Jump to content

இலங்கையில் விஸ்வரூபமெடுக்கும் விபசாரம்.


Recommended Posts

319_content_p21_1.jpg

புத்தபெருமானின் பஞ்சசீலக் கொள்கைகளை பின்பற்றும் நாடென பௌத்தர்கள் பெருமையடித்துக் கொள்ளும் எமது நாட்டில் விபசாரம், ஓரினச் சேர்க்கை, சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு, சூதாட்டம் என்ற பஞ்ச கொள்கைகளே பின்பற்றப்படுகின்ற தோற்றப்பாட்டைஅண்மைக்கால தரவுகள், நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. 2கோடி மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், கணக்கெடுப்பின்படி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலை மாதர்களும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களும், 30 முதல் 40 ஆயிரத்திற்கிடைப்பட்ட சிறுவர் பாலியல் தொழிலாளர்களும் இருக்கின்றார்கள் என்பதை அறியும்போது, இன்னும் சில வருடங்களில் எமது நாடு தாய்லாந்தின் இடத்தையெட்டி விடுமென்ற அச்சமே ஏற்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை விபசாரம் சட்டப்படி குற்றம், ஓரினச் சேர்க்கை தொடர்பில் சட்டத்தில் ஏதாவது இருக்கின்றதா என்பது தொடர்பில் குழப்ப நிலை. ஏனெனில், எமது நாட்டில் முக்கிய நகரங்களில் குறிப்பாக தலைநகரை அண்டிய பகுதிகளில் ஓரினச்சேர்க்கையாளர் சங்கங்கள், அமைப்புகள் சுதந்திரமாக செயற்படுவதுடன், இந்த நாட்டின் பிரபலங்கள் பலரும் அதில் தலைமைப் பதவிகளிலும், அங்கத்தவர்களாகவும் உள்ளனர். இவர்கள் தொடர்பில் சட்டம் இன்னும் பாயாததே இந்தக் குழப்ப நிலைக்கு காரணம். எமது நாட்டைப் பொறுத்தவரையில் விபசாரமே இன்று புற்றுநோயாக அரித்து கொண்டிருக்கிறது. முன்னர் அங்கொன்றும், இங்கொன்றுமாக காணப்பட்ட விலைமாதர்கள், இன்று தொழில் நிறுவனங்களைப் போல் நிர்வாக கட்டமைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். பாரியதொரு தொழிலாக உருவெடுத்துள்ள விபசாரத்தின் பின்னணியில் அரசியல்பலமும், பணபலமும் இருப்பதுடன், பொலிஸ் பாதுகாப்பும் இருப்பது ஒன்றும் ரகசியமான விடயமல்ல. சில நேர்மையான பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான விபசார தொழில் நிலையங்கள் மீதோ அல்லது விலை மாதர்கள் மீதோ நடவடிக்கை எடுத்தால், அவர்களுக்கு கிடைப்பது பட்டங்களோ, பதவிகளோ அல்ல. மாறாக இடமாற்றங்களுக்கும், பழிவாங்கல்களுக்குமே உள்ளாகின்றனர். அந்தளவுக்கு இன்று விபசாரமும் விலை மாதர்களும் சக்தியுள்ளவர்களாக காணப்படுகின்றனர். இலங்கையில் விபசாரம் இரண்டு வகைப்படும். ஒன்று தாமாக விரும்பி இத்தொழிலில் ஈடுபடுவது. இரண்டாவது கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப்படுவது. இந்த முதலாவது வகையில் பாடசாலை மாணவிகள் முதல், ஆடம்பரத்தை விரும்பும் குடும்பப் பெண்கள் வரை உள்ளடங்குகின்றனர். இரண்டாவதில் வறுமையின் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். விபசாரம் பொருளாதார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே காணப்படுகின்றது. இதில் அதிகளவான பெண்களை வறுமைதான் விபசாரத்தின் பக்கம் கொண்டு செல்கின்றது. இதற்கு விபசாரத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தில் உள்ள பலவீனமும் காரணமாகின்றது. வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இந்த விபசாரத் தொழில்சார்ந்த பெண்கள் தான் அதிகமாக சீரழிக்கப்பட்டு வருகின்றனர். ஏனெனில், அவர்களின் உடல்தான் இந்தத் தொழிலின் மூலதனம். முன்னைய காலங்களில் ஆண்களின் கட்டுப்பாட்டில் நடந்து வந்த இந்தத்தொழில் இன்று பெரும்பாலும் பெண்களின் கட்டுப்பாட்டிலும், வழிநடத்தலிலும் இடம்பெறுவதுதான் கொடுமை. அதிலும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிமாக ஈடுபட்டு வந்த இத்தொழிலில் இன்று 14வயது சிறுமிகள் கூட அதிகளவில் ஈடுபடுத்தப்படுவது  தான் மகாகொடுமை. சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபட வைப்பதற்கு சுற்றுலாத்துறை பிரதான பங்கு வகிக்கின்றது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குறைந்த