Jump to content

மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தின் அடுத்த கட்டம் - நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தின் அடுத்த கட்டம் - நிலாந்தன்

13 ஏப்ரல் 2014

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த கையோடு மேற்குநாடுகள் இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டின. வெல்லக் கடினமான ஒரு பயங்கரவாத இயக்கத்தைத் தோற்கடித்த ஒரு அரசாங்கமாக அவை இலங்கை அரசாங்கத்தைப் பார்த்தன. போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த பேரழிவை அவை தவிர்க்கப்படவியலாத பக்கச் சேதங்களாகவே பார்த்தன. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பக்கச் சேதங்கள் மனித உரிமை மீறல்களாக மாற்றப்பட்டன.

கடந்த மாதம் மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தில் அவ்வாறுதான் கூறப்பட்டுள்ளது. அதாவது, 'மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய குற்றங்கள''; என்று. ஆனால், தமிழர்களில் ஒரு தரப்பினர் அவை போர்க் குற்றங்கள் என்று கூறுகிறார்கள். அவை அனைத்துலகப் பொறிமுறை ஒன்றிற்கூடாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

அதேசமயம், தமிழர்களில் மற்றொரு தரப்பினர் அவை இனப்படுகொலை என்று கூறி வருகிறார்கள். அவற்றை விசாரிப்பதற்கு ஓர் அனைத்துலகப் பொறிமுறை வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்றவை போர்க் குற்றங்களா அல்லது இனப்படுகொலையா என்பதில் தமிழர்களால் ஐக்கியப்பட்ட ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அது மட்டுமல்ல, கடந்த ஐந்தாண்டுகளாக அனைத்துலக சமூகத்தை போர்க்குற்றம் தொடர்பிலோ அல்லது இனப்படுகொலை தொடர்பிலோ தமிழர்களின் உச்சபட்ச விருப்பங்களை நோக்கி வளைத்தெடுப்பதிலும் தமிழர்கள் போதிய வெற்றியைப் பெறமுடியவில்லை.

ஆனால், இலங்கை அரசாங்கமோ கடந்த மூன்றாண்டு கால வளர்ச்சிகளையும், பின்னோக்கி இழுத்துச் செல்லும் செய்முறை உத்திகளை வெற்றிகரமாகப் பிரயோகிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த ஜெனிவாக் கூட்டத்தொடரையொட்டி நடந்தவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அப்படித்தான் கூறவேண்டியிருக்கிறது.

அதாவது, இறுதிக் கட்டப் போரில் நடந்தவை இனப்படுகொலையா அல்லது போர்க் குற்றங்களா என்பதில் தமிழர்களால் ஒருமித்த முடிவுக்கு வரமுடியாதிருக்கும் ஒரு பின்னணியில், கடந்த மூன்று ஜெனிவாக் கூட்டத் தொடர்களின் மூலமாக மேற்கு நாடுகள் அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்வதில் போதிய வெற்றியைப் பெற்றிராத ஒரு பின்னணியில், அதிலும், குறிப்பாக, இதுவரையிலுமான மூன்று ஜெனிவாத் தீர்மானங்களிலும் இலங்கைத்தீவில் இடம்பெற்றவற்றவை மனித உரிமை மீறல்களாகச் சுருக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில், இலங்கை அரசாங்கமோ, இங்கு நடந்தவை பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தவிர்க்கப்படவியலாத பக்கச் சேதங்களே என்று நிரூபித்துக் காட்டும் ஒரு செய்முறைப் பாதையில் தீர்மானகரமாகச் செயற்படத் தொடங்கிவிட்டது.

இதை அரசாங்கம் இரண்டு தளங்களில் செய்கிறது. முதலாவது உள்நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் மறுபடியும் உயிர்பெறத் தொடங்கிவிட்டதாகக் கூறி அதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள்.

