Jump to content

அந்தக்காலம் நன்றாக தான் இருந்தது........

SUNDHAL

Recommended Posts

அந்தக்காலம் நன்றாக தான் இருந்தது......

புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்பாணமும்

கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் இருந்த சந்தோஷமும்.....

இரவு 12 மணிக்கு கோயில் திருவிழாக்கள் முடிந்து எந்த பயமும் இல்லாமல் வீதிகளில் நடமாடியதும்.....

இடம் பெயர்வுகளும்......

குண்டு போடும் விமானத்தை கண்டவுடன் சைக்கிளை போட்டிட்டு படுத்து எழும்பியதும்.......

இராணுவ ஆக்கிரமிப்பில் மாபெரும் கட்டிடத்தை விட்டு மருதானர்மடத்தில் கொட்டைகைகுள் இயங்கிய மகாஜனாவின் படித்ததுவும் .....,

தமிழீழம் கிடைத்தால் எப்பிடி அமையும் என்ற புலிகளின் கண்காட்சிகளும்.......

மாவீரர் நாள் கொண்டாட்டங்கங்களும் அலங்கார வளைவுகளும் ....

நாச்சிமார் கோவில் திருவிழாவில் இருந்து நல்லூர் திருவிழா வரை மாறி மாறி வரும் கோவில் திருவிழாக்களும்......

விஷேட தாக்குதல் ஓன்று நடைபெற்றவுடன் அன்று மாலை வெளிவரும் ஈழநாதத்தின் விஷேட பதிப்பிர்க்காய் கடைக்கு முன் காவல் இருப்பதும்

அந்தக்காலம் நன்றாக தான் இருந்தது........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது  ஒரு கனாக்காலமாக  மாறிவிடுமா??? :( 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடையாள அட்டை என்ற ஒன்றை தேடியதில்லையே சுண்டல். சாதாரண தரப் பரீட்சைக்குப் பள்ளிக்கூடத்தில் பாவிச்சதை விட்டு அடையாள அட்டை பாவிச்சது கிடையாது.

சோதனைச் சாவடிகள் என்று... இதயம் படபடக்க நின்றது கிடையாது.

களவு.. கொள்ளை.. கொலை.. வாள் வெட்டு.. இந்தப் பயங்கள் இருந்ததில்லை.

வாகன விபத்துக்கள் பற்றிய பயம் இல்லை.

ரீயுசனுக்கு போறம் என்றிட்டு றோட்டில நின்று சேட்டை விடுற ஆக்களை காண்பது இல்லை.

வீதிகளில்.. குடிகாரங்கட.. காரிகளிட சத்தம் இல்லை.

குடும்பச் சண்டைகள் என்றால் உடனடியாக தீர்வு தேடக் கூடிய நிலையில் மக்கள் நம்பிக்கையோடு இருந்தார்கள்.

போலிப் பூசாரி.. சாத்திரி தொந்தரவுகள் நீக்கப்பட்டிருந்தன. குறிப்பாக நல்லூர் முன் வீதியில் ஒருவர் கனடாவுக்கு போக குறி சொல்லுறன் என்று எங்கட பெண்களை கவர்ந்திழுத்து.. செம அடி வாங்கி பங்கருக்குள் கழித்தது ஊர் அறிந்தது. இன்று.. இந்தியாவில் இருந்து கூப்பிட்டு வைச்சு சோரம் போகுதுங்க..!

இப்படி எத்தனையோ நன்மைகள்....!!!

அந்தக் காலம் மீண்டும் திரும்பனும்.. என்பது அவா..??!

குறை என்று ஒன்றும் இல்லை. சிங்களவனின் தடைகள் ஏற்படுத்திய குறைகளைத் தவிர...!!!!! :icon_idea:

Link to comment
Share on other sites

...ஆனால் இவ்வளவு இருந்தும் சனம் வெளிநாடுகளுக்கு அகதியாகவும். ஸ்கொலர்சிப்பிலும், Skill migration னிலும் யாழ்ப்பாணத்தினை விட்டு பெருவாரியாக வெளியே சென்றது ஏன்? அத்துடன், ஏன் பல்லாயிரக்கணக்கானோர் கொழும்பை / தெற்கை நோக்கி இடம்பெயர்ந்தனர்?

