Jump to content

பாம்புகளை ஆடவைத்து வாழ்க்கையோட்டும் மனிதர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிலாபம் திண்ணனூரான்

'மனிதன் உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் இயற்கையின் ஆணை. உழைப்பால் தான் உயரமுடியும். உழைப்பில் ஏற்றத்ததாழ்வுகள் இருக்கலாம். படிகளின் ஏறி இறங்குவதுப் போல ஒன்றில் ஈடுபட்டால் தானே உழைக்க முடியும். மனிதனால் முடியாதது எதுவுமே இல்லை.' இவ்வாறு பாம்புகளை சீராட்டி வளர்த்து அதன் மூலமாக உழைக்கும் முனியாண்டி சுனில் கூறுகிறார்.

103Untitled-1.jpg

முனியாண்டி சுனிலை கொம்பனி வீதி கங்காராம ஏரிக்கறையில் கண்டோம். அவரைக் கடந்து செல்லும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை 'ஹலோ சேர் ஸ்நேக்' என பாம்புகளை காட்டி அழைத்தார். சிரித்துக் கொண்டே உல்லாசப் பயணிகள் அவரைக் கடந்துச் சென்றனர். 

 

இவரின் பரம்பரையினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் எப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியாது என்கிறார் முனியாண்டி. தெலுங்கு மொழியே இவரின் தாய் மொழி. தமிழ் மொழி இவர்களுக்கு மிக நன்றாக தெரிந்தும், இவர் தம்புத்தேகம குடாகமவில் வசிப்பதால் தற்போது சகோதர சிங்கள மொழியையே பெரும்பாலும் பேசுகின்றார். தமிழ் மொழியால் உரையாட மிகவும் சிரமப்பட்டார். வீட்டில் தெலுங்கு மொழியையே பேசுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். 

 

46 வயதைக் கொண்ட இவரின் மனைவியின் பெயர் அகட்டன் மல்லிகா. இவர்கள் கேரள பிரதேசத்தவர்கள் என்பதை அகட்டன் என்ற பெயரின் வாயிலாக அடையாளம் கொள்ளலாம். இவர்களின் பூர்வீகத் தொழில் நாகப்பாம்புகளை மகுடி ஊதி ஆட வைத்து உழைப்பதேயாகும். இவர்களின் பரம்பரையைச் சேர்ந்த 1500 பேர் இன்றும் பாம்பு மற்றும் குரங்கு விளையாட்டுகளை தொழிலாக கொண்டுள்ளனர்.

 

இவரது பரம்பரையினர் வவுனியா, கலாவௌ, தம்புத்தேகம, கல்கமுவ, பொல்காவல கட்டுநாயக்க பிரதேசங்களில் கூட்டமாக வாழ்கின்றனர். 

103DSC05434.jpg

'இலங்கையின் எல்லாப் பிரதேசத்திற்கும் நான் செல்வேன். மிகவும் கஷ்டமான தொழில் ஒரு காலத்தில் நன்றாக சம்பாதித்தோம். இன்று மிகவும் கஷ்டமாக உள்ளது. பல பிரதேசங்களிலுமுள்ள உறவினர்கள் வீடுகளில் இரவில் தங்குவோம். 

 

ஒரு காலத்தில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரை உழைத்தோம். வெள்ளைக்காரர்கள் பாம்பு ஆட்டத்தை பார்வையிட்டு டொலர்களை அன்போடு வழங்கினார்கள். இன்று எல்லாமே தலைகீழாகி விட்டது' என மிகவும் கவலையுடன் தெரிவித்தார் முனியாண்டி.

 

ஆண் நாகப்பாம்பு ஒன்றை மூங்கிலால் பின்னப்பட்டு சாணத்தால் மெழுகி பூசப்பட்ட வட்டவடிவமான பெட்டி வடிவத்திலான கூடைக்குள் அடைத்து வைத்திருந்தார். மற்றுமொரு துணி பைக்குள் பெரும் மலைப்பாம்பை வைத்திருந்தார். மலைப்பாம்பு சுருண்டு அந்த துணிப் பைக்குள் முடக்கப்பட்டு இருந்தது. இப்பாம்பு எட்டு அடி நீளத்தையும் பத்து கிலோகிராம் எடையைக் கொண்டதாகும். 

