Jump to content

உங்களுடைய துணையிடம் சொல்லக்கூடாத 9 விஷயங்கள்!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய துணையிடம் சொல்லக்கூடாத 9 விஷயங்கள்!!!

 

நெடுநாட்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகள் சில நேரங்களில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் மற்றும் எப்படி சொல்கிறார்கள் என்பதை கவனித்துப் பார்க்க வேண்டும்.

 

அதே நேரம், தங்களுடைய உயிருக்குயிரானவர் சொல்லும் விஷயங்களுக்கு அவர்கள் எப்படி பதில் சொல்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். நீங்கள் ஒருவருடன் மிகவும் அன்யோன்யமாக இருப்பதால், அவரிடம் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கக் கூடாது.

 

15-04-angry-wife.jpg

 

எனவே, உங்கள் துணையிடம் நீங்கள் சொல்லக்கூடாத விஷயங்களை இங்கு கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை மறந்தும் சொல்லாதீர்கள்.

 

1. 'நீங்கள் தான் எப்பொழுதும்...' அல்லது 'எப்பொழுதும் நீங்கள் கிடையாது'

இதை யோசித்துப் பார்த்தால் உண்மை இல்லை என்பது தெரிய வரும். நீங்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசத் தொடாங்கினால், உங்களுடைய துணைவர் ஒன்று பேசாமல் இருப்பார் அல்லது சண்டைக்கு தயாராகி விடுவார். ஒரு நிமிடம் பொறுமையாக யோசித்து விட்டு, எதற்காக அதை சொல்கிறோம் என்று நினைத்துப் பாருங்கள், பின்னர் முறையாக சொல்லுங்கள்.

 

2. 'அவர் கவர்ச்சியாக இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கவில்லையா?'

இந்த விஷயத்தைப் பொறுத்தவரை உங்களுடைய துணைவர் அல்லது துணைவியின் கருத்தை வைத்து எந்த வித நல்ல பயன்களும் விளையப் போவதில்லை என்பதை நம்புங்கள். இது வீண் விவாதங்கள் மற்றும் சந்தேகங்களையே உரம் போட்டு வளர்க்கத் தொடங்கும்.

 

3. நீங்கள் செய்ததைப் போல என்னுடைய முன்னாள் காதலரோ அல்லது முன்னாள் கணவரோ அல்லது முன்னாள் காதலியோ அல்லது முன்னாள் மனைவியோ செய்ததில்லை...' அல்லது 'அவர்கள் உன்னை விட சிறப்பாக செய்வார்கள்...'

மேற்கண்ட பேச்சுகள் உங்களுடைய துணையை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடும். இப்படி ஒப்பிட்டு பார்ப்தற்காக நாம் தான் வெட்கப்பட வேண்டும்.

 

4. 'நமது இறுதி விடுமுறைக்காக நான் காத்திருக்க முயற்சி செய்து வருகிறேன்...'

நீங்கள் சமாதானமடைவதற்காக சொல்லும் வார்த்தைகளில் மேற்கண்ட வார்த்தை வந்தால் கூட போதும். அந்த வாக்கியம் மிகவும் காயத்தை உண்டாக்குவதாகவும் மற்றும் நீங்கள் அதை திரும்ப பெற்றாலும் ஆறாத வடுவை உண்டாக்குவதாகவும் இருக்கும்.

 

5. 'நான் உன்னை முதலிலேயே திருமணம் செய்து கொள்ளலாமா நினைத்திருந்தேன், எனது பயம் உண்மையாகி விட்டது'

இது போன்ற வெறுமையான வார்த்தைகளை நீங்கள் சொல்ல முயற்சிக்கும் போது, அந்த வார்த்தையின் பின்னணியில் உங்களுடைய உணர்வுகள் எப்படி இருக்கும் என்று ஒருமுறை யோசித்துப் பாருங்கள். இப்படி வெறுமனே பேசுவதற்குப் பதிலாக பிரச்சனையை நேரடியாக பேசத் தொடங்குங்கள்.

 

6. 'நம்முடைய குழந்தைக்கு உன்னுடைய புத்தி தான் உள்ளது என்று நான் நினைக்கிறேன்...'

