Jump to content

குட்டி,குட்டி சந்தேகங்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சின்னம்மா செய்தது சரியா/பிழையா?

நேற்று எனது நண்பி எனக்கு போன் பண்ணி நீயே இதற்கு நியாயம் சொல்லு அவர்கள் செய்தது சரியா? பிழையா? என என்னிடம் கவலைப் பட்டார்.எனக்கு அவருக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை விசயம் இது தான்;

அவவும்,அவவுடைய பெயர் கவிதா என வைப்போம்.கவிதாவும்,கவிதாவின் சின்னம்மாவும் மொபைலில் கதைத்துக் கொண்டு இருக்கும் போது சின்னம்மாவின் வீட்டு தொலைபேசிக்கு கவிதாவின் சொந்த தங்கை மாலதி போன் பண்ண சின்னம்மா மாலதி அடிக்கிறால் என சொல்லிப் போட்டு மொபைலைக் கட் பண்ணாமல் மாலதியோடு வீட்டு போனில் கதைக்க கவிதா மொபைலில் கேட்டுக் கொண்டு நின்றவவாம்.திடிரென்று அக்கா கவிதாவைப் பற்றி மாலதி கதையெடுக்க சின்னம்மா திடீர் என மொபைலைக் கட் பண்ணிப் போட்டாவாம் :) [அதாவது கவிதாவின் அழைப்பை சின்னம்மா துண்டித்து விட்டார்].

கவிதாவின்ட‌ அழுகைக்கு கார‌ணம் என்ன என்டால் தன்னைப் பற்றி கதைப்பதற்காகத் தான் சின்னம்மா மொபைலை கட் பண்ணிணவ என்டும் :rolleyes: அத்தோடு தான் லைனில் நிற்கிறது என்டு தெரிஞ்சும் தன்னை கட் பண்ணிப் போட்டு அப்படி என்னத்தை மாலதியோட‌என்னைப் பற்றி கதைத்தவ [இத்தனைக்கும் மாலதிக்கு கவிதா லைனில் நின்ட‌து தெரியாது] என்டும் :D ,முக்கியமாக சின்னம்மா செய்தது பிழை என்பது அவளது வாதம் மாலதியோட‌ போன் வருகுது என்டால் தன்னிட‌ம் கட் பண்ண சொல்லிப் போட்டு போனைக் கட் பண்ணிட்டு போயிருக்கலாம் தானே!அதை விட்டு விட்டு தன்னை பற்றிய கதை என்ட‌வுட‌ன் போனை கட் பண்ணியிருக்க கூடாது என்பது இவளது வாதம்.

கருத்தாளர்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இது குறித்த உங்கள் கருத்து என்ன?...நீங்கள் என்டால் கவிதாவுக்கு என்ன சொல்வீர்கள்?

.

சின்னம்மா மாலதியின் அழைப்பு வரும்போதே கவிதாவிடம் விடயத்தைச் சொல்லிஅவருடைய தொடர்பைத் துண்டித்திருக்க வேண்டும். அல்லது மாலதியிடம் கவிதா தொடர்பில் இருக்கும் விடயத்தைச் சொல்லியிருக்க வேண்டும். மாலதி கவிதாவைப் பற்றி கவிதை வடிக்க வெளிக்கிட்டதால் தான் சின்னம்மா கவிதாவின் தொடர்பைத் துண்டித்தார். சின்னம்மாவிற்கு எத்தனை வயது? சிலவேளைகளில் கவிதா தொடர்பில்இருப்பதை மறந்த சின்னம்மா அவருடைய தொடர்பைதாமதித்துத் துண்டித்திருக்கலாம். மொத்தத்தில் சின்னம்மா பாவம் எல்லாரையும்குழப்பிவிட்டார் :D

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முருகா ................. முடியேலையே .....................

முடியவில்லையா போய் தூக்கு மாட்டுங்கோ என நான் சொல்ல மாட்டேன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.....வயசான காலத்தில சின்னம்மா இரண்டு சகோதரங்களை பிரிக்கிற பாவத்தை தேடப்போகிறா... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் மேலே நான் எழுதியது பல பேருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது ஒழுங்காக எழுதாமல் எல்லோரையும் குழப்பி வைத்து உள்ளேன் என்று தம்பி கூட எனக்குப் பேசுகிறான் <_< விட‌யத்தை சுருக்கமாகத் தருகிறேன்;

கைத்தொலைபேசியில் கவிதாவும்,சின்னம்மாவும் உரையாடிக் கொண்டு இருக்கும் போது வீட்டுத் தொலைபேசி அழைக்கிறது சின்னம்மா கைத்தொலைபேசியை கட் பண்ணாமல் மாலதி அழைக்கிறால் என சொல்லிப் போட்டு மாலதியோடு கதைக்கும் போது மாலதி கவிதாவைப் பற்றிய கதை எடுக்க சின்னம்மா டக் என்று கைத் தொலைபேசியை கட் பண்ணுகிறார்.