செலவில் நிறைந்த சுகம் காணவே எமது நாட்டை நோக்கி அதிகம் வருகின்றனர். இவர்களில் அநேகர் உடல் சுகத்திற்காக சிறுமிகளை நாடுவோராகவும், ஓரினச் சேர்க்கையாளர்களாகவும் உள்ளனர். இவ்வாறான கீழ்த்தரமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கென்றே சுற்றுலாத்தலங்களை அண்மித்த பகுதிகளில் பல குழுக்கள் இரவு, பகலாக செயற்படுகின்றன. இக்குழுக்களினாலேயே சிறுமிகளும், சிறுவர்களும் விபசாரத்தினுள் தள்ளப்படுகின்றனர். கலாசாரத்திற்கும், கட்டுக் கோப்புக்கும் பெயர் பெற்ற வடக்கு, கிழக்கில் கூட இன்று விபசாரமும், விலைமாதர்களும் அதிகரித்து வருகின்றனர். இதற்கு அங்கு நடந்த போரும், விதவைப் பெண்களின் வறுமையுமே காரணங்களெனக் கூறப்படுகின்றது. ஆனாலும், அங்கு விலைமாதர்களாக இருப்பவர்கள் அனைவரும் விதவைகள் என்றோ அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றோ கூறமுடியாது. வடக்கில் யுத்தம், முடிவடைந்த நிலையில், அபிவிருத்தி என்ற பெயரில் அப்பகுதியின் கலாசாரம், பண்பாடுகளை அழிக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக தென்பகுதிகளைச் சேர்ந்த பல விலைமாதர்கள் வடக்கில் சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதனை மூடி மறைத்து, வடக்கு பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஒரு கீழ்த்தரமான பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால், தென்பகுதியைப் பொறுத்த வரையில் பெரும்பான்மையின விலைமாதர்களுடன் வடக்கு, கிழக்கு, மலையகத்தைச் சேர்ந்த பெண்கள் சிலரும் விபசாரத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸார் அண்மையில் மருதானைப் பகுதியில் விபசார நிலையமொன்றை சுற்றிவளைத்த போது அதில் கைதான 5 பெண்களில் இருவர் கிழக்கு மாகாணத்தையும், ஒருவர் வடமாகாணத்தையும் சேர்ந்தவராக இருந்தனர். இதேபோன்று இன்னும் சில இடங்களில் நடந்த பொலிஸாரின் சுற்றி வளைப்புகளிலும் இவ்வாறு மலையகப்பகுதி வட, கிழக்கைச் சேர்ந்தோர் கைது செய்யப்பட்டிருந்தனர். தென்பகுதியை பொறுத்தவரையில், மசாஜ் நிலையங்கள், ஆயுர்வேத நிலையங்கள் என்ற பெயர்களில் இயங்கும் இடங்களிலேயே விபசாரத் தொழில் அதிகளவு இடம்பெறுகின்றது. இதுமட்டுமின்றி, உல்லாச ஹோட்டல்களில் கூட விலைமாதர்கள் பல பேர் உள்ளனர். விபசாரத் தொழில் இடம்பெறும் சிறு சிறு இடங்களை சுற்றிவளைத்து விலைமாதர்களை கைது செய்யும் பொலிஸாரால் இவ்வாறான ஹோட்டல்களை நெருங்கக்கூட முடியாது. ஏனெனில், அவை அரசியல் பின்னணி கொண்டதாக அல்லது அரசியல் செல்வாக்கு கொண்ட ஹோட்டலாக இருக்கின்றன. இலங்கை சட்டத்தில் விபசாரம் தொடர்பில் பழையகால விதிகளே காணப்படுகின்றன. இதற்கு ஒரு உதாரணத்தை கூற முடியும். கொள்ளுப்பிட்டிப் பகுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவரை கைதுசெய்த பொலிஸார் அவரை தகுந்த ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, அவருக்கு நீதிமன்றம் தண்டப்பணமாக பத்து ரூபாவை மட்டும் விதித்து விடுவித்தது. ஏனெனில், இலங்கைச் சட்டத்தில் விபசாரம் தொடர்பில் அந்தக்கால நடைமுறையே பின்பற்றப்படுகின்றது.  அதனாலேயே அந்த வெளிநாட்டு விலை மாதுக்கு 10 ரூபா தண்டமாக விதிக்கப்பட்டது. 10ரூபா இருந்தால் இலங்கையில் விபசாரம் செய்யலாம் என்ற நிலையை இது ஏற்படுத்தியதால், இச்சட்டம் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதேவேளை, இலங்கையிலுள்ள விலைமாதர்களின் எண்ணிக்கை, விபசாரத்தில் ஈடுபடுவதற்கான காரணங்கள், எந்த மாவட்டத்தில் அதிகமாக இடம்பெறுகின்றன. கட்டுப்படுத்துவதற்கான வழி என்ன என்பன போன்ற கேள்விகளை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாநேரத்தில், ஐக்கிய தேசியக்கட்சியின் அநுராதபுரம் மாவட்ட எம்.பி.ஹரிசன், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் இவ்விடயம் தொடர்பில், அரசு எந்தளவுக்கு அசட்டையாக செயற்படுகின்றது என்பதை எடுத்துக்காட்டியது.  