Jump to content

நான் ஏன் வைகோவை தேர்ந்தெடுத்தேன்?


Recommended Posts

நான் ஏன் வைகோவை தேர்ந்தெடுத்தேன்?

 

ஒரே சிந்தனை கொண்ட நண்பர் இல.கோபால்சாமியின் பதிவு.

நீண்ட நாட்களாகவே பகிர எண்ணி இருந்த அனுபவம். தற்போதுதான் நேரம் வாய்த்தது.

 

562154_10151523811422068_1148711779_n.jp

 

நான் மாணவனாக இருந்த பொழுது, ஒரு அடிமைச் சமூகம் போல நடத்தப் பட்டிருக்கிறேன். வெறும் படிப்பு, அளவான பொழுதுபோக்கு, செய்தித் தாள்களில் வரும் நாடு நடப்புகள் தவிர வேறெதுவும் அறிந்திருக்கவில்லை.

 

போட்டி நிறைந்த எதிர்காலத்தை கல்வி என்ற ஒற்றை ஆயுதம் கொண்டு எதிர்கொள்ள வேண்டி இருந்ததால் அதை மட்டுமே பட்டை தீட்ட வேண்டிய நிர்பந்தம். ஆயினும் கற்ற கல்வி கைவிட வில்லை. அந்தக் கல்விதான் பின்னாளில் எதையும் ஆராய்ந்து மெய்ப்பொருள் கண்டறியும் கருவியாயிற்று.

 

இன்றைக்கு தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் தற்போதைய மாணவர்கள் அனைத்தையும் விரல் நுனியில் கண்டறிந்து வைத்துள்ளனர். நம் நாடு இப்படி இருக்கிறதே என எழுந்த ஆதாங்கத்தின் அழுத்தம் கூடிக் கொண்டிருந்த வேளையில் சானல் 4 பற்ற வைத்த நெருப்பு இன்று கொழுத்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.

 

இன்றைக்கு உங்களில் விழுந்த அந்தப் பொறி தான், ஐந்தாண்டுகளுக்கு முன்பு என்னுள் விழுந்தது.அப்போது நான் இங்கிலாந்து நாட்டில் மாணவனாக இருக்கிறேன். நம் நாட்டைக் காட்டிலும் சற்றே அதிக தொழில் நுட்பம் பயன்படுத்த முடிந்தது. நேரமும் அதிகம் கிடைத்தது.

 

அப்போது என்னுள் எழுந்த பல கேள்விகளுக்கு விடை காண முற்பட்டதின் விளைவு, பின்னாளில் வாழ்க்கைப் பாதையை பயனுள்ள திசையில் செலுத்த ஏதுவாயிற்று.

 

எனது அடையாளம், எனது இனம், எனது சமூகம் குறித்த ஒரு தெளிவு பிறந்தது. வரலாற்றுச் சிறப்புடனும், பெருமையுடனும் தெளிந்த நீரோடையாக ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஓடிக்கொண்டிருந்த நமது தமிழ்ச் சமூகத்தை, அண்மைக் காலத்தில் முடை நாற்றம் வீசும் சாக்கடையாக மடைமாற்றம் செய்து வைத்துள்ளனர் என்பதை எளிதில் உணர முடிந்தது.

 

எந்தக் கோணத்தில் ஆராய்ந்தாலும், நாம் தற்போது அனுபவிக்கும் இன்னல்களுக்கு நாம் சற்றும் தகுதி உடையவர்கள் அல்ல என்கிற உண்மை புலப்பட்டது. இதை மாற்ற நம்மால் ஆன பங்களிப்பை ஏதேனும் ஒரு வகையில் செய்ய வேண்டும் என்ற உறுதி பிறந்தது.

 

ஆனால் ஒரு தனி மனிதாக நாம் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிகக் குறைவாக இருக்கும். நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும் நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளதுதான் அரசியல். இன்றைய நமது நிலைக்குக் காரணம் அரசியல். முள்ளை முள்ளால் எடுப்பது போல, வைரத்தை வைரத்தால் அறுப்பது போல அரசியலை அரசியல் கொண்டுதான் எதிர்கொள்ள இயலும். அந்த சமயத்தில் நான் ஆராய்ந்து அடையாளம் கண்டுகொண்ட ஒரு அரசியல்வாதிதான் வைகோ அவர்கள்.