என்ட‌ கேள்வி என்ன என்டால் சின்னம்மா செய்தது சரியா/பிழையா? அடுத்தது முக்கியமானது மாலதி கவிதாவைப் பற்றி என்ன கதைத்தார் என்பதை சின்னம்மா கவிதாவுக்கு சொல்ல வேண்டுமா/இல்லையா?

Link to comment
Share on other sites

நாட்டாமை தீர்ப்பு: :lol:

சின்னம்மா செய்தது தவறு. ஒரு லைனில் நின்றுகொண்டு இன்னொரு லைனில் பேசும் பழக்கத்தை எங்கள் ஆட்களில் கவனித்திருக்கிறேன். எடக்குமுடக்கான சூழ்நிலை அமைந்தால், மாலதியிடமே சின்னம்மா சொல்லியிருக்கலாம். "அக்கா அந்தப்பக்கம் லைனிலதான் நிக்கிறா.. கதையுங்கோ" என்று. :D

அவதியாக இணைப்பைத் துண்டித்ததன்மூலம் கவிதாவை அவமானத்திற்கு உள்ளாக்கிவிட்டார். :rolleyes:

ஆனால் மாலதி என்ன கதைத்தார் என்பதை சின்னம்மா கவிதாவுக்குச் சொல்லவே கூடாது. மாலதியிடமே கேட்டு அறிந்துகொள்ளுமாறு கூறலாம்.

பி.கு: :rolleyes:

உங்கள் நண்பிகளை சுகம்கேட்டதாகக் கூறவும்.

:lol:

Link to comment
Share on other sites

சின்னம்மா செய்தது தவறு தான்.

ஒன்றில் கவிதாவுக்கு, தான் இன்னொரு அழைப்பு எடுக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு துண்டித்து இருக்க வேண்டும்.

இல்லை என்றால் மாலதிக்கு அவவின் அக்கா இன்னொரு அழைப்பில் இருப்பதாக சொல்லி இருக்க வேண்டும்.

கவிதா தன்னை பற்றி தான் அவர்கள் கதைகிறார்கள் என்றால் ஒட்டு கேட்காமல் அழைப்பை துண்டித்து இருந்தால், தேவையற்ற குழப்பங்களையும் அழுத்தங்களையும் தவிர்த்து இருக்கலாம்.

இரண்டாவது, என்னை பற்றி என்ன கதைத்தீர்கள் என்று சின்னம்மாவிடம், கவிதா கேட்பதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அவ்வளவு உரிமை சின்னம்மா, கவிதாவுக்கு என்ன கதைத்தோம் என்று சொல்லாமல் இருக்கவும் உள்ளது.

ஒருவர் இன்னொருவருக்கு என்ன சொன்னார், ஒருவரைபற்றி இன்னொருவர் என்ன நினைக்கிறார் என்பது தனிமனித சுதந்திரம் சம்பந்தபட்டது. அதை மீற மற்றவர்களுக்கு உரிமை இல்லை.

இதை சொன்ன பிறகும் கவிதாவுக்கு என்னுடன் பேச வேண்டும் போல இருந்தால், மேலதிக கேள்விகள் இருந்தால் தனிமடலில் அவவின் கைதொலைபேசி இலக்கத்தை போட்டுவிடவும். :lol:

இலவச ஆலோசனை வழங்கப்படும் என்று உங்கள் ஏனைய நண்பிகளுக்கும் என்னை பற்றி கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன். :icon_idea:

ஆனால் நீங்கள் முதலில் கேட்ட

சின்னம்மா செய்தது சரியா/பிழையா?

நேற்று எனது நண்பி எனக்கு போன் பண்ணி நீயே இதற்கு நியாயம் சொல்லு அவர்கள் செய்தது சரியா? பிழையா? என என்னிடம் கவலைப் பட்டார்.எனக்கு அவருக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை விசயம் இது தான்;

அவவும்,அவவுடைய பெயர் கவிதா என வைப்போம்.கவிதாவும்,கவிதாவின் சின்னம்மாவும் மொபைலில் கதைத்துக் கொண்டு இருக்கும் போது சின்னம்மாவின் வீட்டு தொலைபேசிக்கு கவிதாவின் சொந்த தங்கை மாலதி போன் பண்ண சின்னம்மா மாலதி அடிக்கிறால் என சொல்லிப் போட்டு மொபைலைக் கட் பண்ணாமல் மாலதியோடு வீட்டு போனில் கதைக்க கவிதா மொபைலில் கேட்டுக் கொண்டு நின்றவவாம்.திடிரென்று அக்கா கவிதாவைப் பற்றி மாலதி கதையெடுக்க சின்னம்மா திடீர் என மொபைலைக் கட் பண்ணிப் போட்டாவாம் :) [அதாவது கவிதாவின் அழைப்பை சின்னம்மா துண்டித்து விட்டார்].