இரண்டாவது தளம், நாட்டுக்கு வெளியில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் செயற்பட்டுவரும் பதினாறு அமைப்புக்களையும் அவற்றுடன் தொடர்புடையவர்களையும் தடை செய்ததின் மூலம் புலம்பெயர்ந்த தரப்பே உள்நாட்டில் தோற்கடிக்கப்பட்ட 'பயங்கரவாத்திற்கு'' பிராணவாயுவை வழங்கி வருகிறது என்று ஒரு சித்திரத்தை உருவாக்க முற்படுகிறது.

அரசாங்கத்தின் இந்த இரு தளச் செயற்பாடுகளை மேலும் சிறிது ஆழகமாகப் பார்க்க வேண்டும்.

முதலாவதாக, உள்நாட்டில் குறிப்பாக, வடக்கில் அதிலும் குறிப்பாக வன்னிப் பகுதியில், விடுதலைப்புலிகள் இயக்கம் மறுபடியும் தலையெடுத்திருப்பதாகக் கூறப்பட்டு இயல்பு வாழ்க்கை சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. வடக்கு-கிழக்கில் ஒப்பீட்டளவிற் சிவில் வெளி குறைவாக இருப்பதும் வன்னியில்தான். ஏனைய பகுதிகளோடு ஒப்பீடுகையில் அராசங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கடைசியாக வந்த பகுதி அது. எனவே, ஏனைய பகுதிகளையும் விடவும் அங்கேதான் ஒப்பீட்டளவில் கூடுதலாக படை பிரசன்னம் காணப்பட்டது.

கடந்த ஐந்தாண்டுகளாக அங்கு மெல்ல மெல்ல விரிந்து வந்த சிவில் வெளியானது இப்பொழுது மறுபடியும் சுருங்கத் தொடங்கிவிட்டது. இதன் பொருள் அங்கு இயல்பு வாழ்க்கை முழுவதுமாகக் குலைந்துவிட்டது என்பதல்ல. அது முன்னரைவிடக் கூடுதலாகச் சோதனைக்குள்ளாகத் தொடங்கிவிட்டது என்பதுதான்.

எவ்வளவுக்கெவ்வளவு இயல்பு வாழ்வு சோதனைக்குள்ளாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு சிவில் வெளியும் நிச்சயமற்றதாக மாறுகிறது. இவ்வாறு சிவில் வெளி சோதனைக்குள்ளாகத் தொடங்கியிருப்பது தொடர்பில் வட-கிழக்கில் உள்ள சில அரசியல் வாதிகளே குரல் கொடுத்திருக்கிறார்கள். சிவில் இயக்கங்களோ அல்லது மத நிறுவனங்களோ போதியளவுக்கு குரல் கொடுக்கவில்லை. இது தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலான நடவடிக்கைகள் எதையும் காணமுடியவில்லை.

சிவில் வெளி சோதனைக்குள்ளாகும்போது நல்லிணக்கத்தைப் பற்றியெல்லாம் உரையாட முடியாது. இன்னும் சரியாகக் கூறின் மெய்யான பொருளில் சிவில் வெளி எனப்படுவது நல்லிணக்கததின் கனியாகத்தான் கிடைக்கவேண்டும். எங்கே நல்லிணக்கம் உண்மையின் மீதும், நீதியின் மீதும் கட்டியெழுப்பப்படுகின்றதோ அங்கே தான் சிவில் வெளியும் அதிகம் அர்த்த புஷ்டியானதாகவும் நிச்சயத்தன்மை மிக்கதாகவும் தொடர் வளர்ச்சிக்குரியதாகவும் அமைகிறது. மாறாக, நீதியின் மீது கட்டியெழுப்பப்படாத போலியானதொரு நல்லிணக்கமானது நிச்சயத்தன்மை குறைந்த சிவில் வெளிகளையே உருவாக்குகிறது. நீதி நிலைநாட்டப்படாதவிடத்து அங்கே அச்சமும் பழிவாங்கும் உணர்;ச்சியும் உறை நிலையில் இருக்கும். எனவே, அச்சத்தின் மீது கட்டியெழுப்பப்படும் சிவில் வெளியானது எளிதில் உடைந்துவிடக்கூடியது.

