Jump to content

சீனா உலகை ஆளும்போது...


Recommended Posts

[size=6]சீனா உலகை ஆளும்போது...[/size]

[size=3]

[size=5]சனிக்கிழமை அன்று ஐஐடி சென்னையின் சீனா மையமும் சென்னை சீன ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்திய நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். பிரிட்டனின் மார்ட்டின் ஜாக் (Martin Jacques) பேசினார். இவர் சீனா தொடர்பாக When China Rules the World: The End of the Western World and the Rise of a New Global Order என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். சீனா பற்றி ஆழ்ந்து படித்து வருகிறார். சீனா பற்றி அவர் பேசிய TED பேச்சு இங்கே.[/size]

[/size]

http://www.badriseshadri.in/

Link to comment
Share on other sites

சென்னையில் அவருடைய பேச்சு கிட்டத்தட்ட இந்தமாதிரித்தான் அமைந்தது. ஆனால் அதற்குமேல் சற்று விரிவாகவும் இருந்தது. சீனா பற்றி மேற்குலகம் அறிந்துகொள்ளவேண்டியது என்ன என்பதுதான் மார்ட்டின் ஜாக்கின் புத்தகத்தின் நோக்கம்.

ஆனால் அதிலிருந்து இந்தியர்களும் நிறையப் புரிந்துகொள்ள முடியும்.

[size=6]1. சீனா எப்படிப்பட்ட அரசு?[/size]

மேற்கத்திய நாடுகள் 17-18-ம் நூற்றாண்டுகளில்தான் தேசம் என்று கருத்தாக்கத்தை உருவாக்கின. அதன் விளைவாக தேச-அரசுகள் உருவாயின. தேச-அரசு என்றால், ஒரு குறிப்பிட்ட தேசமாகத் தங்களைக் கருதும் மக்கள் ஒன்றுசேர்ந்து, ஓர் அரசை உருவாக்கி, அதற்கு இறையாண்மையை அளிப்பது.

மார்ட்டின் ஜாக் சீனாவை, தேச-அரசு என்பதைவிட நாகரிக-அரசு என்று சொல்லவேண்டும் என்கிறார். சீனாவை ஒன்றுபடுத்தும் முயற்சிகள் 2,000 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

2. மாவோவின் முக்கியத்துவம்

மாவோவின் ஆட்சியினால் துன்பம்தான், கொலைகள்தான் என்று மேற்கத்தியர்கள் பேசுவது கொஞ்சம் அதீதமானது என்கிறார் மார்ட்டின். சீனர்களின் கருத்து வேறுமாதிரியானது என்கிறார். அவர்கள், மாவோபின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று கருதுவதாகச் சொல்கிறார். அதுநாள்வரையில் பஞ்சம், ஒற்றுமையின்மை, எதிரிகளின் அச்சுறுத்தல் என்று இருந்த நாட்டில், பஞ்சத்தைப் போக்கியது, நாட்டை வெகுவாக ஒன்றுபடுத்தியது, எதிரிகளைத் துரத்தியது, நாட்டுக்கு வலு சேர்த்தது ஆகிய காரணங்களால் மாவோ சீனாவுக்குப் பெரும் பங்கு ஆற்றியிருப்பதாக அந்நாட்டு மக்கள் கருதுவதாக மார்ட்டின் ஜாக் சொல்கிறார்.

[size=6]3. ஒரு நாடு, பல ஆட்சிமுறைகள்?[/size]

[size=4]ஹாங் காங் சீனாவின் கைக்குப் போக இருந்த நேரம், உலகில், அதுவும் முக்கியமாக பிரிட்டனில் பெரும் அவநம்பிக்கை இருந்தது. சீனா ஹாங் காங்மீது பாய்ந்து அதனை விழுங்கிவிடும்; ஹாங் காங்கின் நடைமுறை, முற்றிலும் சீனாவின் பிற பகுதிகளைப் போலவே இருக்கும் என்று அனைவரும் நம்பினர். ஆனால் இன்றுவரை அப்படி ஆகவில்லை. ஒரு நாடு, இரு ஆட்சி முறைகள் என்பது தொடர்கிறது.

