Jump to content

வடக்கு மாகாணசபையில் இருப்பவர்களை வைக்கோல் பட்டடை நாய்கள் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
வடக்கு மாகாணசபையில் இருப்பவர்களை வைக்கோல் பட்டடை நாய்கள் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்! 
[saturday, 2014-04-12 19:21:37]
Douglas-Devananda-120414-150.jpg

வடக்கு மாகாணசபையில் இருப்பவர்கள் வைக்கோல் பட்டடை நாயைப் போன்றவர்கள் என்று அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில், அமைதியாக சூழல் இருக்கின்ற பொழுதுதான் எங்களுடைய கல்வியை, வாழ்வாதரம் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். அன்று ஒரு காலம் இருந்தது வன்முறையில் ஈடுபட வேண்டிய காலகட்டம் அது. அதனை நான் மறுக்கவில்லை. ஆரம்ப காலப் போராளியாக நானும் இருந்தேன். ஆனால் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அதற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.

  

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போன்று அந்தப் போக்கு தொடர்ந்ததன் விளைவாக நாங்கள் பல கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கும் வரலாற்றுச் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையை நீண்ட கால உழைப்பு, இணக்க அரசியல் மற்றும் பேச்சுகள் ஊடாக மாற்றியிருக்கின்றோம். ஆனால் அதற்காக எங்களுடைய மக்கள் அளவுக்கு அதிகமாக அர்ப்பணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். இன்றைய அமைதியான சூழலிலேயே வடமாகாணம் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றது. எனவே, பல்கலைக்கழக மாணவர்கள் இங்கு நிலவும் அமைதியான சூழலைப் பாதுகாக்க வேண்டும்.

சமீப கால நடவடிக்கை எல்லாம் குழப்பங்களையும், சந்தேகங்களையும், பதற்றங்களையும் ஏற்படுத்துகின்றன. அதற்குப் பல்கலைகழக மாணவர்கள் துணைபோகக் கூடாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிமை வாழ்வை வாழ்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பேச்சின் மூலம் எதனையும் பேசித் தீர்க்க முடியும். அதற்கான சூழல் உருவாகியிருக்கின்றது. இராணுவத்துடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மூவர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அரசியல் வங்குரோத்துத் தனத்துக்காக மீண்டும் பழைய நிலையை உருவாக்க சிலர் முனைகின்றார்கள். மக்கள் துன்பப்பட்டால்தான் அங்களுடைய வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியும் என்று கருதி இச்செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள். இதற்குப் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் உடந்தையாக இருக்கின்றார்கள். அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களுக்கு மக்கள் எந்தவகையிலும் துணைபோகக் கூடாது. பக்கபலமாக இருக்கக் கூடாது. அது மக்களுடைய வாழ்க்கையைச் சீரழிக்கும்.

அரசுடன் நடத்தும் பேச்சின் ஊடாக எமது தமிழ் மக்களுடைய சகல பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள முடியும். வடக்கு மாகாணசபையில் உள்ளவர்கள் வைக்கோல் பட்டறை நாய் போன்று தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள். தாங்களும் மக்களுக்கு நன்மை செய்யாமல் மக்களுக்கு நன்மை செய்கின்றவர்களையும் செய்யவிடாமல் தடுத்து மக்களை உசுப்பேத்தும் நடவடிக்கையிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். என்றார்.

http://seithy.com/breifNews.php?newsID=107423&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

உண்மை தான் வடக்கு மாகாணசபையை ஈபிடிபி கைப்பற்றி இருந்தால் எவ்வளவு பணத்தை கொள்ளையடித்திருக்காலாம். அதையும் செய்ய விடாமல் தாங்களும் கொள்ளையடிக்காமல் வைக்கல் பட்டறை நாய்கள் போல இந்த கூட்டமைப்பு . நீங்கள் கூறுவது சரிதான் டக்லஸ்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.