எனவே, ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஒரு சமூகத்தில் சிவில் வெளி சோதனைக்குள்ளாகிறது என்றால் நல்லிணக்கம் சோதனைக்குள்ளாகிறது என்றே பொருள். அல்லது மெய்யான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அந்த நாடு தோல்வியடைந்துவிட்டது என்றே பொருள். ஆயின், மெய்யான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாததிற்கு யார் பொறுப்பு? வென்றவர்களா? தோற்றவர்களா?

ஆனால், அரசாங்கம் இதை வேறுவிதமாக வியாக்கியானம் செய்ய முற்படுகின்றது. தன்னால் தோற்கடிக்கப்பட்ட ஒரு 'பயங்கரவாதமானது'' புலம்பெயர்ந்த தமிழர்களின் பின்பலத்தோடும் தூண்டுதலோடும் மீள உயிர்ப்பிக்கப் படுவதாக காட்ட முற்படுகிறது. இது விடத்தில் உலகளாவிய இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கு நாடுகள் கைக்கொள்ளும் அதே அணுகுமுறையை தானும் பின்பற்றுவதாகக் காட்ட முற்படுகின்றது. தனது தரப்பு நியாயத்திற்கு வலுச்சேர்க்கும் விதத்தில் அது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் இயங்கும் அமைப்புக்களைத் தடை செய்துமிருக்கிறது.

ஜெனிவா மூன்றின் தீர்மானத்தை அரசாங்கம் எதிர்கொள்ளும் இரண்டாவது தளம் இதுவாகும். புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றொரு ஆயுதப் போராட்டத்தை அடைகாக்கிறார்கள் என்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மேற்கு நாடுகளை நெருக்கடிக்குள்ளாக்க முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது.

புலம்பெயர்ந்த தமிழர்களைக் கருவிகளாகப் பயன்படுத்தியே மேற்கு நாடுகள் தன் மீது அழுத்தத்தைப் பிரயோகித்து வருவதாக அரசாங்கம் நம்புகிறது.

எனவே, பயங்கரவாதம் என்று மேற்கு நாடுகள் வர்ணிக்கும் நடவடிக்கைகளோடு புலம்பெயர்ந்த தமிழர்களைத் தொடுப்பதன் மூலம் அரசாங்கம் ஒரே கல்லில் இரு மாங்காய்களை வீழுத்தலாம் என்று திட்டமிடுகின்றது.

முதலாவது மாங்காய் - தமிழத் தேசிய நெருப்பை அணையவிடாது பாதுகாப்பதாகக் கருதப்படும். தமிழ்ப் புலம் பெயரிகளுக்கும் தாய் நாட்டுக்குமான தொடர்பைத் துண்டித்து விடுவதன் மூலம் தமிழர்களின் அரசியலை இச்சிறு தீவின் எல்லைகளுக்குள் முடக்குவது.

இப்படியாகப் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குப் பயங்கரவாத முத்திரை குத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவிற்கு அவர்களை நீண்ட கால நோக்கில் அரசியலற்ற சமூகமாக மாற்றலாம் என்று சிந்திக்கவும் இடமுண்டு.

