Jump to content

அடுத்து வரும் அசத்தல் தொழில்நுட்பங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

p66.jpg

iSTREAM

ட்டோமொபைல் உலகில் மாதம் தோறும் ஒரு புதிய தொழில்நுட்பம் வந்துகொண்டே இருக்கிறது. அவற்றில் பாதி, பெரும்பான்மை மக்களைச் சென்றடையாமல், அறிக்கைகளோடு காணாமல் போய் விடுகின்றன. ஆனால், இங்கே வெளியாகியுள்ள ஆறு தொழில்நுட்பங்களும் எதிர்காலத்தில் பரவலான பயன்பாட்டை மனதில் வைத்து உருவாக்கப்பட்டவை. இவற்றில் முதல் மூன்று, 'கார்’ என்ற கான்செப்ட்டின் அடிப்படையையே மாற்றக்கூடியவை.

உலகில் முதன்முதலாக ஹென்றி ஃபோர்டு, கார் தயாரிக்கும் அசெம்பிளி லைனைத் துவக்கியதில் இருந்து இன்று வரை 'கார்’ என்ற வாகனத்தைத் தயாரிக்கும் அடிப்படை முறை மட்டும் அப்படியே இருக்கிறது. இதை முற்றிலும் மாற்றியமைத்து, கார் தயாரிப்பு என்ற விஷயத்தை மிக எளிமையாக்கி இருக்கிறார் மெக்லாரன் F1 காரை உருவாக்கிய கார்டான் முரே. அவர் உருவாக்கியுள்ள தொழில்நுட்பத்தின் பெயர் ஐ-ஸ்ட்ரீம் (iStream). இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார்களைத் தயாரித்தால், வழக்கமான கார் தயாரிப்புக்குத் தேவைப்படும் தொழிற்சாலை வசதிகளில் 20 சதவிகிதம் போதும். மேலும், 'மெட்டல் ப்ரெஸ்’ எனப்படும் உலோகத் தகடை காருக்கு ஏற்ப மாற்றும் வேலைகள் இதில் தேவை இல்லை. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் எந்த ஒரு சிறு நிறுவனமும், சிறிய முதலீட்டில் கார் தயாரிப்பைத் தொடங்க முடியும்.

ஐ-ஸ்ட்ரீம் தொழில்நுட்பத்தில் ஐ-பேனல்ஸ், ஐ-ஃப்ரேம் (iPanels, iFrame) என இரண்டு அம்சங்கள் உள்ளன. ஐ-பேனல்ஸ் என்பவை கண்ணாடி இழைகள் அல்லது இயற்கை இழைகளால் உருவாக்கப்பட்ட காம்போசிட் (Composite). இவை மிகவும் ஸ்திரமான, அதிக எடையைத் தாங்கும் திறன்கொண்டவை. ஐ-ஃப்ரேம் என்பது லேசர் மூலம் வெட்டப்பட்ட, கம்ப்யூட்டர் வெல்டிங் செய்யப்பட்ட, மெல்லிய ஸ்டீல் குழாய்களால் ஆன ஸ்டீல் ஃப்ரேம்.

ஐ-பேனல்ஸும், ஐ-ஃப்ரேமும் தயாரானவுடன் இரண்டையும் இணைப்பது வெகு எளிது. இரண்டு நிமிடங்களுக்குள் ஐ-பேனலை ஃப்ரேமுடன் இணைத்து, பிரத்யேக பசையின் மூலம் ஒட்டிவிடலாம். இவை இரண்டும் ஒன்று சேர்ந்தவுடன் நமக்குக் கிடைப்பது மிகவும் திடமான, பாதுகாப்பான கட்டுமானம். 1,00,000 ஸ்திர சோதனைகளுக்குப் பின்பும் சேதமடையாமல் நிற்குமாம், இந்தக் கட்டுமானம்.

ஐ-ஸ்ட்ரீம் தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய வசதி என்ன என்றால், ஒரு சேஸியை உருவாக்கிவிட்டு, அதன்மீது எந்தவிதமான பாடி அமைப்பையும் உருவாக்க முடியும். 4 சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார், இடவசதி நிறைந்த டாக்ஸி, எடை சுமக்கும் பிக்-அப் டிரக் என இத்தனை வாகனங்களையும் ஒரே ஒரு அடிப்படைக் கட்டுமானத்தை வைத்தே தயாரிக்க முடியும். மேலும், பெட்ரோல், டீசல், ஹைபிரிட், எலெக்ட்ரிக் என எல்லா வகை வாகனங்களையும் இதில் தயாரிக்க முடியும். ஒரே தொழிற்சாலையில், ஒரே அசெம்பிளி லைனை மிகக் குறுகிய நேரத்தில் மாற்றியமைத்து, எந்த வகையான வாகனத்தை வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஐரோப்பிய நாடுகளில் வாகனங்களைச் சுதந்திரமாகச் சோதனை செய்யும் அமைப்பான EuroNCAP, 'கார்களுக்கு வகுத்துள்ள சட்ட திட்டங்களைப் பூர்த்தி செய்யும் பாதுகாப்பான கட்டுமானம் இது’ என உறுதி செய்யப்பட்டுள்ளது. யமஹா நிறுவனம், ஐ-ஸ்ட்ரீம் முறையில் ஏற்கனவே மோட்டிவ்.இ (Motiv.e) என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

