Jump to content

யாழ் மகாஜனா கல்லூரி செய்திகள்....


Recommended Posts

Mahajana college news from FB (new mahajans

2013ஆம் ஆண்டுக்கான வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் 3ஆம் இடத்தைப் பெற்று மகாஜனாக் கல்லுாரி 19 வயதுப் பெண்கள் அணியினா் மாவட்ட மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர் அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்

----------------------

32 வருடங்களக்கு பின் எமது பாடசாலை மாணவியான பாஸ்கரன் சானு என்னும் மாணவி ஆசிய கால்பந்து தொடரில் விளையாடுவதற்காக தேசிய அணியில் இனைக்கப்பட்டுள்ளார் இதன் முலம் தமிழ் விராங்கனை கால்பந்தாட்டத்தில் விளையாடுவது இதுவே முதல் தடவையாகும் என்ற சாதனையும் நிலைநாட்டியுள்ளார் ஆசிய கால்பந்து தொடரில் நடை பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார் இதுவே பெருமைக்குரிய விடயமாகும்

-------------------------

சாரணியம்

யா/மகாஜனக்கல்லூரி சாரணர் குழு (Scout group) ஆண், பெண் குருளைச்சாரணர் இணைந்து வினைத்திறனாக தொழிற்படுகிறது. திரி சாரணர்களின் (Rover scouts) உதவிகள் குழுவிற்கு மேலும் வலுச் சேர்க்கின்றது.

இலங்கையில் சாரணிய செயற்பாடுகள் நூற்றாண்டை அண்மிக்கும் வேளையில் சாரணிய அங்கத்துவத்தை விருத்தி செய்யும் இலக்கை அடையும் வகையில் எமது பாடசாலையில் 150க்கு மேற்பட்ட குருளையர்கள், சாரணர்கள் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

மாவட்டமட்ட சாரணா பாசறை நிகழ்வ (Annual scout rally)குருளைச் சாரணர் வெளிக்கள நாள் (Cub scout field day) என்பவற்றில் பங்கு பற்றி வெற்றி பெற்றுள்ளதுடன் மாவட்ட மற்றும் மாகாண மட்ட உலக சாரணர் நாள் (World scout day) பெருவிளையாட்டுப் போட்டிகள் என்பவற்றிலும் பங்குபற்றி பரிசில்களும், பதக்கங்களும் பெற்றுள்ளனர்.

சாரணர் தம் சேவையை பாடசாலை மெய்வல்லுநர் போட்டி, ஏனைய கல்லூரி நிகழ்வகள், ஆலய மகோற்சவ சேவைகள், பொது நிகழ்வுகள், என்பவற்றில் திறம்பட ஆற்றி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக நடைபெற்ற சாரண, குருளைச்சாரண தலைவர்களின் உயர் பயிற்சியில் (scout Advance course) எமது 3 தலைவர்கள் பங்கு பற்றியுள்ளதுடன் தரு சின்னம் (Wood badge) பெறும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

-------------------

ஆசிய கனிஸ்ர மெய்வல்லுனர் போட்டிக்கான 1வது தகுதி காண் போட்டி அண்மையில் சுகதாசா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் எமது பாடசாலை மாணவர்களான லக்ஸ்மன், திலக்சன், மயூரன் கோலுன்றிப்பாய்தல் நிகழ்ச்சியில் 1ஆம், 2ஆம், 3ஆம் இடங்களைப் பெற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பில் பாராட்டைத்தெரிவித்து கொள்கின்றோம்.

--------------

ஆசிய கனிஸ்ர மெய்வல்லுனர் போட்டிக்கான 1வது தகுதி காண் போட்டி அண்மையில் சுகதாசா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் எமது பாடசாலை மாணவி A.அனித்தா கோலுன்றிப்பாய்தல் நிகழ்ச்சியில் 2.90M துாரம் பாய்ந்து 1 இடம் பெற்றுக் கொண்டார் அவருக்கு பாடசாலை சமூகம் சார்பில் பாராட்டைத்தெரிவித்து கொள்கின்றொம்

----------------------

2012 கபொத(சா/த) பரீட்சைப் பெறுபேறுகள்

கி.விஷ்ணுகா 9A

ஜெ.மயுரன் 8A C

ஆ.கிருஷா 8A C

வா.விதுஷா 8A C

வி.நேருஜா 7A 2B

ப.கௌதமன் 7A B C

ஜெ.பரணிதா 7A B C

சு.சஷானா 6A 2B C

த.மதுரன் 6A 2B

ஞா.டிலக்ஷன் 5A B 2C S

லோ.ஷயிதா 5A B 2C S

மேற்படி மாணவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்...

--------------

வீரர்களின் துடுப்பாட்ட போரிற்கு தலைமை தாங்கிய அணித்தலைவர்களின் விபரங்கள்.

01. அன்பழகன் (2001)

02. ராஜகாந்தன் (2002)

03. பிரபு (2003)

04. ரவிசங்கர் (2004)

05. றஜீவ் (2005)

06. ஜெயப்பிரியந்தன் (2006)

07. பிரகலாதன் (2007)

08. எல்மோநிக்சன் (2008)

09. கஜதீபன் (2009)

10. டிலக்சன் (2010)

11. கோகுலன்(2011)

12. அஜித் (2012)

13. டிலோசன் (2013)

------------------------------

2013ஆம் ஆண்டுக்கான கோட்டமட்ட தழிழ்த்தினப் போட்டியில் எமது பாடசாலை 15 முதலாம் இடங்களையும், 6 இரண்டாம் இடங்களையும், 3 மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்துவதோடு அவா்களை நெறிப்படுத்திய ஆசிரியா்களையும் பாடசாலைச் சமூகம் சார்பில் பாராட்டுகின்றோம்.

