Jump to content

தென்ஆப்ரிக்கா எதிர் அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர்


Recommended Posts

மார்ஷ் சதம்: மீண்டது ஆஸி.,
பிப்ரவரி 12, 2014.
 

 

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷான் மார்ஷ் சதம் கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி சரிவிலிருந்து மீண்டது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி செஞ்சுரியனில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் கிரேம் ஸ்மித் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் துாலன் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார்.

ஸ்டைன் வேகம்:

ஆஸ்திரேலிய அணிக்கு ரோஜர்ஸ், வார்னர் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. முதலில் ரோஜர்ஸ் 4 ரன்களில் அவுட்டானார். ஸ்டைன் வேகத்தில் வார்னர் (12) கிளம்பினார். துாலன் (27), கேப்டன் கிளார்க் (23) விரைவில் நடையை கட்டினர். இதனால் 98 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

மார்ஷ் சதம்:

பின் இணைந்த ஷான் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. ஸ்மித், டெஸ்ட் அரங்கில்6வது அரை சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில், டுமினி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மார்ஷ், டெஸ்ட் அரங்கில் 2வது சதத்தை எட்டினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில், 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் (122), ஸ்மித் (91) அவுட்டாகாமல் இருந்தனர்

 

http://sports.dinamalar.com/2014/02/1392225884/marshaustralia.html

Link to comment
Share on other sites

ஜான்சன் வேகத்தில் தென் ஆப்ரிக்கா திணறல்

 

பிப்ரவரி 13, 2014.செஞ்சுரியன்: ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன் வேகப்பந்து வீச்சில் ‘போட்டுத்தாக்க’, தென் ஆப்ரிக்க அணி ‘டாப் ஆர்டர்’ வீரர்களை இழந்து திணறுகிறது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி செஞ்சுரியனில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில், 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் (122), ஸ்மித் (91) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஸ்மித் சதம்:

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்மித் டெஸ்ட் அரங்கில் 4வது சதம் (100) அடித்து திரும்பினார். ஹாடின் டக்–அவுட் ஆனார். மார்ஷ் 148 ரன்கள் எடுத்தார். மிட்சல் ஜான்சன் (33) ஆறுதல் தந்தார். ஹாரிஸ் (19), சிடில் (2) நிலைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 397 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. தென் ஆப்ரிக்கா அணி சார்பில் ஸ்டைன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

ஜான்சன் அபாரம்:

முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்கா அணி மிட்சல் ஜான்சன் ‘வேகத்தில்’ சிதறியது. ஸ்மித் (10), அல்விரோ பீட்டர்சன் (2), டு பிளசி (3) என, மூவரும், ஜான்சனிடம் சிக்கினர். ஆம்லா (17), டுமினி (25) ஏமாற்ற, தேநீர் இடைவேளைக்குப்பின், தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்திருந்நது. டிவிலியர்ஸ் (46), மெக்லாரன் (4) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியாவின் ஜான்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

http://sports.dinamalar.com/2014/02/1392309950/johnsonaustralia.html

Link to comment
Share on other sites

ஆஸி.,பிடியில் தென் ஆப்ரிக்கா

 

பிப்ரவரி 14, 2014

 

.செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில், வார்னர் சதம் கடந்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி செஞ்சுரியனில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 397 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. டிவிலியர்ஸ் (52), ராபின் பீட்டர்சன் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஜான்சன் மிரட்டல்:

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. மிரட்டல் வேகப்பந்துவீச்சை தொடர்ந்த ஜான்சனிடம் பீட்டர்சன் (10), டிவிலியர்ஸ் (91), மார்கல் (0) என, அடுத்தடுத்து சிக்கினர். பிலாண்டர் 15 ரன்களில் அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 206 ரன்கள் எடுத்து ஆல்–அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஜான்சன் 7 விக்கெட் வீழ்த்தினார்.

வார்னர் சதம்:

191 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ரோஜர்ஸ் (1) அதிர்ச்சி கொடுத்தார். பின் வார்னர், துாலன் ஜோடி இணைந்து அசத்தல் ஆட்டத்தை  வெளிப்படுத்தியது.