 

இன்றைக்கு நமக்கு இணையம், தகவல் தொழில்நுட்பம் தந்த இனமான உணர்வை அன்றைக்கு பெரியார்,அண்ணா ஆகியோரின் விழிப்புணர்வுப் பிரசாரங்களின் மூலம் பெற்றவர் வைகோ. அவை அனைத்தையும் இளம் வயதில் உணர்வுப் பூர்வமாக ஏற்றுக் கொண்டதால் தானோ என்னவோ தமிழ் மொழிப் பற்றையும், இனப் பற்றையும் இன்றளவும் குடத்து விளக்காக காப்பாற்றி வந்திருக்கிறார். அவரது போதாத காலம் அவரது திறமைகளே அவருக்கு எதிரிகளாயின. அரசியல் களத்தில், ஆட்சி அதிகாரத்த்தின் உச்சாணிக் கொம்பில் இருந்த சக்திகளை, எவ்வித துணையும் இன்றி, ஊடக பலமும் இன்றி தன்னந்தனியாக எதிர்கொண்டு இருந்த வைகோ எனக்கு ஒரு வீரனாகக் காட்சி அளித்தார். அரசியல் எதிரிகளை எல்லாம் தான் மிதித்து ஏறுகிற படிக்கட்டுகளாக வீழ்த்தும் அரசியல் களத்தில், 20 ஆண்டுகள்,

 

அதிலும் குறப்பாகக் கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்வதெல்லாம் சாதரான காரியம் அல்ல. ஒரு மாத காலம் நடந்த மாணவர் போராட்டத்தை உடைக்க என்னென்னவோ வேலைகளைச் செய்கிற அரசியல்வாதிகள் வைகோ போன்றவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளில் என்னென்ன தொல்லைகள் நிர்பந்தங்கள் கொடுத்திருப்பார்கள் என்பதெல்லாம் சற்றே யோசித்தால் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

 

நேர்மை, நாணயம், ஒழுக்கம், உலகளாவிய அறிவு, சமரசம் இல்லா போராட்டக் குணம், மாற்றாரையும் மதிக்கும் பண்பு ஆகிய அனைத்தும் இயல்பாகவே என்னை அவர்பால் ஈர்த்தது.

 

எனது நம்பிக்கையும் வீண்போகவில்லை என்பதை பின்னாளில் ஏற்பட்ட அனுபவங்களின் வாயிலாக உறுதி செய்து கொண்டேன். எனது சமூகத்திற்கு நான் பட்ட கடனை இவர் வாயிலாகத் திரும்பச் செலுத்துவதுதான் முறையாக இருக்கும் என்ற காரணத்தினாலேயே அவருக்கு அதரவாக நிற்கிறேன். ஆதாயத்திற்காக அல்ல, பதவி, அதிகாரத்தில் இருக்கும் ஒருவருக்குத் துணையாக அல்ல, எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவருக்குத் துணையாக நிற்கும் என்போன்ற ஒவ்வொரு உண்மை ஆதரவாளனும் நான் கடந்து வந்த பாதையில் தான் கடந்து வந்திருப்பான். என்போலவே அவன் அதில் மிகவும் பெருமையும் அடைந்திருப்பான்.

 

தமிழகத்தில் அரசியல் தீய சக்திகள் ஒழிந்து சமூகம் தழைக்க வேண்டுமானால் வைகோ போன்ற நேர்மையாளர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்.