புள்ளி விபரங்கள் மற்றும் சுய அவதானங்களின் படி 1990 இல் இருந்து 2002 வரைக்கும் வெளிநாடுகளுக்கும் கொழும்புக்கும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். இக் காலங்களில் தான் புலிகள் மிகவும் பலமாகவும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

வேற என்ன உயிர் மேல பயம் தான் இடையில் மோதலில் தாங்களும் பலியாகி விடுவோம் என்று தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...ஆனால் இவ்வளவு இருந்தும் சனம் வெளிநாடுகளுக்கு அகதியாகவும். ஸ்கொலர்சிப்பிலும், Skill migration னிலும் யாழ்ப்பாணத்தினை விட்டு பெருவாரியாக வெளியே சென்றது ஏன்? அத்துடன், ஏன் பல்லாயிரக்கணக்கானோர் கொழும்பை / தெற்கை நோக்கி இடம்பெயர்ந்தனர்?

புள்ளி விபரங்கள் மற்றும் சுய அவதானங்களின் படி 1990 இல் இருந்து 2002 வரைக்கும் வெளிநாடுகளுக்கும் கொழும்புக்கும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். இக் காலங்களில் தான் புலிகள் மிகவும் பலமாகவும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு இயல்பாகவே வெளிநாட்டு மோகம் அதிகம். சந்தர்ப்பத்தை தவறவிடுவார்களா என்ன..??!

பிரச்சனைகளுக்கு முந்தைய ஓபின் விசா என்றதும்.. சிறீலங்காவை விட்டு ஓடியதும் தமிழர்கள் தான் அதிகம். அமெரிக்க கிரீன்காட் என்றதும்.. அதிகம் விழுந்து விழுந்து விண்ணப்பங்களை அனுப்பினதும் தமிழர்கள் தான். மத்திய கிழக்கு அதிகம் ஓடினதும் தமிழர்கள் தான். அப்படியாப்பட்ட தமிழர்கள் கள்ள வழியில் அகதி என்ற போர்வையில்.. ஐரோப்பிய.. அமெரிக்க.. அவுஸ்திரேலிய நாடுகளில் வசிக்கவும்.. குடியுரிமை பெறவும் வசதி கிடைத்தால்... வீட்டுக்குள் பதுங்கிக் கிடந்து போராடியா இருப்பார்கள்.

இதே காலப்பகுதியில் ஓடிய சிங்களவர்களோடு ஒப்பிடும்.. போது.. முஸ்லீம்களோடு ஒப்பிடும் போது.. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஓடிய தமிழர்களே அதிகம். 1987 - 89 ஜே வி பி பிரச்சனையில் கூட சிங்களவர்கள் நாட்டை விட்டு ஓட நினைத்தது குறைவு. ஆனால் தமிழன்.. 1981 இல் இருந்து இன்று வரை ஓடிக்கிட்டு இருக்கான். ஏன்னா போராட்டம்.. போர்.. மனித உரிமை மீறல்கள் என்பதற்கு மேற்கு நாடுகள் வழங்கும் நெகிழ்வுப் போக்குள்ள குடியேற்றக் கொள்கைகளே அன்றி.. எமது போராட்டம் காரணம் என்று முற்று முழுதாக சொல்ல முடியாது.