ஸ்டைன் ஓவரில் வார்னர் மூன்று பவுண்டரி விளாசினார். மறுபுறம், பீட்டர்சன் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த துாலன், டெஸ்ட் அரங்கில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய வார்னர், மூன்று ‘கேட்ச்’ வாய்ப்பிலிருந்து கண்டம் தப்பித்தார்.

இதைப்பயன்படுத்திக் கொண்ட வார்னர், டெஸ்ட் அரங்கில் 6வது சதத்தை எட்டினார். இவர் 115 ரன்னுக்கு அவுட்டாகினார். துாலன் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்து, 479 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. மார்ஷ் (44), கிளார்க் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் பிடியில் இருந்து, தென் ஆப்ரிக்க அணி தப்புவது கடினமே.

 

 

http://sports.dinamalar.com/2014/02/1392396684/warneraustraliacricket.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அடி தென் ஆபிரிக்காவுக்கு...

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி: சொந்தமண்ணில் தென் ஆப்ரிக்கா பரிதாபம்
பிப்ரவரி 15, 2014.
 

 

செஞ்சுரியன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணி, 281 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் செஞ்சுரியனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 397, ஆஸ்திரேலியா 206 ரன்கள் எடுத்ததன.

மூன்றாவது நாள் ஆட்ட முடிவில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்து, 479 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

ஆஸி., ‘டிக்ளேர்’: நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. மார்ஷ் (44) அவுட்டானவுடன், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 290 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்சை ‘டிக்ளேர்’ செய்தது. மைக்கேல் கிளார்க் (17) அவுட்டாகாமல் இருந்தார்.

மிரட்டிய ‘மிட்சல்’: பின், 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது தென் ஆப்ரிக்க அணி. முதல் இன்னிங்சில் மிரட்டிய மிட்சல் ஜான்சன், மீண்டும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். பீட்டர்சன் (1), ஸ்மித் (4), டுமினி (10), மெக்லாரன் (6) இவரிடம் சிக்கினர்.

டுபிளசி (18) ஏமாற்றினார். அதிகபட்சமாக டிவிலியர்ஸ் 48 ரன்கள் எடுத்தார். கடைசியில் மார்கல் (1) ரன் அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 200 ரன்னுக்கு சுருண்டு, 281 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 12 (7+5) விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய அணி 1–0 என, முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், பிப்., 20ல் போர்ட் எலிசபெத்தில் துவங்குகிறது.
 

 

http://sports.dinamalar.com/2014/02/1392481282/AustraliaSouthAfricaTestJohnson.html

Link to comment
Share on other sites

சரிவில் இருந்து மீண்டது தென் ஆப்ரிக்கா: எல்கர், டுபிளசி அரைசதம்
பிப்ரவரி 20, 2014.

 

போர்ட் எலிசபெத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் எல்கர், டு பிளசி பேட்டிங்கில் கைகொடுக்க, தென் ஆப்ரிக்கா அணி சரிவிலிருந்து மீண்டது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற ஆஸ்திரேலியா அணி 1–0 என, முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், போர்ட் எலிசபெத்தில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் ஸ்மித் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் குயின்டன் டி காக் அறிமுக வாய்ப்பு பெற்றார்.

ஸ்மித் ஏமாற்றம்:

தென் ஆப்ரிக்கா அணிக்கு ஸ்மித், எல்கர் ஜோடி துவக்கம் தந்தது. ஹாரிஸ் வேகத்தில் ஸ்மித் (9) முதலில் அவுட்டானார். அடுத்து வந்த ஆம்லாவை, மிட்சல் ஜான்சன் ‘டக்’ அவுட்டாக்கினார். இதனால், தென் ஆப்ரிக்க அணி 11 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தத்தளித்தது.

எல்கர் அசத்தல்:

பின் இணைந்து எல்கர், டுபிளசி ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியது. இந்த ஜோடியின் பொறுமையான ஆட்டத்தினால், தென் ஆப்ரிக்க அணி சரிவில் இருந்து மெல்ல மீண்டது.

