Jump to content

சிறிலங்காவை எச்சரிக்கும் நவநீதம்பிள்ளை


Recommended Posts

சிறிலங்காவில் காணாமல் போன சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் தொடர்பில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த வருடம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுக்கு முன்னர் இதற்கான விளக்கத்தைச் சிறிலங்கா அரசு முன்வைக்க வேண்டும் என நவநீதம்பிள்ளை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த எச்சரிக்கை தொடர்பான கடிதம் ஜெனீவாவிலுள்ள சிறிலங்கா பிரதிநிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுளள்தாக தெரிகிறது.

சிறிலங்காவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துக் காணப்படுகின்றன.

இந்த விடயம் குறித்து சிறிலங்காவுக்கு விஜயம் செய்த மனித உரிமைப் பேரவை உறுப்பினர்களும் அரசின் கவனத்துக் கொண்டு வந்திருந்தனர். இருப்பினும் சிறிலங்கா அரசு இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது தொடர்ச்சியான மௌனத்தையே கடைப்பிடிப்பதாகவும் அந்தக் கடித்த்தில் நவநீதம்பிள்ளை சிறிலங்கா அரசைச் சாடியுள்ளார்.

http://www.paristami...jIyODMyMTg4.htm

Link to comment
Share on other sites

[size=4]2013 மார்ச் மாதம் / பங்குனி மாதம், ஐ.நா. சிங்களம் மீது ஒரு ஐ.நா. போர்குற்ற விசாரணைக்கு ஆணையை தரவேண்டும்.[/size]

Link to comment
Share on other sites

[size=4]2013 மார்ச் மாதம் / பங்குனி மாதம், ஐ.நா. சிங்களம் மீது ஒரு ஐ.நா. போர்குற்ற விசாரணைக்கு ஆணையை தரவேண்டும்.[/size]

அதை நாமும் (உங்களை போன்றவர்கள்...... உங்களுக்கு ஆதரவாக நாங்கள்) அவர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தியபடி இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

எத்தனை நாளைக்குத்தான் இப்படி ஏமாற்றுவது. இழப்பை அடைந்தவர்களும் சலிப்படைந்துவிட்டார்கள். இழந்த வேகத்தைவிடவும் நிவர்த்திக்கப்படும் காலம் மிக நீண்டு செல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராக... நவநீதம்பிள்ளை இருக்கும் போதே,

எமது ஊக்கத்தையும் அவருக்கு கொடுத்து, விரைவில்... காணமல் போனவர்கள் தொடர்பாக ஸ்ரீலங்காவை பதிலளிக்கச் செய்ய வேண்டும்.

அப் பதவிக்கு வேறொருவர் வந்தால்... கேட்பதற்கு நாதியற்று, எதுவும் இயலாத நிலையிலேயே.. நாம் இருப்போம்.

Link to comment
Share on other sites

அதை நாமும் (உங்களை போன்றவர்கள்...... உங்களுக்கு ஆதரவாக நாங்கள்) அவர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தியபடி இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.