Jump to content

கருத்தாளர் வசம்புவும் யாழ் இணையமும்: சில எண்ணத்தடங்களும் எதிர்கால பார்வையும்


Recommended Posts

வசம்பு, நல்ல எழுத்தாளர், நல்ல கருத்தாடலாளர்! அதற்கு மேல் எம்முடன் யாழில் வாழ்ந்தவர் ... அவரின் மரணச்செய்தியும், அதன் பின் யாழில் ...

.... ஒரு நல்ல எழுத்தாளர்கள், பிறரை கவரும் நல்ல பேச்சாளர்கள் ... எல்லோரும் நல்ல சிந்தனையாளர்களாகவோ, சமூக நலன் சார்ந்தவர்களாகவோ இருக்க வில்லை!! பலர் சமூகத்தின் அழிவிற்கே தம் திறனை பாவித்தார்கள்! ....

நான் நினைக்கிறேன், வசம்பு தனிப்பட்ட விதமாகவோ அல்லது அவரின் குடும்பமோ விடுதலைப்புலிகளின் சில உறுப்பினர்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், அவர் அதன் விளைவாக இறுதி வரை புலிகளுக்கு எதிர்ப்பான கொள்கையுடையவராகவும், புலிகளுக்கு எதிர்ப்பானவர்கள் என கூறி சிங்களத்துடன் சேர்ந்திருந்து தமிழின அழிப்பை நடத்தியவர்களோடும், தன் வாழ்நாளின் இறுதிவரை சேர்ந்து செயற்பட்டார்(இங்கு பலருக்கு அவரின் சகவாசங்களை அறியாதவர்களே பலர்). மே18இற்குப் பின்னமும் வசம்புவும், அவரின் கூட்டங்களும் ஓயவில்லை ... இது அவர் யாழை விட்டு வெளியேறி, வேறொரு பெயரில் லண்டனிலிருந்து தமிழ் இன எதிர் செய்திகளையே கட்டுரைகளாக்கி .... சாதீயம்/பிரதேசவாதம் போன்ற சாக்கடைகளை கிண்டிக்குதறி தமிழ்த்தேசிய த்தை சீர்குலைக்க முற்பட்டிருக்கும் சில சக்திகளின் இணையம்/பத்திரிகையில் சக்கை போடு போட்ட்டார் .... இங்கு அதன் பிரதிகளை இணைக்க விருப்பவில்லை!!!! மே18இற்கு முற்பட்ட காலங்களில் லண்டனிலிருந்து இயங்கும் ஒரு ஒட்டுக்கும்பலின் வானொலியாகட்டும், சில இணையங்களிலும் வசம்புவின் கொட்டல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது.

வசம்பு பல வருடங்களாக யாழில் களத்தில் இருந்தார். அப்போதெல்லாம் புலிகளின் தவறுகளையும், புலிகளின் புலத்து பூசாரிகளின் தவறுகளைட்யும் சுட்டிக்காட்ட தயங்க மாட்டார்!! ஆனால் அக்காலகட்டத்தில் சிங்கள இனவெறியாளர்களின் கொலை/கொள்ளை/ஆட்கடத்தல்/கற்பளிப்புகள் என தினந்தோறும் பல செய்திகள் வரும். இறுதிவரை அச்செய்திகளுக்கு வசம்பு கருத்தெழுதியதே இல்லை! ஏன்???????

மொத்ததில் ... யாழ்கள நல்ல கருத்தாளர் என்ற வகையில் , வசம்புவின் மறைவிற்கு இரங்கலே ஒழிய ... அவரின் எழுத்துகளுக்கோ அல்லது அவர் சார்ந்த கும்பலின் கொள்கைகளுக்கோ அல்ல!

இறந்த பின் ஒருவரை நிந்திக்ககூடாது உண்மைதான், ஆனால் தேவையற்ர புகழ்ச்சிகள் எல்லை மீறி சென்று விடக்கூடாது!!!

Link to comment
Share on other sites

தங்களிடம் ஒரு கேள்வி

பச்சை விழுந்தால் ஏற்கும் தாங்கள்

சிவப்பு விழுந்ததை ஏற்க மறுப்பதேனோ......???

குகதாசன் அண்ணா, நான் வசம்பு அண்ணாவுக்கு விழிந்த பச்சை சிவப்பு பற்றி இங்கு கதைக்கவில்லை. இந்தக் குறிப்பிட்ட திரியை ஆரம்பித்த முதல் கருத்துக்கு 19 பேர் பச்சை குத்தியிருக்கீனம், அது பற்றித்தான் குறிப்பிட்டேன். வசம்பண்ணாவுக்கு விழுந்த பச்சை சிவப்பு பற்றி எனக்கு அக்கறையில்லை. ஒருவரது கருத்துகளைப் பிடிக்கவில்லை என்றால் அதற்காக அந்த ஆளையும் பிடிக்கக் கூடாது என்பதில்லைத்தானே.

Link to comment
Share on other sites

நானும் நெல்லையனின் கருத்துக்கு பச்சை குத்தியுள்ளேன். அமரர் வசம்பு நல்ல பண்பான கருத்தாளன் என்றவகையில் தான் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளேன். அவரின் படம் முகப்பில் வர வேண்டும் என ஆதரவு தந்தேன்.