சீனாவுக்குத் தன் ஆட்சிமுறையை ஹாங் காங்மீது திணிப்பது அவசியமில்லை. ஹாங் காங் சீனாவின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும் - அவ்வளவுதான். ஆனால் மேற்கத்திய நாடுகள் இப்படி நடந்துகொள்ளாது. உதாரணமாக, மேற்கு ஜெர்மனி - கிழக்கு ஜெர்மனி இணைப்பு நடந்தபோது என்ன ஆனது? கிழக்கு ஜெர்மனி முற்றிலுமாக விழுங்கப்பட்டு, மேற்கு ஜெர்மனியின் நடைமுறைகள் அப்படியே அங்கு திணிக்கப்பட்டது.

நாளை தைவானும் சீனாவின் பிடிக்குள் வரும். இதனைத் தடுக்கவே முடியாது. அப்போது தைவானில் பல கட்சி ஆட்சி தொடரும். இப்போது இருப்பதுபோலவே.

[இதில் எனக்கு நிறைய மாற்றுக்கருத்து உள்ளது. மார்ட்டினிடம் பலர் கேட்டது, ஏன் இது திபெத்தில் நடைமுறையில் இல்லை என்பதை. சீன இறையாண்மைக்கு அடங்கிய, முழுமையான சுயாட்சி அதிகாரம் கொண்ட ஒன்றைத்தானே இப்போது தலாய் லாமா கேட்கிறார்? இந்தக் கேள்வியை ஓரிருவர் கேட்டனர். மார்ட்டின் அதற்கு சரியான பதிலைச் சொல்லவில்லை. ஒருவேளை தைவானின் பொருளாதார பலம் ஹாங் காங் போன்றே இருப்பதால் ஹாங் காங் போல தைவானுக்கும் நிறையச் சுதந்தரம் தரப்படலாம். ஆனால் திபெத் இந்தியாவுடனான சார்பைக் கொண்டிருப்பதாலும் அதற்கு பொருளாதார வலு ஏதும் இல்லை என்பதாலும் திபெத் ஓர் எல்லைப் பிரதேசம் என்பதாலும், திபெத்தியர்கள் தலாய் லாமா என்ற மதத் தலைமையை முழுமையாக நம்புவதாலும் வேறு மாதிரியாகக் கையாளப்படுகிறதோ?][/size]

[size=4][size=6]4. சீனா, புதிய காலனிய சக்தி?[/size]

சீனா ஆப்பிரிக்காவில் பெரும் ஈடுபாடு காட்டுவதை மேற்கத்தியப் பத்திரிகைகள் தவறாகச் சித்திரிக்கின்றன. சீனா எக்காலத்திலும் மேற்கத்திய நாடுகளைப் போல காலனிய சக்தியாக இருக்காது. அது, அதன் ரத்தத்தில் இல்லாத ஒன்று. தன் நாட்டு எல்லைகளை விரிவாக்கவேண்டும் என்று அது விரும்பவில்லை. ஹாங் காங், தைவான் போன்றவை வரலாற்றுரீதியாக அதனுடைய ஆளுகைக்கு உட்பட்டவை. அதுதவிர, பிற இடங்களுக்குச் சென்று அந்த இடங்களைக் கட்டுப்படுத்த சீனா விரும்பாது.

18-ம் நூற்றாண்டுவரையில் இந்தோசீனப் பகுதி (இன்றைய கொரியா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பகுதி) சீன அரசின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. அப்போதுகூட, சீனா அங்கெல்லாம் தன் ஆட்சியைப் பரப்ப விரும்பவில்லை. அந்நாடுகளுடனான வர்த்தக உறவை மட்டுமே கொண்டிருந்தது. அந்நாட்டு அரசர்கள் தன் ஆளுகைக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று மட்டுமே வைத்திருந்தது.