அதே போல 'உன்னையெல்லாம் நான் ஏன் முதலிலேயே திருமணம் செய்து கொண்டேனோ' என்றும் சொல்வீர்கள். உண்மையில், உங்கள் குழந்தையின் உண்மையான பிரச்சனை என்ன என்பதை மற்றவர் மீது குற்றம் சொல்வதால் சரி செய்து விட முடியாது.

 

7. 'நீ உன்னுடைய அப்பா அல்லது அம்மாவைப் போலவே...'

மீண்டும், உங்கள் துணைவரிடம் என்ன பிரச்சனை என்று சொல்லாமல், அவருடைய குடும்பத்தை வம்புக்கு இழுக்கிறீர்கள். இது தவறான செயல் மட்டுமல்ல, மோசமான விளைவுகளுக்கும் இழுத்துச் சென்று விடும்.

 

8. 'எப்பொழுதுமே இது உன்னுடைய பிரச்சனை தான் என்பது உனக்குத் தெரிந்திருக்கும்...'

இந்த வார்த்தையை துணைவராக இருப்பவர்களில் யார் தான் கேட்க நினைப்பார்கள்? நாம் அனைவரும் இந்நேரங்களில் நல்ல உணர்வுடனும் மற்றும் இழந்து கொண்டிருக்கும் நல்ல உறவை நிலைநிறுத்தவும் செயல்பட வேண்டும்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

இதனை விட... வேறு ஏதாவது சொல்லி, ரணகளப் பட்டவர்கள்...

தமது அனுபவத்தை தெரிவித்தால், நாம் முன் எச்சரிகையாக இருக்கலாம். :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவள் சிநேகிதி அவளளவுக்கு அழகென்றால் ஜாக்கிரதையாய்ப் பேச வேன்டும்,

அவளைவிட அழகென்றால் பேசவே கூடாது !

அவளாகவே ஆரம்பித்தாலும் , அடுத்த தலைப்புக்கு  மாறவேன்டும்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3. நீங்கள் செய்ததைப் போல என்னுடைய முன்னாள் காதலரோ அல்லது முன்னாள் கணவரோ அல்லது முன்னாள் காதலியோ அல்லது முன்னாள் மனைவியோ செய்ததில்லை...' அல்லது 'அவர்கள் உன்னை விட சிறப்பாக செய்வார்கள்...'

மேற்கண்ட பேச்சுகள் உங்களுடைய துணையை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடும். இப்படி ஒப்பிட்டு பார்ப்தற்காக நாம் தான் வெட்கப்பட வேண்டும்.

 

எனக்கு இந்தப் பிரச்சனையே இல்லை...! :D

 

உன்னைக்கட்டின நேரம், ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி விட்டிருந்தாலும்.......!

 

ம்ம்... சொல்லவே கூடாது! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சாதாரணம் எல்லோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

15-04-angry-wife.jpg

 

 

 

3. நீங்கள் செய்ததைப் போல என்னுடைய முன்னாள் காதலரோ அல்லது முன்னாள் கணவரோ அல்லது முன்னாள் காதலியோ அல்லது முன்னாள் மனைவியோ செய்ததில்லை...' அல்லது 'அவர்கள் உன்னை விட சிறப்பாக செய்வார்கள்...'

மேற்கண்ட பேச்சுகள் உங்களுடைய துணையை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடும். இப்படி ஒப்பிட்டு பார்ப்தற்காக நாம் தான் வெட்கப்பட வேண்டும்.

 

 

 

சரியாக புரியவில்லை ............
தமிழ் மொழிபெயர்ப்பில் எதோ தவறு நடந்திருக்கு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சரியாக புரியவில்லை ............
தமிழ் மொழிபெயர்ப்பில் எதோ தவறு நடந்திருக்கு.

 

 

அதுக்குள்ள அவசரப்பட்டால் எப்படி மருது?  :o

 

அந்த. அந்த வயது வரத் தானா விளங்கும்! :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'நீ அப்படியொன்றும் அழகில்லை. அதனால் அவளுக்கு நிகரில்லை' என்ற பாடலை உங்கள் துணையின் காதுகளுக்குக் கேட்கத்தக்கதாகச் சற்று முணு முணுத்துப் பாருங்கள்.  செயற்கைப் பூகம்பங்களை உருவாக்க அது பேருதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவையிட்டை ஒண்டுமே சொல்லா விட்டமெண்டால் ஒருபிரச்சனையும் வராது.  :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.