-----------------------------------

மகாஜனாவின் மறக்கமுடியாத

சாதனை மன்னன் T.P

மகாஜனாவின் மறக்கமுடியாத சாதனை மன்னனாக அமரர் T.பத்மநாதன் அவர்கள் திகழ்கின்றார். மகாஜன உதைபந்தாட்டத்தின் பிதாமகனாகவே அவர் போற்றப்பட வேண்டும். உதைப்பந்தாட்ட வெற்றியின் ஊடாக யாழ். மாவட்டத்தையும் தாண்டி அகில இலங்கையில் மகாஜனாவின் புகழை நிலைநாட்டியவர். இந்தச் சாதனையாளர் மகாஜன நூற்றாண்டில் போற்றப் பட்டு நினைவுகூரப்பட வேண்டியவர்.

கல்வியிலும் கவின்கலைகளிலும் விளையாட்டுதுறையிலும் யாழ். மாவட்டத்தில் மட்டுமல்ல அகில இலங்கையிலும் முன்னணிப் பாடசாலை யாக மகாஜனா திகழ்ந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவற்றுக்கெல்லாம் மூலகர்த் தாவாக விளங்கியவர் மகாஜன சிற்பி அமரர் தெ.து. ஜயரத்தினம் அவர்கள் ஆவார். கல்லூரி சகல செயற்பாடுகளிலும் முன்னிலையில் நிற்க வேண்டும் என்று அயராது உழைத்தார். அதற்காக ஒவ்வொருவரையும் சுண்டிப் பார்த்துத் தெரிவு செய்தார். அந்த வகையில் விளையாட்டுத் துறையில் உதைபந்தாட்டத்திற்காக சிற்பி அவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஜாம்பவான் தான் அமரர் T.பத்மநாதன் அவர்கள்.

மகாஜனாவில் ஒரு நூலகராக இணைந்து கொண்ட T.P அவர்கள் நாள் முழுவதும் உதைபந்தாட்டம் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருப்பார். அவருக்கு உதைபந்தாட்டம் என்பது கைவந்த கலை ஆகும். உதைபந்தாட்ட களநிலைகளில்புதிய உத்திகளைக் கையாண்டவர். எதிரணிகளின் பலம், பலவீனங்களுக்கு ஏற்றவாறும் ஆட்ட மைதானத்திற்கு ஏற்றவாறும் பயிற்சியளிக்கக் கூடிய நுட்பவியலாளர். எதிரணிகளின் பலம், பலவீனங்களைக் கணி;த்து அதனூடக வெற்றிப் பாதைக்குச் சென்றவர். மிகவும் மதிநுட்பமான முறையில் அணிகளைப் பயிற்றுவிக்கும் அபாரமான ஆற்றல் படைத்தவர்.

இவரது உதைபந்தாட்ட பயிற்றுவிப்புக் காலத்தில் மகாஜனா தொடர்ந்து எட்டு வருடங்கள் யாழ். மாவட்டத்தில் சம்பியனாக வந்தமை பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட சாதனையாகும். யாழ் மாவட்டப் பாடசாலைகள் விளையாட்டுச்சங்கத்தால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் மகாஜனா முதல் அணி 1967ஆம் ஆண்டு தொடக்கம் 1974ஆம் ஆண்டுவரை சம்பியனாக வந்து சாதனை படைத்தது.

யாழ். மாவட்டத்தில் மட்டுமல்லாது அகில இலங்கையிலும் உதை பந்தாட்டத்தில் மகாஜனாவின் சாதனையைப் பதிய வைத்தவர் T.P அவர்கள். 1971இல் அகில இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சங்கத்தால்நடாத்தப்பட்ட சார். ஜோன்ராபாற் வெற்றிக் கேடயத்திற்கான போட்டியில் முதற்பிரிவு வீரர்கள் சம்பியனாக வந்தனர். மேலும் 1978இல் அகில இலங்கைப் பாடசாலைகளுக் கிடையே நடைபெற்ற சிங்கா வெற்றிக் கேடயத்திற்கான உதைபந்தாட்டப் போட்டியிலும் முதற்பிரிவு அணி சம்பியனாக திகழ்ந்தது.இந்த வெற்றிகளுக்கெல்லாம் மூல காரணமாகத் திகழ்ந்தவர் T.P அவர்களே.

T.P அவர்கள் உதைபந்தாட்டத்தில் மட்டுமன்றி ஹொக்கி, கிரிக்கட், மெய்வல்லுனர் ஆகிய விளையாட்டுக்களிலும் தன்னிடமிருந்த திறமைகளைக் கொண்டுபயிற்சிகளை வழங்கியவர். T.P அவர்கள் ஒவ்வொரு வீரர்களின் உடலமைப்புகளைக் கொண்டுஆட்டக்கள நிலைகளுக்கேற்றவாறு பயிற்றுவிக்கக் கூடியவர்.மிகவும் கடுமையான போட்டிகளைக் கொண்ட ஆட்டங்களில் புதிய வீரர்களை களமிறக்கி வெற்றிகளைச் சுவைத்தவர். மகாஜனாவின் ஒவ்வொரு உதைபந்தாட்ட வெற்றிகளிலும் T.P அவர்களின் மதிநுட்பம் முக்கிய பங்காற்றும். ஆட்டத்திறன் குறைந்த அணிகளையும் எதிரணிகளின் பலவீனங்களைப் பயன்படுத்தி வயூகங்கள் அமைத்து வெற்றி பெறச் செய்வதற்கு அவருக்கு நிகர் அவரே.

