Jump to content

இலங்கையின் வட பகுதியை புயல் தாக்கக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வட பகுதியை புயல் தாக்கக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

29 அக்டோபர் 2012

யாழ்.குடாநாடு மற்றும் முல்லைத்தீவுக்குட்பட்ட கரையோர பகுதிகளை இன்றிரவு புயல் தாக்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.தற்போது முல்லைத்தீவு கரையிலிருந்து சுமார் நூறு கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ள மினி புயல் இன்று நள்ளிரவு முல்லைத்தீவு மற்றும் குடாநாட்டு கரைகளை தாண்டி செல்கையில் குறிப்பிடத்தக்க அபாயங்களை விளைவிக்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக திருகோணமலையின குச்சவெளி முதல் வடமராட்சியின் முனை வரையான கரையோர கிராமங்களை அது கடக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கிழக்கின் கரையோர கிராமங்களென பருத்தித்துறை முனை வரையான கரையோரப்பகுதிகளை சேர்ந்த மக்களை சுமார் 500 மீற்றர் தூரம் கடற்கரை பகுதிகளிலிருந்து இடம்பெயருமாறு அரச அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்றிரவு அறிவித்துள்ளது.இதையடுத்து இன்றிரவு தொடர்ச்சியாக கரையோரப்பகுதிகளினில் பதற்றமான நிலையே காணப்பட்டது.பரவலாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகள் மற்றும் தேவாலயங்களினில் தங்கியுள்ளனர்.குறிப்பாக தொடச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக வடமராட்சி கிழக்கினில் மக்கள் இடம்பெயர்ந்துள்ள எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக அண்மைக்காலங்களினில் மக்கள் மீள்குடியமர்ந்த அப்பிரதேசங்களினில் போதிய வீட்டு வசதிகள் ஏற்படுத்தப்படாமையினால் மக்கள் அடை மழை காரணமாக வெளியேறி தேவாலயங்கள் மற்றும் பாடசாலை கட்டிடங்களை அடைக்கலம் புகுந்துள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக குடாநாட்டின் பல பகுதிகளினிலும் மின் துண்டிப்பு அமுலில் இருந்தே வருகின்றது.அதே வேளை அபாய எச்சரிக்கையினையடுத்து மீனவர்கள் எவரும் இப்பகுதிகளினில் கடலுக்கு தொழிலுக்கு சென்றிருக்கவில்லை. தமது படகுகளை கடல் அலைகள் இழுத்து செல்லாதிருப்பதையுறுதிப்படுத்தும் வகையினில் அவற்றை நகர்த்தும் பணிகளிலும் மீனவர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இலங்கையின் வட பகுதியை புயல் தாக்கக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

29௰௨012 09.01

இலங்கையின் வட பகுதியை குறைந்தளவு வலுவுடைய புயல் காற்று தாக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவின் கிழக்கு பகுதியை இந்தப் புயல் தாக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை கடற்பரப்பு கடும் சீற்றத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் குச்சவெளி பிரதேசத்தில் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் வெளியேற்;றப்பட்டுள்ளனர். குறித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் நகர்த்தப்பட்டுள்ளனர். நாளை அதிகாலை 2 மணியளவில் இலங்கையை இந்தப் புயல் ஊடறுத்துச் செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் குச்சவெளி கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வங்காள விரிகுடாவில் நிலவி வரும் அசாதாரண நிலைமை காரணமாகவே நாடு முழுவதிலும் கடுமை மழையுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், சொத்துக்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இடைவிடாது மழை பெய்து வருவதனால் சில பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/84856/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

புயல் காட்டுக்குள் அநாதரவாக விடப்பட்டுள்ள மக்களுக்கு இன்னும் பாதிப்புகளை ஏற்படுத்தப் போகின்றது. எப்பவுமே மரத்தில் இருந்து வீழ்த்தப்பட்டவர்களைத் தான் மாடேறி மிதிக்கும் போல.

Link to comment
Share on other sites

புயல் காட்டுக்குள் அநாதரவாக விடப்பட்டுள்ள மக்களுக்கு இன்னும் பாதிப்புகளை ஏற்படுத்தப் போகின்றது. எப்பவுமே மரத்தில் இருந்து வீழ்த்தப்பட்டவர்களைத் தான் மாடேறி மிதிக்கும் போல.

இயற்கையும் எம் இனத்தை தான் எப்போதும் ஏறி மிதிக்க ...நினைக்கும் ..............என்ன சாபக்கேடோ ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு,கிழக்கில் சூறாவளி அபாயம் ௲ நேற்றிரவு ஆயிரக்கணக்கான கரையோர மக்களை வெளியேற்றியது சிறிலங்கா அரசு.