ஆனால் அவரின் கருத்துக்களை பெரும்பாலும் நான் ஆதரிப்பதில்லை. சிங்கள துடுப்பாட்ட அணியைப் புறக்கணியுங்கள் என 2005ல் இட்ட தலைப்புக்கு பல எதிர்ப்புக் கருத்துக்கள் பதிந்திருக்கிறார். இத்தலைப்புக்களில் விடுதலைப்புலிகளைப் பற்றி வரவில்லை. எனினும் எதிர்த்தார். அதாவது விடுதலைப்புலிகளை எதிர்ப்பதோடு, புலம் பெயர்ந்த தமிழர்கள் செய்யும் நடவடிக்கைகளையும் எதிர்த்தார். சிங்கள அரசு தமிழீழப்பகுதியில் சில இடங்களைப் பிடித்த போது யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி என்ற ஒட்டுக்குழு வெடி கொளுத்தி மகிழந்த படங்களை இணைத்து யாழ்ப்பாண மக்கள் விடுதலைப்புலிகள் தோற்கிற போது மகிழ்கிறார் என்று சிங்கள அரசுக்கு துதிபாடியவர் அமரர் வசம்பு. சக யாழ் உறுப்பினர் என்ற வகையில் தான் நான் அவருக்கு அஞ்சலி செய்கிறேன். அவரின் கருத்துகளுக்கு அல்ல.

Link to comment
Share on other sites

சிவப்புப் புள்ளிகளால் வசம்பண்ணன் யாழில் மேலும் பங்கேற்கவில்லை என்பதை ஏற்ருக்கொள்வது கடினமாக உள்ளது. அவர் கருத்தெழுதிய திரிகளை உற்றுநோக்கும்போது மாசி 2009 இல் இருந்து களத்தில் கருத்தெழுதுவதை வலுவாகக் குறைத்துக் கொண்டுள்ளார். மாசி 2009 இல் இருந்து வைகாசி 2010 வரை அவர் 40 திரிகளில் மட்டுமே பங்கு கொண்டுள்ளார். அதாவது சிவப்புப் புள்ளிகள் முறை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னமே அவரது பங்களிப்பில் தொய்வு விழுந்துள்ளது. இதற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் நிகழ்வுகளோ அல்லது உடல்நிலையோ காரணமாக இருந்திருக்கலாம். அல்லது தாயகத்தில் நடந்த நிகழ்வுகளேகூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். என்னதான் போராளிகளை அவர் எதிர்த்து வந்திருந்திருந்த போதிலும் அப்போராளிகளின் காவலை மக்கள் இழந்து அழிவுற்றபோது அவர்மனம் புண்படவே செய்திருக்கும். :D

டங்க்ஸ் நீங்கள் கூறியபின் நானும் சிறிது ஆராய்ந்து பார்த்தேன். உங்கள் தரவுக்காக:

புள்ளியிடல் திட்டம் இளைஞன் அவர்களினால் டிசம்பர் 14ம் திகதி 2009இல் அறிவிக்கப்பட்டது. இது பற்றிய பதிவு யாழ் இணைய குறிப்பேட்டில் உள்ளது.

டிசெம்பர் 14

கருத்துக்களத்தில் இணைக்கப்படும் ஆக்கங்களுக்கு கருத்துக்கள உறவுகள் புள்ளிகள் வழங்கலாம். பரீட்சார்த்தமாக இந்த செயற்பாடு கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு நாளைக்கு 3 "+" புள்ளிகளும், 3 "-" புள்ளிகளும் உள்ளன. இவற்றை சரியான முறையிலும், நேர்மையான முறையிலும் பயன்படுத்தி ஆக்கங்களுக்கு, குறிப்பாக உறுப்பினர்களால் சுயமாக எழுதப்படும் ஆக்கங்களுக்கு - புள்ளிகள் வழங்குங்கள். சக உறுப்பினர்களின் எழுத்தாக்க செயற்பாட்டை ஊக்குவியுங்கள்.

தகவல் மூலம்: யாழ் இணைய குறிப்பேடு

வசம்பு அவர்கள் மாதாந்த அடிப்படையில் கீழ்வரும் எண்ணிக்கைகளில் பதிவுகள் இட்டுள்ளார்.

MAY, 2010: 10 கருத்துக்கள் [ LAST POST Posted 03 May 2010 - 10:06 AM ]

APRIL, 2010: 22 கருத்துக்கள்

MARCH, 2010: 34 கருத்துக்கள்

FEBRUARY, 2010: 7 கருத்துக்கள்

JANUARY, 2010: 7 கருத்துக்கள்

DECEMBER, 2009: 22 கருத்துக்கள்

NOVEMBER, 2009: 93 கருத்துக்கள்

OCTOBER, 2009: 8 + [ NO MORE DATA AVAILABLE BEFORE 25 October 2009 - 07:46 PM ] குறிப்பிட்ட மாதத்தில் எழுதப்பட்டுள்ள கருத்துக்கள் எவை என்று அறிவதற்கு மேலதிக தரவுகள் 25ம் திகதிக்கு முன்னர் இல்லை.

புள்ளிவழங்கல் திட்டம் எழுத்தில் டிசம்பர்14ம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக இறுதியாக டிசம்பர்9ம் திகதி வசம்பு அவர்கள் கருத்து வைத்துள்ளார். அதன் பிறகு ஜனவரி 20, 2010ம் ஆண்டிலேயே அடுத்த கருத்தை வைத்துள்ளார். அதாவது புள்ளி வழங்கல் திட்டம் எழுத்தில் அறிவிக்கப்பட்டு சுமார் ஒரு மாதம் அவர் கருத்தாடல் களத்தில் எழுதவில்லை. டிசம்பர் 2009இல் அவர் எழுதிய 22 கருத்துக்களும் குறிப்பிட்ட மாதம் புள்ளிவழங்கல் திட்டம் அமுலுக்கு வரும் முன்பே எழுதப்பட்டுள்ளன.

தகவல் மூலம்: வசம்பு அவர்கள் October 25 2009 தொடக்கம் எழுதிய கருத்துக்கள்

Link to comment
Share on other sites

கரும்பு, வசம்பு அவர்களின் நினைவு கூரலுக்கு நன்றி. ஒரு பச்சையும் உங்களுக்கு தரப்படுகிறது. மைனஸ் புள்ளிகளால் மனம் வாடினார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.அவரே கருத்து எழுதி விட்டு சரி இனி மைனசுகளை வந்து போடுங்கோ என்று நக்கலாக பல இடங்களில் கூறியுள்ளார்.

