Jump to content

சிறிலங்கா போரில் இந்தியப் படைகள் - மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் இராணுவப் பேச்சாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Brig-Ruwan-Wanigasuriya.jpg

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடைபெற்ற காலங்களில் இந்தியப் படைகள் சிறிலங்காவில் இருந்தன என்பதை, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். 

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்காப் படையினருடன் இணைந்து இந்தியப் படையினர் செயற்பட்டதாக, இந்திய உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுத் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு நேரடியாகப் பதிலளிக்காத, பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, 

“இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் உள்ள நெருக்கமான உறவை எப்போதும் உடைக்க முடியாது. 

1948ம் ஆண்டு சிறிலங்காவும், 1947ம் ஆண்டு இந்தியாவும் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து கட்டியெழுப்பப்பட்ட உறவு இது. 

இருநாடுகளுக்கும் இடையிலான இந்த நெருக்கமான உறவுகள், அரசியல் மற்றும் இராணுவம் சார்ந்த துறைகளையும் உள்ளடக்கியுள்ளது. 

இந்த உடன்பாட்டுக்கமைய, சிறிலங்கா இராணுவ அதிகாரிகளால், இந்தியாவில் பயிற்சிகளைப் பெறமுடியும். 

இந்திய அதிகாரிகள் சிறிலங்காவில் பயிற்சி பெற முடியும். 

இன்றும் கூட இந்திய அதிகாரிகளை நீங்கள் சிறிலங்காவில் பார்க்க முடியும். 

அதேவேளை, சிறிலங்கா அதிகாரிகள் இந்தியாவிலும் உள்ளனர். 

இந்த இணைப்பு தீவிரவாதத்துக்கு எதிரான மனிதாபிமானப் போரின் போதும் கூட துண்டிக்கப்படவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20140418110349

Link to comment
Share on other sites

யாழ்களத்தின் இறைவன் இன்னும் நம்பாமல் உள்ளதால் ருவான் வணிகசூரிய மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். :D

Link to comment
Share on other sites

சிங்கள இராணுவ அதிகாரிகள் எப்பவும் உண்மைதான் தான் பேசுவார்கள் . :icon_mrgreen:

(வசதிக்கேற்ப பொறுக்கி எடுக்க எம்மவர்களை விட்டால் ஆட்கள் இல்லை )

Link to comment
Share on other sites

சிங்கள இராணுவ அதிகாரிகள் எப்பவும் உண்மைதான் தான் பேசுவார்கள் . :icon_mrgreen:

(வசதிக்கேற்ப பொறுக்கி எடுக்க எம்மவர்களை விட்டால் ஆட்கள் இல்லை )

 

 

பொன்சேகாவும் இராணுவம் தான். பொன்சேகா இந்திய இராணுவம் வரவில்லை என சொன்ன போது என்ன கூறினீர்கள் என்பதை வாசிக்கவும்.தோசை நல்லாய் தான் பிரட்டுறீங்கப்பா.

Link to comment
Share on other sites

வவுனியா சிறி லங்கா வன்னி தலைமையக தாக்குதலின் போது இரு இந்திய இராணுவ அதிகாரிகள் காயபட்டனர்.

Meanwhile, Indian diplomatic sources say, at least 2 Indian Air Forces officials were injured in the coordinated attacks by the LTTE on the Vavuniya HQ. Both injured Indian officers were hurriedly removed from the base and admitted to the Colombo leading hospital, and their injuries are not life threatening, according to the Indian sources.

http://creative.sulekha.com/indian-air-force-personnel-injured-while-protecting-sri-lankan-installations_364184_blog

Link to comment
Share on other sites

அப்ப எப்படி சீனாக்காரன் இவ்வளவு மூக்கை உள்ள   விடுறான்.  இது  இந்திய வரட்டு  அரசியலோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.