Jump to content

ஐ.பி.எல். மோகம் குறைகிறதா? அனுசரணையாளர்கள் இன்றி அவதி


Recommended Posts

பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் போதிய அனுசரணையாளர் கிடைக்காத சோகத்தில் உள்ளனர் அணி நிர்வாகிகள்.  பல்வேறு சர்ச்சைகளை கடந்து,  ஏழாவது பிரிமியர் தொடர் ஏப். 16 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. புனே அணி விலகியதை அடுத்து இம்முறை சென்னை,  மும்பை உட்பட மொத்தம் 8 அணிகள் மட்டும் பங்கேற்கின்றன.  இதனிடையே டில்லி அணி வீரர்கள் அணியும் ‘ஜெர்சியில்’  இடம்பெற இன்னும் அனுசரணையாளர்கள் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டில் இருந்த சில தனியார் நிறுவனங்களும் இம்முறை ஆர்வம் காட்டவில்லை.  கடந்த முறை 15 ஆக இருந்த பஞ்சாப் அணியின் அனுசரணையாளர் எண்ணிக்கை 4 ஆக குறைந்துவிட்டது. ஐதராபாத் அணிக்கும் 4 அனுசரணையாளர்கள் தான் உள்ளனர்.  பனசொனிக் நிறுவன இயக்குனர் மனிஷ் சர்மா கூறுகையில் ;   பிரிமியர் தொடரின் மீது இருந்த மோகம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகின்றது. இத்தொடருக்கு குறைவாக செலவு செய்தால் போதும் என முடிவு செய்துள்ளோம் என்றார்.  தொடரின் முதல் 20 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடப்பதும் சமீபத்திய சர்ச்சைகளாலும் அனுசரணையாளர்கள் கிடைப்பது கடினமானதாக தெரிகின்றது.  அதேநேரம் சென்னை,  மும்பை, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு பிரச்சினையில்லை. மும்பை அணி நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்;  ‘எங்கள் அனுசரணையாளர்கள் எங்களிடம்தான் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்த மதிப்பு 15 முதல் 20 சதவீதம் அதிகரித்து வருகின்றது. இம்முறை உலகளாவிய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.  35 கோடி ரூபா :  வீரர்கள் அணியும் ஜெர்சிகளில் மட்டும் ஒவ்வொரு அணியும் ஆண்டுக்கு 35 கோடி ரூபா வரை ஒப்பந்தம் செய்கின்றன. அதாவது ஜெர்சியின் முன்பகுதி 14 கோடி ரூபா,  முதுகுப் பகுதி 8 கோடி ரூபா,  ஹெல்மெட் எனில் 2 கோடி ரூபா என பல பிரிவுகள் உள்ளன. போதிய அனுசரணையாளர்கள் கிடைக்காததால் இம்முறை பல இடங்கள்  காலியாகத்தான் இருக்கும்.

 

http://www.thinakkural.lk/article.php?sports/tef6upjxnk96105943a6c82122257ekqbma417791dffc82b4b6268a8hbzyd

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.