Jump to content

நிலத்திலும் புலத்திலும் ஈழத்தமிழர்களின உரிமைக்கான தொடர்போராட்டம்..!


Recommended Posts

எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது. காலம் காலமாக எமது இனம் வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும் -எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் -எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். 30 வருட சாத்வீக போராட்டத்தை தொடர்ந்து 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழீழ மக்களின் கனவை நியமாக்கி தமிழீழ நிழலரசை நிறுவியது.

சிங்கள இனவெறி அரசு தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவித்து அவர்களை தனது அனுசரணையாளர்களாக மாற்றியது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் எம் போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு முகம் கொடுத்தும் உறுதி தளராமல் தடம் பிரலாமல் இன்றுவரை தொடர்கின்றது .

2009 ஆண்டு மே மாத நடுப்பகுதியில் எமது விடுதலை வீரர்களையும் மற்றும் 3 லெட்சத்திற்கும் மேலான எமது உறவுகளையும் குறிகிய நிலப்பரப்பில் அடைக்கப்பட்டு , உயிரா அல்லது விடுதலையா என்று சிங்களத்தாலும் அத்தோடு உலகத்தாலும் கேக்கப்பட்ட பொழுது தமது விடுதலை தான் வேணும் என்று தமது உயிர்களை கொடுத்தார்கள் எமது மாவீரர்களும் மக்களும். நிலத்தில் போராட்டம் மௌனித்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புலம்பெயர் மக்கள தொடர்ந்து ஏந்தி செல்கிறார்கள் .

முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் உலகமே கண்டிராத புலம்பெயர் தமிழர்களின் கண்டன பேரணிகளும், நீதி வேண்டிய உண்ணாநோன்பு விரதங்களும், வீதிமறிப்பு கவனயீர்ப்பு நிகழ்வுகளும் உலகம் பூராகவும் செய்யப்பட்டது. எம் உறவுகள் தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் தம்மை தாமே தீயிலிட்டு அர்ப்பணித்த நிமிடங்களை மறக்க முடியுமா ?

இன்று இரண்டரை ஆண்டுகள் கடந்தும் தமிழர்களுக்கு மீதான இனப்படுகொலைக்கு எவ்வித நீதியும் எவ்வித அரசியல் தீர்வும் வழங்காத போதிலும் எமது தொடர் போராட்டம் முள்ளிவாய்க்கால் காலத்திலும் விட அதிவேகத்தோடு முன்னெடுக்கப்படவேண்டும்.

உண்மைகள் அழிவதில்லை என்பது போல தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு செய்த போர்குற்ற ஆவணங்கள் வெளிவரும் தருணத்தில் நாம் எமது தொடர்போராட்டத்தை மிக வலுவோடு முன்னெடுக்கவேண்டும் .

நாம் தற்போது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இது மக்கள் சக்தியாக உருமாறி சர்வதேசத்தின் கதவுகளை தட்டி மெல்லத் திறந்துள்ளோம். . இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுட்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்பதை உலகம் மெல்ல உணர்கின்றது. ஆகவே நாம் இன்றைய அவசர நிலையை கருத்தில் கொண்டு மக்களின் சக்தியோடு தொடர்ந்து போராட வேண்டும் . ஒரு தனிமனிதனால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் குறிகிய காலத்தில் தேசிய மக்கள் போராட்டமாக மாறியது. அதே போல் இன்றைய காலத்திலும் பல்வேறு காரணத்தால் மக்கள் பங்களிப்பு அதிகமாக இல்லை என்றாலும் எமது போராட்டம் விரிவடைந்து மிக விரைவில் மக்கள் போராட்டமாக வலுவாகும் காலம் விரைவாகும்.

நிலத்தில் எம் சிவில் சமூக உறவுகள் மற்றும் உயர்கல்வி மாணவர்களும் மக்களும் சிங்கள இனவெறியர்களுக்கும் அவர் தம் கூலிகளுக்கும் எவ்வித அச்சமும் அல்லாமல் நீதியை நிலை நாட்ட முயற்சிப்பது , மானத் தமிழர்கள் மடியவில்லை அடிபணியவில்லை என்று உறுதிப்படுத்துகின்றது .

