Jump to content

IPL 2014 வீரர்கள் விவரம் வெளியீடு


Recommended Posts

தோனிக்கு ரூ. 12.5 கோடி:டாப்-5 வீரர்கள் விவரம் வெளியீடு
 

 

புதுடில்லி: ஏழாவது பிரிமியர் தொடருக்கான சென்னை அணியில் கேப்டன் தோனி, ரெய்னா, அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ ஆகிய ஐந்து வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர். தோனிக்கு ரூ. 12.5 கோடி சம்பளம் கிடைக்கும். மும்பை, ராஜஸ்தான் அணிகளும் 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன.

இந்தியன் பிரிமியர் லீக் நிர்வாகத்தின் சார்பில், பிரிமியர் ‘டுவென்டி–20’ போட்டிகள், கடந்த 2008 முதல் நடக்கின்றன. இந்த ஆண்டு ஏழாவது தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவுள்ளன. இதற்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்., 12, 13ல் நடக்கும்.

இந்த ஏலம் முழுமையாக நடக்கவுள்ளதால், அனைத்து அணிகளும் ஏதாவது ஐந்து  வீரர்களை தக்கவைத்துக் கொண்டு, மற்றவர்களை விடுவிக்க வேண்டும். இதற்கு நேற்று தான் கடைசி நாள். இதையடுத்து, ஒவ்வொரு அணிகளும் தாங்கள் வைத்துக் கொண்ட வீரர்கள் விவரத்தை வெளியிட்டன.

இதன் படி, சென்னை அணியில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, ரெய்னா,  அஷ்வின் மற்றும் டுவைன் பிராவோ என, ஐந்து பேர் நீடிக்கின்றனர். ‘டாப்–-1’ இடம் பெற்ற தோனிக்கு, இப்போது பெறும் ரூ. 8.6 கோடியுடன் கூடுதலாக ரூ. 3.9 கோடி கிடைக்கும். மொத்தம் ரூ. 12.5 கோடி பெறுவார்.

அணியின் 2, 3 மற்றும் 4, 5 வது வரிசையில் யார் உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. விதிமுறைப்படி, இரண்டாவது வீரருக்கு ரூ. 9.5 கோடி, மூன்றாவது ரூ. 7.5 கோடி, நான்காவது ரூ. 5.5 கோடி மற்றும் ஐந்தாவது வீரருக்கு ரூ. 4 கோடி தரப்படும்.

மீதம் எவ்வளவு:

ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ. 60 கோடி செலவிடலாம். இதில் 16 முதல் 27 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். சென்னை அணியை பொறுத்தவரையில் முதல் 5 வீரர்களுக்கு ரூ. 39 கோடி போக, மீதமுள்ள 21 கோடியில், 11 முதல் 22 வீரர்கள் வரை வாங்க வேண்டும்.

விஜய் எப்படி:

சென்னை அணி 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டதால், ஒரு ‘ஜோக்கர் கார்டை’ மட்டும் பயன்படுத்த முடியும். இதனால், முரளி விஜய், பத்ரிநாத், கடந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த மைக் ஹசி, ஆல்பி மார்கல், டுபிளசி போன்றவர்களில் யாராவது ஒருவர், மீண்டும் உறுதியாக அணிக்கு திரும்பலாம்.

ஜான்சனுக்கு ‘ஷாக்’:

மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, போலார்டு, மலிங்கா, தினேஷ் கார்த்திக் மற்றும் அம்பதி ராயுடுவை தக்கவைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிட்சல் ஜான்சன், அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இவரை ‘ஜோக்கர் கார்டு’ மூலம் மீண்டும் மும்பை அணி வாங்கும் எனத் தெரிகிறது.

சஞ்சுவுக்கு லாபம்:

ராஜஸ்தான் அணியில் டிராவிட்டுக்குப் பின் வாட்சன் தான் கேப்டன் என்பதால், இவருடன் ரகானே, சஞ்சு சாம்சன், பால்க்னர் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி என, ஐந்து பேர்கள் தக்கவைக்கப்பட்டனர். இதில் 19 வயது வீரர் சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால், இவருக்கு ரூ. 4 கோடி மட்டும் கிடைக்கும்.

பாவம் சேவக்:

டில்லி அணியின் சேவக், வார்னர், ஜெயவர்தனா உள்ளிட்ட வீரர்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டனர், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிறிஸ்டன்  தலைமையில், இம்முறை டில்லி அணி முற்றிலும் மாற்றியமைக்கப்படுகிறது. இதனால், சேவக் ஏலத்தில் விலை போவது சிக்கல் தான்.

