Jump to content

நெல்லியடி மகா வித்தியாலையத்தில் வடமராட்சிக்கான இராணுவ ஆட்சேர்பு - விண்ணப்பப் படிவங்கள் விநியோகம்


Recommended Posts

நெல்லியடி மகா வித்தியாலையத்தில் வடமராட்சிக்கான இராணுவ ஆட்சேர்பு - விண்ணப்பப் படிவங்கள் விநியோகம்:-

 
 

 

sl%20army_CI.jpg

முதற் பதிவேற்றம்:- 16-04-2014 - 14:42

இலங்கை இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக வடமராட்சிப் பகுதிக்கான ஆட்சேர்ப்பு இன்று வியாழக்கிழமை (17.04.14) இடம்பெறவுள்ளது.

நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ள இந்த ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்ப படிவங்கள் இன்று படையினரால் விநியோகிக்கப்பட்டுள்ளன. இலங்கை இராணுவத்திற்கான சாரதி மற்றும் மின்னியலாளர்கள் மற்றும் சங்கீத விரிவுரையாளர்கள் என ஆட்சேர்ப்பு நிகழவுள்ளதாக அவ் விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய ஆட்சேர்ப்பில்  சந்தர்ப்பத்தினை தவறவிட்டவர்களிற்கான சந்தர்ப்பமும் நேர்முகத்தேர்வும் 18 மற்றும் 19ம் திகதிகள் மாலுசந்திப்பகுதியிலுள்ள தனியார் கட்டட ஒப்பந்தகாரர் நிறுவனமும் பாதுகாப்பமைச்சின் செயலாளரது  என நம்பப்படுவதுமான ஹரி என்ஜினியரிங் நிறுவனத்தில் இடம்பெறுமென படையினரால் விநியோகிக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படை அதிகாரிகளது கோரிக்கையின் பேரினிலேயே ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளிற்காக தனது அலுவலக கட்டடத்தினை வழங்கியதாக முகாமையாளரான யாதவன் என்பவர் தெரிவித்;ததாக வடக்கு மாகாணசபை உறுப்பினரான சோ. சுகிர்தன் தெரிவித்தார். தமக்கு பொதுமக்கள் தரப்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகளை அடுத்தே இது குறித்து விசாரித்தறிந்து கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாணவ மாணவிகளில் ஒரு சிலரை படையில் இணைக்க வலை வீசியுள்ள படையினர் அதில் வெற்றி பெற்றிருப்பதாகவும் எனினும் அவர்கள் இறுதி நேரத்தில் தப்பித்துப்போகாதிருக்க அவர்களது வீடுகளிற்கு பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஏற்கனவே வன்னியில் இராணுவத்திற்கு ஆட்சேர்க்க முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்கள் எடுபடாத நிலையில் தற்போது தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் பாடசாலைகளென ஆட்சேர்ப்பில் படைத்தரப்பு குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/105722/Default.aspx

 

Link to comment
Share on other sites

தமிழர்களை எடுப்பது ராணுவத்தில் எடுபிடி வேலைக்கா?  :D  :D  :D 

Link to comment
Share on other sites

தமிழர்களை எடுப்பது ராணுவத்தில் எடுபிடி வேலைக்கா? :D :D :D

சிங்கள ஆர்மியிண்ட தோட்ட காய்கறிகளை கழுவி வெட்டவும் ஆட்கள் தேவை.:)

Link to comment
Share on other sites

மின்னஞ்சலில் வந்தது :

 

 

இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இராணுவத்தின் திட்டம் என்ன?

 

அண்மைக்காலத்தில் இராணுவத்திற்கென சிறீலங்கா அரசால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு தமிழ்ப் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டதும் பின்னர் அவர்களுக்கு நேர்ந்துவரும் துன்புறுத்தல்களும் செய்திகளாக வெளிவந்திருந்தன.

 

இந்த நிலையில் தொடர்ந்தும் அதேவகையில் ஆட்சேர்ப்பினை செய்தால் தமிழ் இளைஞர் யுவதிகளை தமது தேவைகளுக்கு உள்வாங்க முடியாமல் போகும் என்பதை அறிந்துகொண்ட அரசு புதிய யுக்தி ஒன்றினை கையாள முயலும் செயற்பாடு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

அண்மையில் யாழில் ஒட்டப்பட்டிருக்கும் ஆட்சேர்ப்பு அறிவித்தலும் அதன்பின்னரான நேர்முகத்தேர்வும் பாரிய அச்சத்தை தோற்றுவித்துள்ளது. ”அரச சேவைக்கு ஆட்சேர்த்தல்” என்ற தலைப்பில் எந்தவித தகமை அடிப்படைகளும் கோரப்படாமல் தகுதியும், திறமையும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற வகையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதும் அதற்கு மாதாந்தம் 25,000.00 ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நாம் கவனிக்க வேண்டியவை,

 

1. இதுவரைகாலமும் இலங்கை அரசால் சகலவிதமான வேலை வாய்ப்புக்களும் வர்த்தமானி அறிவித்தல் மூலமே தகுதி, வேதன அடிப்படை, பணி விபரங்கள் கோரப்படுவதும் பின்னர் அதற்காக போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு அதனடிப்படையில் நியமனம் வழங்கப்படுவதும் வழமை.