கவிதாவின்ட‌ அழுகைக்கு கார‌ணம் என்ன என்டால் தன்னைப் பற்றி கதைப்பதற்காகத் தான் சின்னம்மா மொபைலை கட் பண்ணிணவ என்டும் :rolleyes: அத்தோடு தான் லைனில் நிற்கிறது என்டு தெரிஞ்சும் தன்னை கட் பண்ணிப் போட்டு அப்படி என்னத்தை மாலதியோட‌என்னைப் பற்றி கதைத்தவ [இத்தனைக்கும் மாலதிக்கு கவிதா லைனில் நின்ட‌து தெரியாது] என்டும் :D ,முக்கியமாக சின்னம்மா செய்தது பிழை என்பது அவளது வாதம் மாலதியோட‌ போன் வருகுது என்டால் தன்னிட‌ம் கட் பண்ண சொல்லிப் போட்டு போனைக் கட் பண்ணிட்டு போயிருக்கலாம் தானே!அதை விட்டு விட்டு தன்னை பற்றிய கதை என்ட‌வுட‌ன் போனை கட் பண்ணியிருக்க கூடாது என்பது இவளது வாதம்.

கருத்தாளர்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இது குறித்த உங்கள் கருத்து என்ன?...நீங்கள் என்டால் கவிதாவுக்கு என்ன சொல்வீர்கள்?

.

இதை போய் என் மனைவியிடம் கேட்டேன்.

அவளிடம் இருந்து வந்த பதில் இது தான்

"ஏனப்பா பகலிலே குடிக்க வேண்டாம் என்று எத்தனை தடவை சொல்லுறதப்பா"

:lol:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட புலிக் கொடியில் புலியை சுத்தி 33 சன்னங்கள் இருக்கின்றன அல்லவா அது எதற்காக இருக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட புலிக் கொடியில் புலியை சுத்தி 33 சன்னங்கள் இருக்கின்றன அல்லவா அது எதற்காக இருக்கிறது?

33 வருடங்களிற்குள் ஒன்றில் தமிழீழம் இல்லையேல் அழிவுதான் என்ற தூரநோக்காக இருக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட புலிக் கொடியில் புலியை சுத்தி 33 சன்னங்கள் இருக்கின்றன அல்லவா அது எதற்காக இருக்கிறது?

ஒருத்தருக்குமே இதற்கு விடை தெரியாதா?...நீங்கள் எல்லாம் என்ன தேசிய ஆதரவாளர்கள் அப்படி என்று எனக்கு ஒருத்தர் திட்டினார் :D நான் கேட்டேன் நாங்கள் என்ன கொடிக்காவா போராடினோம் இல்லைத் தானே :unsure: நாடு கிடைத்ததும் கொடியைப் பற்றி தெரிந்து கொள்கிறேன் என்றேன்...இங்க பார்த்தால் யாழில் இதப் பற்றி ஒருத்தருக்கும் தெரியவில்லை :lol:

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்
உங்களில் கண பேர் கிறீன் டீ குடிக்கிறனீங்கள் என்று தெரியும்...அந்த டீ எப்படி போடுவது என்று தெரியுமா?...தண்ணீர் கொதித்ததும் இரு நிமிடம் ஆற விட்டு ஒரு டீ பாக் போட்டால் அதற்குள் ஒரு கொஞ்சத் தண்ணீர் தான் விட வேண்டுமாமே!...இது உண்மையா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறீன் ரீ குடித்துக்கொண்டே எழுதுகின்றேன். தண்ணீர் கொதித்து 5 நிமிடத்தின் பின்னர் ஒரு ரீ பாக்கைப் போட்டு வழமையான அளவு சுடுநீரை விடுவேன்.  ரீ பாக்கை எடுக்காமல் குடித்துமுடியும் வரை ஊறவைப்பதுதான் வித்தியாசம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இன்டைக்கு காதலர் தினத்தை முன்னிட்டு லண்டனில் இருக்கும் கோபி பிரியர்களுக்கு BP PETROL  கிளைகளில் எல்லாம் கோப்பியை இலவசமாக வழங்குகின்றதாம்...விரும்புபவர்கள் போய் வாங்கிக் குடியுங்கள் :D
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.