 

மாணவர் போராட்டம் நடந்து வரும் இவ்வேளையில் எனது அனுபவத்தைப் பகிர்ந்துகொன்டதன் காரணம், இளைஞர்களை எதோ ஒரு கட்சியின் பக்கம் ஈர்பதர்க்காக அல்ல. இன்றைய இளைஞர்கள் எதையும் எளிதில் நம்பி விடுபவர்களும் அல்ல. அணைத்து தகவல் தொழில்நுட்பத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கும், சமூக அக்கறை கொண்ட மாணவர்கள் இளைஞர்கள் தங்கள் அறிவின் துணைகொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டுகிறேன். ஓரிரு நல்லவர்கள் நம் கண்முன்னே இருக்கத்தான் செய்கிறார்கள்.

அத்தகைய நல்ல தலைவர்களை ஆதரியுங்கள், அரசியல் மாற்றம் நிச்சயம் ஏற்ப்படும்.

 

அதனால் ஏற்ப்படும் சமூக மாற்றம் வளர்ச்சிப் பாதையில் நம்மை இட்டுச் செல்லும்.

யார் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும், அதிகாரத்திற்கு வந்தாலும் வராவிட்டாலும், எதிரிகள் எத்தனை சக்தி படைத்தவர்களாக இருந்தாலும் சமூக நலனை மட்டுமே இலக்காகக் கொண்ட எங்களின் பயணம் தொய்வின்றி தொடரும்.

 

 

நன்றி! நண்பர் இல.கோபால்சாமி.

Link to comment
Share on other sites

நேர்மை, நாணயம், ஒழுக்கம், உலகளாவிய அறிவு, சமரசம் இல்லா போராட்டக் குணம், மாற்றாரையும் மதிக்கும் பண்பு ஆகிய அனைத்தும் இயல்பாகவே என்னை அவர்பால் ஈர்த்தது.
வாழ்க வைகோ!
Link to comment
Share on other sites

சேறு சகதிகள் நிறைந்துள்ள இந்திய அரசியலில் இவர் எப்படித் தன்னைக் காப்பாற்றிக்கொண்டார் என்பது வியப்பானது.

 

அதுவும் நயவஞ்சகம், நரித்தனம் என்பவற்றின் ஒட்டுமொத்த வடிவமான கருணாநிதியுடன் இருந்தும் அவை எதுவும்

 

தன்னைத் தீண்டாமல் பார்த்துக்கொண்டது பெரிய சாதனை எனலாம். என்றும் சிறப்புடன் வாழ்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க வைகோ

ஈழ அரசியலுக்கும், சுற்று சூழல் பாதுகாப்புக்கும், நேர்மைக்கும், எதிரியையும் மதிக்கும் தன்மைக்கும் இவருக்கு நிகர் இவரேதான்

Link to comment
Share on other sites

இது போன்றத் தலைவர்கள் மீண்டும் கிடைப்பார்களோ?

வைகோ அவர்கள் இவர்போன்றோரை சிறிது நினைவுப்படுத்துகிறார்.

 

 

644359_583295528355368_1233964463_n.jpg

 

 

 

1955ம் வருடம் டிசம்பர் மாதம் காமராஜ் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின. வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பலர் வீடிழந்தனர். தங்கள் உடமைகளை எல்லாம் இழந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவையில் துடித்தனர். அப்போது முதல்வர் காமராஜ் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்தார். ஒரு கிராமத்தை முற்றிலும் நீர் சூழ்ந்து கொண்டது, வெளி தொடர்பே அற்றுப்போனது. உணவுக்கு கூட வழியில்லாமல் மக்கள் பட்டினியால் தவித்தனர். அதைக் கேள்விபட்ட காமராஜ், அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளோடு புறப்பட்டார்.