ஜான்சன் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசிய டுபிளசி டெஸ்ட் அரங்கில் 3வது அரை சதம் எட்டினார். சிடில் ஓவரில் இரண்டு பவுண்டிரி அடித்த எல்கரும் தன் பங்கிற்கு அரை சதம் கடந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தபோது டுபிளசி (55) அவுட்டானார். எல்கர் 83 ரன்கள் எடுத்த நிலையில், லியான் சுழலில் சிக்கினார். டிவிலியர்ஸ் அரை சதம் கடந்தார். குயின்டன் 7 ரன்களில் கிளம்பினார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்தது. டிவிலியர்ஸ் (51), டுமினி (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

http://sports.dinamalar.com/2014/02/1392915301/elgaraustralia.html

Link to comment
Share on other sites

டிவிலியர்ஸ், டுமினி சதம்: தென் ஆப்ரிக்கா அபாரம்
பிப்ரவரி 21, 2014.
 

 

போர்ட் எலிசபெத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், டிவிலியர்ஸ், டுமினி சதம் அடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 423 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் போர்ட் எலிசபெத் நகரில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. டிவிலியர்ஸ் (51), டுமினி (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

டிவிலியர்ஸ் அபாரம்:

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், டுமினி ஜோடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை பதம்பார்த்தது. அபாரமாக ஆடிய டிவிலியர்ஸ், டெஸ்ட் அரங்கில் தனது 19வது சதத்தை பதிவு செய்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்த போது, நாதன் லியான் ‘சுழலில்’ டிவிலியர்ஸ் (116) சிக்கினார்.

டுமினி அசத்தல்:

அடுத்து வந்த பிலாண்டர் (6), பார்னல் (10) சொற்ப ரன்னில் அவுட்டானார்கள். விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும், மறுமுனையில் அசத்தலாக ஆடிய டுமினி, டெஸ்ட் அரங்கில் தனது 3வது சதம் அடித்தார். இவர், 123 ரன்கள் எடுத்த போது லியான் பந்தில் பெவிலியன் திரும்பினார். மார்னே மார்கல் (1) ‘ரன்–அவுட்’ ஆனார்.

முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 423 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஸ்டைன் (4) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லியான் 5, ரியான் ஹாரிஸ், மிட்சல் ஜான்சன், ஸ்டீவன் ஸ்மித், மைக்கேல் கிளார்க் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

திணறல் துவக்கம்:

பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கிறிஸ் ரோஜர்ஸ் (5) ஏமாற்றினார். அடுத்து வந்த அலெக்ஸ் துாலன் (8), ஷான் மார்ஷ் (0), பார்னல் ‘வேகத்தில்’ வௌியேறினர். கேப்டன் மைக்கேல் கிளார்க் (19), பிலாண்டர் பந்தில் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 81 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

வார்னர் அரைசதம்:

பொறுப்பாக ஆடிய துவக்க வீரர் டேவிட் வார்னர், டெஸ்ட் அரங்கில் தனது 11வது அரைசதத்தை பதிவு செய்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்து, 311 ரன்கள் பின்தங்கி இருந்தது. வார்னர் (65), நாதன் லியான் (12) அவுட்டாகாமல்  இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் பிலாண்டர், பார்னல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

http://sports.dinamalar.com/2014/02/1393002083/ABdeVillierscricket.html

Link to comment
Share on other sites

தென் ஆப்ரிக்க அணி முன்னிலை
பிப்ரவரி 22, 2014.
 

 

போர்ட் எலிசபெத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணி வலுவான முன்னிலை பெற்றது.      

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் போர்ட் எலிசபெத் நகரில் நடக்கிறது.      

முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 423 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் (65), நாதன் லியான் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.           

மார்கல் அசத்தல்: நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் (70) ஆறுதல் தந்தார். நாதன் லியான் (15), மார்னே மார்கல் ‘வேகத்தில்’ போல்டானார். ஸ்டைன் பந்தில் பிராட் ஹாடின் (9) போல்டானார். டுமினி ‘சுழலில்’ மிட்சல் ஜான்சன் (27) சிக்கினார்.      