‘ ஜோக்கர் கார்டு’ அறிமுகம்

இம்முறை 7வது பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளில் ‘ஜோக்கர் கார்டு’ முறையும் ஒன்று. ஒரு அணி அதிகபட்சமாக 5 வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொள்ள முடியும். தேவைப்படும் பட்சத்தில், ‘ஜோக்கர் கார்டு’ முறையில் கூடுதலாக ஒரு வீரரை தேர்வு செய்யலாம். ஏலத்தின் போது மட்டுமே அந்த வீரரை தக்கவைத்துக் கொள்ள முடியும். மற்ற அணிகளால் ஏலத்தில் எவ்வளவு தொகைக்கு கேட்கப்பட்டாரோ, அந்த தொகைக்கு அந்த வீரரை வாங்கிக் கொள்ள முடியும்.

உதாரணமாக, சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு வீரரை ‘ஜோக்கர் கார்டு’ முறையில் தேர்வு செய்ய விரும்பினால், அந்த வீரரை ஏலத்தில் மற்ற அணிகள் எவ்வளவு தொகைக்கு கேட்கிறதோ, அந்த விலையை கொடுத்து, சென்னை அணி தக்கவைத்துக் கொள்ள முடியும்.

* ஒரு அணி, அதிகபட்சமாக மூன்று வீரர்களை ‘ஜோக்கர் கார்டு’ முறையில் தேர்வு செய்யலாம். ஆனால் இது, அவர்கள் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கையை பொறுத்தது. அதாவது 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் அணி ஒரே ஒரு வீரரை மட்டும் ‘ஜோக்கர் கார்டு’ முறையில் தேர்வு செய்யலாம். ஒன்று அல்லது இரண்டு வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டால், 2 வீரர்களை ‘ஜோக்கர் கார்டு’ முறையில் தேர்வு செய்யலாம். எந்த ஒரு வீரரையும் தக்கவைத்துக் கொள்ளவில்லை என்றால், 3 வீரர்களை ‘ஜோக்கர் கார்டு’ முறையில் தேர்வு செய்யலாம்.

பாக்ஸ்

பறிபோகும் சுதந்திரம்

கடந்த தொடரில் ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அங்கின் சவான், சண்டிலா உள்ளிட்ட வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்கினர். இதனால் தானோ, என்னவோ, இந்த அணியில் நீடிக்க இளம் வீரர் ரகானேவுக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது. தவிர, டிராவிட்டும் ஆலோசகராகத் தான் உள்ளார்.

இருப்பினும், ஏலம் என்று வந்து விட்டதால், அடிமாடு போலத் தான். ரகானேவுக்கு விருப்பம் இல்லை என்றாலும், அணி நிர்வாகம் இவரை தக்கவைத்துக் கொண்டது. ஒருவேளை, இவர் வெளியேறி இருந்தாலும், ‘ஜோக்கர் கார்டு’ மூலம், ராஜஸ்தான் அணி மீண்டும் வாங்கி விடும். விருப்பம் இல்லை என்றாலும், இந்த அணியில் தான் குப்பை கொட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார். மொத்தத்தில் வீரர்களின் சுதந்திரம் பறிபோனது தான் மிச்சம்.

எப்போதும் சென்னை தான்

பிரிமியர் தொடரில் வெற்றிகரமான அணி சென்னை தான். 2010, 2011 ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணி, 2010ல் சாம்பியன்ஸ் லீக் தொடரையும் வென்றது. மொத்தம் நடந்த 6 தொடரில், 5 முறை பைனலுக்கு முன்னேறியது.

இதற்கு கேப்டன் தோனி உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் தொடர்ந்து சென்னை அணியில் விளையாடியது தான் முக்கிய காரணம். தோனி, ரெய்னா, அஷ்வின் ஆகிய மூவரும் கடந்த 2008 முதல், இப்போது வரை சென்னை அணியில் தான் விளையாடுகின்றனர்.

பிரிமியர் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் <உள்ள ரெய்னா (99 போட்டி, 2802 ரன்கள்), இதுவரை சென்னை பங்கேற்ற அனைத்து போட்டியிலும் விளையாடியுள்ளார்.

தவிர, 2012ல் ரூ. 10.66 கோடிக்கு வாங்கப்பட்ட ரவிந்திர ஜடேஜா, கடந்த தொடரில் அதிக விக்கெட் (32) சாய்த்த டுவைன் பிராவோவும் சென்னை அணியின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டனர். இதனால் தான், இந்த வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர்.