 

 

ஆனால் ஊசாலிடிக் கொண்டிருந்த பாலமும் உடைந்து போனது. அதிகாரிகள் காமரஜிடம் "அய்யா இதற்கு மேல் கார் செல்லாது, அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை நாங்கள் சில பேர் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு இடத்துக்கு செல்லுங்கள்" என்றார்கள். ஆனால் காமராஜ் "அதிகாரிகளே எல்லாத்தையும் கவனிக்கச் சொல்லி கோட்டையிலிருந்தே நான் உத்தரவு போடலாமே. மக்கள் கஷ்டத்தை நான் நேரடியாப் பாக்கணும். தேவையானா நிவாரணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யனும். அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும். அதனால்தான் நானே வந்தேன்" என்று சொலியபடியே வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டார். சாரக் கயிரை பிடித்துக் கொண்டு மார்பளவு நீரில் கால்வாயைக் கடந்து மறு கரைக்கு சென்றார். முதல்வரே தணணீரில் இறங்கி விட்டதால், அதிகாரிகளும் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர வேண்டியதாயிற்று. மறுநாளும் காமராஜ் திட்டமிட்டபடியே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

பெருந்தலைவரின் இந்த சேவையைப் பாராட்டி பேரறிஞர் அண்ணா திராவிட நாடு இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

"சேரிகள் பாட்டாளிகளின் குடிசைக்கள், உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள். இவை யாவும் நாசமாகிவிட்டன. வீடில்லை, வயலில்லை, உள்ளத்தில் திகைப்பின்றி வேறில்லை. ஆனால் தம்பி, நமது முதலமைச்சர் காமராசர் அந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். பெருநாசத்ததுக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக் ஈடுபட்டிருக்கிறார் என்பதை என்னும் போது இதோ எமக்கு ஆறுதல் அளிக்க எமது முதலமைச்சர் வந்துள்ளார். எமது கண்ணீரை காணுகிறார். தமது கண்ணீரை சிந்துகிறார். ஆறுதலை அள்ளித் தருகிறார். கோட்டையிலே அமர்ந்து கொண்டு உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்ல இவர். மக்களை நேரில் சந்திக்கும் தலைவர் என்று மக்கள் வாழ்த்துகின்றனர். தம்பி! சொல்லித்தானே ஆக வேண்டும் முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப்படுகிறோம்."

 

Link to comment
Share on other sites

நெடுமாறன் அரசியல் ஆசைகள் எதுமில்லாத ஒரு துறவி. அவரால் இயன்ற அனைத்து நல்ல முயற்சிகளையும் செய்து பார்த்தார். பலனில்லை.

 

 

544388_398371463593634_240168281_n.jpg

 

கடந்த 20 ஆண்டுகளாக ஈழப்போராட்டம் பற்றியும், பிரபாகரனைப்பற்றியும் விடுதலைப்புலிகளைப்பற்றியும் வைகோ பெருமிதம் பொங்கப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். அவர் எந்தத் தடைச் சட்டத்திற்கும் அஞ்சி தன் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை. இருந்தும் அவருக்குப்பின்னால் மிகத் திரளான மக்கள் கூட்டம் இதுவரை இல்லாத காரணத்தால் அவரது மனமார்ந்த ஈடுபாடு இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் போதுமானதாக இல்லை. ஆனால் வைகோவிற்குப் பின்னால் பெருந்திரளான கூட்டம் இனி உருவாகும்.


- தமிழருவி மணியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக அரசியல்  ஆய்வாளர்கள் முக்கி முக்கி ஆய்ந்து விட்டு வந்து எழுதுவார்கள்.

 
ஏன் இரண்டு தொகுதிக்கு மேல் ஜெயிக்கவில்லை என்று.
 
பொய்யை சொல்லி புலம் பெயந்த நாடுகளில் வாழ்வை அமைத்தவர்கள். கேட்கிறார்கள் ஏன் உண்மை ஜெயிக்கவில்லை  என்று?
 
ஜெயித்த கருணாநிதியும் ஜெயாவும்  உண்மையானவர்கள் என்று ஒரு மறைபொருளை எழுதுகிறோம் என்பதே இவர்களுக்கு புலப்பட போவதில்லை. 
இதில் சர்வதேச அரசியல் வியாபாரம்.
Link to comment
Share on other sites

நான் தமிழகத்தில் வாழ்ந்தபோது தெரியாத்தனமாக எனக்கும் வாக்குரிமையைத் தந்துவிட்டார்கள்.. :D வைகோ அவர்களுககுத்தான் போட்டேன்.. :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.