ஸ்டீவன் ஸ்மித் (49) அரைசத வாய்ப்பை இழந்தார். கடைசியில் ரியான் ஹாரிஸ் (26), மார்னே மார்கலிடம் சரணடைய, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 246 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. பீட்டர் சிடில் (11) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் பிலாண்டர், மார்னே மார்கல் தலா 3, பார்னல் 2, ஸ்டைன், டுமினி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.      

அபார முன்னிலை: பின், 177 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித் (14), எல்கர் (16) ஜோடி ஏமாற்றியது. அடுத்து வந்த டுபிளசி (24), டிவிலியர்ஸ் (29) ஜோடி பெரிய அளவில் சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஹசிம் ஆம்லா, அரைசதம் அடித்தார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்து, 369 ரன்கள் முன்னிலை வகித்திருந்தது. ஆம்லா (93), குயின்டன் டி காக் (9) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் மிட்சல் ஜான்சன், பீட்டர் சிடில் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

http://sports.dinamalar.com/2014/02/1393089527/SouthAfricaAustraliaTestMorneMorkal.html

 

Link to comment
Share on other sites

தென் ஆப்ரிக்கா வெற்றி:ஆஸி., ஏமாற்றம்
பிப்ரவரி 23, 2014.

 

போர்ட் எலிசபெத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்கா அணி 231 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட், போர்ட் எலிசபெத் நகரில் நடந்தது.

முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 423, ஆஸ்திரேலியா 246 ரன்கள் எடுத்தன. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்தது.

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. ஹாரிஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஆம்லா, டெஸ்ட் அரங்கில் 21வது சதத்தை பதிவு செய்தார். குயின்டன் டி காக் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். தென் ஆப்ரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்தபோது, ‘டிக்ளேர்’ செய்தது. ஆம்லா (127), டுமினி (18) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஸ்டைன் மிரட்டல்:

பின் 448 ரன்கள் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு ரோஜர்ஸ், வார்னர் சேர்ந்து வலுவான துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தபோது, வார்னர் (66), அவுட்டானார். துாலன் (5), ஷான் மார்ஷ்(0) ஏமாற்றினர். ஸ்டைன் ‘வேகத்தில்’ கேப்டன் மைக்கேல் கிளார்க் (1), ஸ்டீவன் ஸ்மித் (0), ஹாடின் (1) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது.

ரோஜர்ஸ் சதம்:

பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த ரோஜர்ஸ், சதம் கடந்தார். ஜான்சன் (27), ஹாரிஸ் (6) நீடிக்கவில்லை. இதன் பின் ஆட்டம் ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டது. ரோஜர்ஸ் 107 ரன்களில் அவுட்டானார். லியான் டக்–அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 216 ரன்கள் மட்டும் எடுத்து, 231 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் டுமினி வென்றார்.

 

http://sports.dinamalar.com/2014/02/1393176998/DaleSteyncricket.html

Link to comment
Share on other sites

வார்னர் அசத்தல் சதம்
மார்ச் 01, 2014.

 

கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வார்னர் சதம் கடந்தார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், தொடர் 1–1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி கேப்டவுனில் நேற்று துவங்கியது.  ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

வார்னர் அசத்தல்:

ஆஸ்திரேலிய அணிக்கு ரோஜர்ஸ், வார்னர் ஜோடி துவக்கம் தந்தது. ரோஜர்ஸ் 25 ரன்களில் ஸ்டைனிடம் சிக்கினார். சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த வார்னர், டெஸ்ட் அரங்கில் 7வது சதத்தை பதிவு செய்தார். துாலான் (20) நிலைக்கவில்லை. டுமினி பந்தில் வார்னர் (135) வெளியேறினார். கிளார்க், ஸ்மித் அரை சதம் கடந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 331 ரன்கள் எடுத்திருந்தது. கிளார்க் (92), ஸ்டீவ் ஸ்மித் (50) அவுட்டாகாமல் இருந்தனர்.