யார் யாருக்கு ‘கல்தா’

அணி    விடுவிக்கப்பட்ட முக்கிய வீரர்கள்

சென்னை    முரளி விஜய், மைக் ஹசி, ஆல்பி மார்கல், டுபிளசி

மும்பை    மிட்சல் ஜான்சன், மேக்ஸ்வெல், பாண்டிங், பிரக்யான் ஓஜா

ராஜஸ்தான்    கெவான் கூப்பர், பெரேரா, பிரவிண் டாம்பே

பஞ்சாப்    ஷான் மார்ஷ், கில்கிறிஸ்ட், டேவிட் ஹசி, பியுஸ் சாவ்லா

கோல்கட்டா    யூசுப் பதான், காலிஸ், மார்கன், பிரண்டன் மெக்கலம், பிரட் லீ, முகமது ஷமி

பெங்களூரு    ஜாகிர் கான், தில்ஷன், புஜாரா, வினய் குமார், ராம்பால், முரளிதரன்

டில்லி    சேவக், வார்னர், ஜெயவர்தனா, இர்பான் பதான், மார்னே மார்கல

 

box1_zps3fc1e700.jpg

 

 

 

http://sports.dinamalar.com/2014/01/1389373803/dhonichennaiteam.html

 

Link to comment
Share on other sites

மலிங்கவைத் தக்க வைத்துக் கொண்டது மும்பை இந்தியன்ஸ்

இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 7வது பருவகாலம் இவ்வருடம் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதான ஏலத்திற்கு முன்னர் அணிகள் தங்களது முன்னாள் வீரர்களைத் தக்க வைத்து வருகின்றன. இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி றோகித் சர்மா, லசித் மலிங்க, கெரான் பொலார்ட், ஹர்பஜன் சிங், அம்பத்தி ராயுடு ஆகியோரைத் தக்க வைத்துள்ளது. கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி டேவிட் மில்லரையும், மனொன் வோக்றாவையும் தக்க வைத்துள்ளது.

ஒவ்வோர் அணியும் அதிகபட்சமாக தலா 5 அணிகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதோடு, அந்த 5 வீரர்களும் ஏலத்தில் உள்ளடக்கப்படமாட்டார்கள். அத்தோடு தங்களது அணியில் விளையாடிய வீரர்களை ஏலத்தின் போது மீண்டும் வாங்குவதற்கும் அணிகளுக்கு வாய்ப்புக்களுள்ளன. ஒரு வீரரை வேறோர் அணி ஏலத்தில் பெற்ற பின்னர், அவ்வணி வாங்கிய அதே விலைக்கு அவரது பழைய அணி அவரை வாங்கிக் கொள்ள முடியும். 3 தொடக்கம் 5 வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் அணிகளுக்கு இதற்கான ஒரு வாய்ப்பும், ஒன்று தொடக்கம் இரண்டு வரையிலான வீரர்களைத் தக்க வைப்பவர்களுக்கு இதற்கான இரண்டு வாய்ப்புக்களும், எந்தவொரு வீரரையும் தக்க வைக்காத அணிகளுக்கு இவ்வாறான 3 வாய்ப்புகளும் வழங்கப்படும்.

இந்நிலையிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி 5 வீரர்களைத் தக்க வைத்துள்ளது. இதில், அண்மைய ஆஷஸ் தொடரின் நாயகன் மிற்சல் ஜோன்சனை அவ்வணி தக்க வைத்துக் கொள்ளவில்லை.  அணித்தலைவர் றோகித் சர்மா, வேகப்பந்த வீச்சாளர் லசித் மலிங்க, சகலதுறை வீரர் கெரான் பொலார்ட், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், விக்கெட் காப்பாளர் அம்பத்தி ராயுடு ஆகியோரைத் தக்க வைத்துள்ளது.

கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி தென்னாபிரிக்க அதிரடித் துடுப்பாட்ட வீரர் டேவிட் மில்லரையும், பெரிதளவில் அறியப்படாத இளம் வீரர் மனொன் வோக்றாவையும் தக்க வைத்துள்ளது.

இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தின் பின்னர் தனது அணியின் வீரர் ஒருவரையும், கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணிக்கு அவ்வாறான 2 வாய்ப்புக்களும் கிடைக்கப்பெறும்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/96410-2014-01-11-06-46-19.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஐ.பி.எல் ஏலத்தில் குமார் சங்கக்கார இல்லை

புதன்கிழமை, 29 ஜனவரி

 

 

இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் இவ்வாண்டுக்கான தொடரில் இலங்கையின் குமார் சங்கக்கார பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அறிவிக்கப்பட்டுள்ள ஏலத்தில் பங்குபற்றவுள்ளவர்களுக்கான பட்டியலிலேயே குமார் சங்கக்கார இடம்பெற்றிருக்கவில்லை.

உள்ளூர் இந்திய வீரர்களும், சர்வதேச வீரர்களுமாக மொத்தமாக 233 வீரர்கள் இந்த ஏலப்பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் இலங்கையின் குமார் சங்கக்கார தவிர, இலங்கையின் டினேஷ் சந்திமால், அவுஸ்ரேலிய அணித்தலைவர் மைக்கல் கிளார்க், மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் கேமர் றோச் ஆகியோரும் இடம்பெற்றிருக்கவில்லை.

இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் நடுப்பகுதியில் இலங்கை அணி இங்கிலாந்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அத்தொடரைக் கருத்திற் கொண்டே குமார் சங்கக்காரவும், டினேஷ் சந்திமாலும் இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் பங்குபற்றாமல் தவிர்த்துள்ளனர் எனக் கருதப்படுகிறது. எனினும் இலங்கையின் முன்னணி வீரர்களில் அஞ்சலோ மத்தியூஸ், மஹேல ஜெயவர்தன இருவரும் இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் பங்குபற்றவுள்ளனர்.

இதுவரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய வீரர்களாக இந்தியா, அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த தலா 46 வீரர்களும், இலங்கையைச் சேர்ந்த 39 வீரர்களும், மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த 29 வீரர்களும், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 28 வீரர்களும், நியூசிலாந்தைச் சேர்ந்த 18 வீரர்களும், இங்கிலாந்தைச் சேர்ந்த 11 வீரர்களும், சிம்பாப்வேயைச் சேர்ந்த 8 வீரர்களும், பங்களாதேஷைச் சேர்ந்த 7 வீரர்களும், நெதர்லாந்தைச் சேர்ந்த வீரரான றயன் ரென் டூஸ்காட்டாவும் காணப்படுகின்றனர்.

இதில் அதிகபட்ச அடிப்படைய விலாய 2 கோடி இந்திய ரூபாக்களைக் கொண்ட வீரர்களாக 31 வீரர்கள் காணப்படுகின்றனர்.

2 கோடி இந்திய ரூபா அடிப்படை விலையைக் கொண்டோர்

டினேஷ் சந்திமால், பிரவீன் குமார், அமித் மிஷ்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, பிரக்ஜான் ஓஜா, யூசுப் பதான், விரேந்தர் செவாக், யுவ்ராஜ் சிங், சௌரவ் திவாரி, றொபின் உத்தப்பா, முரளி விஜய், ஜோர்ஜ் பெய்லி, பிரட் ஹடின், பிரட் ஹொட்ஜ், மைக்கல் ஹசி, மிற்சல் ஜோன்சன், பிரட் லீ, ஷோன் மார்ஷ், ஜேம்ஸ் பற்றின்சன், ஸ்டீவன் ஸ்மித், மிற்சல் ஸ்ரார்க், அலெக்ஸ் ஹேல்ஸ், சமித் பட்டேல், கெவின் பீற்றர்சன், பிரென்டன் மக்கலம், றொஸ் ரெய்லர், ஜக்ஸ் கலிஸ், திலகரட்ண டில்ஷான், மஹேல ஜெயவர்தன, அஞ்சலோ மத்தியூஸ், மார்லன் சாமுவேல்ஸ்

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/98374-2014-01-29-05-37-20.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐபிஎல்  விளையாட்டுகான வீரர்களது ஏலவிபரத்தைப் பார்த்தால் எனக்கு  பல நூறாண்டுகாலத்துமுன்பு நடந்த கறுப்பின அடிமை வியாபாரம் நினைவுக்கு வருகின்றது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கோரிக்கு அதிக கிராக்கி! *இன்று வீரர்கள் ஏலம்
பிப்ரவரி 11, 2014

 

.பெங்களூரு:  ஏழாவது பிரிமியர் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று துவங்குகிறது. இதில், நியூசிலாந்தின் ‘அதிரடி நாயகன்’ கோரி ஆண்டர்சனுக்கு அதிக கிராக்கி காணப்படுகிறது. இவரை வாங்க பெரும்பாலான அணிகள் ஆர்வமாக உள்ளன. டில்லி அணியில் இருந்து நீக்கப்பட்ட சேவக், ஏலத்தில் விலை போவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடர் கடந்த 2008 முதல் நடக்கிறது. கடந்த  ஆண்டு ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சை பெரியளவில் வெடித்தது.

இதில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் உள்ளிட்ட வீரர்கள் தடை செய்யப்பட்ட போதும், விசாரணை இன்னும் முடியவில்லை. ‘பெட்டிங்கில்’ ஈடுபட்ட சென்னை அணியின் குருநாத், பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன், சுப்ரீம் கோர்ட்டின் பிடியில் சிக்கியுள்ளனர்.

இருப்பினும், ஏழாவது தொடருக்கான ஏலத்துக்கு தடைவிதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இதையடுத்து, திட்டமிட்டபடி இரண்டு நாள் வீரர்கள் ஏலம், இன்று பெங்களூருவில் துவங்குகிறது.

கடந்த ஆண்டு புனே அணி விலகியதால், இம்முறை சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத் என, எட்டு அணிகள் மட்டும் பங்கேற்கின்றன.            

இதில் சென்னை, மும்பை, ராஜஸ்தான் அணிகள் தலா 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. டில்லி அணி நட்சத்திர வீரர் சேவக் உட்பட அனைவரையும் விடுவித்தது.