இறந்த மாவீரர்களுக்கு அவர் மட்டுமல்ல பல கள உறவுகள் மாவீரர் வணக்கம் செலுத்துவதில்லை.அவரை மட்டும் சாடுவதேன்?

வணக்கம் விடிவெள்ளி,

முதலில் உங்கள் பயண அனுபவங்களை எம்முடன் பகிரத் தொடங்கியமைக்கு நன்றிகள். பல முகவரி தேடும் இணையத்தளங்கள் பரபரப்பிற்காக அதீதமாக எடுத்துவிடும் புனைவுகளை நம்பியவர்களுக்கு, தங்கள் அனுபவங்கள் எரிச்சலைத் தான் தரும். பிரான்சிலுள்ள வானொலி ஒன்றின் அறிவிப்பாளர்கள் பலர் தமது நிகழ்ச்சிகளில் எப்போதும் இலங்கை சென்றால் விமானநிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் சித்திரைவதைகள் செய்கின்றார்கள் என்று கதையளப்பதையே தலையாயகடன் போல நினைப்பவர்கள். நேற்றும் ரங்கன் என்ற இயற்பெயர் கொண்ட அறிவிப்பாளர் இப்படிக் கதையளக்க, வந்த நேயர் ஒருவர் அபு்படியாயின் நீங்கள் சமீபத்தில் எப்படி உங்கள் தம்பியை(அரசு கைதுசெய்து வைத்திருந்த போராளிகளில் இவரும் ஒருவவர்) அரசிடமிருந்து மீட்டு வந்தீர்கள் எனக் கேள்வி கேட்டதும், தனிநபர் விடயங்களுக்கு பதிலளிக்க முடிடியாதென்று அழைப்பைத் துண்டித்துவிட்டார். அத்துடன் அந்த வானொலியயின் பல அறிவிப்பாளர்கள் சமீப காலங்களில் தாயகம் சென்று திரும்பியுமுள்ளார்கள். தற்போது கூட காலஞ்சென்ற பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளரின் பெயர் கொண்ட அறிவிப்பாளரும் தாயகத்தில் தான் பலவாரங்களாக நிற்கின்றார். இவர்கள் உண்மைகளை ஒத்துக் கொண்டால், எப்படி நேயர்களை முட்டாள்களாக்கி தொடர்ந்து பணம் சுருட்ட முடியும்?? இப்போதுள்ள முக்கிய பிரைச்சினையே பணச்சுருட்டல். அதற்குத் தேவை சாதகமான நிலைமைகள் அல்ல பாதகமான நிலைமைகளே. நீங்கள் உங்கள் உண்மையான அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.

:D

எங்கே ஓடோடிவந்து சிவப்புப்புள்ளியிடும் சீமான்களே உங்க கைவரிசையை எனது கருத்திற்கும் காட்டிவிடுங்களேன். :lol:

Link to comment
Share on other sites

means, he paid attention to red marks, சிரிக்கின்ற முகக்குறி ஒருவர் உண்மையில் மகிழ்வுடன் சிரிக்கின்றார் என்பதான அர்த்தத்தை காண்பிக்கவேண்டும் என்று இல்லை.

Link to comment
Share on other sites

அஜீவன் அவர்களின் சுவிஸ் தமிழ்வானொலியில் இன்று ஞாயிறு ஒலிபரப்பு செய்யப்பட்ட வசம்பு அவர்கள் பற்றிய நினைவுகூறும் அஞ்சலி ஒலிபரப்பை முகநூலில் பார்த்தேன். குறிப்பிட்ட ஒலிப்பதிவை திருத்தம் செய்து ( மருத்துவம் சம்பந்தப்பட்ட ஓர் நேர்காணலை மற்றும் பாடல்களை நீக்கியுள்ளேன் ) இங்கு இணைக்கின்றேன், கேட்டுப்பாருங்கள். இன்றுதான் முதல்தடவையாக வசம்பு அவர்களின் குரலை கேட்டேன். குறிப்பிட்ட ஒலித்துண்டில் ஆரம்பத்திலும், இறுதியிலுமாக இரண்டு பகுதிகளில் வசம்பு அவர்கள் தனது சிந்தனைகளை கூறுவதை கேட்கலாம். இடையில் அஞ்சலி கவிதை, மரண அறிவித்தல் விபரங்கள் தரப்படுகின்றன. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குகதாசன் அண்ணா, நான் வசம்பு அண்ணாவுக்கு விழிந்த பச்சை சிவப்பு பற்றி இங்கு கதைக்கவில்லை. இந்தக் குறிப்பிட்ட திரியை ஆரம்பித்த முதல் கருத்துக்கு 19 பேர் பச்சை குத்தியிருக்கீனம், அது பற்றித்தான் குறிப்பிட்டேன்

.வசம்பண்ணாவுக்கு விழுந்த பச்சை சிவப்பு பற்றி எனக்கு அக்கறையில்லை.

ஒருவரது கருத்துகளைப் பிடிக்கவில்லை என்றால் அதற்காக அந்த ஆளையும் பிடிக்கக் கூடாது என்பதில்லைத்தானே.

மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்தான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது தங்கள் ஆதாரங்களை பார்க்கின்ற போது.....

சிவப்புபுள்ளி தடை செய்யப்பட்டு

பச்சைப்புள்ளிகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்

எனக்கு

கைகள் கட்டப்பட்டு

பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு

ஆயுதம் பாவிக்கக்கூடாது என்று எம்மினத்தை கட்டிவைத்துக்கொண்டு

சிறீலங்காவுக்கு ஆதரவையும் ஆயுதங்களையும் கொடுத்து எம்மை அழித்த சர்வதேசத்தின் நிலையைத்தான் தங்களது புள்ளிகளும் தரவுகளும் சொல்கின்றன.