புலத்தில் பிரித்தானியாவில் இருந்து சிவந்தன் தொடக்கம் சுடர்விட்டு எரியத் தொடங்கிய நீதியின் நடைப்பயணம் ஜெகன் அங்கிள் தொடர்ந்து, டென்மார்க் உணர்வாளர்களிடம் விரிந்து, தமிழக உறவுகளிடம் பரந்து, ஜேர்மன் இளையோர்களின் ஈருருளிப் பயணத்தை அடுத்து மீண்டும் டென்மார்க் உணர்வாளர்களிடம் ஈருருளிப் பயணமாக மாறி தொடர்ந்து சென்ற ஆண்டு யூலை மாதத்தில் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து ஆறு தேசிய உணர்வாளர்கள் மூலம் பாரீஸ் நகரத்தை நோக்கி பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொடர்ந்தது .

இன்று எம் இனத்தின் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துப்பட்டிருக்கும் இனப்படுகொலையிலிருந்து எம்மக்களைப் பாதுகாப்பதற்கு பல்வேறுபட்ட அரசியல் போராட்டங்களை நாம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த வகையில் எதிர் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணையகத்திற்கு எமது மக்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்படும் படுகொலை தொடர்பாக தீர ஆராய்ந்து அனைத்துலக நீதி மன்றில் விசாரணை நடாத்தி எம் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என வலியுறுத்தும் கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில்(05 .02 .2012 ) இருந்து ஐ. நா (05.03 .2012 ) வரைக்கும் நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இறுதி நாள் அன்று மாபெரும் மக்கள் எழுட்சி நிகழ்வும் நடைபெறும் . அதே நேரத்தில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடர் விடையமாக கடந்த பல வாரங்களாக நாடுகள் வாரியான அரசியல் வேலைத்திட்டங்கள் , மற்றும் அரசியல் சந்திப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .

நாங்கள் சிந்தும் துளிகள் இன்று கண்ணீராக இருந்தாலும் நாளை மலரப் போகும் தமிழீழத்துக்கு தண்ணீராக மாறும். தமிழீழம் மீட்கும் வரை எம் மக்கள் விடுதலை பெறும் வரை ஓயாது எம் போராட்டம்.

நீதியின் அடிப்படையில், மனிததர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும்பொழுது, நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும். இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள். (தேசியத் தலைவரின் சிந்தனைகளில் இருந்து )

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் .

நன்றி

ஈழத்தமிழர் மக்கள் அவை- யேர்மனி

01-04.JPG

05.02.2012 - 05.03.2012 நீதிக்கான நடைப் பயணம்.

ஐரோப்பிய பாராளுமன்றத்திலிருந்து ஐ.நா. வரைக்கும்.

