Jump to content

மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் ஜனாதிபதிக்கு கடிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் ஜனாதிபதிக்கு கடிதம்
15 ஏப்ரல் 2014
Sivakaran_CI.jpg
 
புதியவன் பத்திரிக்கையின் ஆசிரியர் அரசியல் வாதி ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டதோடு குறித்த அலுவலகத்தை சேதப்படுத்துவதாக அச்சுறுத்தியமை தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இது வரை மன்னார் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என அமன் ஆசிரியர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
 
இது தொடர்பாக நேற்று(14) ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,  இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்றதா?ஊடக சுதந்திரத்தை நசுக்கும் ஆட்சியாளர்கள்.
 
ஊடக சுதந்திரத்தை நசுக்குவதும்,சட்ட நிர்வாகத்தின் அரசியல் மயமாக்களும் தான் தொடர்ந்தும் இலங்கையில் இடம் பெறுகின்றது.
 
மன்னாரில் இருந்து வெளி வரும் புதியவன் நாழிதழ் அலுவலகத்தை தாக்குவேன் ,அதன் ஆசிரியருக்கு கொலை அச்சுறுத்தல் என்பனவற்றை நேரில் சென்று குண்டர்கள் சகிதம் ஊடகத்துரைக்கு சவால் விடுத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதின் தொடர்பாக கடந்த 10-4-2014 அன்று மாலை 5.45 மணிக்கு மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.(முறைப்பாட்டு இலக்கம்-87/9)ஆனால் 5 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இது வரை விசாரிக்கப்படவில்லை.
 
குற்றவியல் குற்றமான (கிருமினல்) கொலை அச்சுறுத்தலுக்கு பொலிஸ் திணைக்களம் இது வரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?48 மணி நேர நியம முறையும்,கிருமினல் குற்றங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய விதி முறையும் இலங்கை சட்டத்தில் ஆளும் கட்சி அரசியல் வாதிகளுக்கு விலக்களித்துள்ளீர்களா? என்கின்ற சந்தேகம் எழுகின்றது.
 
அல்லது ஊடகத்துறையை நசுக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலா? இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சட்டம் சாமாணியர்களுக்கு மட்டுமா?  ஊடகத்துறைக்கே இந்த நிலை என்றால் நீதியின் பரிபாலனத்தில் இலங்கையில் சட்ட ஆட்சி நடைபெறுகின்றதா? எனும் ஐயம் சாதாரண பொது மக்கள் மத்தியில் எழுகின்றது.
 
எனவே ஊடக சுதந்திரத்தை மீறும் இந்த சனநாயக படுகொலைக்கு தங்கள் அதிகாரத்தின் கீழ் உள்ள பொலிஸ் திணைக்களததின் அசமந்தப்போக்கிற்கு காரணம் என்ன? அல்லது ஆளும் கட்சிக்கு சார்பாக மட்டும் தான் அரச நிர்வாகம் இயங்கும் என்பது எழுதப்படாத விதியா?இலங்கையிலே ஊடகச்சுதந்திரத்தை பேணுவதற்கும்,சுய பாதுகாப்பிற்கும் பொறுப்புக்கூறுவது யார்?எனவே உங்கள் அரசியல் வாதிகளையும்,பொலிஸ் திணைக்களத்தையும் நேர்மையாக இயங்க நடவடிக்கை எடுப்பிர்களா? எனக்கேட்டுக்கொள்ளுகின்றோம்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138679

 

:huh:

 

ரிஷாதின் பயங்கரவாதம் பற்றி நீங்கள் பொதுப்பலசேனவுடன் கதைப்பது தான் உங்களுக்கு உள்ள ஒரே வழி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.