ஒவ்வொருத்தரும் ஆளுக்கு பல பெயர்களில் வந்து குத்தும் பச்சையை எண்ணும் தாங்கள் நிர்வாகத்திடம் கேட்டு இத்திரிக்கு சிவப்பும் குத்தலாம் என்று திறந்து பார்த்துவிட்டு அதை ஒரு தரவாக பாவித்திருக்கவேண்டும்

எனக்கும் அமரர் வசம்பு அவர்களுக்கும் தனிப்பட எந்த தொடர்புமில்லை. விருப்பு வெறுப்புக்களுமில்லை. அதேகருத்து பரிமாறல் மட்டுமே. அதன் மூலமே அவரை நான் அறிந்து வைத்திருக்கின்றேன். அவர் எழுதியதை வைத்தே அவர் மீதான எனது கணிப்பு இருக்கும்.

ஏனெனில் எதை அவர் விதைத்தாரோ அதையே அறுவடை செய்யமுடியும்.

அதேநேரம் இந்த கருத்துக்களத்திலேயே இத்தனை விசத்தை விதைத்த ஒருவர் தனது குடும்பத்திலும் உற்றார் உறவினர் நண்பர்களிடமும் எதை விதைத்திருப்பார் என்பதே எனது தனிப்பட்ட பெறுமதியை அவருக்கு கொடுக்கும்.

நீங்கள் ஒருவர் இறந்துவிட்டால் எல்லாவற்றையும் மறக்கும் பக்குவமுள்ளவராக இருப்பது தங்களை நல்ல மனிதர் என்று வேண்டுமானால் சொல்ல உதவும். ஆனால் அது இறந்தவரை நினைவு கூற போதுமானது அல்ல.

நன்றி

Link to comment
Share on other sites

... ஒரு பாணை சோற்றுக்கு, ஒரு ...

.... வசம்பு இறந்த பின் சில நாட்களாக, புலத்தில் இருந்து இயங்கும் தமிழ்த்தேச விரோத சக்திகளின் ஊதுகுழல்களான *டான் தமிழொலி, ரி.பி.சி, தேசம்நெற், ..." போன்றவற்றில், அமரருக்கு தொடர்ந்து அஞ்சலிகள் இடம்பெறுகின்றது!!!!!!!!!!!!!!!! ஏன்????????? அமரர் வசம்பு அக்கும்பலுக்கு செய்த சேவை!!!

.... மே18இற்கு முன் சில நாட்களில் 40000 மக்கள் கோரமாக வேட்டையாடி கொல்லப்பட்டபோது, எவ்வாறு சிங்கள ஊடகங்கள் வாய் திறக்காமல் செய்திகளை மறைப்பு செய்தவையோ, அதை விட மேலே இந்த குப்பை ஊடகங்கள் வாயே திறக்கவில்லை, அதற்கு மேலாக என்ன என்னவெல்லாம் செய்தி சிங்களத்தை குளிரப்பண்ண வேண்டுமோ அதை செய்தன!! ... இன்று இந்த வசம்புவிற்கு அழுகின்றன!!!!!!!??????

... போகும் போக்கை பார்த்தால் வசம்பிவிற்கு, மாற்றுக்கருத்து ஒட்டுக்குழு மாமணிகள் ... அதியுயர் பட்டம் ... அழித்து கவுரவித்தாலும் கவிரவிப்பார்கள்!! அது இங்கே ... யாழில் ... வேண்டாம்!!!!

Link to comment
Share on other sites

நீங்கள் ஒருவர் இறந்துவிட்டால் எல்லாவற்றையும் மறக்கும் பக்குவமுள்ளவராக இருப்பது தங்களை நல்ல மனிதர் என்று வேண்டுமானால் சொல்ல உதவும். ஆனால் அது இறந்தவரை நினைவு கூர

போதுமானது அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... ஒரு பாணை சோற்றுக்கு, ஒரு ...

.... வசம்பு இறந்த பின் சில நாட்களாக, புலத்தில் இருந்து இயங்கும் தமிழ்த்தேச விரோத சக்திகளின் ஊதுகுழல்களான *டான் தமிழொலி, ரி.பி.சி, தேசம்நெற், ..." போன்றவற்றில், அமரருக்கு தொடர்ந்து அஞ்சலிகள் இடம்பெறுகின்றது!!!!!!!!!!!!!!!! ஏன்????????? அமரர் வசம்பு அக்கும்பலுக்கு செய்த சேவை!!!

.... மே18இற்கு முன் சில நாட்களில் 40000 மக்கள் கோரமாக வேட்டையாடி கொல்லப்பட்டபோது, எவ்வாறு சிங்கள ஊடகங்கள் வாய் திறக்காமல் செய்திகளை மறைப்பு செய்தவையோ, அதை விட மேலே இந்த குப்பை ஊடகங்கள் வாயே திறக்கவில்லை, அதற்கு மேலாக என்ன என்னவெல்லாம் செய்தி சிங்களத்தை குளிரப்பண்ண வேண்டுமோ அதை செய்தன!! ... இன்று இந்த வசம்புவிற்கு அழுகின்றன!!!!!!!??????

... போகும் போக்கை பார்த்தால் வசம்பிவிற்கு, மாற்றுக்கருத்து ஒட்டுக்குழு மாமணிகள் ... அதியுயர் பட்டம் ... அழித்து கவுரவித்தாலும் கவிரவிப்பார்கள்!! அது இங்கே ... யாழில் ... வேண்டாம்!!!!