192 வீரர்கள்:

இதில் 7 அணிகள் தக்கவைத்த 24 வீரர்கள் தவிர, இன்னும் 192 வீரர்கள் ரூ. 274.5 கோடி செலவில் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர். இதில் 10 நாடுகளில் இருந்து, 895 பேர் விண்ணப்பித்த நிலையில், சர்வதேச போட்டிகளில் விளையாடிய 219 பேர் (இந்தியாவின் 169, பிற நாடுகளில் இருந்து 50), உள்ளூர் வீரர்கள் 295 பேர் என, மொத்தம் 514 பேர் பங்கேற்கின்றனர்.              

இதில் சேவக், யுவராஜ் சிங்குடன் 11 இந்திய வீரர்கள் மற்றும் பீட்டர்சன் உள்ளிட்ட 30 பேர், ரூ. 2 கோடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் 16 பேர் முதல் பிரிவில் ஏலம் விடப்படுகின்றனர்.

ரஞ்சித் தொடரில் சொதப்பிய சேவக், டில்லி அணியில் இருந்து நீக்கப்பட்டார். தவிர, ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணியிலும் புறக்கணிக்கப்பட்ட இவரை, யார் வாங்குவர் என்பது தான் அதிக எதிர்பார்ப்பாக உள்ளது.

இதேபோல, புனே அணியில் இருந்த யுவராஜ் சிங்கை, பஞ்சாப் அணி மீண்டும் வாங்கத் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட பீட்டர்சனுக்கும் மவுசு அதிகம் இருக்கும் எனத் தெரிகிறது.

ஒருநாள் அரங்கில் 36 பந்தில் அதிவேக சதம் அடித்த நியூசிலாந்து அணியின் ‘ஆல் ரவுண்டர்’ கோரி ஆண்டர்சனின் குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ. 1 கோடியாக உள்ளது. இவருடன், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ‘ஹாட்ரிக்’ சதம் அடித்த குயின்டன் டி காக் (தென் ஆப்.,) ஆகியோர் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படலாம்.

ஏலம் எப்போது:

பிரிமியர் ஏலம் இன்று காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. கடந்த 2008ல் இருந்து இதை நடத்தி வரும், இங்கிலாந்தின் ரிச்சர்டு மெடிலே தான், மீண்டும் முன்னின்று நடத்துகிறார்.

பார்க்க மாட்டேன்

ஒருநாள் அரங்கில் 36 பந்தில் அதிவேகசதம் அடித்து உலக சாதனை படைத்தவர் நியூசிலாந்து அணியின் ‘ஆல் ரவுண்டர்’ கோரி ஆண்டர்சன், 23. தற்போது நடக்கும் இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பிரிமியர் ஏலத்தின் வீரர்கள் பட்டியலில், இவர் 83வது இடத்தில் இடம் பெற்றுள்ளார். இவரது குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ. 1 கோடி.

இவர், அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்படும் பட்சத்தில், இளவயதில் கோடீஸ்வரர் ஆன, முதல் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் என்ற பெருமை பெறலாம். ஆண்டர்சன் கூறுகையில்,‘‘இன்றைய ஏலத்தை தொடர்ந்து கண்காணிப்பேன். அதேநேரம், எனது பெயர் வரும் போது, பார்ப்பதை தவிர்த்து விடுவேன். ஏனெனில், அப்போது தான் பரபரப்பாக இருக்கும்,’’ என்றார்.

 

‘டாலர்’ கிடையாது

கடந்த ஆறு பிரிமியர் தொடரின் போது நடந்த ஏலம், இதில் பங்கேற்ற வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் அனைத்தும் டாலர் மதிப்பில் தரப்பட்டது. இதனால், சர்வதேச சந்தையில் ‘டாலர்’ மதிப்பு ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப, அணி உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்யும் வகையில், முதல் முறையாக இந்திய ரூபாய் மதிப்பில் ஏலம், நடக்க உள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/02/1392135988/IPLplayersauctionsehwagCoreyAnderson.html

 

Link to comment
Share on other sites

யுவராஜ் சிங்கிற்கு 14 கோடி: துவங்கியது பிரிமியர் கிரிக்கெட் ஏலம்
 

 

பெங்களூரு: ஏழாவது பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இதுவரை, யுவராஜ்சிங் அதிகபட்சமாக ரூ. 14 .கோடிக்கு பெங்களூரு அணி வங்கியது.

இந்தியன் பிரிமியர் லீக் ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடர் கடந்த 2008 முதல் நடக்கிறது. கடந்த  ஆண்டு ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சை பெரியளவில் வெடித்தது. இதில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் உள்ளிட்ட வீரர்கள் தடை செய்யப்பட்டனர். தவிர, ‘பெட்டிங்கில்’ ஈடுபட்ட சென்னை அணியின் குருநாத், பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் ஆகியோர் மீதான விசாரணை இன்று முடியவில்லை.

