Jump to content

தமிழர்களின், கலாச்சாரத்தோடு கலந்துவிட்ட பிரியாணி..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13-1410589802-biryani35-600.jpg

 

தமிழர்களின், கலாச்சாரத்தோடு கலந்துவிட்ட பிரியாணி..

பாரம்பரியத்தை மறந்த, பிள்ளைகளாகி விட்டோமா?

 

தமிழர்கள் கலாசார, வாழ்வியல் அங்கமாக பிரியாணி மாறிக்கொண்டு வருகிறது. தமிழர்கள் தங்கள் கலாசாரத்தை எளிதில் பறிகொடுப்பார்கள் என்பதற்கு பிரியாணி தற்போதைய உதாரணமாகிவிட்டது வேதனையான உண்மை.

 

கலாச்சாரம், பண்பாடு என்பது யாரும் ரூம் போட்டு யோசித்து உருவாக்கி வைத்துவிட்டு போனது கிடையாது. அந்தந்த மண்ணின் தன்மைக்கும், தட்பவெப்பத்துக்கும் ஏற்ப உருவாகுவதே வாழ்க்கை முறை. இயற்கையே அதைத்தான் விரும்புகிறது.

 

குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகளின் உடலில் இயல்பிலேயே ரோமங்கள் அதிகம் முளைப்பதையும், நம்மூர் போன்ற வெப்ப மண்டலங்களில் உள்ள விலங்குகள் அவ்வாறு இல்லாமல் இருப்பதையும் இயற்கையின் கலாச்சார சமிக்ஞை என்று கூறலாம்.

 

ஐவகை நிலம் கொண்ட தமிழ்நாடு.

இயற்கையாக அமைந்த நிலப்பாகுபாடுகளில் ஆங்காங்கு கிடைக்கப்பெற்ற பொருள்களையும், தங்கள் முயற்சியால் தட்பவெட்ப நிலைக்கேற்ப உற்பத்தி செய்த பொருள்களையும் கொண்டு தமிழர்கள் தங்கள் உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டுவந்தனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களை கொண்டது தமிழ்நாடு.

 

தேன், மீன், நண்டு.

உதாரணத்திற்கு, மலையும், மலையை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலப்பரப்பில், தேன் அதிகமாக கிடைக்கும். அதுவும் மலைத்தேன். எனவேதான் அப்பகுதி மக்கள் தேனையும், தினைமாவையும் அதிகம் விரும்பி சாப்பிட்டனர். குற்றால குறவஞ்சி இதை எடுத்து இயம்புகிறது. கடல் சார்ந்த நெய்தல் நில மக்கள் மீன், கருவாடு, நண்டு போன்றவற்றை சாப்பிட்டனர். ஏனெனில் அவர்களுக்கு அது பிரெஷ்ஷாக கிடைத்தது.

ஏழுவகை சாப்பாடு நம்முடையது.

அக்கால தமிழ் மக்கள் உணவு முறையை ஏழு பிரிவாக பகுத்துவிடலாம். காய்கறி உணவு, கனி உணவு, மாமிச உணவு, அரிசி உணவு, பிற உணவு, பருகுநீர், மது ஆகியவை அந்த ஏழு உணவுகள். தமிழகத்தில் கிடைக்காத காய்கறிகளே இல்லை எனலாம். பீர்க்கங்காய், மாங்காய், வெள்ளரிக்காய், புடலங்காய் என காய்கறி உணவுக்கு பஞ்சமில்லை. அதுபோலத்தான் கனிகளும், முக்கனியான மா, வாழை, பலா தமிழர்கள் விரும்பி உண்ட உணவாகும். இம்மூன்று மரங்களுமே வீட்டின் கொல்லைப்புறத்தில் பெரும்பாலான இல்லங்களில் இருந்தன. கம்பு, கேழ்வரகு, அரிசி, உணவில் முக்கிய இடம் பிடித்தவை.

 

மான், முயல் கறி.

தமிழக காடுகளில் திரியும் விலங்குகளை வேட்டையாடி மாமிச உணவு தேவையை தமிழன் பூர்த்தி செய்து கொண்டான். மான் (தற்போது சட்ட விரோதம்), முயல், பறவையினங்கள் அவனின் விருப்ப உணவாக இருந்துள்ளன. பருகுநீர் எனப்படும் பால், தயிர், வெண்ணை போன்றவை வயல் சார்ந்த மருத நில மக்களுக்கு இயல்பானவை. முழங்கையில் நெய் வழிந்தோட சாப்பிட்டு, பசுமாடுகள் சூழ வாழ்வதே செல்வத்தின் அடையாளம் என்று, சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. திருப்பாவையும் இதை பறை சாற்றுகிறது.

 

கள் குடித்து குதுகலித்தான்.