நானும் இரு நாட்களுக்கு முன்பு தேசத்தை பார்த்தேன்...எனக்கு ஏற்கனவே அவர் தேசத்தில் எழுதுவது தெரியும் ஆனால் பார்த்திபன் என்னும் பெயரில் எழுதுவது அவர் தான் என்டு தெரிந்ததும் பெரிய அதிர்ச்சியாய் இருந்தது...தேசத்திலும் அவருக்கு எதிராக கருத்தாடல் செய்து இருக்கிறேன்

Link to comment
Share on other sites

வசம்பு அவர்கள் தன்னைப் பற்றிச் சொன்ன பதிவு

கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

சென்ற வியாழனன்று (24.07.08) காலையில் களத்திற்கு வந்தபோது தூயா எனைப்பற்றி பதிந்திருப்பதைக் கண்டேன். அதற்கு ஏனைய கள உறவுகள் விமர்சனம் வைத்திருப்பதையும் கண்டேன். எனவே கள உறவுகளின் விமர்சனங்களுக்கும் சேர்த்துப் பதிலளிப்பதற்காக இன்றுவரை காத்திருந்து எனது பதிலைப் பதிகின்றேன்.

முதலில் தூயாவிற்குத்தான் நன்றிகளைச் சொல்ல வேண்டும். இப்படியான ஒரு பதிவினை மேற்கொள்வதால் களத்தில் புதிதாக இணையும் கருத்தாளர்களுக்கு உதவியாக இருக்குமெனவே இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் இப்பதிவுகளின் பின் வரும் ஏனைய கள உறவுகளின் நாகரீகமான விமர்சனங்களின் மூலம் எம்மை சுயபரிசோதனை செய்யவும் முடிகின்றதென்பது யதார்த்தமான உண்மை. இதனால் எல்லாப் புகழும் தூயாவிற்கே!!!!

களத்தோடு நெருங்கிய தொடர்புடைய எனது சில நண்பர்களின் தூண்டுதலாலேயே நானும் களத்திற்கு முதலில் பார்வையாளனாக வந்து சில தினங்களிலேயே கருத்தாளனாக இணைந்தும் விட்டேன். எனக்குக் கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி என்பதனாலேயும் கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே நேரம் இதுவரை மற்றவர்கள் வைக்காதது போலவும் ஒரு பெயரை வைக்க விரும்பினேன். அப்போது மனதில் உதித்தது தான் இந்த வசம்பு. வசம்பில் வம்பும் இருப்பதால் இது குசும்பிற்கும் பொருந்துவதால் சரியாக இருக்குமென்று இதையே தெரிவு செய்தேன். வசம்பு என்பது சில கள உறவுகள் குறிப்பிட்டிருப்பது போல் ஒரு மருந்து தான். இது ஒருவகைப் புல்லின் வேரிலிருந்து தயாரிக்கப்படுவது. வசம்பைக் கூடுதலாக மைனா வளர்ப்பவர்கள் அதற்கு வலிப்பு நோய் வராமலிருப்பதற்காக கொடுப்பதை நான் அறிந்திருக்கின்றேன். இஞ்சியைக் காயவைத்தால் வருவது வேர்க்கொம்பு. இதற்கும் வசம்பிற்கும் சம்பந்தமில்லை.

இன்றுவரை எவரையும் புண்படுத்தாது குசும்பாகவும், வம்பாகவும், நட்பாகவும் கருத்துக்களைப் பகிர்ந்திருக்கின்றேன். அதுபோல் தவறுகளைச் சுட்டிக் காட்டவும் தயங்கியதில்லை. என்னையும் அறியாமல் எவரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக இந்தச் சந்தர்பத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். களத்தில் எல்லோரும் நாகரீகமாகக் கருத்தாடுவதையே என்றும் விரும்புகின்றேன். அதனையே அநேகமான கள உறவுகளும் கடைப்பிடிக்கின்றார்கள்.

குடும்பத்தில் நான் தான் கடைக்குட்டி. அதனால் தம்பி தங்கை இல்லாத ஏக்கம் இருந்தது. சிறுவயதில் இது பற்றி அம்மாவிடம் கேட்டுத் தொல்லை கொடுத்துள்ளேன். அப்போதெல்லாம் அம்மாவின் பதில் சிரிப்பாக மட்டுமேயிருக்கும். அடிக்கடி கேட்டுத் தொல்லை கொடுத்ததால் ஒரு நாள் அம்மாவே என்னிடம் திருப்பிக் கேட்டா, சரி உன் ஆசைப்படி ஒரு தம்பிப் பாப்பாவோ அல்லது தங்கச்சிப் பாப்பாவோ பிறந்ததாலும், திரும்பவும் அவர்கள் உன் போல் என்னைக் கேட்டால் பிறகென்ன செய்வது?? இந்தக் கேள்வியிலுள்ள நியாயத்தால் தம்பி, தங்கை இல்லையென்ற ஏக்கம் இருந்தாலும் அத்தோடு அம்மாவிற்கு தொல்லை கொடுப்பதை நிறுத்தி விட்டேன். ஆனால் யாழ்க் களத்திற்கு வந்தபின் எனக்கு நிறைய தங்கைகள் இரசிகை, தூயா, வெண்ணிலா, அனிதா என்று நிறையவே கிடைத்தார்கள். ஆனால் தம்பியாக ஒரேயொரு தூயவன் மட்டுமே கிடைத்தார். பலருக்கு இது ஆச்சரியமாக இருக்கும். காரணம் களத்தில் கருத்துக்களால் நாம் மோதிக் கொள்வதே அதிகம். அவை கருத்துக்களில் மாத்திரம் தான். தனிமடலில் என்னை அண்ணாவென தூயவன் அழைக்கும் அழகே தனி. அவர் மடல்களில் உண்மையான பாசம் கொப்பளிக்கும். அதனால் அவர் மீது நானும் உண்மையான பாசத்தையே வைத்திருந்தேன். களத்தில் என் கருத்தைக் கடுமையாகச் சாடி தூயவன் கருத்தெளிதினால், உடன் எனக்கொரு தனிமடலும் அனுப்புவார். அதில் அண்ணா என்னில் கோபிக்கிக்க மாட்டீர்கள் தானே அண்ணாவோடு தானே நான் மோதலாம் எனக் கேட்டிருப்பார். அவர் களத்தை விட்டு விலகுவதாக அறிவித்த போது உண்மையாகவே என் மனது வலித்தது. அவர் மீண்டும் தூயவனாக களம் வர வேண்டுமென்பதே என் பேரவா!! அது போலவே களத்தில் நிறையவே நண்பர்கள் கிடைத்தார்கள். அதன் மூலம் நிறைய அறிவுசார் விடயங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் வாய்த்தன.