103DSC05437.jpg

இந்தப் பாம்புகளை எவ்வாறு எங்கு பிடிப்பீர்கள்? எனக் கேட்டோம். 
'மலைப்பாம்பை வவுனியாவில் பிடித்தேன். நாகப்பாம்பு பெரும்பாலும் பொல்பகாவலை பிரதேசத்து வயல் வெளிகளிலேயே அதிகமாக வாழ்கின்றன மிகவும் அமைதியாக வயல் வெளிகளில் நடமாடி பாம்புகளை பிடிப்போம். நாகப்பாம்பின் வாலை முதலில் இறுக்கமாக பிடித்துக் கொண்டு பாம்பு வாயைத்திறந்துக் கொண்டு சீறுகையில் வாயில் பலகைத்துண்டை வைத்து குறடு மூலமாக விஷப்பற்கள் அனைத்தையும் கழற்றி விடுவோம.; பாம்பின் வாயில்  பற்கள் ஒன்றுமே இருக்காது. பற்களை கழற்றுகையில் மளிதர்களுக்குப் போல் நாக பாம்புக்கும் இரத்தம் கசியும். நாக பாம்பின் வாயிலிருந்து இரத்தம் வெளியேறாத வகையில் மூலிகை இலைகளை வைத்ததும் இரத்தம் வெளிவருவது தானாகவவே நின்று விடும்.

மலைப்பாம்பில் விஷம் இல்லை. நாகப்பாம்பில் விஷம் இருந்தால் அதை கண்களால் வெளிப்படுத்தும் என்றார் முனியாண்டி சுனில்.

 

உங்களுக்கு பயம் இல்லையா என்று கேட்டோம். 
அவர் சிரித்துக் கொண்டே, 'பாம்புகளோடு வாழப் பழகிவிட்டோம். இதனால் பயமும் எங்களை விட்டு தொலைந்து விட்டது. நாகப்பாம்புகளை  பிடித்ததும் அதன் பற்களை காற்றி கூடைப்பெட்டிக்குள் போட்டு கயிற்றால் கூடைப் பெட்டியை திறக்க இயலாத வகையில் கட்டி வைத்து விடுவதால் நாகப்பாம்பும் எங்களுக்கு பயந்து அடங்கி, எங்களின் சொற்படி செயல்படும் என பதிலளித்தார்.

 

'மலைப்பாம்புக்கு கோழி, மாட்டு இறைச்சிவகைகளை பச்சையாக உணவாக கொடுப்போம். நாகப்பாம்புக்கு கோழி முட்டைகளை உணவுக்காக வழங்குவோம். தம்புத்தேகமயிலுள்ள எனது வீட்டில் பெண் நாகப்பாம்பு உள்ளது. அதை எனது மனைவி பராமரிப்பாள். இவனுக்கும் (பாம்புதான்) ஜோடி தேவை தானே.

103DSC05438.jpg

இப்பாம்புகள் இருபது வருடங்கள் வரையே வாழும். பாம்புகளை இரண்டு வருடங்களின் பின்னர் காட்டில் விட்டுவிடுவேன். உணவு உண்ணுகையில் கைகளை சுத்தமாக கழுவியதன் பின்னரே உண்ணுவோம். வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் மலைப்பாம்பு தொடர்பாக பிரச்சினைகள் ஏற்பட்டன. தற்போது மலைப்பாம்புக்கான வளர்ப்பு சான்றிதழுக்காக விண்ணப்பித்துள்ளேன். 

இந்த மலைப்பாம்பும் மூன்று மாதங்களுக்கு முன்னரே பிடிக்கப்பட்டது. இப்போது மனிதர்களுடன் வாழ பழகிவிட்டது. எங்களது சமூகமும் இன்று மாறி வருகிறது. இத்தொழிலை இன்றைய எங்களின் இளம் சமூகத்தினர் வெறுக்கின்றனர். 

 

பல்வேறு தொழில்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சமூக கட்டுப்பாடுகளும் தளர்ந்துவிட்டன. முன்பெல்லாம் எமது சமூகத்திற்குள்ளேயே திருமணம் செய்துக் கொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இன்று இக்கட்டுப்பாடுகள் இல்லாமல் போய்விட்டன. இன்னும் சில வருடங்களில் இத்தொழிலை மேற்கொள்வோர் அருகி விடுவார்கள் என அவர் தெரிவித்தார். 

 

இப்பாம்பாட்டிகள் மகுடி ஊதி நாகப்பாம்பை ஆட வைத்து மகுடியை அங்கும் இங்கும் ஆட்டி பாம்பை கோபப்படுத்தி மேலும் ஆட வைத்து பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறார்கள். நாகப் பாம்பை கூடைப் பெட்டிக்குள்ளேயே அடக்கி வைத்து வேடிக்கை காட்டும் அவர்களுக்குள் எவ்வளவோ தூரத்தைக் கொண்ட வலிகள் தேங்கிக் கிடக்கின்றன. 

(படங்கள் கே.பி.பி. புஷ்பராஜா)

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=103&display=0#sthash.0ZNpFlBV.dpuf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.