சர்ச்சைக்கு பதிலடி:

கடந்த டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் பந்தை சேதப்படுத்தினார் என, வார்னர் புகார் கூறினார். இது தவறு என தெரியவர, வார்னருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க்கும், இவரை சாடியிருந்தார். தற்போது, சதம் அடித்ததன் மூலம், வார்னர் இதற்கு பதிலடி தந்துள்ளார்.

 

http://sports.dinamalar.com/2014/03/1393695591/warneraustraliacricket.html

Link to comment
Share on other sites

கிளார்க் சதம் : வலுவான நிலையில் ஆஸி.,

மார்ச் 02, 2014.கேப்டவுன்:

 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் கேப்டன் மைக்கேல் கிளார்க் சதம் அடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் வலுவான ஸ்கோரை எட்டியது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், தொடர் 1–1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் கேப்டவுனில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 331 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், டெஸ்ட் அரங்கில் தனது 27வது சதத்தை எட்டினார். ஸ்டீவன் ஸ்மித் (84), எல்கர் பந்தில் போல்டானார்.

டுமினி அசத்தல்:

இதன் பின் டுமினி ‘சுழலில்’ வாட்சன் (40), அனுபவ ஹாடின் (13), மிட்சல் ஜான்சன்(0) சிக்கினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் ரன்வேட்டை நடத்திய கிளார்க், 150 ரன்களை கடந்தார். மழை காரணமாக ஆட்டம் முன்னதாகவே முடிக்கப்பட்டது. அப்போது, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 494 ரன்கள் எடுத்திருந்தது. கிளார்க்(161), ஹாரிஸ்(4) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/03/1393780677/australiasouthafricatest.html

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியா வலுவான முன்னிலை * தென் ஆப்ரிக்கா திணறல்
மார்ச் 03, 2014.

 

 

கேப்டவுன்: கேப்டவுன் டெஸ்டில், ஆஸ்திரேலிய அணி வலுவான முன்னிலை பெற்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், 1–1 என தொடர் சமநிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் கேப்டவுனில் நடக்கிறது. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 494 ரன்கள் எடுத்திருந்தது.

ஆஸி., ‘டிக்ளேர்’:

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. முந்தைய நாள் ஸ்கோருடன், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ‘டிக்ளேர்’ செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு, கேப்டன் ஸ்மித் (5), எல்கர் (11) நிலைக்கவில்லை. ஆல்விரோ பீட்டர்சன் அரைசதம் (53) கடந்து திரும்பினார். ஆம்லா, 38 ரன்னுக்கு அவுட்டானார். டிவிலியர்ஸ் (14), டுமினியும் (4) கைவிட்டனர்.

போராடிய டுபிளசி 67 ரன்கள் எடுத்தார். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 287 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பிலாண்டர் (37) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியாவின் ஜான்சன் 4, ஹாரிஸ் 3 விக்கெட் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் 207 ரன்கள் முன்னிலை பெற்ற போதும், ஆஸ்திரேலிய அணி ‘பாலோ–ஆன்’ கொடுக்காமல், இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. மூன்றாவது நாள் ஆட்ட முடிவில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்து, 234 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

வார்னர் (25), ரோஜர்ஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/03/1393867101/Southafricaaustraliatestcapetown.html

 

Link to comment
Share on other sites

வார்னர் சதம்: வெற்றியை நோக்கி ஆஸி.,

கேப்டவுன்: மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் வார்னர் சதம் கடக்க, ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி பயணிக்கிறது. தென் ஆப்ரிக்கா அணி சொந்த மண்ணில் சொதப்புகிறது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், 1–1 என தொடர் சமநிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் கேப்டவுனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 494(டிக்ளேர்), தென் ஆப்ரிக்கா 287 ரன்கள் எடுத்தன. மூன்றாவது நாள் ஆட்ட முடிவில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்து, 234 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

வார்னர் சதம்:

நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. ரோஜர்ஸ் 39 ரன்களில் கிளம்பினார். வார்னர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்டைன் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். துாலான் 37 ரன்கள் எடுத்த திருப்தியில் திரும்பினார். மார்கல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட வார்னர் டெஸ்ட் அரங்கில் 8வது சதம் கடந்தார். வாட்சன் 25 ரன்களில் அவுட்டானார். வார்னர் 145 ரன்களில் ஆட்டமிழந்தார். அபாட் வேகத்தில் கிளார்க், டக்–அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்தபோது, ‘டிக்ளேர்’ செய்தது.

