Jump to content

'30 வருட யுத்தம் அது தந்துள்ள வலி என்பவற்றினை தாண்டி எமதுமக்கள் உறுதியுடன் இருக்கிறார்கள்'

Recommended Posts

சிவா சிவானந்தன்:-

SivalingamSivananthan_CI.jpg

முப்பது வருட யுத்தம் அது தந்துள்ள வலி என்பவற்றினை தாண்டி எமது மக்கள் உறுதியுடன் இருக்கிறார்கள். முப்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து நான் இங்கு வரும் போது சந்தேகத்துடனேயே வந்தேன். 'மக்களின் மனநிலை எவ்வாறிருக்கும்?', மனதளவில் அவர்கள் உடைந்திருபார்களா? என்று சிந்தித்துக் கொண்டே வந்தேன். ஆனால் இங்கே வந்து பார்த்தபோது என்னால் நம்பமுடியவில்லை. மக்கள் எம்மால் முடியும் என்ற வைராக்கியத்தோடு பேசுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றதென தெரிவித்துள்ளார் அமெரிக்கப் பேராசிரியரும் - அமெரிக்க அரசின் அதியுயர் விருது பெற்ற தமிழருமான சிவா சிவானந்தன்.

நேற்று கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறும்போது,எனது பயணத்தின் முக்கிய நோக்கம் யாழ்ப்பாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். சூரிய சக்தி மூலம் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தினால் இங்குள்ள மக்கள் அனைவருக்கும் சமமான அபிவிருத்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. நான் இங்குதான் படித்தேன். அந்த அடிப்படையை வைத்துத்தான் என்னால் இன்று இவ்வளவும் செய்யக் கூடியதாக இருந்தது. அதே அடிப்படையில் இங்குள்ளவர்களுக்கு ஒரு வர்த்தக ரீதியான வழிகாட்டலை ஏற்படுத்திக் கொடுத்தால் இங்குள்ளவர்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.

மக்கள் ஒரு தீர்மானத்தோடு வாழ்கிறார்கள். 'இதுவரை பட்ட துன்பத்தை விட இனிமேலா துன்பம் வந்துவிடப்போகின்றது' என்ற மனநிலையில் உள்ளார்கள். இந்த மனநிலையில் வாழ்ந்த பிள்ளைகளை வழிகாட்டி அவர்களுக்கான பாதையை கண்டுபிடித்து அதில் அவர்களிற்கான அறிவுறுத்தலை வழங்கி முன்னேற வைத்தால் நிச்சயம் பொருளாதார நிலை பலமடையும். சிங்கப்பூர், தென் கொரியா போன்ற நாடுகளை விட இலங்கை பொருளாதாரத்தில் தரமான, பலமான நிலைக்கு வரமுடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105783/language/ta-IN/article.aspx

sivananathan-jaffna-01.jpg

sivananathan-jaffna-02.jpg

Link to comment
Share on other sites

உண்மையிலே உங்கள் கருத்து நியாயமானது. ஆனால் யாழ்பாணான அரசியல் வாதிகளும் புலம்பெயர் வல்லூறுகளும் யாழ்ப்பாணத்தையும் நாட்டையும் உருப்பட விட மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

உண்மையிலே உங்கள் கருத்து நியாயமானது. ஆனால் யாழ்பாணான அரசியல் வாதிகளும் புலம்பெயர் வல்லூறுகளும் யாழ்ப்பாணத்தையும் நாட்டையும் உருப்பட விட மாட்டார்கள்.[/size]

நீங்கள் என்னதான் கிடந்து முக்கினாலும், கிழக்கு, மலையகத் தமிழர்களும் மன உறுதி மிக்கவர்கள்தான். :D அங்குள்ள அரசியல்வாதிகளும் அவ்வாறேதான். எல்லாரும் தமிழ்தான் பேசுவார்கள். ஆனால் தமிழ் எழுதப் பேசத் தெரிந்தவர்கள் எல்லோரும் தமிழர்கள் ஆகிவிட முடியாது. :icon_idea:

Link to comment
Share on other sites

நீங்கள் என்னதான் கிடந்து முக்கினாலும், கிழக்கு, மலையகத் தமிழர்களும் மன உறுதி மிக்கவர்கள்தான். :D அங்குள்ள அரசியல்வாதிகளும் அவ்வாறேதான். எல்லாரும் தமிழ்தான் பேசுவார்கள். ஆனால் தமிழ் எழுதப் பேசத் தெரிந்தவர்கள் எல்லோரும் தமிழர்கள் ஆகிவிட முடியாது. :icon_idea:

ஹஹஹ்ஹஹா .முடியல ........................என்றாலும் அக்கறைவாதிக்கு  இப்பிடி சொல்லி புறக்கணிக்க கூடாது நண்பா ........... :D  :D  :D

Link to comment
Share on other sites

உண்மையிலே உங்கள் கருத்து நியாயமானது. ஆனால் யாழ்பாணான அரசியல் வாதிகளும் புலம்பெயர் வல்லூறுகளும் யாழ்ப்பாணத்தையும் நாட்டையும் உருப்பட விட மாட்டார்கள்.

யாழ்பாணத்திற்கு தெற்கிலிருந்து  படையெடுக்கும் அதிகளவான  வங்கிகள் புலம்பெயர் வல்லூறுகளால் வரும் முதலீடுகளை நம்பியே அங்கு படையெடுக்கின்றன. அங்கு பொருளாதார அபிவிருத்திகாக அல்ல.  சிவா சிவானந்தன் கூறிய மக்களின் உறுதிக்கும் புலம்பெயர் வல்லூறுகளான அவர்களின் உறவினர்களின் பொருளாதார உதவிகளும் காரணம்.

Link to comment
Share on other sites

உண்மையிலே உங்கள் கருத்து நியாயமானது. ஆனால் யாழ்பாணான அரசியல் வாதிகளும் புலம்பெயர் வல்லூறுகளும் யாழ்ப்பாணத்தையும் நாட்டையும் உருப்பட விட மாட்டார்கள்.

இந்த கூற்றில் எவ்வளவு உண்மை உள்ளதோ தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ளலாம். சிங்கள அரசுகள் தமிழர்களை உருப்பட விட மாட்டார்கள். வீதப்படி பார்த்தால் 99%. 

Link to comment
Share on other sites

நீங்கள் என்னதான் கிடந்து முக்கினாலும், கிழக்கு, மலையகத் தமிழர்களும் மன உறுதி மிக்கவர்கள்தான். :D அங்குள்ள அரசியல்வாதிகளும் அவ்வாறேதான். எல்லாரும் தமிழ்தான் பேசுவார்கள். ஆனால் தமிழ் எழுதப் பேசத் தெரிந்தவர்கள் எல்லோரும் தமிழர்கள் ஆகிவிட முடியாது. :icon_idea:

இசைக்கலைஞனின் மேற்கண்ட கருத்து, ஆழம்கொண்டது.

வரம்பைக் கட்டியபின்னர், நீரைப் பாச்சித் தேக்கினால்தான் நீரின் பலனைப் பெறமுடியும். வரம்பற்ற தரையில் நீரைப்பாச்சித் தேக்கமுயல்வது மூடச்செயலுக்கு ஒப்பாகும். அதுவும், அடிக்கடி காட்டாறு ஓடும் வழியில் தமிழன் தோட்டம் உள்ளதை இன்னமும் தமிழன் உணரமறுப்பதை இக் கருத்து எடுத்துக் காட்டுகிறது.

அமெரிக்கப் பேராசிரியரும் - அமெரிக்க அரசின் அதியுயர் விருது பெற்ற தமிழருமான சிவா சிவானந்தன் அவர்களும் இதனை உணர்ந்து செயற்படுவதே சிறந்தது. :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

அது தானே தமிழ் பேச எழுத தெரிந்த ஜேர்மனிய பெண்மணி தமிழர் ஆக முடியுமா ?

இதுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கு என்று இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சு . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

அது தானே தமிழ் பேச எழுத தெரிந்த ஜேர்மனிய பெண்மணி தமிழர் ஆக முடியுமா ?

இதுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கு என்று இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சு . :icon_mrgreen:

இந்த விசயமும் இருக்கு  அண்ணே .........தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழ்பேசும் தமிழனும் தமிழனாய் இருக்கமுடியாது .இதையும் தெரிந்து கொள்ளுங்கள்  :D  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.