Jump to content

லெப்.சீலன் - வீரவேங்கை ஆனந் நினைவு நாள்


Recommended Posts

seelan.jpg

15.07.1983 அன்று யாழ். மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிய லெப். சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந் ஆகியோரின் 29ம் ஆண்டு நினைவு நாளும் 15.07.2001 அன்று மன்னாரில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் இன்பனின் 11ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் தளபதியான லெப்.சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந் உட்பட மூன்று போராளிகள் 15.07.1983 அன்று யாழ். மீசாலைப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினரின் முற்றுகையில் சிக்கிக் கொண்டனர். இந்த முற்றுகையை முறியடித்து தப்பிச் செல்வதற்கு முயன்றவேளை சிறிலங்கா படையினரின் தாக்குதலில் தளபதி லெப். சீலன் விழுப்புண்ணடைந்தார். தன்னால் தப்பிச் செல்ல முடியாது என்பதை உணர்ந்த தளபதி சீலன் தன்னைச் சுட்டுவிட்டு வீரவேங்கை ஆனந்தையும் மற்றைய போராளியையும் தப்பிச் செல்லுமாறு பணிக்கிறார், தயங்கி நின்ற இவர்களை தொடர்ச்சியாக வலியுறுத்திய நிலைய சகதோழனால் தளபதி சீலன் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இந்நிலையில் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் வீரவேங்கை ஆனந்தும் விழுப்புண்ணடைய தளபதி சீலனின் வழியைப் பின்பற்றி, தன்னையும் சுடுமாறு சகதோழனை வலியுறுத்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இம் மாவீரர்களின் 29ம் ஆண்டு நினைவு நாளும்,

15.07.2001 அன்று மன்னார் மாவட்டம் கொக்குப்படையான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் இன்பன் (சுபாஸ்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடிலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

லெப்.சீலன் பற்றிய குறிப்பு http://www.veeravengaikal.com/index.php/adikatkal/46-lt-seelan-asir-gnanapragasam-lucas-charles-anthony-trinco-malee

வீரவேங்கை ஆனந் பற்றிய குறிப்பு http://www.veeravengaikal.com/index.php/adikatkal/47-veeravengai-ananth-ramanathan-arulnathan-mayiliddi-jaffna

186_lt_col_inpan.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த சீலன், ஆனந்த், சுபாஸ் உட்பட இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் ! [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

[size=5]ஆயுதப்போராட்டத்தின் தூண்களாக விழுதுகளாக இருந்த மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

மூத்த தாக்குதல் தளபதியும் திருமலை தந்த வேகையுமான லெப் சீலன், அவருடன் இயக்க மரபு காத்த ஆனந்த், மற்றும் இந்நாளில் வீரகாவியமான வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரும் புரட்சிக்கு வழிகாட்டி

இனத்துக்காக தம்மை எப்படி ஈகம் செய்யலாம் என்ற வழிகாட்டியாக நின்று தம்மை எமக்காக தந்த அந்த மாவீரனுக்கு எனது வீர வணக்கங்கள்!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.