இந்த யதார்த்தத்தை.. நீங்கள் இதய சுத்தியோடு ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறோம். :icon_idea::)

Link to comment
Share on other sites

இங்கு வந்து குடியேறியவர்கள் பலர் அந்தக் காலத்தை எண்ணி ஏங்குவது இயல்புதான். அதிலும் வயதானவர்கள் அடிக்கடி புலம்புவதைப் பார்த்துள்ளேன். இப்போதுதான் எல்லாம் சரியாகிவிட்டதே அங்கு போய் இருக்கலாம் தானே என்று கேட்டால் போகமாட்டார்கள். 1 மாத விடுமுறையில் அங்கு சென்று வருபவர்கள் 'அந்தமாதிரி' என்று புகழ்வார்களே தவிர தங்களது பண வசதியை வைத்து தாயகத்தில் மீண்டும் குடியேற பலர் விரும்புவதில்லை. 1 மாதத்துக்கு மேல் தங்கினாலே சிலருக்கு அலுத்துவிடும். எப்போது அகதி நாட்டுக்குத் திரும்புவோம் என்றிருக்கும். பிள்ளைகள் இங்கு படித்து நிரந்தரமாக இருப்பதால் தாயகத்தில் குடியேற முடியாது என்று சிலர் காரணம் சொன்னாலும் இங்குள்ள வாழ்க்கை முறைக்கு எல்லோரும் அடிமையாகி விட்டோம் என்பது கசப்பான உண்மை.

மேலோட்டமாக  பார்த்தால்  இந்தக்கருத்து சரிதான்

ஆனால் தமிழர் தாயகம்

உரிமை என்று பார்த்தால்

இது தொடரலாமா?

அது தொடராமல் இருக்க என்ன  செய்யலாம்??

இதற்கு எமது பங்களிப்பென்ன?

நாம் வெளியில் இருந்து கொண்டு  இவ்வாறு கேட்கலாமா?...என்ற பல கேள்விகளுக்கு விடைகண்டாக வேண்டும்...

இல்லை உங்களுக்கு தகுதியில்லை

பொத்திக்கொண்டிருங்கள் என்றால்..

இதுவும் ஒவ்வொருவரின் தனி முடிவுகளாகி அடங்கிப்போகும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வந்து குடியேறியவர்கள் பலர் அந்தக் காலத்தை எண்ணி ஏங்குவது இயல்புதான். அதிலும் வயதானவர்கள் அடிக்கடி புலம்புவதைப் பார்த்துள்ளேன். இப்போதுதான் எல்லாம் சரியாகிவிட்டதே அங்கு போய் இருக்கலாம் தானே என்று கேட்டால் போகமாட்டார்கள். 1 மாத விடுமுறையில் அங்கு சென்று வருபவர்கள் 'அந்தமாதிரி' என்று புகழ்வார்களே தவிர தங்களது பண வசதியை வைத்து தாயகத்தில் மீண்டும் குடியேற பலர் விரும்புவதில்லை. 1 மாதத்துக்கு மேல் தங்கினாலே சிலருக்கு அலுத்துவிடும். எப்போது அகதி நாட்டுக்குத் திரும்புவோம் என்றிருக்கும். பிள்ளைகள் இங்கு படித்து நிரந்தரமாக இருப்பதால் தாயகத்தில் குடியேற முடியாது என்று சிலர் காரணம் சொன்னாலும் இங்குள்ள வாழ்க்கை முறைக்கு எல்லோரும் அடிமையாகி விட்டோம் என்பது கசப்பான உண்மை.

தம்பி இணையவன் சும்மா விசர்க்கதை கதைக்கப்படாது. :D

நாங்கள் போகோணும் எண்டுதான் நினைக்கிறம் :( .....ஆனால் பிள்ளையள்/பேரப்பிள்ளையள் விடீனம் இல்லை :wub:  :wub: .......அதுகள் நாளைக்கு கண்கலங்க கூடாது பாருங்கோ.....அதுதான் எங்கடை விதி எண்டு நினைச்சுக்கொண்டு இந்த குளிருக்கையும் கிடந்து நடுங்குறம்  :o

