Jump to content

ஈகோவுக்கு வழிவகுக்கும் யங் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை துறக்கிறேன்! கழற்றி கடாசிய சிம்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Silambarasan-150-news.jpg

சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் எப்படி சின்ன குழந்தையும் ரஜினி என்று சொல்லுமோ அதேபோல் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றால் சிம்பு என்று வளர்ந்தவர்களும் சொல்லிய ஒருகாலம் இருந்தது. குழந்தை நட்சத்திரமாக இருந்த போது அவரது ஸ்டைலும் முடியை கோதுகிற விதமும் டயலாக் டெலிவரியும் லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பொருத்தமாக இருந்தது. சிம்பு வளர்ந்த போது பட்டமும் லிட்டில் என்பதிலிருந்து யங் ஆக வளர்ந்தது. படங்களில் யங் சூப்பர் ஸ்டார் என்று போட்டுக் கொண்டார். அவரது ரசிகர்களே அந்தப் படத்தைச் சொல்லி அவரை அழைப்பதில்லை. பட டைட்டிலில் மட்டும் சிம்புவின் பெயருக்கு முன்னால் ஒட்டிக் கொண்டிருந்த பட்டத்தை துறப்பதாக ஓர் அறிக்கை வந்துள்ளது சிம்புவிடமிருந்து.

  

எனக்குநானே சில வரையறைகளை வகுத்துக்கொள்ள ஆன்மீக பாதையில் ஈடுபட்டுள்ளேன். அதன் முதல் முயற்சியாக ஈகோவுக்கு வழிவகுக்கும் யங் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை துறக்கிறேன். எனது ரசிகர்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். தனக்குத்தானே சூட்டிக் கொண்ட பட்டமாக இருந்தாலும் அதனை துறப்பதற்கு ஒரு மனம் வேண்டும். அது சிம்புவிடம் இருக்கிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=113381&category=EntertainmentNews&language=tamil

Link to comment
Share on other sites

சிம்பு போன்ற காமடி பீசுகளுக்கு ஆன்மிகம் ஒரு கேடா  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.