T.P அவர்களிடம் பயிற்சி பெற்ற மகாஜனன்கள் இன்று உள்நாடு, வெளிநாடுகளில் எல்லாம் பரந்து வாழ்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் T.P என்ற நாமத்தை என்றும் மறக்க மாட்டாhகள். T.P அவர்களிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் இன்றும் அவர் மீது வைத்துள்ள பக்தியைக் கண்கூடாகக் காண்கின்றோம். மகாஜனாவின் உதைபந்தாட்டத்துறை வரலாற்றில் T.P என்ற நாமம் மங்காது துலங்கிக் கொண்டே இருக்கும். அவரது புகழ் மகாஜனாவை விட்டு என்றுமே அகலாது.

உதைபந்தாட்ட பயிற்றுவிப்பில் முடிசூட மன்னனாக திகழ்ந்து மகாஜனாவின் புகழை அகில இலங்கை எங்கும் பரப்பி வைத்த T.பத்மநாதன் அவர்களை நூற்றாண்டில் நினைவு கூர்ந்து நன்றி செலுத்திப் போற்றுவோம்.

Link to comment
Share on other sites

அத்துறு அண்ணா காலமானார்

எல்லோராலும் அத்துறு அண்ணா என்று அழைக்கப்பட்ட ஆரூரையா நவரத்தினராசா இன்று காலமானார். திரு திருமதி ஆரூரையா அன்னலட்சுமி தம்பதியினரின் மகனான இவர் மகாஜனக்கல்லுாரியில் கல்விசாரா ஊழியராக 28 வருடங்கள் கடமையாற்றி 2010.12.26 ஓய்வு பெற்றார். இவர் தனது பாடசாலைக்கு தன்னாலான பல சேவைகளை அர்ப்பணிப்புடன் செய்து பாடசாலைச்சமூகத்திடம் தனியிடம் பிடித்தவர் மகாஜனக்கல்லுாரி 1991 ஆம் ஆண்டு நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற போது தன் உயிரினைப் பணயம் வைத்து பாடசாலையின் முக்கிய தரவுகளையும் நூல் நிலையப்புத்தகங்களையும் பாதுகாப்பாக எடுத்து செல்ல முன்வந்தவர்களில் ஒருவர்.

Alaveddy.ch

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்துறு அண்ணாவிற்கு என் அஞ்சலிகள்.

 

Link to comment
Share on other sites

எமது பாடசாலையின் 2வது அதிபர் ஆக கடமையாற்றியவர் கா.சின்னப்பா இவர் 1929 தொடக்கம் 1948 வரை இப் பதவியில் இருந்தார் 19 வருடங்கள் அதிபர் ஆக இருந்து பாடசாலை வளர்த்ததில் மிக முக்கியமானஒருவர்ராவர் இவரின் உருவ சிலை பாடசாலையில் நிறுவ பட்டுள்ளது

Link to comment
Share on other sites

எமது பாடசாலையின் முன்னாள் அதிபா் திரு.போ.சுந்தரலிங்கம் அவா்கள் சற்று உடல் நலக்குறைவால் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவா் மிக விரைவில் குணமடைவதற்கு பாடசாலைச் சமூகம் சார்பாகவும், மகாஜனன்கள் சார்பாகவும் எல்லாம்வல்ல ஆனந்த நடராஜப் பெருமானைப் பிரார்த்திப்போம்.

Link to comment
Share on other sites

"T" வடிவில் இருந்து வளர்ந்த மகாஜனா!!!!!!

தமக்காக மட்டும் வாழ்பவர்கள் மட்டமான மனிதர்கள்.மற்றவர்களுக்காக வாழுபவா்கள் மாமனிதர்கள்.அத்தகைய ஆத்மாக்களையே உலகம் மகாத்மாக்கள் ஆக்கி மதிப்பளிக்கிறது.தான் வாழ்ந்த சூழலில் வாழ்ந்த ஐனங்கள் வெறும் ஐடங்களாக அல்ல.மகாஜனன்களாகவே மாறவேண்டும் என்ற மனப்பாங்கோடும் பெரும் நோக்கோடும் தே.து.துரையப்பாபிள்ளை என்ற மாமனிதர் பிரசவித்த பிள்ளை தான் இன்றைய பென்னாம் பெரிய மகாஜனாக்கல்லூரி. அன்றைய பாடசாலைக்கட்டிடம் ”T” வடிவில் கல்லால் அமைந்து ஆதவனுக்கு ஓட்டால் உடல் மறைத்து அடக்கத்தோடு அமைந்திருந்தது. இக்கட்டிடமே மகாஜனாக்கல்லூரியின் முதலாவது கட்டிடமாகவும் அமைந்தது.

ஸ்தாபகரின் முதல் எழுத்தில் அமைக்கப்பட்ட இக் கட்டிடம் அன்று ”T” வடிவில் அமைந்திருந்த சிறு பள்ளிதான் இன்று திகைப்பினை அளிக்கும் வளர்ச்சி பெற்று பெரியதொரு விருட்சமாக வளா்ந்து நிற்கின்றது.

”ஆல் போல் தளைத்து அறுகுபோல் வேரூன்றி வளர்ந்து நிற்கும் மகாஜனா.”