சில விதிவிலக்குகளும் இருக்கு . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இங்கு வந்து குடியேறியவர்கள் பலர் அந்தக் காலத்தை எண்ணி ஏங்குவது இயல்புதான். அதிலும் வயதானவர்கள் அடிக்கடி புலம்புவதைப் பார்த்துள்ளேன். இப்போதுதான் எல்லாம் சரியாகிவிட்டதே அங்கு போய் இருக்கலாம் தானே என்று கேட்டால் போகமாட்டார்கள். 1 மாத விடுமுறையில் அங்கு சென்று வருபவர்கள் 'அந்தமாதிரி' என்று புகழ்வார்களே தவிர தங்களது பண வசதியை வைத்து தாயகத்தில் மீண்டும் குடியேற பலர் விரும்புவதில்லை. 1 மாதத்துக்கு மேல் தங்கினாலே சிலருக்கு அலுத்துவிடும். எப்போது அகதி நாட்டுக்குத் திரும்புவோம் என்றிருக்கும். பிள்ளைகள் இங்கு படித்து நிரந்தரமாக இருப்பதால் தாயகத்தில் குடியேற முடியாது என்று சிலர் காரணம் சொன்னாலும் இங்குள்ள வாழ்க்கை முறைக்கு எல்லோரும் அடிமையாகி விட்டோம் என்பது கசப்பான உண்மை.

உண்மைதான் அண்ணா ஆனால் லண்டனில் இருந்து பிள்ளைகளுடன் நிரந்தரமாக இலங்கை திரும்பியிருக்கும் ஒரு குடும்பத்தினரையும் சந்தித்திருக்கிறேன். இலங்கை,  பிரித்தானிய கல்வி முறைகள் ஒத்திருப்பதாலும் பிள்ளைகள் சிறியவயது என்பதாலும் பள்ளிக்கூடம் சம்பந்தமான பிரச்சினைகள் பெரிதாக வரவில்லை என்று கூறினார்கள். கணக்காளரான CIMA வைத்திருப்பதால் ஜோன் கீல்சில் வேலை ஒன்றையும் எடுத்துவிட்டார்.

பிரான்சில் chef ஆக இருந்த ஒருவர் நிரந்தரமாக யாழ் திரும்பி யாழ்ப்பாணத்தில் நடுத்தர அளவிலான ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். கீழே உள்ளது அந்த ஹோட்டலுக்கான இணைப்பு.

htthttp://www.luxetoiles.com/index.php

எனக்கும் ஊருக்கு சென்று விட விருப்பம். பலதடவை கருத்துக் களத்தில் இதனைக் கூறி இருக்கிறேன். எனது துறை சார்ந்த கல்வி பாதிவழியில் நிற்பதாலும், எனது துறையில் அனுபவம் போதாமையாலும் தாமதிக்கிறேன். ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் ஒழுங்கான வருமானம், தகமைகள் இன்றி ஊர் போவது சரிவராது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே இது சிக்கலான பிரச்சினைதான். தாயகம் என்பது கானல்நீர் போல் தெரிகின்றது. நான் சவுதிக்கோ , லிபியாவுக்கோ போய்வரும்போது  மன உளைச்சல் இருந்ததில்லை.. காரணம் ஆணிவேர் அங்கிருந்தது.ஆது புலம்பெயர்வு அல்ல . ஆனால் இங்கு வந்து  அம்மா உட்பட குடும்பம் முழுதும் செற்றிலாகியவுடன் , ஆழ்மனதில் ஒரு ஏக்கமும் செற்றிலாயிட்டுது. எத்தனை தரமும் அங்கே போய்வரலாம் அது பிரச்சனையில்லை.ஆனால் குடித்து முடித்த வெற்று மதுப் போத்தலை அடிக்கடி திறந்து முகருவது போல் ஒரு தவிப்பில்தான் நிக்கும்.

பிள்ளைகள் குடும்பமாய் இருக்கலாம் என அப்ப போட்ட கணக்கு காலம் நகர நகர தப்பாகிறது. அவர்களும் தங்களின் படிப்புகள் முடிய அதற்கான வேலைகளின் நிமித்தம் சிம்பிளா அமெரிக்கா கனடா என யோசிக்கினம். அவ்வளவுக்கு தேசங்களின் தூரங்களும் நேரங்களும் குறைந்து விட்டன.  அன்று  நாங்கள்  எமது பெற்றோர்களின் ஆதங்கத்தைக் கவனிக்காமல் குதூகலமானது போலவே , அவர்களும் குதூகலத்துடன் காணப்படுகின்றார்கள்.

