Jump to content

குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு! ...


Recommended Posts

குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு! ..........
 
 
குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை... - சிக்மண்ட் ஃபிராய்ட் (மனவியலாளர்)
சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம்.
குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர் மீனாட்சி.
அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது.
 
அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது.
 
படிப்பில் முழுத் திறனையும் வெளிப் படுத்துவார்கள். எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும்.
 
எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமை யுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன. ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக் கிறது. தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக் கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும்.
 
அப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும்போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது (பிரெய்ன் ஸ்டிமுலேசன்). அப்பாவுடன் நேரம் செல வழிக்கும் குழந்தைகளின் திறன் மேம்படுவது உலகளவில் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக் கிறது.
 
தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை - ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது.
 
அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை. அம்மாவோடு அப்பாவும் சேர்ந்து வளர்த்த குழந்தைக்கு எவ்வளவு சிக்கலான சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருக்கும்.
படிப்பு, விளை யாட்டு, உறவு, சமூகம் என எல்லா இடத்திலும் தானாக முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.
 
எது சரி, தவறு என்பதை உணர்ந்து செயல்படும் பக்குவத்தை அவர்களிடம் பார்க்க முடியும். தேடல் வேட்கையுடன் இருப்பார்கள். கோடிக்கணக்கான முகங்களுக்கு மத்தியில் தங்களுக்கான தனி அடையாளத்தை காட்ட எப்போதும் குழந்தைகள் விரும்புவார்கள். அதற்கு அவர்களுக்குத் தேவை அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பற்றிக் கொண்டு நடக்கிற சந்தோஷம்தான் .
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு! ...
 
....  தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை - ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது.
 
அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை. அம்மாவோடு அப்பாவும் சேர்ந்து வளர்த்த குழந்தைக்கு எவ்வளவு சிக்கலான சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருக்கும்.படிப்பு, விளை யாட்டு, உறவு, சமூகம் என எல்லா இடத்திலும் தானாக முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.
....
 

 

உண்மையான வார்த்தைகள்..

பகிர்விற்கு நன்றி!

 

ஆனால் இந்த பொடியன்கள், "மொபைல் தொலைபேசியே கதியென இருக்காதையப்பு" என்றால் இக்கால பொடுசுகள் எங்கே கேட்குதுகள்...? அப்பாவிடம் பேசும்போது கூட மொபைலில் விளையாடிக்கொண்டே கதைக்குதுகள்! :o

 

இதற்கு என்ன தீர்வென்றே தெரியவில்லை..! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.