இலங்கையிலுள்ள விலை மாதர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் விலைமாதர்களை தேடிப்பிடித்து எண்ணிக் கொண்டிருப்பது எனது வேலையல்ல. அதற்கு எனக்கு நேரமும் இல்லை. முடிந்தால் நீங்கள் எண்ணிச் சொல்லுங்கள். எந்த மாவட்டத்தில் அதிகம் இடம்பெறுகின்றதென்ற கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அநுராதபுரம் மாவட்டத்தில்  தான். அதனால் நீங்கள் மனதுவைத்தால் விலை மாதர்களை குறைக்க முடியும். இதற்கு ஹரிசன் எம்.பி.அமைச்சரே, நான் விலை மாதர்களிடம் போகிறவன் அல்ல என்ற போது, நானும் அப்படிப்பட்டவன் அல்ல. ஆனால், அப்படியானவர்களும் இங்கு இருக்கின்றார்கள். எனவே, இவ்வாறானவர்கள் விலைமாதர்களிடம் செல்வதை நிறுத்தினால் அவர்களின் எண்ணிக்கையும் குறையும். எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும். அதனைவிடுத்து விலை மாதர்களை தேடிப் போகின்றவர்களையோ விபசாரத்தில் ஈடுபடுகின்றவர்களையோ, சட்டம்போட்டு தடுக்க முடியாது என அமைச்சர் பதிலளித்தார். இதேநேரம், இலங்கையில் விபசாரத்தொழில் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தான் அரசு, கஸினோக்களுக்கு (சூதாட்ட நிலையங்களுக்கு) சட்ட அங்கீகாரம் வழங்க முடிவெடுத்தது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. கஸினோக்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கினால் விபசாரத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டதாகி விடுமென கடும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. கஸினோக்கள் சட்ட அங்கீகாரத்துடன் இயங்கத் தொடங்கினால், விபசாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து விடுமென்றும் பலாத்காரமாகக் கூட பலர் விபசாரத்தில் தள்ளப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்படும் அதேவேளை, விபசாரத்திற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கிவிட்டால் நாட்டில் இடம்பெறும் பாலியல் வல்லுறவுகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறையுமென குரல் கொடுக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், விபசாரம் இலங்கைச் சட்டத்தில் குற்றமாகக் காணப்படினும், அத்தொழில் சட்ட அங்கீகாரத்துடன் நடப்பது போன்றே பகிரங்கமாகவும், பரபரப்பாகவும் இடம்பெற்று வருகின்றது. நம்நாட்டுப் பெண்கள் மட்டுமின்றி, ஜப்பான், தாய்லாந்து, சீனா, ரஷ்யா, உக்ரைன்,  இந்தியா, பிலிப்பைன்ஸ், கொரியா நாட்டு பெண்கள் கூட இங்கு வந்து விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். வெளிநாடுகளில் விபசாரம் சட்ட பூர்வமானதாக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு பெண்கள் மீதான குற்றங்கள் குறைவு. அதேபோன்று இலங்கையிலும் விபசாரத்தை சட்ட பூர்வமாக்கலாம் தானே எனக் கூறுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். எமது நாட்டின் ஆதார சக்தியே குடும்பங்கள் தான். விபசாரம் அனுமதிக்கப்பட்ட நாடுகளின் குடும்ப உறவுகளை கொஞ்சம் சீர்தூக்கிப் பார்த்தால், அப்போது தெரியும் எமது நாட்டின் சிறப்பு. விபசாரம் எமது நாட்டில் அங்கீகரிக்கப்பட்டால், ஏழ்மையில் சிக்கியிருக்கும் பெண்கள் விபசாரத்தில் தள்ளப்படுவார்கள். விபசாரத்தின் மூலம் கிடைக்கக்கூடிய அபரிதமான வருமானத்திற்காக சிறுவயதிலேயே பெண் குழந்தைகள் விபசார சந்தையில் விற்கப்படுவார்கள். குடும்ப அமைப்பே சீர்குலைந்து விடும். எனவே, எமது நாட்டுக்கு இன்றைய அவசரத்தேவை விபசாரத்தை ஒழிக்கக் கூடிய மிகக்கடுமையான சட்டங்களே. அத்துடன், பெண்களுக்கு எதிரான குற்றவாளிகள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும். சிறுவர், மகளிர் விவகார அமைச்சுக்கு பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும். கஸினோவுக்கு சட்டபூர்வ அனுமதி வழங்குவது நிறுத்தப்பட வேண்டும். பெண்கள், சிறுவர்களின் விடயங்களை கையாளவென பெண் உயரதிகாரிகளைக் கொண்ட தனிப் பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட வேண்டும். இல்லாது விட்டால், விபசாரத்தினால் நாம் ஆசியாவின் அசிங்கமாகி விடுவோம். 