உடல் ஊக்கத்திற்காக தமிழர்களால் மது குடிக்கப்பட்டது. மது என்பது பட்டைச் சாராயம் கிடையாது. அதுவும் இயற்கையோடு இயைந்ததுதான். பனை, தென்னை போன்றவற்றில் இருந்து எடுக்கப்படும் கள் உடலுக்கு ஊக்கம் அளிக்க கூடியது. அதுவே மது என்று கூறப்பட்டு வந்தது. எப்படி பதநீர், இளநீர் சாப்பிடுகிறோமோ அதைப்போலத்தான் கள்ளும் பயன்படுத்தப்பட்டது. ஆயினும் அதையும் அளவோடுதான் வைத்திருந்தான் தமிழன். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பவனாயிற்றே.

 

பிரியாணி, பரோட்டா.

இவைதான் தமிழர்கள் கலாச்சார உணவாக காலம் காலமாக இருந்து வந்தது. ஆனால் தமிழர்களின் கலாச்சாரத்தில் கடந்த பல தலைமுறைகளாக அதீத மாற்றம் காணப்படுகிறது. கள்ளுக்கு பதிலாக கோக்கும், பெப்சியும், சாப்பாட்டில் பிரியாணியும், பரோட்டாவும் முக்கிய இடம் பிடித்துவிட்டன. இந்த தலைமுறை ஐரோப்பாவின் குடிமகன்கள் என்று நினைத்து சான்ட்விட்ஜ், பர்கர், பீட்சா என சாப்பிடுகின்றன. மண்ணின் மணத்தோடு சாப்பாட்டு மணமும் பறிபோய்விட்டது.

 

திருமண வீட்டிலும் பிரியாணி..

முகலாயர்கள் காலத்தில்தான் பிரியாணி இந்தியாவிற்குள் அறிமுகமானது. ஆனால் இன்று பிரியாணி என்பது ஏதோ தமிழரின் பாரம்பரிய உணவு போல மாற்றப்பட்டுள்ளது. கட்சி பொதுக்கூட்டமா, பிரியாணி பொட்டலம் இருந்தால்தான் கூட்டம் சேருகிறது. காது குத்துக்கு கூட பிரியாணி கேட்கிறார்கள். பிரியாணி, அதுவும் மட்டன் பிரியாணி போடும் திருமணங்களே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டவையாக பார்க்கப்படுகின்றன.

பிரியாணியேதான் வேணுமா?

சாம்பார் சோறும், அதில் நெய்யும் ஊற்றினால் கஞ்சப்பயல் கல்யாணம் நடத்துகிறான் பார்... என்று எள்ளி நகையாடும் நிலைக்கு வந்துவிட்டோம். சாம்பார் கூட வேண்டாம், கறிக்குழம்பும், சோறும் போட்டாலும் கூட அந்த திருமணத்தை நடத்துபவர் ஜென்ம பகையாளி போல பார்க்கப்படுகிறார். இந்த கறிக்குழம்புக்கு, சிக்கன் பிரியாணியாவது போட்டிருக்கலாம் என்று உச்சு கொட்டுகிறார்கள். ஹோட்டலில் சென்று பிரியாணி சாப்பிடுவது கலாசாரத்தை சீரழித்துவிடாது. ஆனால் கலாசார திருவிழாவான கல்யாண வீடுகளில் பிரியாணியை போடுவது என்பது அடுத்த தலைமுறைக்கு நமது உணவு பழக்கம் குறித்த சரியான புரிதலை அளிக்க தவறிவருகிறோம் என்பதன் அடையாளமே.

 

ஆம்பூர் பிரியாணியாம்..

பிரியாணியை கண்டுபிடித்ததே நாம்தான் என்பதைப்போல எத்தனை ஆர்ப்பாட்ட விளம்பரங்கள். ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி என ஆங்காங்கு இருக்கும் ஹோட்டல்களை பார்த்துவிட்டு பக்கத்து மாநிலத்துகாரர்கள் எல்லாம், பிரியாணியின் தாயகம் தமிழ்நாடு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நாம்தான் பிரியாணியை கண்டுபிடித்தோம், பரோட்டாவை கண்டுபிடித்தோம் என்றால், கிடா வெட்டும் கோயில்களில், கறியும் சோறும் போடுவதற்கு பதிலாக பிரியாணியைத்தானே போட்டிருப்பார்கள்.

சேட்டன் சேட்டன்தான்..

கலாசாரத்தை காப்பதில் மலையாளிகளை அடித்துக்கொள்ள ஆளில்லை. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் கொட்டை அரிசி சாதம் தவறாமல் இடம் பெறுகிறது. மலையாளி ஸ்டைல் ஹோட்டல்களில் கூட கொட்டை அரிசி சாப்பாடுக்குதான் ஏக கிராக்கி. ஒரு பண்டிகை என்றால் வேட்டி அவர்களை அலங்கரிக்கிறது. நமது பாரம்பரியம் இதுதான் என்று அடுத்த தலைமுறைக்கும் அவர்கள் உரக்க சொல்கிறார்கள். புட்டும், ஆப்பமும், கொண்டை கடலையும் அவர்கள் கனவிலும் மறக்காதவை. கன்னடர்கள் திருமண விழாக்களில் கோசம்பரி, ஒப்பட்டு போன்றவை தவறாமல் இடம் பெறுகிறதே.