இருப்பினும், ஏழாவது தொடருக்கான ஏலத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதிக்காத காரணத்தினால் இன்று வீரர்கள் ஏலம் துவங்கியது. இத்தொடரில் இருந்து கடந்த ஆண்டு புனே அணி விலகியதால், இம்முறை சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத் என, எட்டு அணிகள் மட்டும் ஏலத்தில் பங்கேற்கின்றன.

புதிய முறை:

பிரிமியர் தொடருக்கான ஏலத்தில் விதிகளில் புதிய முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன் சென்னை, மும்பை, ராஜஸ்தான் அணிகள் தலா 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. பிற அணிகள் ஒருசில வீரர்களை தவிர, மற்ற வீரர்களை விடுவித்தது. இதில் 7 அணிகள் தக்கவைத்த 24 வீரர்கள் தவிர, இன்னும் 192 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகின்றனர்.

தவிர, கடந்த ஆண்டில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 33 வீரர்கள் வரை அணியில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால் இம்முறை குறைந்தபட்சம் 16 வீரர்கள், அதிகபட்சமாக 27 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்க அனுபதி  அளிக்கப்பட்டுள்ளது.

62 கோடி:

ஏலத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும் தலா ரூ. 62 கோடி வரை  மட்டுமே வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும். இதன்படி ஏற்கனவே 5 வீரர்களை தக்கவைத்துக்கொண்ட சென்னை, ராஜஸ்தான், மும்பை அணிகளுக்கு தலா ரூ. 21 கோடி எஞ்சியுள்ள நிலையில் ஏலத்தில் பங்கேற்றது. பிற அணிகள் டில்லி (ரூ.62 கோடி), பஞ்சாப் (ரூ.43.50 கோடி), கோல்கட்டா (ரூ. 38 கோடி), பெங்களூரு (ரூ.30.50 கோடி), ஐதராபாத் (ரூ.38 கோடி) அணிகளும் ஏலத்தில் பங்கேற்றது.

இந்த ஏலத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய 219 பேர் (இந்தியாவின் 169, பிற நாடுகளில் இருந்து 50), உள்ளூர் வீரர்கள் 295 பேர் என, மொத்தம் 514 பேர் பங்கேற்கின்றனர். கடந்த 2008ல் முதல் இந்த ஏலத்தை நடத்தி வரும், இங்கிலாந்தின் ரிச்சர்டு மெடிலே தான், மீண்டும் முன்னின்று துவங்கி வைத்தார்.

  விஜய் ஆரம்பம்:

ஏலத்தில் முதல் வீரராக தமிழகத்தின் முரளி விஜய், கடும் போட்டிக்கு மத்தியில் ரூ.5 கோடிக்கு டில்லி அணி எடுத்தது. இவரை தொடர்ந்து தென் ஆப்ரிக்க ஆல்ரவுண்டர் காலிசை (ரூ.5.50 கோடி) ஜோக்கர் கார்டு முறையில் தக்கவைத்துக்கொண்டது. தொடர்ந்து சேவக்கை ரூ.3.25 கோடிக்கு -ணஞண்ணீ;பஞ்சாப் அணி எடுத்தது. மிட்சல் ஜான்சன் (பஞ்சாப், ரூ.6.50), முரளி விஜய் (டில்லி, ரூ. 5 கோடி), கெவின் பீட்டர்சன் (ரூ. 9 கோடி, டில்லி), வார்னர் (ஐதராபாத், ரூ. 5.50 கோடி), ஜார்ஜ் பெய்லி (ரூ.3.25 கோடி, பஞ்சாப்), டேரன் சமி (ரூ.3.50 கோடி, ஐதராபாத்), டுபிளசி (சென்னை, ரூ.4.75 கோடி), பிரண்டன் மெக்கலம் (ரூ.3.25 கோடி, சென்னை), மைக்கேல் ஹசி (ரூ.5.00 கோடி, மும்பை), அமித் மிஸ்ரா (ரூ.4.75 கோடி, ஐதராபாத்), ஜாகிர் கான் (ரூ.) இதில் யுவராஜ் சிங் அதிகபட்சமாக ரூ. 14 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. இவருக்கு அடுத்த படியாக தினேஷ் கார்த்திக் ரூ. 12.50 கோடிக்கு டில்லி அணி அதிக போட்டிக்கு மத்தியில் எடுத்தது

 

http://sports.dinamalar.com/2014/02/1392135988/IPLplayersauctionsehwagCoreyAnderson.html

 

Link to comment
Share on other sites

மஹேல,டில்சான்,ஜனித்,மெத்தியூஸ்,மெண்டிஸ் ஆகியோர் ஐபிஎல் ஏலத்தில் UNSOLD!