இதில் தீவிர அரசியற் செயற்பாட்டாளர்களின் கதை வேறு. சாதாரண புலம் பெயரிகளின் கதை வேறு. சாதாரண புலம்பெயரிகளைப் பொறுத்தவரை இனி நாடு திரும்புவது என்றால் புலம்பெயர்ந்த களத்தில் எந்தவொரு அரசியற் செயற்பாட்டிலும் ஈடுபடக்கூடாது என்று அவர்கள் சிந்திக்கத் தலைப்படுவர். ஏற்கனவே, கடந்த ஆண்டு புலம் பெயர்ந்தவர்களின் சொத்துக்களை அரசாங்கம் கையேற்கப்போவதாகவும், அதற்கான சட்ட ஏற்பாடுகளைப் பற்றிச் சிந்திக்கப்படுவதாகவும் ஒரு கதை வந்தபோது பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டில் உள்ள தமது சொத்துக்களை விற்க முற்பட்டதையும், இதனால் யாழ்ப்பாணத்தில் காணி விலை ஒப்பீட்டளவில் சரிந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனவே, சாதாரண புலம்பெயர்ந்த தமிழர்கள் இனி அரசியற் செயற்பாடுகளைப் பொறுத்தவரை அடக்கி வாசிக்கவே முற்படுவர். அல்லது அதை ரகசிசயமாகச் செய்ய முற்படுவர். இதில், நாடு திரும்பத் தேவையில்லாதவர்கள் அதாவது, புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நிலையான நலன்களுடன் மிகவும் ஸ்தாபிதமாக அதாவது ''வெல் செற்றில்ட்' ஆக வாழ்பவர்களும் அங்கு ஏற்கனவே தீவிரமாகச் செயற்பட்டவர்களும் மட்டுமே இனித் தொடர்ந்தும் தீவிர அரசியலில் ஈடுபடுவார்கள். மற்றும்படி விடுமுறைக் காலங்களில் நாடு திரும்ப விரும்புவோரும் தாய் நாட்டில் சொத்துக்களை அதிகம் உடையவர்களும் இனி அடக்கி வாசிக்கவே முற்படுவர்.

இது நீண்ட எதிர்காலத்தில் தாய் நாட்டிற்கும் புலம்பெயர்ந்த தரப்புக்கும் இடையிலான அரசியல் இடை ஊடாட்டங்களை வெகுவாகப் பாதிக்கும். நிதி ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தாய் நாட்டிலிருக்கும் தமிழர்களை இது பெருளமவிற்குப் பலவீனப்படுத்தும். இது முதலாவது.

இரண்டாவது மாங்காய் - மேற்கு நாடுகள் புலம்பெயர்ந்த தமிழர்களைக் கருவிகளாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது.

மேற்படி தடைக்கு நாட்டுக்கு வெளியே சட்டப் பெறுமதி குறைவு. உளவியற் பெறுமதியும் அரசியற் பெறுமதியும் தான் அதிகம். மேற்கு நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்படும் அமைப்புக்கள் இதில் பலவுண்டு. எனவே, அவை அங்கு தொடர்ந்தும் செயற்பட முடியும். ஆனால், மேற்கு நாடுகள் தமக்கெதிராக ஆயுதமேந்திய இயக்கங்களின் விடயத்தில் எந்த அளவுகோல்களைப் பயன்படுத்துகின்றனவோ அதே அளவுகோல்கiளேயே தானும் இது விசயத்தில் பயன்படுத்தியிருப்பதாக ஒரு தோற்றத்தைக் காட்ட இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றது.

பெரும்பாலான மேற்கத்தைய நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கம் இப்பொழுதும் தடை செய்யப்பட்டிருப்பது அரசாங்கத்திற்கு அதிகம் அனுகூலமானது. ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மனோரதியப்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதும் அரசாங்கத்திற்கு வாய்ப்பானது. எனவே, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு அல்லது ஆயுத மேந்திய தமிழ் அரசியலுக்குச் சாதகமாயில்லாத ஓர் உலகச்; சூழலை அரசாங்கம் உச்சபட்மாகக் கையாண்டு வருகின்றது. இதனால், ஜெனிவாக் கூட்டத் தொடரில் தமிழர்கள் இனப்படுகொலையா? அல்லது போர்க் குற்றமா? என்ற விவாதங்களில் ஈடுபடும்போது அரசாங்கமோ அது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் தவிர்க்கப்படவியலாத பக்கச் சேதம் என்று நிரூபிக்க முயற்சிக்கின்றது.

இதில் புலம்பெயர்ந்த தமிழர்களை பயங்கரவாதம் என்று மேற்கு நாடுகள் முத்திரை குத்தும் நடவடிக்கைகளுடன் தொடர்பு படுத்துவதன் மூலம் மேற்கு நாடுகள் அவர்களை கருவிகளாகப் பயன்படுத்துவதில் வரையறைகளை ஏற்படுத்திவிடலாம் என்றும் அரசாங்கம் நம்புகின்றது.