Link to comment
Share on other sites

மகாஜனாவின் உன்னத சேவையில் வெள்ளிவிழா கண்ட ஆசிரியர்கள்

01.திரு.C.தம்பு

02.திரு.S.கார்த்திகேசு ஐயா்

03.திரு.T.T.ஜயரத்தினம்

04.திருமதி.R.இரத்தனவேல்

05.திரு.C.சின்னத்துரை

06.திருமதி.K.சன்னத்தம்பி

07.திரு.T.சுந்தரராஜன்

08.திரு.K.சுந்தரம்பிள்ளை

09.திரு.A.V.சிற்றம்பலம்

10.திரு.S.ஆறுமுகம்

11.திருமதி.R.கந்தையா

12.திரு.R.இராமசாமி

13.திருமதி.A.சண்முகரட்ணம்

14.திரு.K.ஆறுமுகம்

15.திரு.A.கந்தையா

16.திரு.K.சின்னப்பா

17.திருமதி.S.இராஜரட்ணம்

18.திரு.N.சிவபாதசுந்தரம்

19.திரு.G.S.இரட்னேஸ்வரஐயா்

20.திரு.T.சண்முகசுந்தரம்

21.திருமதி.S. பொன்னுத்துரை

22.திரு.K.கதிரேசா்பிள்ளை

23.திருமதி.M.சா்வானந்தராஜா

24.திருமதி.S.கனகேஸ்வரன்

25.திரு.N.காளிதாசன்

26.திரு.S.இராஜகுலேந்திரன்

27.திரு.S.பத்மநாதன்

28.திரு.P.லோகநாதன்

Link to comment
Share on other sites

2013ஆம் ஆண்டுக்கான வலய மட்ட கால்ப்பந்தாட்டப் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற மகாஜனாக் கல்லுாரி 19 வயது அணியினா் இவர்கள் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள மாவட்ட மட்டகால்ப்பந்தாட்டப் போட்டிக்கு தயார் நிலையில் உள்ளனர்

வெற்றிக்கனியை பறிக்க அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்....

Link to comment
Share on other sites

மகாஜனாவின் விடுதி பல துறைகளிலும் புகழ் பெற்ற மாணவர்களை உருவாக்கியது.

மகாஜனாக்கல்லூரி ஜெயரத்தினம் அவர்களின் 100வது அகவையை கொண்டாடும் இவ்வேளையில் அவரின் தூரநோக்கங்களில் ஒன்றான விடுதியை அவரின் காலத்தில் இருந்தது போல் மீண்டும் நிறுவுதல் ஒரு ஆரோக்கியமான செயற்பாடாகும். அதற்காக மகாஜனன்களாகிய நாம் அவரின் தூரநோக்கான விடுதியை மீண்டும் புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.

Link to comment
Share on other sites

நவ மகாஜன சிற்பி அமரர் தெ.து.ஜயரத்தினம் அதிபா் அவர்களின் நூறாவது பிறந்ததினம் 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் நாளாகும் மகாஜன சிற்பி அவா்களின் மகோன்னதமான வாழ்வின் பணிகளை நினைவு கூர்ந்து பாராட்டி நன்றி கூறும் முகமாக ”100வது பிறந்ததின விழா” கொண்டாட உள்ளோம்.இதற்கான விழா அமைப்புக் கழுவை ஏற்பாடு செய்வதற்கான விசேட கூட்டம் 2013.04.28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு பாவலர் துரையப்பாபிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.

” நூறாவது பிறந்ததின இமைப்புக்குழுவை” உயர் தரத்திலும் வினைத்திறன் உடையதாகவும் அமைப்பதற்கு மகாினா பழையமாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் விசேட கூட்டத்திற்கு குறித்த நேரத்திற்கு வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Link to comment
Share on other sites

மகாஜன சிற்பி

தா.து.ஜெயரத்தினத்தின் 100வது பிறந்தநாள்.

பற்றி கனடா பத்திரிகையில் வெளிவந்த

கட்டுரை.

கல்வியையே முக்கிய மூலதனமாகக் கொண்டது ஈழத்தமிழ் சமூகம் என்பதால், அந்நிய

ஆதிக்கத்தில் இருந்து கல்வியையும், சைவமரபுகளையும் காப்பாற்றும் நோக்கத்தை

இலட்சியமாகக் கொண்டு தமிழர் வாழ்ந்த பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டதுதான்

சுதேசக்கல்வி நிறுவனங்கள். அந்தவகையிலே தமிழர் வாழ்ந்த பிரதேசங்களில் பல

சுதேசக்கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப் பட்டாலும், அம்பனை என்ற இடத்தில் மகாஜன

சிற்பி தா. து. ஜெயரத்தினத்தின் தந்தையான பாவலர் துரையப்பாபிள்ளையால் 1910ம்

ஆண்டு அவரது வீட்டுத் திண்ணையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இன்று கல்வித்துறையில்

மட்டுமல்ல, விளையாட்டுத்துறை நுண்கலைத்துறை போன்றவற்றிலும் பெயரும் புகழும்

பெற்று விளங்கும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியாகும்.

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர்

அதன் அதிபராக இருந்த தா.து. ஜெயரத்தினம் அவர்களே. ‘உன்னை நீ அறிவாய்’ என்ற

தாரக மந்திரத்தை ஒவ்வொரு மகாஜனன்களுக்கும் ஊட்டிவிட்ட பெருமை அவருக்கு

உண்டு. அவரின் வெற்றிக்குக் காரணம் அவரது பண்பான குணங்களே. புன்முறுவல்

தவளும் பொலிவான மலர்ந்த முகம்,எல்லோரையும் கவரும் இன்சொல், கம்பீரமான

அடக்கம், சான்றோர்முன் பணிவு, எவரையும் தன் வசப்படுத்தும் சக்தி, அசையாத கடவுள்

நம்பிக்கை போன்றவையே இவரின் உயர்வுக்குக் காரணமாகின்றன என்று முன்னாள்

துணைவேந்தர் பேராசிரியர் வித்தியானந்தன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருப்பதாக

‘எம்மை வாழவைத்தவர்கள்’ என்ற தனது நூலில் முன்னாள் மகாஜனா கல்லூரி அதிபர்

திரு. பொ. கனகசபாபதி அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதிபர் ஜெயரத்தினம் அவர்கள் காலத்தில் ஆண்டு தோறும் பல புதுமைகள் புகுத்தப்பட்டன.