இப்படியான பல நன்மைகளுக்கு வழி சமைத்த யாழ் கருத்துக் களத்திற்கும் இச்சந்தர்பத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

மதிபிற்குரிய தும்பளையான், கரும்பு அவர்களிடம் என் சந்தேகத்தை கேட்டால் நீங்கள் பதில் சொல்லிக்கொண்டு, என்னை பார்த்து சொல்லுகிறீர்கள் மோகன் அண்ணா தான் முடிவெடுக்க வேண்டும் நீங்கள் அல்ல என்று, இது எனக்கு கேத்தில் சட்டியை பார்த்து கரி என்று சொன்ன பழமொழியை ஞாபகபடுத்துகிறது.

சரி நான் உங்களின் கருத்துக்கு வருகிறேன். யாழ் களத்திலே பச்சை புள்ளியை மட்டுமே வழங்கும் கருத்து சுதந்திரம் இருக்கும்போது, கிடைக்கும் பச்சை புள்ளிகளை வைத்து கருத்துகளை மதிப்பிடும், உங்களின் புத்திசாலிதனத்தை என்னால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. அதே வேளை வசம்புவை நினைவு கூருவது அவரது பதிவுகளையும் அவரது கருத்துகளையும் சுட்டி காட்டுவது நல்லது. அதை விடுத்து தனது கருத்துகளையும் அவரின் சாவின் பதிவுகளோடு உட்புகுத்துவதை வேறு எவ்வாறு தமிழில் அழைப்பார்கள் என்று உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்.(நன்றி)

எல்லா கருத்துகளுக்கும் மாற்று கருத்துகள் இருக்க தானே செய்யும்.கருத்து எழுதுபவர்கள் என்ன மன நிலையில் இருகிறார்களோ?. கருத்துகள் அவர்களை எந்த விதத்தில் பாதித்ததோ? இதுகள் பற்றி ஆராயாமல் உங்கள் கருத்துக்கு பதில் கருத்து எழுதுபவரை வசைபாட கூடாது. கருத்தை கருத்தால் மட்டுமே வெல்ல வேண்டும் அதுவே நல்ல கருத்தாளனுக்கு அழகு .(நன்றி - மாற்று கருத்து மாணிக்கங்கள்)

இந்த செய்தியையும் பாருங்கள் படங்களையும் பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76838

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=2984:2010-10-25-07-00-43&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

இதை செய்தவர்களை புகழ்பாடி இதில் மரணித்தவர்களை வசைபாடியவருக்கு முகப்பில் ஒரு அஞ்சலி, உள்ளே ஒரு கதை, கவிதை , கட்டுரை, நல்ல கருத்தாளர் என்ற பெயர்.

உங்கள் மனித நேயம் கண்டு வியந்து நிற்கிறோம். இந்த மரணித்தவர்கள் பிறந்த மண்ணில் நீங்களும் பிறந்ததையிட்டு பெருமையடைகிறோம்.

Link to comment
Share on other sites

வை.சி.கிருபானந்தன் (வசம்பு) அவர்களின் இறுதி நிகழ்வு படங்கள்.

http://www.facebook.com/album.php?aid=320420&id=823993901#!/album.php?aid=320420&id=823993901

நன்றி அஜீவன்.

Link to comment
Share on other sites

"ஒருவனின் மரணத்தின் போது அவனுக்கு தொடர்பிலாதவர்கள் விடும் கண்ணீரே அவனது வாழ்வின் வெற்றியை நிச்சயிக்கும்".

பலர் தமக்காக மற்றவன் எழுதவேண்டும், முயற்சி செய்யவேண்டும், அஞ்சலி செலுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். இவர்கள் வாசித்துப்பார்த்து பிழைகளை மாத்திரம் சுட்டிக்காட்டி குட்டிவிட்டு செல்வார்களாம். எழுத்துக்கள் இதயத்தில் இருந்து வரும்போது அவை உயிர்ப்பாக பிரவகித்து செல்லும், உணர்வுகளோடு உறவாடும். ஒருவனுக்கு சிந்தும் உண்மையான கண்ணீர் என்பது அதிகார தோரணையின் அழுத்தங்கள் மத்தியில் வருவதில்லை. பலர் இவருக்குத்தான் கண்ணீர் விடவேண்டும், இவருக்குத்தான் கவிதை எழுதவேண்டும் இவரைத்தான் அணைக்கவேண்டும் இவரை ஒதுக்கவேண்டும் என்று பல எழுதாத விதிகளை சுமந்துகொண்டு திரிகின்றார்கள், வேடிக்கையாக உள்ளது. மற்றவனிடம் காலம் காலமாக தட்டிப்பறித்து வாழ்ந்த குணம் என்றென்றும் நம்மவரிடம் உள்ளதுதானே. உங்கள் கருத்திற்கு நன்றி தும்பளையான். பதில் வைக்கவேண்டிய கருத்துக்களிற்கு மாத்திரமே நான் பதில் கருத்து வைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்தான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது தங்கள் ஆதாரங்களை பார்க்கின்ற போது.....