ஒருபுறம் அமைச்சர் பீரிஸ் மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைகளில் பங்கேற்பதை துரோகம் என்று வர்ணிக்கின்றார். அதாவது, சாட்சிகள், துரோகிகள் ஆக்கப்படக்கூடிய ஓர் அரசியல் சூழலே நிலவுகின்றது என்று பொருள். இது சாட்சிகளுக்கு பாதுகாப்பில்லை என்ற ஒரு செய்தியை வெளிக்கொண்டு வருகின்றது. இன்னொரு புறம் நாட்டிற்கு வெளியிலான விசாரணைகளுக்கு அனுசரணை புரியக் கூடிய அமைப்புக்கள் 'பயங்கரவாதத்துடன்'' தொடர்புடையவைகளாக முத்திரை குத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அத்தகைய விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் எவரையும் 'பயங்கரவாதத்துடன்'' தொடர்புபடுத்த முடியும்.

அதாவது மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தின் அடுத்த கட்ட நகர்வானது இரண்டு தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. முதலாவது தேசத்துரோகம். இரண்டாவது பயங்கரவாதம். இவ்விரு தடைகளையும் தாண்டி மேற்படி விசாரணைகளை முன்னோக்கிச் செலுத்த அனைத்துலக சமூகத்தால் குறிப்பாக மேற்கு நாடுகளால் முடியுமா? தமக்கு எதிரான அமைப்புக்களுக்கு எதிராக அவை பிரயோகித்து வரும் பயங்கரவாதம் என்ற அளவுகோல் இப்பொழுது அவர்களுக்கே தடையாக மாற்றப்பட்டிருக்கிறது.

எனவே, இத்தடைக்குப் பின்னரான அடுத்த கட்டத்தைக் குறித்து செயல் பூர்வமாகச் சிந்திக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கே உரியது.

இது விடயத்தில், மேற்படி தடை குறித்து இதுவரையிலும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (human rites watch) முக்கியஸ்தர் ஒருவர் மட்டுமே கருத்துத் தெரிவித்துள்ளார். மேற்கத்தைய நாடுகளின் உத்தியோகபூர்வ அபிப்பிராயங்கள் எதுவும் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் வெளியிடப்படவில்லை. கொழும்பில் சில மேற்கத்தைய தூதரகங்களில் நிகழ்ந்த சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்களோடான சந்திப்புக்களின் போது இது பற்றி பிராஸ்தாபிக்கப்பட்டதாக சில தகவல்கள் உண்டு.

உண்மையில் இப்பொழுது உருவாகி இருப்பது ஒரு சட்டப் பிரச்சினை அல்ல. இது ஒரு அரசியல் பிரச்சினையே. இதை அரசியல் தீர்மானங்களின் மூலம் தான் எதிர்கொள்ள முடியும். அதற்கொரு அரசியல் திடசித்தம் (political will) வேண்டும். ஐ.நா.தீர்மானத்தில் தமிழர்கள் என்ற வார்த்தை வருவதை தவிர்ப்பது என்பதை ஓர் அரசியல் தீர்மானமாக எடுத்த மேற்கு நாடுகளிடம், இனப்பிரச்சினையை ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவே பார்ப்பது என்பதை ஓர் அரசியல் தீர்மானமாக எடுத்த மேற்படி நாடுகளிடம் ஜெனிவா மூன்றிற்குப் பின்னரான நிலைமைகளை எதிர்கொள்ளத் தேவையான அரசியல் திடசித்தம் எப்பொழுது உருவாகும்?

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105540/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

 

மேற்படி நாடுகளிடம் ஜெனிவா மூன்றிற்குப் பின்னரான நிலைமைகளை எதிர்கொள்ளத் தேவையான அரசியல் திடசித்தம் எப்பொழுது உருவாகும்?

எப்பொழுது உருவாகும்?? அதையும் நீங்களே சொல்லிப்போடுங்கோ.. :D

Link to comment
Share on other sites

ஈழ தமிழருக்கு மாங்காய் வத்தல் போட்டுட்டார்.

டயஸ்போரா என்ற வார்த்தையை புலம்பெயரி என்று மாற்றிவிட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.