இவர் மகாஜனாக் கல்லூரியில் சாரணர் இயக்கத்தைத் தெடக்கி அதன்

பொறுப்பாசிரியராகக் கடமையாற்றினார். தொடர்ந்து விளையாட்டுத் துறையில் அவருக்கு

இருந்த ஈடுபாடு காரணமாக அதன் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். அக்காலத்தில்

தலைசிறந்த ஆங்கில ஆசிரியர்களில் ஒருவராக இவர் கணிக்கப் பெற்றார். அதனால்

கல்லூரி பங்குபற்றும் ஆங்கிலப் பேச்சுப்போட்டிகளுக்குப் பொறுப்பாக இருந்தார். 1935ம்

ஆண்டு மகாஜனா வெள்ளிவிழக் கொண்டாட்டத்தின்போது மகாஜனன் என்ற வெள்ளிவிழா

மலரை முதன் முதலாக வெளியிட்டார். 1960ல் தனது காலத்தில் நடந்த பொன்விழாவை

மிகவும் சிறப்பாகக் கொண்டாடினார். 1946ம் ஆண்டு வடமாகாண ஆசிரியர் சங்கத்தின்

செயலாளராகப் பொறுப்பேற்றார்.

பிற்காலத்தில் உயர்வகுப்பில் கல்வி கற்கும்போது அவரிடம் ஆங்கிலம் கற்கும் பாக்கியம்

எனக்கும் கிடைத்ததையிட்டு நானும் பெருமைப் படுகின்றேன். ஆங்கிலம் கட்டாயம்

கற்றவேண்டும் என்ற ஆர்வத்ததைத் தூண்டிவிட்டவர் அவர்தான். அதுமட்டுமல்ல

சைவசமயத்தை வளர்ப்திலும் முன்னின்று பாடுபட்டார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு

மட்டுமல்ல நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்கு ஒன்றைச் செய்ய

வேண்டும் என்பதில் ஏனைய ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் முன்னோடியாக

நின்றார்.

திரு. தா. து. ஜெயரத்தினம் அவர்கள் 1932ம் ஆண்டு உதவி ஆசிரியராக மகாஜனாக்

கல்லூரியில் சேர்ந்தார். அதிபராக இருந்த சின்னப்பாபிள்ளையின் மரணத்தைத் தொடர்ந்து

1945ம் ஆண்டு மகாஜனாக் கல்லூரியின் அதிபராகக் கடமை ஏற்றார். மாணவர்களின்

கல்வியில் அதிக அக்கறை கொண்ட இவரது விடா முயற்சியால் 1947ம் ஆண்டு மகாஜனா

இரண்டாம்தரப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களின்

பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் இருந்து மகாஜனாக் கல்லூரிக்கு மேலதிக

ஆசிரியர்கள் வரவழைக்கப் பட்டனர். தொடர்ந்து 1949ம் ஆண்டு மகாஜனாக் கல்லூரி

முதலாம்தர பாடசாலையாக மாறியது. அந்த வருடம் வடமாகாண ஆசிரியர் சங்கத்தின்

தலைவராக இவர் தெரிவு செய்யப்பட்டார். 1954ம் ஆண்டு கல்லூரிக் கட்டிட நிதிக்காக்

களியாட்ட விழா ஒன்றை நடத்தி நிதி சேகரித்தார். இதற்காக இந்தியாவில் இருந்து சினிமா

நடிகர்களை வரவழைத்தார். அதே ஆண்டு மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி

வசதிகளைச் செய்து கொடுத்தார். 1955ம் ஆண்டு கல்லூரியில் சுயதொழில் கற்பதற்கான

திட்டங்களைச் செயல்முறைப்படுத்தினார். மரவேலை, நெசவு, மனையியல் போன்ற புதிய

துறைகளை அறிமுகப்படுத்தினார். 1957ம் ஆண்டு அவரது ஆசிரியப் பணியின்

வெள்ளிவிழாவை கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து கொண்டாடினர். இதே

ஆண்டு மகாஜனாக் கல்லூரியின் சார்பில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலிலும்,

திருக்கேதீஸ்வரம் கோயிலிலும் திருவிழாக்கள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து

இப்பொழுதும் மகாஜனாவின் சார்பில் வருடாவருடம் திருவிழாக்கள் செய்யப்படுகின்றன.

1958ம் ஆண்டு நடனம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

1960ம் ஆண்டு கல்லூரி தனது பொன் விழாவைக் கொண்டாடியது. இதே ஆண்டு

கல்லூரியை அரசு பொறுப்பேற்றது. பாடசாலையின் தேவை கருதி இவரது முயற்சியால்

கல்லூரிக் காணியில் ஆலயம் அமைக்கப்பட்டது. இவரது காலத்தில் மகாஜனா கல்வியில்

சிறந்து நின்றதால் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்தது. 1961ல்

அதிஉயர் தரத்திற்குக் கல்லூரியின் தரம் உயர்த்தப்பட்டது.

இவரது காலத்தில் உதைபந்தாட்டத்தில் சாம்பியன்களாக வந்து கல்லூரி சாதனை

படைத்தது. 1962ல் யப்பானில் நடந்த ஆசிய சாரணியர் விழாவில் மகாஜனா

சாரணியர்களும் கலந்து கொண்டு பெருமை தேடித்தந்தனர். அதிபர் ஜெயரத்தினம்

அவர்கள் யாழ் பாடசாலை விளையாட்டுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவு

செய்யப்பட்டார். இதே வருடம் யாழ்ப்பாணத்திலேயே மிக அதிகமான மாணவர்கள்

மகாஜனாக் கல்லூரியில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெற்றிருந்தனர்.