 

2. விளம்பரத்தில் 25,000.00 என தெரிவித்துள்ளபோதும் ஆட்சேர்ப்பினை செய்த நல்லிணக்க ஆணையர் 30,000.00 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

 

3. இதுவரைகாலமும் அரச வேலைவாய்ப்புக்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சே மேற்கொண்டு வந்தது ஆனால் தற்போது அதனை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

 

4. குறித்த ஒரு பிரதேச செயலர் பிரிவில் மட்டும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது அது குறித்து குறிப்பிட்ட பிரதேச செயலர் தனக்கு தெரியாது என அறிவித்துள்ளார்.

 

5. வழமையாக ஆவணங்களின் போட்டோப்பிரதிகள் பெற்றுக்கொள்ளப்படும் இங்கு வேலையில் இணைந்தால் விலகி எங்கும் செல்லாதவாறு இருக்க ஆவணங்களின் மூலப்பிரதிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

6. இலங்கை அரசசேவையில் உயர்பதவியான நிர்வாக சேவை அதிகாரிகளுக்கே அடிப்படை வேதனம் இதுவரை இருபத்தைந்தாயிரம் வழங்கப்படாத நிலையில் இதன் உள்நோக்கம் என்ன?

 

7. தகுதி அடிப்படையல்லாமல் சகல வேலைகளுக்குமான விண்ணப்பங்களை கோருவதன் மூலம் யாழிலுள்ள சகல இளைஞர் யுவதிகளின் சகல விபரங்களும் பாதுகாப்பு அமைச்சுக்கு பெற்றுக்கொள்ளல்.

இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கின்றபோது இளைஞர் யுவதிகளிடையே பாரிய கேள்விகள் எழுவதை தவிர்க்கமுடியாமல் போகின்றது. வழமையான எந்த நடைமுறையும் பின்பற்றப்படாமல் சட்டவிரோதமான முறையில் சுவர் நோட்டீஸ் மூலம் விண்ணப்பங்கள் கோரப்படுவதும் அதற்கான வேதன அறிவிப்பும் இளைஞர் யுவதிகளை கவரும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் பட்டதாரிகளுக்கே ஒருவருட காலமாக பயிலுனர்களாக அவர்களை ஆட்சேர்ப்பு செய்த அரசு அவர்களுக்கு ஒருவருட காலமாக வெறும் பத்தாயிரம் ரூபா வேதனமே வழங்கியது கடந்த ஆண்டு இறுதியிலேயே அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

 

நிரந்தர நியமனம் பெற்ற அவர்களே இதுவரை ரூபா இருபத்தந்தாயிரம் பெறும் நிலைக்கு வரவில்லை. நிலமை இதுவாக இருக்கும்போது சங்கீதம், நடனம், பாடகர், எழுதுனர், கணனி இயக்குனர், தமிழ் ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் என்ற போர்வையில் 15 இற்கு மேற்பட்ட பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

 

சாதாரணமாக விவசாய மேற்பார்வையாளருக்கே பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும் என அறிவித்தலுள்ளது. அவ்வாறு இதில் 600 வரையான பெண்களை உள்வாங்கும் செயற்பாடு மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கான பதிவுகள் நேற்று நெல்லியடியில் இடம்பெற்றுள்ளது இதில் 2000 வரையானோர் பதிவு செய்ததாகவும் 1350 பேர் உள்வாங்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு 30,000.00 வேதனம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னர் இராணுவத்தினால் பராமரிக்கப்படும் பண்ணைகளுக்காக வேலைக்கு பெண்கள் பாரியளவில் உள்வாங்கப்பட்டதும் பின்னர் அவர்கள் இராணுவத்தேவகைளுக்கு பயன்படுத்தப்பட்டதும் செய்திகளாயின.

 

கடந்தவாரம் விசுவமடு பகுதியில் கிணற்றில் வீசப்பட்ட பெண்ணின் நிலையும் அந்த வகையானதே. பண்ணை வேலைக்காக சேர்ந்த பெண்ணை காதலிப்பதாக கூறிய படைவீர்ர் மூலம் பெண் கற்பமாக்கப்பட்டுள்ளாள் பின்னர் தன்னை திருமணம் செய்யுமாறு பெண் கேட்டதனால் அவளை கொலைசெய்து கிணற்றில் வீசியுள்ளனர்.

 

விசாரணை செய்த பொலீசாருக்கு மோப்பநாய் காட்டிய வழி அரகிலுள்ள படைமுகாம் அந்த வகையில் அதில் கடமையாற்றிய படை வீர்ர் விசாரணைகளின்பின் கைதுசெய்யப்பட்டுள்ளார் அவர் இன்று நீதிமன்றில் ஆயர் செய்யப்படுவார்.

 

இதுதான் தாயகத்திலுள்ள நிலமை. உண்மையிலேயே இது சட்டவிரோத செயற்பாடு என தெரிந்திருந்தும் ஏன் தமிழ் அரசியல் தலைவர்கள் மௌனமான இருக்கின்றனர்? வேலைவாய்ப்பு என்பது வரவேற்கத்தக்கதே ஆனால் அதனை சட்டரீதியாகவும் வெளிப்படையுடனும் நடைபெறுகின்றதா என்பதைக்கூட இவர்களால் வெளிக்கொண்டுவரமுடியாதா?

 

-சக்கரவர்த்தி-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.