19-ம் நூற்றாண்டில் பிரெஞ்சு, பிரிட்டிஷ், ஜப்பானிய காலனிய சக்திகள் சீனாவுக்குள் நுழையும்வரை இந்நிலை நீடித்தது.

கொலம்பஸ் போன்றோர் சிறு கப்பல்களில் உலகத்தைச் சுற்றுவதற்கு முன்பாகவே பெரும் சீனக் கப்பல்கள் பல இடங்களுக்குச் சென்றுவந்துள்ளன. ஆனால் சீனா எக்காலத்திலும் ஒரு பெரும் கப்பற்படையைக் கொண்டு உலகை ஆட்சி செய்ய யோசித்ததில்லை. அதேபோல, இனியும் அப்படிச் சிந்திக்காது.

[size=6]5. வர்த்தகம்[/size]

இன்று இந்தியா தவிர்த்த பிற ஆசிய நாடுகள் செய்யும் மொத்த வர்த்தகத்தில் 25% சீனாவுடன். உலகின் பெருவாரியான நாடுகள் - வளர்ந்த, வளரும் நாடுகள் - சீனாவுடன்தான் மிக அதிகமான வர்த்தகத்தைச் செய்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, பிரேசில், ஜப்பான், தென் கொரியா போன்ற பல நாடுகளின் முதன்மை வர்த்தகப் பங்காளி சீனாதான். இது மேலும் மேலும் அதிகரிக்கத்தான் போகிறது. உலகின் முதன்மை நாணயமாற்று கரன்சியாக ரென்மின்பி ஆகப்போகிறது.

[size=6]6. தென் சீனக் கடல்[/size]

தென் சீனக் கடல் பகுதி முழுமையும் தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்று சீனா நினைக்கிறது. அப்பகுதியில் பிறர் யாரும் தலையிடுவதை சீனா விரும்பவில்லை. (பார்க்க: வியட்நாம்-இந்தியா -எதிர்- சீனா பிரச்னை.)

[size=6]7. இனமும் கலாசாரமும்[/size]

சீனாவில் பெருவாரியான மக்கள் (சுமார் 90%) ஹான் சீனர்கள். பிற பெரும் நாடுகளைப் போலன்றி (அமெரிக்கா, இந்தியா) பெரும்பான்மை சீனர்கள் தங்களை ஒரே இனத்தினராகக் கருதுகிறார்கள்.

ஆனால் ஒரு சிக்கல். ஹான் சீனர்கள் தம் கலாசாரத்தை மட்டுமே உயர்ந்ததாகக் கருதுபவர்கள். அத்துடன் பிற கலாசாரங்களைத் தாழ்ந்தவையாகவும் கருதுகிறவர்கள். எனவே பிற இனங்களைக் கேவலமாகப் பார்க்கிறவர்கள். கலாசாரம் பன்மை என்பது சிறந்தது என்று கருதுபவர்கள் இல்லை. ஒற்றைக் கலாசாரத்தையே விரும்புபவர்கள்.

[size=6]8. அரசு[/size]

ஒரு அரசின் ஆட்சி அதிகாரமும் சட்ட அதிகாரமும் வாக்குரிமை கொண்ட மக்களாட்சியிலிருந்தே பெறப்படுகிறது என்பது மேற்கு நாடுகளின் நம்பிக்கை. ஆனால் இது உண்மையல்ல. இத்தாலி போன்ற நாட்டில் வாக்குரிமையுள்ள மக்களாட்சி நடைமுறையில் இருந்தாலும் அந்நாட்டின் பல இடங்களில் வசிக்கும் மக்கள் அரசை சட்டபூர்வமானதாகக் கருதுவதில்லை. [இந்தியாவில்கூடச் சில இடங்களை இப்படிக் கருத இடமுண்டு - பத்ரி.] ஆனால் சீனா இதிலிருந்து மாறுபட்டது. அங்கே வாக்குரிமை கொண்ட பல கட்சிகள் கொண்ட மக்களாட்சி முறை கிடையாது. ஆனாலும் அங்குள்ள மக்கள் தம் அரசை சட்டபூர்வமானதாகவே கருதுகிறார்கள். அத்துடன் பெரும்பான்மை மக்களுக்கு தம் அரசின்மீது திருப்தியே நிலவுகிறது. உள்ளூர் அரசுகள்மீது குறைந்த திருப்தியும் மத்திய அரசின்மீது அதிகபட்ச திருப்தியும் கொண்டிருப்பதாக ஓர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

