Jump to content

இரத்த உற்பத்திக்கும் , இரத்த சுத்திக்கும் மூலகாரணமாய் மூளையை பலப்படுத்தும் கொத்தமல்லி இலை:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
coriander-leefs-280714-health-seithy-200

இதை நம் வீட்டிலேயே சுலபமாக வளர்க்கலாம். இது சுமார் 50cm வரை வளரக்கூடியது. சாம்பார்,ரசம் இவற்றில் தழையாகவே பயன்படுத்தப்படும் வாசனை மிகுந்த ஒரு கீரை வகைச்செடியாகும். இதன் இலை, தண்டு மற்றும் வேர் மருத்தவ குணம் கொண்டவை. இதில் மிளகு,புளி,உப்பு இட்டு துவையலாக உண்ணலாம். கொத்தமல்லி கீரை இரத்த உற்பத்திக்கும் , இரத்த சுத்திக்கும் மிக சிறந்த இயற்கை மருந்தாகும். இது ஒரு வாசனை பொருளாக சமையலில் சேர்க்ப்படுகிறது. கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, பி, பி1 சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது மாலைக்கண் நோய்,சிறுநீரகக் கோளாறு முதலியவற்றை போக்கும் வல்லமை உடையது.

  

சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் இருப்பதால் மூளையை பலப்படுத்தும். பித்தம் , வாந்தி இரத்த அழுத்த நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.

இதை அதிகம் உண்பதால் மந்தம் தோன்றும் எனவே அளவோடு உண்டு பலன் பெறுவது நல்லது.

சீரகத்தை கொத்தமல்லி சாற்றில் ஊறவைத்து பிறகு அதை உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வர உடலில் உள்ள கொழுப்பு குறையும் மற்றும் இரத்த அழுத்தம் சீராகும்.

கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி பொட்டியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும்.

கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு ,எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும்.

இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்.

இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும்.

உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லியை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று தின்றால் உடல் சூடு குறையும் மற்றும் பசியை தூண்டி விடும்.

கொத்தமல்லியில் சூப் மற்றும் கொத்தமல்லி சாதம் செய்து மாலை நேரங்களில் சிற்றுண்டி உணவாக சாப்பிடலாம்.

http://www.seithy.com/breifNews.php?newsID=113913&category=CommonNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.