சிவப்புபுள்ளி தடை செய்யப்பட்டு

பச்சைப்புள்ளிகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்

எனக்கு

கைகள் கட்டப்பட்டு

பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு

ஆயுதம் பாவிக்கக்கூடாது என்று எம்மினத்தை கட்டிவைத்துக்கொண்டு

சிறீலங்காவுக்கு ஆதரவையும் ஆயுதங்களையும் கொடுத்து எம்மை அழித்த சர்வதேசத்தின் நிலையைத்தான் தங்களது புள்ளிகளும் தரவுகளும் சொல்கின்றன.

ஒவ்வொருத்தரும் ஆளுக்கு பல பெயர்களில் வந்து குத்தும் பச்சையை எண்ணும் தாங்கள் நிர்வாகத்திடம் கேட்டு இத்திரிக்கு சிவப்பும் குத்தலாம் என்று திறந்து பார்த்துவிட்டு அதை ஒரு தரவாக பாவித்திருக்கவேண்டும்

எனக்கும் அமரர் வசம்பு அவர்களுக்கும் தனிப்பட எந்த தொடர்புமில்லை. விருப்பு வெறுப்புக்களுமில்லை. அதேகருத்து பரிமாறல் மட்டுமே. அதன் மூலமே அவரை நான் அறிந்து வைத்திருக்கின்றேன். அவர் எழுதியதை வைத்தே அவர் மீதான எனது கணிப்பு இருக்கும்.

ஏனெனில் எதை அவர் விதைத்தாரோ அதையே அறுவடை செய்யமுடியும்.

அதேநேரம் இந்த கருத்துக்களத்திலேயே இத்தனை விசத்தை விதைத்த ஒருவர் தனது குடும்பத்திலும் உற்றார் உறவினர் நண்பர்களிடமும் எதை விதைத்திருப்பார் என்பதே எனது தனிப்பட்ட பெறுமதியை அவருக்கு கொடுக்கும்.

நீங்கள் ஒருவர் இறந்துவிட்டால் எல்லாவற்றையும் மறக்கும் பக்குவமுள்ளவராக இருப்பது தங்களை நல்ல மனிதர் என்று வேண்டுமானால் சொல்ல உதவும். ஆனால் அது இறந்தவரை நினைவு கூற போதுமானது அல்ல.

நன்றி

குகதாசன் அண்ணா, இதில எழுதிற அநேகரிலும் நிச்சயமா எனக்கு வயசு குறைய. உண்மையச்சொன்னா எனக்கு 24 வயசு. 2006 மார்கழி மட்டும் தாயகத்தில இருந்து அங்கேயே உயர் தரமும் கற்று பின்னர் பட்டப் படிப்பின் நிமித்தம் புலம் பெயர வேண்டிய தேவை இருந்தது. தாயகத்திலே பல விசயங்களை கண்டு அனுபவித்த நான் என்னும் வகையில் எனது கருத்துக்கள் அமைகின்றன. இந்த திரியிலே, வசம்பு அவர்களின் கருத்துகளுடன் நான் ஒத்தப் போகிறேன் என எந்த இடத்திலும் கூறவில்லை. அவருக்கு இருக்கும் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட உரிமை. கருத்துக்களுக்கு அப்பால் ஒரு சக மனிதன், கருத்தாளன் எனும் வகையிலேயே அவரை நோக்குகின்றேன். எனக்கு அவர் சாகுமட்டும் முகமும் தெரியாது, ஒருநாள் கூட அவர் தனிமடலில் என்னுடன் தொடர்பு கொண்டதும் கிடையாது. இறந்து போன ஒருவர் பற்றி இனிமேலும் நான் கருத்துக் கூற விரும்பவில்லை. அது மற்றயவர்களின் மனதை நிச்சயம் புண்படுத்தும். ஒருவரில் இருக்கும் நல்ல பக்கத்தை எம்மில் பலர் எப்பவுமே கண்டு கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

மதிபிற்குரிய தும்பளையான், கரும்பு அவர்களிடம் என் சந்தேகத்தை கேட்டால் நீங்கள் பதில் சொல்லிக்கொண்டு, என்னை பார்த்து சொல்லுகிறீர்கள் மோகன் அண்ணா தான் முடிவெடுக்க வேண்டும் நீங்கள் அல்ல என்று, இது எனக்கு கேத்தில் சட்டியை பார்த்து கரி என்று சொன்ன பழமொழியை ஞாபகபடுத்துகிறது.

சரி நான் உங்களின் கருத்துக்கு வருகிறேன். யாழ் களத்திலே பச்சை புள்ளியை மட்டுமே வழங்கும் கருத்து சுதந்திரம் இருக்கும்போது, கிடைக்கும் பச்சை புள்ளிகளை வைத்து கருத்துகளை மதிப்பிடும், உங்களின் புத்திசாலிதனத்தை என்னால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. அதே வேளை வசம்புவை நினைவு கூருவது அவரது பதிவுகளையும் அவரது கருத்துகளையும் சுட்டி காட்டுவது நல்லது. அதை விடுத்து தனது கருத்துகளையும் அவரின் சாவின் பதிவுகளோடு உட்புகுத்துவதை வேறு எவ்வாறு தமிழில் அழைப்பார்கள் என்று உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்.(நன்றி)

எல்லா கருத்துகளுக்கும் மாற்று கருத்துகள் இருக்க தானே செய்யும்.கருத்து எழுதுபவர்கள் என்ன மன நிலையில் இருகிறார்களோ?. கருத்துகள் அவர்களை எந்த விதத்தில் பாதித்ததோ? இதுகள் பற்றி ஆராயாமல் உங்கள் கருத்துக்கு பதில் கருத்து எழுதுபவரை வசைபாட கூடாது. கருத்தை கருத்தால் மட்டுமே வெல்ல வேண்டும் அதுவே நல்ல கருத்தாளனுக்கு அழகு .(நன்றி - மாற்று கருத்து மாணிக்கங்கள்)

இந்த செய்தியையும் பாருங்கள் படங்களையும் பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76838

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=2984:2010-10-25-07-00-43&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

இதை செய்தவர்களை புகழ்பாடி இதில் மரணித்தவர்களை வசைபாடியவருக்கு முகப்பில் ஒரு அஞ்சலி, உள்ளே ஒரு கதை, கவிதை , கட்டுரை, நல்ல கருத்தாளர் என்ற பெயர்.