சிறீலங்கா | ADMIN | OCTOBER 30, 2012 AT 08:43

சிறிலங்காவின் வடக்குப் பகுதி ஊடாக சிறியளவிலான சூறாவளி இன்று அதிகாலை கரையைக் கடக்கும் என்பதால், நேற்றிரவு அவசர அவசரமாக ஆயிரக்கணக்கான கரையோரப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர வேண்டுகோளை அடுத்து, குச்சவெளி தொடக்கம் காங்கேசன்துறை வரையான கரையோரப்பகுதி மக்கள் நேற்றிரவு 10.30 மணி தொடக்கம் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

கரையோரத்தில் இருந்து 500 மீற்றர் தூரம் வரையான பகுதிகளில் வசித்த மக்களே வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பொதுமக்களை வெளியேற்றும் இந்த அவசர நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவம், காவல்துறை, மற்றும் தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

http://thaaitamil.com/?p=37010

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4ம்இணைப்பு - முல்லைத்தீவில் கடும் காற்றினால் பறந்தன தறப்பாள் குடிசைகள்

30 அக்டோபர் 2012

முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் அண்மையில் மீளக்குடியமர்ந்த மக்களின் குடிசைகள் நேற்று பகல் வீசிய காற்றினால் தூக்கி வீசப்பட்டன. தங்குவதற்கு பொதுக் கட்டடங்கள் கூட இல்லாத நிலையில் அந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.

இதேவேளை, கடலோரப் பகுதியில் சூறாவளி மற்றும் சுனாமி ஏற்படலாம் என இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலை அடுத்து இரவோடிரவாக மக்கள் இடம்பெயர்ந்து இரணைப்பாலை பற்றிமா தேவாலயம் மற்றும் இரணைப்பாலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை என்பவற்றில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

புதுமாத்தளன், பழையமாத்தளன், அம்பலவன்பொக்கணை ஆகிய கிராமங்களில் இருந்து நேற்று இரவு 9.30 மணிவரை 100 இற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து 3 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இரணைப்பாலைக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இந்தத் தகவலை இரணைப்பாலை பங்குத் தந்தை அருட்செல்வன் அடிகளார் உறுதிப்படுத்தினார். மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தாம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவளை முள்ளிவாய்க்கால் மேற்கில் இருந்து 25 வரையான குடும்பங்கள் இடம் யெர்ந்து முள்ளிவாய்க்கால் அ.த.க. பாடசாலையில் தஞ்சம் புகுந்துந்துள்ளன.

பலத்த காற்று மற்றும் மழை காரணமாக அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் தறப்பாள் கொட்டகைகள் பல தூக்கி வீசப்பட்ட நிலையிலேயே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

நேற்று பிற்பகல் 2 மணியிலிருந்து காற்று பலமாக வீசியதுடன் கடும் மழையும் பெய்துள்ளது. சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து வீசிய காற்றால் முள்ளிவாய்க்கால் அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன், ஆனந்தபுரம், சிவநகர் போன்ற பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தறப்பாள் கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்த மக்கள் இல்லிட நெருக்கடிகளை எதிர்நோக்கி உள்ளனர். இதேவேளை அந்தப் பகுதிகளில் இடம்பெயர்ந்து தங்குவதற்கு பொது கட்டடங்கள் இல்லாத நிலையில் தொடர்ந்தும் அவர்கள் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி உள்ளது.

காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்தப் பகுதிகளில் மேலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய காற்றுடன் கூடிய மழை அவற்றின் சேதம் தொடர்பில் முல்லைத்தீவு அரச அதிபர் கூறுகையில், 'நேற்றுப் பிற்பகலில் இருந்து பலத்த காற்றுடன் கூடிய மழை காலநிலை நிலவுகிறது. இதனால் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தி உள்ளோம்.

இதுவரைக்கும் மக்களுக்கு பலத்த சேதம் எதுவும் ஏற்பட்டதாக தரவுகள் இல்லை. காற்றுடன் மழை தொடர்வதால் சேத விவரம் குறித்து தற்போது கூறமுடியாது' என்றார்.

முல்லைத்தீவு கடலுக்குக் கிழக்காக 100 கிலோ மீற்றர் தொலைவில் புயல் மையங்கொண்டு நகர்ந்து வருவதால் அது கரையை எட்டும்போது சூறாவளி ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று மதியம் புயல் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் - வளிமண்டலவியல் திணைக்களம்

இன்று மதியம் புயல் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. முல்லைத்திவிற்கு கிழக்கே 100 கிலோ மீற்றர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

இந்தப் புயல் மேல் மற்றும் வடமேல் பகுதியாக நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறெனினும், புயல் அபாயம் இன்னமும் குறைவயவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வட, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் தொடர்ந்தும் கடுமையான காற்றுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய மலை நாடு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மழை வெள்ளம் காரணமாக நாடு முழுவதிலும் 100000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/84856/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.