உலகிலேயே செயல்திறன் மிகுதியான அரசு என்றால் அது சீன அரசுதான். இன்று மேற்குலகம் முழுதும் அரசுகள் தோல்வியுற்றுக்கொண்டிருக்கும் நிலையில், உலகம், சீன அரசின் மாதிரியைப் படிக்கவேண்டிய அவசியம் வந்துள்ளது.

[size=6]9. சீனாவின் வளர்ச்சி [/size]

2009 உலகப் பொருளாதார வீழ்ச்சிக்குமுன், சீனா எத்தனை ஆண்டுகளில் அமெரிக்காவை எட்டிப் பிடிக்கும் என்றெல்லாம் ஆரூடம் சொல்லினர். ஆனால் 2008-க்குப்பின், இந்த ஆருடங்களை மாற்றி எழுதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது இந்த எட்டிப்பிடிப்பு இன்னும் வேகமாக நிகழும். இந்த 4 வருடங்களில் மேற்கத்திய நாடுகள் பலவற்றின் ரியல் ஜிடிபி குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் சீனாவின் வளர்ச்சி 30% அதிகரித்துள்ளது.

எனவே 2008-ம் ஆண்டை சீனாவின் ஆண்டு என்றே சொல்லலாம். சீனா உலகின் பொருளாதார வல்லரசாக இந்தப் பத்தாண்டின் இறுதிக்குள்ளாகவே (2018) ஆகிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ப்ரிக் வங்கி (சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா) என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டால், அது உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும்.

[/size]

Link to comment
Share on other sites

.

இது சம்பந்தமாக நிறைய கதைக்க வேண்டும். மாறிவருகின்ற உலக அரசியல் பரிமானங்களைப் பற்றி ஆய்வு செய்வதற்குக் கூட எம்மிடம் போதிய வளம் இல்லாமல் இருக்கலாம்.

ஒரு கட்டத்தில் உலக அரசியல் பரிமானம் குறிப்பாக தெற்காசிய அரசியல் பரிமானம் எங்கள் நிலம், மக்கள் மீது செலுத்தும் செல்வாக்கு சிங்கள இனவாதத்தையே மேவலாம்.

சிங்கள இனவாதம் இரண்டம் இடத்திற்கும் தள்ளப்படலாம்.

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]தனது வளர்ந்துவரும் பொருளாதாரத்திற்கு தேவைப்படும் மசகு எண்ணெயை நிறைவுசெய்ய கனேடிய நிறுவனம் ஒன்றை சீன அரச எண்ணெய் நிறுவனம் 15 பில்லியன்கள் காசு கொடுத்து வேண்ட முனைந்துள்ளது. [/size][/size][size=1]

http://www.marketwatch.com/story/cnooc-nexen-deal-faces-long-approval-process-2012-07-23?siteid=yhoof2[/size][size=1]

http://finance.yahoo.com/q?s=NXY[/size]

Link to comment
Share on other sites

[size=5]உலகின் பொருளாதார புவியீர்ப்பின் பரிணாம வளர்ச்சி [/size]

20120630_wom941.png

Link to comment
Share on other sites

[size=6]உலக பொருளாதார வளர்ச்சியும் அதில் [/size][size=1]

[size=5]- பணக்கார நாடுகளின் பங்களிப்பு [/size][/size][size=1]

[size=5]- ப்ரிக் : உருசியா, சீனா, இந்தியா, பிரேசில் [/size][/size][size=1]

[size=5]- ஏனைய நாடுகள் [/size][/size]

20120623_woc445.png

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
578818_413420065362484_608709016_n.jpg
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.