Free valve

p67.jpg

'இன்ஜின்’ விஷயத்தில், கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் பாகம், கேம் ஷாஃப்ட். ஸ்வீடனைச்  சேர்ந்த பிரபல ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான கோனிசே மற்றும் கார்ஜின் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, 'ஃப்ரீ வால்வு’ எனும் தொழில்நுட்பத்தை உருவாக்குகின்றன. இதில், சிலிண்டர்களுக்கு மேலே உள்ள கேம் ஷாஃப்ட்டுக்குப் பதில், நியூமாட்டிக் (Pneumatic -  அழுத்தப்பட்ட காற்றால் இயங்கும்) ஆக்சுவேட்டர்களைப் பொருத்திவிட்டார்கள். இதனால், ஒவ்வொரு சிலிண்டரையும் தனித்தனியாக இயக்க முடியும். தேவைப்பட்டால், இந்த இன்ஜினை குறைந்த ஆர்பிஎம்-ல் 2 ஸ்ட்ரோக்காகவும் இயங்க வைக்க முடியும். இப்போது பயன்பாட்டில் இருக்கும் இன்ஜின்களில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், 30 சதவிகிதம் அதிக சக்தியும், டார்க்கும் கிடைக்கும். மேலும், மைலேஜ் 50 சதவிகிதம் வரை அதிகரிக்கும். டைமிங் பெல்ட் போன்ற சர்வீஸ் சிக்கல்கள் இதில் இல்லை.

கூகுள் செல்ஃப் டிரைவிங் கார்

p67a.jpg

கூகுள் நிறுவனம், ஆட்டோமொபைல் உலகுக்கு சமீபத்தில் கொடுத்த ஷாக், 'செல்ஃப் டிரைவிங் கார்.’ இத்தனை நாட்களாக மற்ற நிறுவனத்தின் கார்களில் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வந்த கூகுள். திடீரென்று ஒரு புத்தம் புதிய காரையே அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஸ்டீயரிங் வீல், பெடல்கள் போன்றவை கிடையாது. இதன் டிஸைனையும் ஏற்கெனவே பிரபல கார் டிஸைனர்கள் விமர்சித்துவிட்டார்கள். கூகுளின் மற்ற செல்ஃப் டிரைவிங் கார்களில் இருந்தது போலவே LIDAR ஸ்கேனர் மேலே சுற்றிக்கொண்டிருக்கிறது. மேலும், காரில் அமர்ந்திருப்பவரின் செல்போனில் சிக்னல் இல்லையென்றால், இதனால் தொடர்ந்து இயங்க முடியாது. காரணம், செல்போன் நெட்வொர்க் மற்றும் கூகுள் மேப்ஸ்-ஐ பயன்படுத்திக்கொள்கிறது இந்த கார். ஆனால், இந்த தானியங்கி காரால் விபத்து ஏற்பட்டாலோ, உயிரிழப்பு நிகழ்ந்தாலோ யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு, கூகுள் உட்பட யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

https://www.youtube.com/watch?v=CqSDWoAhvLU இந்த லிங்க்கில் வீடியோவைக் காணலாம்.

ஆப்பிள் CarPlay

p67b.jpg

காருக்குள் செல்போன் பயன்படுத்துவது குறித்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க, ஆப்பிள் நிறுவனம் 'கார்ப்ளே’ ( CarPlay) என்ற ஆபரேட்டிங் சிஸ்டத்தை சந்தைக்கே கொண்டுவந்துவிட்டது. கார்ப்ளே வசதி கொண்ட காரில், உங்களுடைய ஐபோனை இணைத்துவிட்டால் போதும்; காரின் டச் ஸ்க்ரீனிலேயே ஐபோனை முழுமையாக இயக்க முடியும். போன் செய்வது; குறுந்தகவல் அனுப்புவது; இசை கேட்பது; மேப்ஸில் தேடுவது என அனைத்து வேலைகளையும் இந்தத் திரைக்குள் கொண்டுவந்துவிட்டது ஆப்பிள் கார்ப்ளே. தற்போது ஃபெராரி, ஹோண்டா, ஹூண்டாய், மெர்சிடீஸ் பென்ஸ், வால்வோ  கார்களில் இந்த வசதி இருக்கின்றன. விரைவில் பிஎம்டபிள்யூ, செவர்லே, ஜாகுவார், லேண்ட்ரோவர், நிஸான், ஃபோர்டு, சுஸ¨கி, டொயோட்டா கார்களில் இந்த வசதி விரைவில் வரவிருக்கிறது. இதில் இருக்கும் லாபத்தை உணர்ந்துகொண்ட கூகுள், இப்பொது 'ஆட்டோலிங்க்’ என்ற தொழில்நுட்பத்தை வேகமாக உருவாக்கிவருகிறது.

