Jump to content

யாழ்ப்பாணமும் மக்களும்-ஒரு பெண்ணுக்காக இரு ஆண்களும், ஒரு ஆணுக்காக இரு பெண்களும் {வீடியோ இணைப்பு}


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று வரைக்கும் வீட்டுக்குள்ள இருந்ததுகள் இண்டைக்கு வெளிக்குட்டுதுகள்… இதுகளால பெரிய பிரச்சனையளும் சேந்தெல்லோ வெளிக்குடுது… நாங்களும் என்னத்ததான் சொல்றது. சொன்னாலும் கேக்கிற நிலமேலையோ உதுகள் இருக்குதுகள்… என்று கூறிக்கொண்டு முதுதியவர் ஒருவர் தனது பேரனை கடைக்கண்ணால் பார்க்கிறார்…

இவர்கள் இவ்வாறு நினைக்க காரணம் யார்… இளைஞர்களா??? இல்லை நம் நாட்டுக்குள் ஊடுருவும் அன்னியநாட்டு கலாச்சாரமா???

நாளுக்குநாள் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, திருட்டு… இவைகள் போதாதென்று வீதி ஓரங்களிலும், பற்ரைகளுக்குள்ளும், குப்பை தொட்டிகளுக்குள்ளும், எறிந்துகிடக்கும் சிசுக்கள்…

யாழ்ப்பாண கலாச்சாரம் அதைத்தான் கற்றுக்கொடுத்ததா இளைஞர்களுக்கு??? இல்லை… அவர்களாகவே கற்றுக்கொண்டார்களா??? இந்த கேள்விகளை கேட்டு பதிலை பெறுவதற்குள் இன்னும் பல சிசுக்களை பொறுக்கிக்கொள்ளலாம் குப்பை தொட்டிகளுக்குள்…

அரசியலையும் நல்லவற்றையும் எழுதிவந்த நாளிதழ்களில் இன்று ஒருபடி மேலாக கொலைகளையும், தற்கொலைகளையும், சேர்த்து எழுதிவருகின்றன… இவைக்குகாரணம் நமக்கு அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான காதல் தோல்வியும், கள்ளக்காதலுமே முன்னணியில் நிற்கின்றன…

காதல் என்ற போர்வையில் இன்றைய இளைஞர்கள் சிலர் ஆடும் ஆட்டங்களுக்கு அளவுகணக்கே இல்லை… மக்கள் நடமாட்டம் குறைந்த வீதிகள், கடற்கரை ஓரங்கள், திரைஅரங்குகள் என்று தமக்கான ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கும் இவர்கள் காணும் மக்கள் முகஞ்சுளிக்கும் வண்ணம் நடந்து கொள்கிறார்கள்… இவை போதாதென்று ஒரு பெண்ணுக்காக இரு ஆண்களும், ஒரு ஆணுக்காக இரு பெண்களும் பிரதான தெருக்களில் கைகலப்புக்களிலும் ஈடுபடுமளவுக்கு நமது யாழ்மண் கலாச்சாரம் மேம்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது… சங்ககாலத்தில் புனிதமான வார்த்தையாக கருதப்பட்டு வந்த காதல் இன்றைய இளைஞர்களின் செயற்பாட்டால் காதல் என்றால் காதை மூடும் அளவுக்கு மாற்றப்பட்டுவிட்டது…

இந்த நிலமை மாற ஒவ்வொரு இளைஞனும் தனக்குத்தான் புத்திகூறி திருந்தினால்த்தான் எம் மண், எமது நாடு எமது இனம் செழிப்படைய வாய்ப்புக்கள் உண்டு… இவை ஒரு இளைஞனாக என் மனதில் குமுறிய விடயங்கள்… இனி ஒவ்வொரு இளைஞனாகவும் உங்கள் அனைவரின் உள்ளங்களுக்குள்ளும் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாக மாறட்டும்…

நாளைய எதிர்காலம் இன்றைய இளைஞர்கள் கையில்…

இல்லை இல்லை எங்கள் கையில்…

{நன்றி}http://www.siruppiddy.net/?p=4259

http://www.siruppiddy.net/?p=4259

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.