலை எங்கட காலால தட்டிவிட்டிட்டு சொறி சொல்லாமலே.. நடந்து போயிருக்கிறம்.

பஸ்ஸில கால்மேல் கால்போட்டிருக்கும் பெண்களுக்கு முன்னால் இருந்து அய்போணில் பாட்டுப் பாக்கிறமாதிரி அவர்களின் செவ்வாழைக் கால்களைக் களவாக ரசிச்சிருக்கிறம்!

தெரியுமா கற்பூர வாசனை? :D :D

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் கற்பூர வாசனையை நல்லா முகர்ந்துபோட்டு இங்கை வந்து பின்னங்காலால் உதைப்பார்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்ஸில கால்மேல் கால்போட்டிருக்கும் பெண்களுக்கு முன்னால் இருந்து அய்போணில் பாட்டுப் பாக்கிறமாதிரி அவர்களின் செவ்வாழைக் கால்களைக் களவாக ரசிச்சிருக்கிறம்!

தெரியுமா கற்பூர வாசனை? :D :D

 

நாங்க உட்கார்ந்து போவதும் குறைவு. ஏன்னா... பக்கத்தில வந்து உட்காருறதுங்க எப்படிப்பட்ட ஊத்தைன்னு.. யார் அறிவார். உந்த ஊத்தை வழியுற கால்களை எல்லாம் பார்த்து ரசிச்சிட்டு இருக்கிறதில எல்லாம் நமக்கு இஸ்டமில்ல.  எங்களுக்கு போக வேண்டிய இடத்தை சீக்கிரமாப் போகனும்.. இது தான் இலக்கு. :lol::icon_idea:

நெடுக்ஸ் கற்பூர வாசனையை நல்லா முகர்ந்துபோட்டு இங்கை வந்து பின்னங்காலால் உதைப்பார்.. :D

 

கற்பூரம் என்றால் தானே முகரலாம். காலைப் போய் முகர முடியுமா..???! உதைக்கத்தான் செய்யும். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் யாராவது கால்மேல் கால்போட்டுப் பொது இடத்திலோ அன்றேல் பொதுப்போக்குவரத்து சாதனங்களிலோ இருந்தால் நான் உடனே தலைக்குமேல் இருக்கும் எனது கருப்புக்கண்ணாடியை எனது கண்களுக்கு நேரே செருகிவிடுவன்.

பிறகென்ன..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைவிட்டு தொலைக்கவேண்டிய எல்லா மூடப்பழக்கங்களுக்கும் பழமைவாதிகள் புதிய அர்த்தம் என்ற பெயரில் ஏதோ ஒன்றை கூறுவது வாடிக்கையாகிவிட்டது.

 

மூடப்பழக்கங்கள்...மூடப்பழக்கங்கள் என்று சொல்லிச்சொல்லியே  எமது கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும்....ஒருசில உண்மைகளையும் அழித்து விட்டோம்.
 
இதே மூடப்பழக்கங்களை மேலைத்தேயவன் நாகரீகமாக வைத்தியமாக சொல்கிறான்.....நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு நாமும் பின் செல்கின்றோம்.
 
அதே போல் யோகாசனம் அன்று எமக்கு அடிப்படலையில் கிடந்த குப்பை! இன்று மேற்குலகில் ஆகா ஓகோ. அதற்கு விலை கொடுத்து நம்மவர்கள் நேர விரயமும் செய்கின்றார்கள்.
 
மனிதனுக்கு எது தேவையோ அதை எமது முன்னோர்கள் செய்தார்கள். :icon_idea:
 
இயற்கையை மட்டும் வாழ்க்கைக்கு உபயோகப்படுத்தினார்கள்.சுகபோகமாக வாழ்ந்தார்கள். இன்றும் வாழலாம்.  :icon_idea:
 
முன்னோர்கள் மின்சாரம் இல்லாமல் நூறுவருடம் வாழ்ந்தார்கள். இன்று உங்களால் ஒரு நாள் மின்சாரமில்லாமல் வாழ முடியுமா? <_<
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் ஆண்களை விட பெண்களே அதிகமாக கால் மேல் கால் போடுறாங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் கூறியது... ஏற்கக் கூடிய கருத்து என்றாலும்,

மேற்கு நாட்டு பெண்கள் முழங்கால் தெரியும் சட்டைகளுடன்... கால்மேல் கால் போட்டு இருப்பதைக் கண்டால், அதே ஆண்களின் கண்கள்... வ‌யது வித்தியாசமில்லாமல், மேலும் ஏதாவது... தெரிகின்றதா? என்று, முழங்கால் பகுதியை... மேய்வதை கண்டுள்ளேன்.