 


ஏழாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் முதல் சுற்று ஏலத்தில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான மஹேல ஜயவர்தன, டில்சான், மெத்தியூஸ் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோர் எந்தவொரு அணியினராலும் கொள்வனவு செய்யப்படாத அதேவேளை அஜந்த மெண்டிஸ், குஷோல் சில்வா, பிரசன்ன ஜயவர்தன ஆகியோரும் எந்த அணியினராலும் கொள்ளவனவு செய்யப்படவில்லை.

இதேவேளை சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் 1 கோடிக்கு பெங்களூர் அணியிராலும் திஷர பெரேரா 1.6 கோடிக்கு பஞ்சாப் அணியினராலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் யுவராஜ்சிங் அதிகூடுதலாக 14 கோடிக்கு பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியினரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளார்.

ஏப்பரல் மாதத்தில் இடம்பெற உள்ள இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடர்களை கருத்திற்கொண்டே இலங்கை வீரர்களை எந்த அணியினரும் கொள்ளவனவு செய்யவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஐ.பி.எல். 7ஆவது தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரமபமானது. 219 சர்வதேச வீரர்கள் உட்பட 514 பேர் ஏலப்பட்டியலில் இடம்பெற்று இருந்தனர்.

இந்த ஆண்டு முதல் முறையாக இந்திய ரூபாய் மதிப்பில் ஏலம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சர்டு மேட்லி ஏலத்தை நடத்தினார். முதலில் தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் ஏலம் விடப்பட்டார். அவருக்கான அடிப்படை விலை 2 கோடியாக இருந்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் போட்டி போட்டு முடிவில் டெல்லி அணி 5 கோடி ரூபாய்கு முரளி விஜயை வாங்கியது.

இதையடுத்து இங்கிலாந்தை சேர்ந்த நட்சத்திர வீரர் பீட்டர்சன் ஏலத்துக்கு விடப்பட்டார்.
அவரை  டெல்லி அணி போட்டி அட்டையை (match card) பயன்படுத்தி அவரை ரூ.9 கோடிக்கு எடுத்தது.

பின்னர் யுவராஜ்சிங் ஏலம் விடப்பட்டார். அவரை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிக தொகையான ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது.  இவர் நிர்ணயித்த தொகையை விட  7 மடங்கு விலைக்கு போனார்.

கொல்கத்தா அணிக்கும், பெங்களூர் அணிக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணமாக யுவராஜ் சிங் விலையும் உயர்ந்தது. தென்னாபிரிக்கா வீரர் கலிசை ரூ.5 ½ கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எடுத்தது. அதிரடி துடுப்பாட்ட வீரராக திகழ்ந்த ஷேவாக் ரூ.3.2 கோடிக்கு மாத்திமே விலை போனார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை எடுத்தது.

இதனையடுத்து அவுஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வொர்னரை ஐதராபாத் அணி ரூ.5½ கோடிக்கு எடுத்தது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ரூ.12½ கோடிக்கு டெல்லி அணி எடுத்தது. அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 6 மடங்குக்கு அதிகமாக விலை போனார். டூபெலிசிசை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ4.75 கோடிக்கு தக்க வைத்தது.

மேலும் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் 3.25 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் மைக் ஹஸியை 5 கோடிக்கு மும்பை அணி தேர்வு செய்துள்ளது.

இந்தியாவின் அமித் மிஸ்ராவை 4.75 கோடிக்கு சன் ரைசர்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான சகீர் கானை 2.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

இந்தியாவின் புஜாரா 1.9 கோடிக்கு பஞ்சாப் அணியில் இடம்பிடித்தார்.

தென்னாபிரிக்காவின் டுமினி 2.2 கோடிக்கு டெல்லி அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவின் ரெபின் உத்தப்பா 5 கோடிக்கு கொல்கத்தா அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

அவுஸ்திரேலியா அணியின் பிராட் ஹொட்ஜ் 2.4 கோடிக்கு ராஜஸ்தான் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

அவுஸ்திரேலியா அணியின் ஷான் மார்ஷ் 2.2 கோடிக்கு பஞ்சாப் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவின் மனோஜ் திவாரி 2.8 கோடிக்கு டெல்லி அணியில் இடம்பிடித்தார்.

மேற்கு இந்தயத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான டுவானே ஸ்மித்தை 4.5 கோடிக்கு சென்னை அணி தேர்வு செய்துள்ளது.

தென்னாபிரிக்காவை சேர்ந்த  டீ கொக் 3.50 கோடிக்கு டெல்லி அணியில் இடம் பிடித்தார்.

இந்தியாவை சேர்ந்த சாகா 2.20 கோடிக்கு பஞ்சாப் அணியில் இடம் பிடித்தார்.

இந்தியாவை சேர்ந்த பார்த்திவ் பட்டேல் 1.4 கோடிக்கு பெங்களூர் அணியில் இடம் பிடித்தார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீபன்  ஸ்மித் 4 கோடிக்கு ராஜஸ்தான் அணியில் இடம் பிடித்தார்.

