Jump to content

தமிழர்களும்...... சாதி ஏற்றத்தாழ்வும்...!


jdlivi

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களும்...... சாதி ஏற்றத்தாழ்வும்...!
=============================

 

நேரிடையாகப் போர் புரியும் எதிரியை வெல்லலாம்.... ஆனால் சூழ்ச்சியினால் முதுகில் குத்துபவனை எவ்வாறு அறிவது?

பிராமணர்களின் முழு செல்வாக்கினைப் பெற்ற விசய நகரப் பேரரசு தமிழகத்தினைக் கைப்பற்றுகின்றது. தமிழர்களின் நிலை அடிமை நிலைக்குச் செல்லுகின்றது.

கோவில்கள் பிராமணர்களின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன...

"அபிசேகப் பண்டாரம் என்னும் பார்ப்பனர் அல்லாத சாமியார் நிர்வாகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்து வந்தது.

பார்பனர் தம் பாதம் தாங்கியான திருமலை நாயக்கன் அப்பண்டாரத்தை அச்சுறுத்தியும் நிலம் பணம் முதலியன கொடுத்தும் மீனாட்சி அம்மன் கோவில் ஆளுகையினைப் பறித்துக் கொண்டான்.

பரிதாபத்துக்குரிய பண்டாரமும் அரசு ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பயந்து ஒதுங்கிக் கொண்டார்.

திருமலை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினை ஏற்றுக் கொண்ட பின் முதல் வேலையாகக் கோவில் வழிபாட்டிற்கு என்று பார்ப்பனர்களான குலசேகரப் பட்டன் வகையறாவினரையும்.......

விக்கிரம பட்டன் வகையறாவினரையும் நியமித்துக் கொழுக்க வைத்தான் " என்றே பார்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் என்ற நூலினில் புலவர். கோ. இமயவரம்பன் கூறுகின்றார்.

இதைப் போன்ற நிலை தான் பழனிக் கோவிலிலும் நிகழ்ந்து இருக்கின்றது என்றே நாம் கண்டு இருக்கின்றோம்.

மன்னராட்சிக் காலத்தில் அரசன் நமக்குத் துணை நின்றான் என்றால் நாம் கூறுவது தானே உண்மை.

அவ்வாறே உண்மைகள் புனையப்படுகின்றன...
தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர்.

இக்கொடுமைகளை எதிர்த்த ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள், வீரர்கள் ஆகியோர் அனைவரும் தாழ்த்தப்படுகின்றனர்.

அவர்கள் பஞ்சமர்கள் என்று முத்திரைக் குத்தப் பெற்று நாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.

அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இன்றைக்கு தாழப்பட்டவர்களாக இருப்பவர்கள்.

மேலும் தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகள் பிறப்பின் அடிப்படையிலான ஒன்றாக மாற்றம் பெறத் துவங்கியது இக்காலத்தில் தான் என்பதும் சிலரின் கூற்று.

பிராமணர்களின் இச்செயல்களுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரங்களையும் செல்வங்களையும் பெற்ற தமிழர்கள் உயர்ந்தவர்கள் என்றே மாற்றப்பட்டார்கள்.

இன்றுக் கூட சைவ வைணவ மடங்களில் இருப்பவர்கள் பிராமண செல்வாக்கு உடனேயே இருப்பதும்.....

சமசுகிருதத்தை மீறி தமிழ் வர / வளரக் கூடாது என்று இருப்பதும்....

அம்மடங்களில் குறிப்பிட்ட சாதியினரே இருக்கலாம் என்று பிறப்பின் அடிப்படையில் பிரிவினையை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதனையும் நாம் காணத் தானே செய்கின்றோம்.

அவர்கள் அவ்வாறு இருப்பதற்காக.... அவர்களுக்கு பிராமணர்கள் கொடுத்த பட்டம் தான் சற்சூத்திரர். அதாவது சிறந்த அடிமைகள் என்றே பொருள் வரும்.

தமிழன் பிராமணனோ, சத்திரியனோ அல்லது வைசியனோ கிடையாது...அவன் சூத்திரன் அல்லது பஞ்சமன்.

அதன் அடிப்படையில் தான் பிராமணர்கள் தங்களுக்கு உதவிய தமிழர்களை சிறந்த அடிமைகள் என்ற பொருள் படி 'சற் சூத்திரர்' என்றும்...

ஒன்றுமே செய்யாது இருந்த சாதாரண மக்களை அடிமைகள் என்னும் பொருள் படி ' சூத்திரர் ' என்றும், அவர்களை எதிர்த்த தமிழ் அறிஞர்களை பஞ்சமர்கள் என்றும் பிரித்து வைக்கலாயினர்.

அரசனின் செல்வாக்கினைப் பெற்ற பிராமணர்களை மக்களால் ஒன்றும் செய்ய இயலாது போயிற்று.

தமிழர்கள் தம் உரிமைகளை இழந்து அடிமைகளாயினர். கல்வியினைக் கண்ணாக மதித்து வந்த ஒரு சமூகம் அறியாமை இருளில் மூழ்கத் தொடங்கியது....இன்று வரை அது அவ்வாறு தான் இருக்கின்றது.

நன்றி
- மெல்சி ஜஸ்பர் - (FB)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.