ஜான்சன் மிரட்டல்:

தென் ஆப்ரிக்கா அணிக்கு 511 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அல்விரோ பீட்டர்சன் (9) ஏமாற்றினர். ஜான்சன் வேகத்தில் கேப்டன் ஸ்மித் (3), எல்கர் (0) நடையைக்கட்டினர். ஆம்லா (41) சிறிது நேரம் நிலைத்திருந்தார். நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்து, 440 ரன்கள் பின் தங்கி இருந்தது. டிவிலியர்ஸ் (16), அபாட் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் மீதமுள்ள விக்கெட்டை விரைவில் வீழ்த்தினால், ஆஸ்திரேலியா வெற்றி பெறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் பிறக்குது..... நல்ல காலம் பிறக்குது.....!

 

நவீனன் நல்ல செய்தி கொண்டு வருகுது..... நவீனன் நல்ல செய்தி கொண்டு வருகுது....! :icon_idea:

Link to comment
Share on other sites

ஹ ஹ நல்ல காலம் வரவும் நல்ல செய்தி வரவும், உங்கள் நாடு திறமையாக விளையாட வேணும் புங்கை அண்ணா

Link to comment
Share on other sites

தொடரை வென்றது ஆஸி.,:தென் ஆப்ரிக்கா ஏமாற்றம்
மார்ச் 05, 2014.

 

கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பரபரப்பான மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 245 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. மூன்றாவது போட்டி கேப்டவுனில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 494 (‘டிக்ளேர்’), தென் ஆப்ரிக்கா 287 ரன்கள் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 303 (டிக்ளேர்) ரன்கள் எடுத்தது. இதனையடுத்து தென் ஆப்ரிக்கா அணிக்கு 511 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. டிவிலியர்ஸ் 43 ரன்களில் கிளம்பினார். அபாட் (7) நிலைக்கவில்லை. டு பிளசி (47) அரை சத வாய்ப்பை இழந்தார். தன் பங்கிற்கு டுமினி 43 ரன்கள் சேர்த்தார்.

‘திரில்’ வெற்றி:

கடைசியில் பிலாண்டர், ஸ்டைன் போராடினர். பிலாண்டர் அரை சதம் எட்டினார். ஹாரிஸ் பந்துவீச்சில் ஸ்டைன் (1 ரன்,44 பந்து), மார்னே மார்கல் (0) அவுட்டாகினர். தென் ஆப்ரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, 245 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 4.3 ஓவர் மீதமிருக்கையில் ‘திரில்’ வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, தொடரை 2–1 என கைப்பற்றியது.

ஸ்மித்தின் முதலும் முடிவும்

கேப்டவுனில் 2002ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் கிரேம் ஸ்மித். இப்போட்டியில் தென் ஆப்ரிக்கா தோற்றது. இதே கேப்டவுனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக  தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். இதிலும் நேற்று தென் ஆப்ரிக்கா தோற்க, மிகுந்த சோகத்துடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் கேப்டன் கிரேம் ஸ்மித்.

* டெஸ்ட் அரங்கில், முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் ஸ்மித்–மெக்கன்சி ஜோடி முதலிடம் பிடித்தது. கடந்த 2011ல் நடந்த உலக கோப்பை தொடரின் காலிறுதியில் தென் ஆப்ரிக்க அணி, நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. இதனையடுத்து ஒருநாள் மற்றும் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார். கடந்த 2012ல் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்க அணி 2–0 எனக் கைப்பற்றியது. இதன்மூலம், டெஸ்ட் ரேங்கில் ‘நம்பர்–1’ பிடித்த தென் ஆப்ரிக்க அணி, ஐ.சி.சி., டெஸ்ட் அணிக்கான விருதை தட்டிச் சென்றது.