உதைபந்தாட்டத்தில் தொடர்ந்தும் மகாஜனா சாதனை படைத்தது. 1965ல் மகாஜனா

ஹொக்கி விளையாட்டில் சாம்பியனாக வந்தது. இதே ஆண்டு நாடகத் துறையிலும்

முதலிடத்தைப் பெற்றது. 1961ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல வருடங்கள்

உதைபந்தாட்டத்திலும், ஹெக்கியிலும் மகாஜனா சாதனை படைத்து வந்தது. அதேபோல

துடுப்பாட்டத்திலும், மெய்வல்லுனர் போட்டிகளிலும் அரிய சாதனைகளைப் படைத்தது.

1970ம் ஆண்டு வைரவிழாவை மகாஜனா கொண்டாடியபோது அதிபர் ஜெயரத்தினம்

முன்னின்று வழிநடத்தினார். இரண்டு வாரங்கள் நடைபெற்ற இந்த விழாவைத் தொடர்ந்து

வருட முடிவில் அதிபர் ஜெயரத்தினம் அவர்கள் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக்

கொண்டார்.

1972ம் ஆண்டு இவரது தந்தையான பாவலர் துரையப்பாபிள்ளையின் நூறாவது பிறந்தநாள்

கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டபோது பாவலரின் நினைவாக நூலும்

வெளியிடப்பட்டது. மகாஜன சிற்பியான இவரது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும்,

இவர் ஓய்வு பெற்றிருந்தாலும் 1978ம் ஆண்டு மகாஜனாவின் மாணவர் தொகை 2350க்கும்

மேலாகியிருந்தது. இவரது காலத்தில் பல கட்டடங்கள், ஆய்வுகூடங்கள், விளையாட்டு

மைதானங்கள், அரங்கங்கள் எல்லாம் புதிதாகக் கல்லூரிக்கு அணிசேர்த்திருந்தன.

புத்தகசாலை, தேனீர்ச்சாலை போன்றனவும் மாணவர்களின் தேவைகருதி இடம் பெற்றன.

1970ம் ஆண்டு இவர் ஓய்வு பெற்று வீட்டிலே தங்கியிருந்தாலும் இவரது நினைவெல்லாம்

கல்லூரியிலேயே இருந்தது. அந்த நல்ல நினைவோடு 1975ம் ஆண்டு இவர் அமரரானார்.

அந்த சோக செய்தியைக் கேட்டுக் கண்கலங்கியோர் பலர்.

மகாஜனா சிற்பி தா.து. ஜெயரத்தினத்தைக் கௌரவிக்கும் முகமாக அவரது பெயரும்

மகாஜனா கல்லூரிக் கீதத்தில் இடம் பெறச் செய்யப்பட்டது. அதிபர் தா.து. ஜெயரத்தினத்தின்

காலத்தை மகாஜனாவின் பொற்காலம் என்றும், போர் சூழ்நிலை காரணமாக இடம்

பெயர்ந்த காலத்தை மகாஜனாவின் இருண்ட காலமாகவும் சிலர் குறிப்பிடுவர். பல

வருடங்களாக இடம் பெயர்து அலைந்த மகாஜனாக் கல்லூரி 1999ம் ஆண்டு செப்ரம்பர்

மாதம் 15ம் திகதி; மீண்டும் தனது பழைய இருப்பிடத்திற்கு நிரந்தரமாக வந்தது. 2010ம்

ஆண்டு மகாஜனாக்கல்லூரி நூற்றாண்டு கண்டபோது, கல்லூரியிலும் புலம்பெயர்ந்த

மண்ணில் இயங்கும் பழைய மாணவர் சங்கங்களிலும் அதிபர் ஜெயரத்தினத்தின் பெயரும்,

அவர் கல்லூரிக்காற்றிய தொண்டும் நினைவு கூரப்பட்டது. மகாஜனாவின் இலக்கிய

மைந்தர்களால் பல நூல்கள் சமர்ப்பணம் செய்யப்பட்டன. இன்று அவர் எங்கள் மத்தியில்

இல்லாவிட்டாலும், மகாஜனன்கள் இருக்கும்வரை அவர் எல்லோர் மனதிலும் நிலைத்து

நிற்பார். மாண்புற மகனாம் மகாஜன சிற்பி ஜெயரத் தினம்பணி நினைவோம்.

Link to comment
Share on other sites

New Mahajanans

நவமகாஜன சிற்பி அமரர்.தெ.து.ஜயரத்தினம் அவர்களின் நூறாவது பிறந்ததின விழாவை

சிறப்பாகக் கொண்டாடும் முகமாக

விழாச்சபை அமைக்கும் விசேட கூட்டம்

மேற்படி கூட்டம் 28.04.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு அதிபர் திரு.கு.வேல்சிவானந்தன் அவர்களின் தலைமையில் பாவலர் துரையப்பாபிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். ஏறத்தாள 600ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வை பிரதி அதிபர் திரு.சு.சயந்தன் அவர்கள் நெறிப்படுத்தினார். முதல் நிகழ்வாக மங்கல விளக்கேற்றல் வைபவம் நடைபெற்றது. முதற்சுடரினை கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதம குருக்களான ராஜராஜஸ்ரீ நகுலேஸ்வரக்குருக்கள் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய பிரதம குருக்கள் மகாராஜ ஸ்ரீ இரத்தினசபாபதிக்குருக்கள் அவர்களும், எங்கள் கல்லூரியின் சிவகாமி சமேத ஆனந்தநடராஜப் பெருமானின் ஆலயக் குருக்கள் சிவஸ்ரீ மகாலிங்கக் குருக்கள் அவர்களும் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர்.நா.சண்முகலிங்கன் அவர்களும், கல்லூரி அதிபர் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தேவாரமும் பாடசாலைக்கீதமும் கல்லூரி மாணவர்களால் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்படி ஆலயக்குருக்கள் மூவரும் ஆசியுரை வழங்கினர்.; தொடர்ந்து கல்லூரி பிரதி அதிபர் திரு.ம.மணிசேகரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து அதிபரின் தலைமையுரை இடம்பெற்றது.