 

thinakkural.lk/article.php?article/gkhzw3mrng22312a8a8124004781jtfoedf8963b2e2ac0ed01b07b8klgsy#sthash.K7mKmKy1.dpuf

Link to comment
Share on other sites

child-prostitution-in-sri-lanka-source.j
Link to comment
Share on other sites

தானும் விபசாரத்தில் ஈடுபட்ட நிலையில் மகளையும் பயன்படுத்தி நாளாந்தம் 90 ஆயிரம் ரூபா வரை வருமானம் பெற்ற பெண் -

 

கொட்டாவ பிரதேசத்திலுள்ள தாயொருவர் தனது 14 வயதான அழகிய மகளை சொகுசு வாகனங்களில் வரும் தனவந்தர்களுடன் விபசாரத்துக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

5159_prostitute.jpg
அந்தத் தாய் தனது மகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதுடன் தானும் விபசாரத்தில் ஈடுபடுவதாகவும் நாள் ஒன்றுக்கு அறுபதினாயிரம் ரூபா முதல் 90 ஆயிரம் ரூபா வரை விபசாரத்தின் மூலம் வருமானமாக பெறுவதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மலால் சத்துன் கஹவத்த தெரிவிக்கின்றார்.

 

தாயால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட மகள் தாய் தனக்கு பணம் வழங்காததால் கோபித்துக் கொண்டு தனது பாட்டியின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் இந்த யுவதி குறித்து கிடைத்த தகவலொன்றை அடுத்து அவரை பொலிஸார் இந்த யுவதியை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்றத்தின் பணிப்பின் பேரில் சிறுவர் இல்லமொன்றில் சேர்த்துள்ளதாகவும் ஹக்கதுன்கஹவத்த தெரிவிக்கின்றார்.


தனது மகளை காரில் வந்த தனவந்தர்களுக்கு விபசாரத்திற்கு உட்படுத்தி விற்பனை செய்து வந்த 35 வயதான தாய் சம்பவம் தொடர்பாக தகவல்கள் வெளிவந்ததும் வீட்டை விட்டு தலைமறைவாகி விட்டதாகவும் அவரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற் கொண்டு வருவதாகவும் பணியகம் தெரிவிக்கின்றது .

 

http://metronews.lk/article.php?category=news&news=5159

 

Link to comment
Share on other sites

தாயால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட மகள் தாய் தனக்கு பணம் வழங்காததால் கோபித்துக் கொண்டு தனது பாட்டியின் வீட்டுக்கு சென்றுள்ளார்

இலங்கையில் தொழிலாளர் நலத்துறை என்ன செய்து கொண்டுள்ளது? :huh::D

Link to comment
Share on other sites

குழந்தைகள் விபச்சாரத்தில் சிறி லங்கா உலகின் இரண்டாம் இடத்தை பல வருடங்களாக தக்க வைத்துள்ளது.

42,000 குழந்தைகளை விபசாரத்திற்கு பாவித்துக்கொண்டு நாட்டில் வசந்தம் வீசுவதாக நடிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.