ஊரில் போய் இருப்பதெனில் ..., தென்னங்கன்றைப் பிடுங்கி நடலாம் , தென்னை மரத்தை மீன்டும் பிடுங்கி நடுதல் சாத்தியமா...! :unsure::rolleyes::):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா.. எங்கையோ வசதியா இடத்தில் பிறந்து வளர்ந்த ஆர்தர் சி கிளார்க்.. இலங்கையில் போய் இறுதி வரை வாழவில்லையா..??!

எங்கையோ பிறந்த.. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரேசா.. இந்தியாவில் இறுதி வரை வாழ்ந்ததில்லையா..??!

எங்கையோ செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த சேகுவரா.. எங்கையோ போய் போராடி இறக்கவில்லையா..???!

மனமிருந்தால் இடமுண்டு. ஆனால் எம் தமிழருக்கு அந்த மனத்தை உருவாக்கிறது ரெம்பக் கஸ்டம். ஏனெனில் தன் வாழ்வில் வசதியும்.. சாப்பாடும்.. குடியும் இருந்தால் போதும்.. தேசம்.. விடுதலை.. உரிமை.. மற்றைய மக்களின் வாழ்வு.. இதைப் பற்றிய கவலை இல்லை. அப்படி தான் தமிழர்கள் பிள்ளை பெற்றும் வளர்க்கிறார்கள்.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம்..

அண்மையில்.. ஒரு குட்டி முள்ளுப்பற்றி.. நடுவீதியில் நிற்கிறது..

அதனைக் கடந்து போகிறது.. நம்மூர் வாரிசு. அது விடுப்புப் பார்த்திட்டே போகுது.

அதனைக் கடந்து போகுது.. ஒரு கறுப்பின் வாரிசு. அது அதனை ஒரு பொருட்டாகவே கவனிக்கல்லை.

அதேவேளை ஒரு பிரிட்டன் வெள்ளைப் பிள்ளை போகுது. அது உடனே வீதியின் நடுவில் ஓடி அதனை தூக்கி கரையில் விடப் போகுது. அந்தப் பிள்ளையின் செயலை கண்டு யாரும் ஆச்சரியப்படவில்லை. மாறாக அதன் செயலுக்கு உதவி செய்தார்கள் இருவர். அதில் ஒருவனாக இருந்ததில் ஆறுதல் அடைகிறேன்.

இப்படித்தான் எமது சமூகம் உள்ளது. அது இன்னும் கடக்க வேண்டிய கட்டங்கள் பல உள்ளன...!!! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தானே நெடுக்ஸ் நானும் சொல்லுறன்.    ஆர்தர் சி கிளாக் , அன்னை தெரேசா, சேகுவேரா எல்லோரும் எவ்வளவு பெரியவர்கள் அறிவிலும் செயல்களிலும். அவர்களாலேயே பிறந்து வளர்ந்த தாயகத்துக்கு திரும்ப முடியாதபோது , நானெல்லாம் வெறும் வெத்துவேட்டு...ம் ம் ம்...! :icon_idea::)

அவர்கள் வசதியான நாடுகளில் இருந்து ஏழை நாடுகளுக்கு வந்து அந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்தவர்கள். தமிழர்கள்.. சொந்த நாட்டை மறந்து வசதியான நாடுகளுக்கு வந்து அங்கு சுரண்டி சுயநலத்துக்காக வாழ்பவர்கள். தமிழர்களை அந்த பெரியவர்களோடு ஒப்பிடுவது மரியானா ஆழியோடு.. இமயத்தை ஒப்பிடுவதற்குச் சமன்..!!! :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.