அதிபர் தனது தலைமையுரையில் அமரர். திரு.தெ.து.ஜயரத்தினம் அவர்களின் நூறாவது பிறந்த தினம் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி வருகின்றது. இந்த நூறாவது பிந்த தின விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதனை முக்கியத்துவப்படுத்தி பின்வரும் விளக்கங்களை எடுத்துக் கூறினார்.

1. தந்தையின் கனவை நனவாக்கியவர்

2. கிராமத்துப் பாடசாலையை நாட்டிலுள்ள உயர்தரமான பாடசாலைகளில் ஒன்றாக ஓங்கச் செய்தவர்

3. கிராமத்திலுள்ள விவசாயிகள், தொழிலாளிகளின் பிள்ளைகளை கல்வி கற்ற சமூகமாக உயர்த்தியவர்.

4. ஆங்கிலப் புலமையுடன் உயர் கல்விகளைக் கற்று உயர்தரமான தொழில்களை பெற்று வளமுடன் செழிப்புற்று வாழ வைத்தவர்.

5. சிறந்த ஒழுக்கப் பண்பாடுகளுடன் மாணவர்களை வளர்த்தெடுத்தவர்

6. க.பொ.த (சா.த), க.பொ.த (உ.த) பரீட்சைப் பெறுபேறுகளை மாவட்டத்தில் மாத்திரமன்றி தேசிய மட்டத்திலும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் சென்றவர்.

7. மருத்துவக்கல்வி, பொறியியல்க்கல்வி ஆகியவற்றுடன் ஏனைய துறைகளிற்கும் தொடர்ச்சியாக ஆண்டு தோறும் பல மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியவர்

8. இணைப்பாடவிதானச் செயற்பாடுகளான விளையாட்டுத்துறை, கலை, கலாசார விடயங்களில் மாணவர்களை மாகாண, தேசிய மட்டத்தில் பதக்கங்களைப் பெற்று சாதனைகளை நிலைநாட்ட வழி வகுத்தார்.

9. சமய, சமூக பணிகளை மிகவும் உயர்தரத்தில் மாணவர்களுக்குப் பயிற்றுவித்தார்

10. தனது தலை சிறந்த தலைமைத்துவத்தின் மூலம் ஓரு மாதிரிப் பாடசாலை ஒன்று எத்தகைய சிறந்த நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டுமோ அதற்குரிய சிறந்த முன்மாதிரியான கட்டமைப்பொன்றை நடைமுறைப்படுத்தினார்.

‘ஜய, ஜய மகாஜன’ எனக் கல்லூரிக் கீதம் பாடி மகாஜனாவை ஜயம் பெற வைத்தார். ‘வெல்லுக வெல்லுக மகாஜன மாதா’ எனப் பாடி மகாஜனாவை வெற்றி பெற வைத்தார். ‘வெல்லுக வெல்லுக மகாஜனத் தலைவர்’ எனப் பாடி மகாஜனத் தலைவர்களை வெற்றி பெற வைத்தார்;

மகாஜனாவில் பொற்காலத்தை உருவாக்கி வைத்த ஜயரத்தினம் அவர்களின் நூறாவது பிறந்த தின வைபவத்தை ஒக்டோபர் 15, 16, 17 ஆகிய மூன்று தினங்களிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றும் கூறினார். அத்தோடு அவர் உயிரோடு வாழ்ந்தால் இந்த நூற்றாண்டு விழாவில் எந்த வேலைத்திட்டங்களை உயர்தரத்தில் நிறைவேற்றினால் பெரு மகிழ்ச்சி அடைவாரோ அத்தகைய வேலைத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டுமெனக் கூறினார்.

இந்த மூன்று நாள் விழாவிலும் பரிசளிப்பு வைபவம், மலர் வெளியீடு, கண்காட்சி, பொருட்காட்சி, களியாட்ட விழா ஆகியவற்றை உள்ளடக்கி விழாவினைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமெனக் கூறினார். அத்தோடு இன்று தொடக்கம் பின்வரும் வேலைத்திட்டங்களை நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கூறி அந்த வேலைத்திட்டங்களை எடுத்துக்கூறினார். இவை சிறப்புற அமைய ஆலோசனைச் சபையையும், விழாச்சபையையும் அமைக்குமாறு சபையை வேண்டிக் கொண்டார். இதன் பிரகாரம் பின்வருவோர் ஆலோசகர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

1. பேராசிரியர்.நா.சண்முகலிங்கன்

(யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்)

2. பேராசிரியர்.சோ.சந்திரசேகரம்

(கொழும்புப் பல்கலைக்கழக ஓய்வுநிலை கல்விப்பீடாதிபதி)

3. திரு.நா.வேதநாயகம்

(அரச அதிபர், முல்லைத்தீவு)

4. பொது வைத்திய நிபுணர்.ஸ்ரீபவானந்தராஜா

(பணிப்பாளர், யாழ்.போதனா வைத்தியசாலை)

5. திரு.மா.இராமதாஸ்

(பொறியியலாளர்,ஈரோவில் கட்டட நிர்மாணம்)

6. வைத்திய கலாநிதி.வு.பேரானந்தராஜா

(யாழ்.போதனா வைத்தியசாலை)

7. திரு.மனோறஞ்சன்

(கணக்காளர், வடமாகாணம்)