இந்தியாவின் யூசுப் பதான் 3.25 கோடிக்கு கொல்கத்தா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் திசர பெரேரா 1.6 கோடிக்கு பஞ்சாப் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் எல்பி மோர்கெல் 2.4 கோடிக்கு பெங்களூர் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

அவுஸ்திரேலியாவின் டேவிட் ஹஸி எந்த அணியிலும் இடம் பிடிக்கவில்லை.

இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளரான இர்பான் பதான் 2.4 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

பங்களாதேஷின் ஷாகிப் அல் ஹாசன் 2.8 கோடிக்கு கொல்கத்தா அணியில் இடம் பிடித்தார்.

அவுஸ்திரேலியாவின் மேத்யூ வேட் எந்த அணியிலும் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளரான அசோக் திண்டா 1.5 கோடிக்கு பெங்களூர் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளரான இசாந்த் சர்மா 2.6 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் 4.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளரான முகம்மது ஷமி 4.25 கோடிக்கு டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.

மேற்கு இந்தயத் தீவுகள் அணியின் வேகப் பந்து வீச்சாளரான ரவி ராம்பால் 90 லட்சத்திற்கு பெங்களூர் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளரான உமேஸ் யாதவ் 2.6 கோடிக்கு கொல்கத்தா அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவின் பிரவீண் குமார் எந்த அணியிலும் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளரான வினய் குமார் 2.8 கோடிக்கு கொல்கத்தா அணியில் இடம் பிடித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கெல் 2.8 கோடிக்கு கொல்கத்தா அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் சாவ்லா 4.25 கோடிக்கு கொல்கத்தா அணியில் இடம் பிடித்துள்ளார்.

இலங்கையின் அஜந்த மெண்டிஸ் எந்த அணியிலும் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான பரக்யான் ஓஜா 3.25 கோடிக்கு மும்பை அணியில் இடம் பிடித்துள்ளார்.

நியூசிலாந்தின் நாதன் மெக்கல்லம் எந்த அணியிலும் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சர்மா 1.9 கோடிக்கு டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் ரொபின் பீட்டர்சன் எந்த அணியிலும் இடம் பிடிக்கவில்லை.

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் 1 கோடிக்கு பெங்களூர் அணியில் இடம் பிடித்துள்ளார்.


இந்தியாவின் இளம் ஆட்டக்காரர் சவுரவ் திவாரியை ரூ.70 லட்சத்திற்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

ஜிம்பாபவே அணித் தலைவர் பிரண்டன் டெய்லரை ரூ.30 லட்சத்திற்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஏலத்தில் எடுத்தது.

அவுஸ்திரேலியாவின் அதிரடி வீரர்; கிளேன் மெக்ஸ்வேலை ரூ.6 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

நியூலாந்தின் அதிரடி வீரர் கொரி ஆண்டர்சன் ரூ. 4 கோடியே 50 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்தியாவின் இளம் வீரர் அபிஷேக் நாயர் ரூ.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் லக்ஷமிபதி பாலாஜி ரூ. 1 கோடியே 80 லட்சத்திற்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹாரா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் வருண் அரோன் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் பரவீந்தர் அவானா ரூ.65 லட்சத்திற்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஜெயதேவ் உட்கன்ட் ரூ. 2 கோடியே 80 லட்சத்திற்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் மோஹித் ஷர்மா ரூ.2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

இன்று பகல் இடம்பெற்ற ஏலத்தில் விலை போகாத வீரர்கள்

டெரன் பிரோவா(மேற்கு இந்திய தீவு), கெமரூன் ஓயிட்(அவுஸ்திரேலியா), அலக்ஸ் ஹல்ஸ்(இங்கிலாந்து), சம்யூல்ஸ்(மேற்கு இந்திய தீவு), பத்ரிநாத் (இந்தியா), இயன் பெல்(இங்கிலாந்து), தமீம் இக்பால்(பங்களாதேஷ்), மார்டின் குப்தில்(நியூசிலாந்து), லண்டல் சிம்ன்ஸ்(மேற்கு இந்திய தீவு), டீம் பெயின்(அவுஸ்திரேலியா). குஷோல் சில்வா(இலங்கை), தினேஷ் ரம்டின்(மேற்கு இந்திய தீவு), பிரசன்ன ஜயவர்தன(இலங்கை), சார்லஸ்(மேற்கு இந்திய தீவு),டேனியல் கிறஸ்டன்(அவுஸ்திரேலியா), ரவி போப்பாரா(இங்கிலாந்து), லூக் ரையிட்(இங்கிலாந்து), ஆர்.பி.சிங்(இந்தியா), பிரேட் லீ(அவுஸ்திரேலியா), முனாப் படேல்(இந்தியா).

 

http://www.virakesari.lk/?q=node/361404

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.