அதிர வைத்த ஆஸி.,

கடைசியாக ஆஸ்திரேலிய அணி விளையாடிய இரண்டு டெஸ்ட் தொடர்களில் முன்னணி வீரர்கள் சிலர் ஓய்வை அறிவித்து சர்வதேச போட்டிகளில் இருந்து விலகினர். ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது இங்கிலாந்தின் ஜோனாதன் டிராட், சுவான், கெவின் பீட்டர்சன் ஆகியோர் ஓய்வை அறிவித்து அதிர்ச்சி அளித்தனர். இங்கிலாந்து பயிற்சியாளர் ஆன்டி பிளவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த வரிசையில் தற்போது தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோசமான ஆட்டத்தை வௌிப்படுத்திய ஸ்மித், மூன்றாவது டெஸ்ட் துவங்குவதற்கு முன் தனது ஓய்வை அறிவித்தார்

 

 

http://sports.dinamalar.com/2014/03/1394041566/RyanHarriscricket.html

Link to comment
Share on other sites

ஹாட்ஜ் அதிரடி: ஆஸி., வெற்றி

மார்ச் 13, 2014.

டர்பன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில், ஹாட்ஜ் அதிரடி கைகொடுகக், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டி டர்பனில் நடந்தது. மழை அவ்வப்போது பெய்து கொண்டிருந்ததால், போட்டி 7 ஓவராக குறைக்கப்பட்டது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பெய்லி ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

தென் ஆப்ரிக்கா அணிக்கு ஆம்லா (4) ஏமாற்றினார். குயின்டன் டி காக்,

டு பிளசி சிறப்பாக விளையாடினர். ஆஸ்திரேலிய அணி 7 ஓவரில், 1 விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்தது. குயின்டன் (41), டு பிளசி (27) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஹாட்ஜ் அதிரடி:

ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச் (5), வாட்சன் (2) ஒற்றை இலக்கில் வெளியேறினர். தனி ஆளாக போராடிய வார்னர் 40 ரன்களில் அவுட்டானார். மேக்ஸ்வெல் (1), பெய்லி (2) விரைவில் நடையைக்கட்டினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. இதில், பார்னல் பந்துவீச்சில் இரண்டு சிக்சர் அடித்த ஹாட்ஜ் வெற்றியை உறுதி செய்தார். ஆஸ்திரேலிய அணி 6.4 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://sports.dinamalar.com/2014/03/1394687629/warneraustraliacricket.html

Link to comment
Share on other sites

தொடரை வென்றது ஆஸி.,:தென் ஆப்ரிக்கா ஏமாற்றம்
மார்ச் 15, 2014.

 

செஞ்சுரியன்: மூன்றாவது ‘டுவென்டி–20’ போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 2–0 என கைப்பற்றியது. தென் ஆப்ரிக்கா அணி சொந்த மண்ணில் ஏமாற்றம் அடைந்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி செஞ்சுரியனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பெய்லி ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

தென் ஆப்ரிக்கா அணிக்கு குயின்டன் டி காக் 41 ரன்கள் எடுத்தார். அடுத்த வந்த ஆம்லா (2), டு பிளசி (5), டுமினி (13) விரைவில் வெளியேறினர். டிவிலியர்ஸ் (11), மில்லர் (2) கைவிட்டனர். தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க், மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச் (39), வாட்சன் (35) வலு சேர்த்தனர். ஒயிட் (14), மேக்ஸ்வெல் (17) நிலைக்கவில்லை. டுமினி வீசிய 15வது ஓவரில், பெய்லி, ஹாட்ஜ் தலா ஒரு சிக்சர் விளாசி வெற்றியை உறுதி செய்தனர். ஆஸ்திரேலிய அணி 15 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் வென்றார். தொடர் நாயகன் விருது தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக்கிற்கு தரப்பட்டது.

 

http://sports.dinamalar.com/2014/03/1394855518/baileyaustralia.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.