nadai%20payanam3.jpg

nadai%20payanam2.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடிப்படை சம்பளமே அந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.
    • ஒரு பொய்யை மறைக்க இன்னொரு புரட்டு. ஆக இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறப்பதற்கான எதிர்ப்பு மேல்த்தட்டு வர்க்க யாழ்ப்பாணிகளினால் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழரசுக்கட்சியின் உந்துதலினால் மக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு என்று வந்துவிட்டது.  கூறப்பட்டது புரட்டு என்றாலும், அதில் அன்றிருந்த தமிழரசுக் கட்சி மீதான காழ்ப்புணர்வு கொட்டிக் கிடக்கிறது.  ஆக, தமிழர் கண்ட ஜனநாயகவழி அரசியல்வாதிகளில் மிகவும் சிறந்தவரான தந்தை செல்வா அன்று ஆரம்பித்த கட்சியும், அதன் செயற்பாடுகளும் உணர்ச்சியால் தூண்டப்பட்டவை என்ற முடிவிற்கு வந்தாயிற்று. அன்றிருந்த தமிழர்களுக்க்கு ஒரே நம்பிக்கையாக இருந்தவர் செல்வா. அவரது அரசியலே தவறு என்றால், இக்கருத்தாளர் அன்று எந்தப் பக்கம் நின்றிருக்கிறார் என்பது தெளிவாகிறது. 
    • என்ன‌ அண்ணா கோலி நீக்க‌மோ இந்த‌ உல‌க‌ கோப்பையில்................................................
    • சீமான் உங்க‌ளை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு ம‌ண்டை காய் அவ‌ருக்கு அர‌சிய‌ல் எப்ப‌டி  செய்ய‌னும் என்று ந‌ங்கு தெரியும் திராவிட‌ ஊட‌க‌ங்க‌ள் ப‌ல‌ குறுக்க‌ ம‌றுக்க‌ ப‌ல‌ கேள்விக‌ள் கேட்டாலும் ச‌ரியான‌ ப‌திலை சொல்ல‌க் கூடிய‌ ந‌ப‌ர் தான் சீமான்  உங்க‌ளால் அப்ப‌டி ப‌தில் முடியாது?    2009க்கு முத‌ல் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கும் உங்க‌ளுக்கும்  எந்த‌ வித தொட‌ர்வும் இல்லை என்று உங்க‌ள் எழுத்தே காட்டி கொடுக்கு...................2008க‌ளில் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரையும் தூற்றின  ந‌ப‌வ‌ர்க‌ள் சில‌ர் இருந்த‌ன‌ர்  ...........................அவ‌ர்க‌ளில் நீங்க‌ளும் ஒருவ‌ராய் இருக்க‌ கூடும் என்று நினைக்கிறேன் ............................இதுக்கு முத‌ல் யாழில் என்ன‌ பெய‌ரில் எழுதி நீங்க‌ள் என்று கேட்டேன் ஆனால் நீங்க‌ள் மெள‌வுன‌த்தை க‌டை பிடித்த‌ போதே தெரிந்து விட்ட‌து நீங்க‌ள் ப‌ழைய‌ காய் என்று............................த‌மிழ் இன‌த்தின் ச‌பாக் கேடு ஒரு த‌மிழ‌ன் வ‌ள‌ந்து வ‌ந்தால் ம‌ற்ற‌ த‌மிழ‌னுக்கு பிடிக்காது................................ ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரி இப்ப‌ யார் கூட‌ இருக்கிறார் க‌ந்தையா அண்ணா😏....................................................  
    • எதிர்கக வேண்டும் என்று முடிவெடுத்தால் அதற்கான காரணங்களை தேடுவதும் இளைஞர்களை தூண்டி  விடுவதும் தமிழரசு கட்சியின் கைவந்த கலை என்பது இலங்கை அரசியலை புரிந்து கொண்ட அனைவருக்கும் தெரியும்.  பொதுமக்களும் இளைஞர்களும் ஆர்பட்டதில் ஈடுபட்டார்கள் என்று கூறப்பட்டாலும் அவர்களை கொம்பு சீவி விட்டது தமிழரசு கட்சியே என்பது வெள்ளிடை மலையாக தெரியும்.  பலகலை கழகம் திருகோணமலையில் அமைத்திருந்தால் அது  தமிழரின் முழுகட்டுப்பாடில் இருந்திருக்காது என்ற ஜதார்த்தத்தை கூட புரிய முற்படவில்லை.  அப்படியே அங்கு திறந்திருந்தாலும்  தமிழரின் கலாச்சார தலைநகரை புறக்கணித்து சிங்கள ஆக்கிரமிப்புக்காக திருகோணமலையில் பல்கலை கழகம் திறந்ததாக புரட்டு கூறி பிரச்சாரம் செய்திருப்பார்கள் இந்த தமிழரசு கட்சியினர் என்பது தமிழரசு கட்சியின் செயல்களை பார்தவர்கள் அனைவருக்கும் புரியும்.  தமிழரசுகட்சி எப்போதுமே தனது உசுப்பேற்றும் அரசியலுக்காக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் தெரிந்த விடயம் தான்.  அவை எல்லாம் ஆதாரங்கள் அல்ல.. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.