லேசர் ஹெட்லைட்ஸ்

p67c.jpg

கடந்த மாதம் ஜெர்மனியில் எட்டு வாடிக்கையாளர்களுக்கு, லேசர் ஹெட்லைட்டுகள் கொண்ட i8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்களை விற்பனை செய்தது பிஎம்டபிள்யூ. இதன் மூலம், கார்களில் லேசர் ஹெட் லைட்டுகளைப் பொருத்தி விற்பனை செய்த முதல் நிறுவனம் பிஎம்டபிள்யூ என்று பெயரெடுத்துள்ளது. லேசர் ஹெட்லைட்டுகளில் இருந்து வரும் ஒளி ஆபத்தான கதிர்கள் இல்லை. ஹெட்லைட் அசெம்பிளியின் பின்பக்கத்தில் இருந்து வரும் மூன்று நீல நிற லேசர் பீம்கள், கண்ணாடித் துண்டுகள் வழியாக மஞ்சள் பாஸ்ஃபரஸ் நிரப்பப்பட்டுள்ள லென்ஸின் மீது படுகிறது. அப்போது லென்ஸ், சக்திவாய்ந்த வெள்ளை நிற வெளிச்சத்தை உருவாக்குகிறது. அந்த வெளிச்சம் ஒரு ரிஃப்ளெக்டர் மீது பட்டு, அதன் வீரியம் குறைக்கப்பட்டு வெளியே செல்கிறது. இந்த லேசரினால் உருவாகும் வெளிச்சம், கண் பார்வைக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது என்கிறது பிஎம்டபிள்யூ. இந்த லேசர் விளக்கு, எல்இடி விளக்குகள் எடுத்துக்கொள்வதில் முக்கால் பங்கு சக்தியை மட்டுமே பயன்படுத்தி, அதைவிட 1,000 மடங்கு ஒளியைத் தருகிறது. ஏதேனும் விபத்து ஏற்பட்டு ஹெட்லைட்டுகள் சேதமானால், இது தானாகவே ஆஃப் ஆகிவிடும்.

ஆடி டிராஃபிக் லைட் அஸிஸ்ட்

p67d(1).jpg

நாம் கார் ஓட்டும்போது, வரிசையாக சாலையில் உள்ள அனைத்து சிக்னல்களும் பச்சையிலேயே இருந்தால், எரிபொருளை மிச்சப்படுத்த முடியும் அல்லவா? இந்த எளிதான ஐடியாவை எடுத்துக் கொண்டு, ஆடி நிறுவனம் உருவாக்கி இருப்பதுதான் 'டிராஃபிக் லைட் அஸிஸ்ட் ரிகக்னிஷன்’ (Traffic Light Assist Recognition) எனும் தொழில்நுட்பம். இதை ஜெர்மனில் ஓடும் கார்களில் பரவலாகப் பயன்படுத்தினால், ஆண்டுக்கு 900 மில்லியன் லிட்டர் எரிபொருளை மிச்சப்படுத்த முடியும் என்கிறது ஆடி. நமது கார் செல்லும் சாலையில் உள்ள சிக்னல்களின் டைமிங், காரின் நேவிகேஷன் சிஸ்டத்துக்கு வை-ஃபை மூலம் அனுப்பப்படுகிறது. பின்பு, அடுத்த சிக்னல் சிவப்பில் இருந்தாலும், அது சரியாக பச்சை விளக்குக்கு மாறும்போது கடக்க, எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டுமோ, அதை உங்களுக்குக் காட்டும். நாம் அதைக் கடைப்பிடித்தால், சிக்னல் பச்சையில் இருக்கும்போது கடந்துவிடலாம். கூடவே, சிவப்பு விளக்கு ஒளிர்ந்தால், பச்சைக்கு மாறுவதற்கு எத்தனை விநாடிகள் இருக்கின்றன என்பதையும் காட்டும். இதனுடன் காரின் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டமும் இணைந்து இயங்கும்போது, கணிசமான எரிபொருளை மிச்சப்படுத்த முடியும் என்கிறது ஆடி.

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=96225

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.