உங்கள் மனித நேயம் கண்டு வியந்து நிற்கிறோம். இந்த மரணித்தவர்கள் பிறந்த மண்ணில் நீங்களும் பிறந்ததையிட்டு பெருமையடைகிறோம்.

நான் நீங்கள் கேட்டதைப் போல யாரையும் விளக்கம் தரச் சொல்லிக் கேட்கவில்லை அப்புறம் எப்படி கேத்தில்-சட்டி கதை எல்லாம் கூறுகிறீர்கள்? உங்களுக்கு விளக்கம் தரவேண்டிய தேவை யாருக்கும் இல்லை என்பதே எனது கருத்து. அப்படி விளக்கம் கோருவதற்கு நீங்கள் யார்?? உத்தப பாத்தால் போறவன் வாரவனுக்கேலாம் விளக்கம் குடுத்துக் கொண்டேல்லோ இருக்கோணும். மோகன் அண்ணாட்ட கேளுங்கோவேன் ஏன் ஒரு மாற்றுக்கருத்து மாணிக்கத்துக்கு முகப்பில படம் போட்டு அஞ்சலி போட்டிருக்கிறார் எண்டு. நான் மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால் கருத்துகளுக்கு அப்பாலே தான் ஒருவரை நான் நோக்கியுள்ளேன்.

தனது கருத்துகளையும் அவரின் சாவின் பதிவுகளோடு உட்புகுத்துவதை வேறு எவ்வாறு தமிழில் அழைப்பார்கள் என்று உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்

அது சரி இதில எங்க வேறு கருத்துகள் புகுத்தப்பட்டிருக்கு எண்டு சொநீங்கள் எண்டால் அதை எவ்வாறு தமிழில் அழைப்பது என்று நான் கூற முடியும்.

உங்களுக்கு இந்த தளத்திலே அஞ்சலி போட்டது பிடிகாட்டிக்கு ஏன் இங்க நின்று மினக்கெடுறீங்கள். உங்களை யாரும் வற்புறுத்தி அழைத்ததாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமரர் வசம்புவின் கருத்துகளும், தமிழும் சுவையாக இருக்கின்றது. நல்ல ஒரு தமிழ் கருத்தாளர் களத்தில் குறைந்துவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் இறந்துவிட்டார். அவர் எமக்கு மிகவும் தெரிந்தவராகவிருக்கலாம், அறிமுகமானவராகவிருக்கலாம், ஓரளவு கேள்விப்பட்டவராகவிருக்கலாம். அவருக்கு அஞசலி செய்வது ஒரு மனித இயல்பு அவ்வளவுதான். அவரைப்பற்றி ஆராய்வது நல்லதல்ல. காரணம் அவரைப்பற்றி ஏற்கனவே தெரிந்த விடையங்களை இச்சந்தர்ப்பத்தில் வெளியிடுவது, எதுவுமேதெரியாது பொத்தாம்பொதுவாக யாழ்கள உறவுஎனும்பட்சத்தில் அஞ்சலிக்குறிப்புகள் எழுதியவர்கள் இவற்றினை வாசித்து, எதுக்கடா இவருக்கு அஞசலிக்குறிப்பு வாசித்தோம் எனும் மனநிலைக்கு வந்திடக்கூடாது. ஆகவே இத்துடன் இவ்விடையத்திற்கு முற்றுப்புள்ளிவைக்கவும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கோடான கோடி நன்றி கரும்பு அவர்களிற்கு!

வசம்பு அவர்கள் இறையடி சேர்ந்த விடயம் கரும்பு அவர்களின் கட்டுரையின் மூலமே நான் அறிந்து கொண்டேன்.

அன்னாரின் குடும்பத்திற்கு அழந்த அனுதாபங்கள்.

எல்லோரும் வரும் போது எதுவும் கொண்டு வருவதுமில்லை போகும் போது எதையும் கொண்டு போகப்போவதுமில்லை

வாழும் போது சேர்க்கும் புகழ் அழிவில்லா சொத்து அந்த நினைவுகளே மற்றவர்களிடம் அவரை வாழ வைக்கும்.

அந்த ஒரு நல் முயற்சியாகவே கரும்பின் எழுத்துள்ளது அதை எழுதுவதற்கு ஒரு நல்ல மனசு வேண்டும்.

Link to comment
Share on other sites

நன்றி. வசம்பு அவர்கள் மறைந்து ஒருமாத காலம் ஆகின்றது. காலம் வேகமாக சுழல்கின்றது. யாழ் களத்தில் அடுத்த இழப்பு எவரோ..! வாழும் காலத்தில் மகிழ்ச்சியுடன், கருத்து முரண்பாடுகள் காணப்படினும் ஒருவருடன் ஒருவர் பரஸ்பர சினேகத்துடன் வாழ முயற்சிப்போம்.

Link to comment
Share on other sites

  • 1 year later...

நல்ல ஒரு ஆக்கம் மாப்ஸ் இன்றைக்கு தான் பாத்தன் கள உறவுகளில் மறக்க முடியாத ஒரு உறவு வம்பன்னா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.