 

இதற்காகத் தன்னும்... பெண்கள் கால் மேல் கால் போடுவதை, தவிர்க்க வேண்டும்.

 

பாவாடை , சாறியளுக்கு உந்த சேட்டையள் சரிவராது கண்டியளோ சிறித்தம்பி.......எனவே எங்கடை பெரிசுகள் வக்கிர புத்தியிலை சொல்லேல்லை எண்டதை நம்பத்தான் வேணும்.. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் ஆண்களை விட பெண்களே அதிகமாக கால் மேல் கால் போடுறாங்க

ஒரு விதமான பாதுகாப்புக்காகத் தான்!  :D

Link to comment
Share on other sites

ஒரு விதமான பாதுகாப்புக்காகத் தான்! :D

காத்து புகாத இடத்திலும் காத்தவராயன் பூந்திடுவான்.. :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருப்பதை பார்ப்பதும் ஓர் அழகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவாடை , சாறியளுக்கு உந்த சேட்டையள் சரிவராது கண்டியளோ சிறித்தம்பி.......எனவே எங்கடை பெரிசுகள் வக்கிர புத்தியிலை சொல்லேல்லை எண்டதை நம்பத்தான் வேணும்.. :D  :lol:

 

அதான்... குமாரசாமி அண்ணை. நல்லதை நாங்கள் சொல்லப் போனால்.... அதை மூட நம்பிக்கை என்று சனம் நினைக்குது.

பெண்கள் காலுக்கு மேல் கால் போட்டு இருந்தால்..... கர்ப்பப்பை பாதிக்கும் எண்டு சொல்லியிருந்தும், அடம் பிடிச்சுக்குக் கொண்டு, காலுக்கு மேல் கால் போடும் ஆட்கள் தான்... பிற்காலத்தில் குழந்தை பிறக்கவில்லை என்று... சாமியாரிடம் குழந்தை வரம் கேட்கப் போய், ஏமாறுகிற ஆக்கள்.

ஹ்ம்ம்.... இந்தக் காலத்திலை, நல்லது சொன்னால்.... எவன் காது கொடுத்துக் கேட்கிறான். :rolleyes:  :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியல :D ! ஆண் பெண் உடலமைப்பைப் பார்த்தால் , ஆணுக்குத் தான் உடற்குழிக்கு வெளியே பிரதான இனப்பெருக்க உறுப்பான விதைகள் உள்ளன. அதிகம் சைக்கிள் ஓடும் ஆண்களில் விந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. அப்படியானால் ஆண்கள் தான் தங்கள் விதைகளைக் காக்க கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது!  இதை யாராவது இந்த முகநூல் விஞ்ஞானிக்குச் சொல்லி விடுங்கப்பா! :lol:

 

so-ueberzeugt-man-im-job-mit-der-koerper

 

இதென்ன... கரைச்சலா... இருக்கப்பா.... :D 

ஆண்கள் கால் மேல் கால் போட்டு இருப்பதென்றால்.... விதைக்கு மேல் இருப்பதில்லை.

அப்படி... ஒரு வினாடி கூட, எவராலும் இருக்க முடியாது. சூட்சுமமாக இருந்தால்... எந்த பாதிப்பும் ஏற்படாது. இதெல்லாம்.... ஒரு வைத்தியருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கே... என்று எனக்கு வெட்கமாக‌ உள்ளது. :lol:

Link to comment
Share on other sites

அதான்... குமாரசாமி அண்ணை. நல்லதை நாங்கள் சொல்லப் போனால்.... அதை மூட நம்பிக்கை என்று சனம் நினைக்குது.

பெண்கள் காலுக்கு மேல் கால் போட்டு இருந்தால்..... கர்ப்பப்பை பாதிக்கும் எண்டு சொல்லியிருந்தும், அடம் பிடிச்சுக்குக் கொண்டு, காலுக்கு மேல் கால் போடும் ஆட்கள் தான்... பிற்காலத்தில் குழந்தை பிறக்கவில்லை என்று... சாமியாரிடம் குழந்தை வரம் கேட்கப் போய், ஏமாறுகிற ஆக்கள்.

ஹ்ம்ம்.... இந்தக் காலத்திலை, நல்லது சொன்னால்.... எவன் காது கொடுத்துக் கேட்கிறான். :rolleyes::D

தமிழ் சிறி காலுக்கு மேல் கால் போடாமல் விட்டால் குழந்தை எப்படி பிறக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.