 

தாழ்வு மனப்பான்மை தமிழன்.

ஒரு இனத்தை அழிக்க அதன் கலாச்சாரத்தை மறக்கடித்தால் போதும். தமிழர்கள் தாழ்வு மனப்பான்மை அதிகம் கொண்டவர்கள் என்று சமீபத்திய வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் சுட்டிக் காண்பிக்கின்றனர். மலையாளிகளை போல தங்களை தாங்கள் உயர்வாக நினைக்க தெரியாதவர்கள் தமிழர்கள். எனவேதான் பிரிட்டிஷ் உள்ளிட்ட பிற நாட்டு கலாசாரத்தை எப்போதும் உயர்வாக நினைத்து அதை தாங்களும் பின்பற்றுகிறாரர்கள். இது தங்களது தாழ்வு மனப்பான்மையை மறைக்கும் வெளிவேஷமே. நமது கலாசாரம் வெள்ளைக்காரரை விடவும் மூத்தது, நமது அறிவியல், வின்வெளி விஞ்ஞானம், வீரம் யாருக்கும் சளைத்தது கிடையாது என்பதை வரலாற்றை திரும்பி பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

நெருப்புக்கு பிறந்தவர்கள்.

வாழிடத்துக்கு தக்கபடி வாழ்க்கை முறையையும், சாப்பாட்டையும் அமைத்துக்கொள்வதுதான் ஆரோக்கியம், புத்திசாலித்தனம். தமிழர்கள், தமிழில் பேசுவதையும், தமிழ் பெயர் சூட்டிக்கொள்வதிலும், தமிழ் பண்பாட்டு, கலாசார உணவுகளை விழாக்களில் பரிமாறுவதிலும் பெருமிதம் அடைய வேண்டும். இப்படி செய்பவர்கள்தான் உண்மையான அறிவாளிகள் என்று பிறரும் பாராட்ட வேண்டும் . அப்போதுதான் தாழ்வு மனப்பான்மை நீங்கி நாம் செம்மறியாடுகள் அல்ல, எதையும் சாதிக்கும் சிங்கங்களின் வம்சத்தில் வந்தவர்கள் என்ற தெளிவு தமிழருக்கு ஏற்படும்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மறியூன் பெய்த நறுநெய் அடிசில்"  அதாவது ஆட்டிறைச்சி கலந்த  நெய்யின் நறுமணங்கமழும் நெய்ச்சோறென்று  என்று சங்ககாலப் பாடலொன்று புரியாணியைப் பற்றிக் கூறுகிறது.  இதனால் சங்ககாலத்திலேயே பிரியாணியைத் தமிழன் உண்டிருக்கிறான் என்பது தெளிவாகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மறியூன் பெய்த நறுநெய் அடிசில்"  அதாவது ஆட்டிறைச்சி கலந்த  நெய்யின் நறுமணங்கமழும் நெய்ச்சோறென்று  என்று சங்ககாலப் பாடலொன்று புரியாணியைப் பற்றிக் கூறுகிறது.  இதனால் சங்ககாலத்திலேயே பிரியாணியைத் தமிழன் உண்டிருக்கிறான் என்பது தெளிவாகின்றது.

 

இதை எங்கை.... தேடிப் பிடிச்சீங்க, கரு. :rolleyes:  :)

சங்க காலத்திலேயே... மறி ஆட்டு இறைச்சி சாப்பிட்டுள்ளார்கள்.

நாம.... தான், கிடாய் இறைச்சி வாங்க,  கடை கடையாய்.... ஏறி இறங்குறம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டியர் சிறீ

உடனடியாக என்னால் இப்பாடல் எங்கிருக்கின்றது என்று கூறமுடியவில்லை.  ஆனால் அப்படியொரு பாடல்வரி சங்ககாலச் செய்யுளொன்றிலுள்ளது.  மறியென்பது பொதுவாக பெண் ஆட்டைக்குறிக்கும்.  ஆனால் சங்ககாலத்தில் பொதுவாக ஆட்டைக் குறித்திருக்கலாம்.  நாம் பால் வேறுபாடின்றி செம்மறியென்று கூறுகிறோமல்லவா? ஆகவே மறியென்னும் சொல் பொதுப்பாலுக்குரியது என்பதில் தவறொன்றுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரியாணி ஒன்டும் பிரமாதமில்லை சிறி !  நாங்கள் கறிகளையும் சோத்தையும் தனித்தனியாய் செய்து இலையில் / கோப்பையில் போட்டு பிரியாணியாக்கி சாப்பிடுவம்.  அவர்களுக்கு பஞ்சி , அதுதான் முதலே சட்டிக்குள் எல்லாத்தையும் ஒன்டாய்ப் போட்டுக் குழைத்து  அவித்து விட்டு பிரியாணி என்டு சொல்லுகிறார்கள்...!  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌வ‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.