8. திரு.யு.கோபாலகிரு~;ணன்

(ஓய்வுநிலை முகாமையாளார், மக்கள் வங்கி)

9. திரு.பொ.கனகசபாபதி

(முன்னாள் அதிபர், யாஃமகாஜனக் கல்லூரி)

10. திரு.பொ.சுந்தரலிங்கம்

(முன்னாள் அதிபர், யாஃமகாஜனக் கல்லூரி)

11. திருமதி.சி.அனந்தசயனன்

(முன்னாள் அதிபர், யாஃமகாஜனக் கல்லூரி)

12. திரு.த.பூ.முருகையா

(முன்னாள் புகழ் பூத்த கணித ஆசிரியர், யாஃமகாஜனக் கல்லூரி)

13. திரு.ச.விநாயகரத்தினம்

(முன்னாள் ஆசிரியர், யாஃமகாஜனக் கல்லூரி)

14. திரு.நாகமணி

(முன்னாள் உடற்கல்வி அதிகாரி, யாழ்.மாவட்டம்)

வெளிநாட்டுப் பழைய மாணவர் சங்கத்திலிருந்தும் ஒவ்வொருவரை ஆலோசனைச் சபைக்குள் உள்வாங்குவதாக சபையில் தீர்மானிக்கப்பட்டது.

நூறாவது பிறந்த தின விழாவை முன்னிட்டு விழாச்சபை அமைக்கப்பட்ட நாளிலிருந்து பின்வரும் வேலைத்திட்டங்களைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அதிபர் கேட்டுக் கொண்டார்.

1. மலர்வெளியீடு

2. நிதி அபிவிருத்தி வேலைத்திட்டம்

3. கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டம்

4. ஒழுக்கம், நூலகம், இணைப்பாடவிதான அபிவிருத்தி வேலைத்திட்டம்

5. விளையாட்டு அபிவிருத்தி வேலைத்திட்டம்

6. பௌதீகவள அபிவிருத்தி வேலைத்திட்டம்

7. ஆங்கிலம், தொடர்பாடல், கணனி அபிவிருத்தி வேலைத்திட்டம்

8. கலை, கலாசார, பண்பாட்டு அபிவிருத்தி வேலைத்திட்டம்

9. சமய அபிவிருத்தி வேலைத்திட்டம்

10. மாணவர், ஆசிரியர் சமூக நல அபிவிருத்தி வேலைத்திட்டம்

11. நிர்வாகக் கட்டமைப்பு தகவல் முறைமை அபிவிருத்தி வேலைத்திட்டம்

12. உள்நாட்டு, வெளிநாட்டு பழைய மாணவர் சங்க அபிவிருத்தி வேலைத்திட்டம்

13. ஆரம்பப் பிரவு அபிவிருத்தி வேலைத்திட்டம்

14. கல்விக்கண்காட்சி

15. களியாட்ட விழா

16. போட்டிகள் பரிசளிப்பு வைபவம்

17. குறுந்திரைப்படம்

18. நினைவுப்பேருரை

19. அமரர்.தெ.து.ஜயரத்தினம் ஜயா அவர்களின் இணையத்தள வடிவமைப்பு வேலைத்திட்டம்

மேற்படி வேலைத்திட்டங்களைச் சிறப்பாகச் செயற்படுத்துவதற்கு நிறைவேற்றுத் தலைவர்களும் உபகுழுக்களும் மேற்படி கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டனர். இந்த நிறைவேற்றுத் தலைவர்களும் விழாச்சபையின் அங்கத்தவர்கள் ஆவார். அத்தோடு கொழும்புப் பழைய மாணவர் சங்க தலைவர் திரு.சி.ஸ்ரீலஜயன் அவர்களும், மகாஜனக் கல்லூரி கல்வி அபிவிருத்தி நிறுவன இயக்குநர் திரு.இ.செல்வஸ்கந்தன், திரு.ளு.ஜயவர்மன் அவர்களும் விழாச்சபையில் இணைந்து செயற்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

விழாச்சபையின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட செயற்குழு உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் பின்பு தரப்படும்.

செயலாளர்,

திரு.சு.ஏழூர்நாயகம்,

(பழைய மாணவர்)

இணைச் செயலாளர்

செல்வி.இ.சம்பந்தர்

(சிரேஷ்ட ஆசிரியர்)

முல்லை அரச அதிபர்.... யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எல்லோரும் மகாஜனாவின் மைந்தர்கள் என்பது மகாஜனா கல்லூரிக்கு பெருமை....

Link to comment
Share on other sites

Famous Mahajanan

============

Mrs. Kokila Mahendran -- Retired Deputy Director of Education, Writer, Dramatist and Senior Counselor.

Born in Tellippalai, Sri Lanka, in 1950, Kohiladevi was interested in literature, drama and allied fields since her school days at Mahajana. Former medical student who became a top ranking woman writer and one of the outstanding Tamil writers in Sri Lanka. Among her many books of fiction is Muhangalum Moodikalum (Faces and Masks). Two of her collections of short stories won her the Sri Lankan Arts council awards. Mrs. Kokila Mahendran currently serves as the president of Mahajana OSA – Colombo Branch.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தேசிய கனிஸ்ர மெய்வல்லுனர் போட்டி அண்மையில் தியகம மகிந்த ராஐபக்ச விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் எமது பாடசாலை மாணவன் உ.சுயுசாந் 16 வயதுப்பிரிவு தட்டு எறிதல் நிகழ்ச்சியில் 39.50M துாரம் எறிந்து 3ம் இடம் பெற்றுக் கொண்டார் அவருக்கு பாடசாலை சமூகம் சார்பில் பாராட்டைத்தெரிவித்து கொள்கின்றொம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.