Jump to content

ஐ.சி.சி.யின் முப்பெரும் நாடுகள் குறித்து விஸ்டென் சாடுகிறது -


Recommended Posts

5123download.jpg

ஐ.சி.சி.யின் முப்பெரும் நாடுகள் குறித்த முறைமையானது சர்வதேச கிரிக்கெட்டின் மூச்சை நிறுத்திவிடும் என பிரித்தானியாவின் 2014ஆம் ஆண்டின் விஸ்டென் கிரிக்கெட் சஞ்சிகையின் 151ஆவது அல்மனாக் பதிப்பில் கடுமையாக சாடியுள்ளது.

 

கடந்த பெப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) அதிகாரம் மற்றும் வருமானத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று முப்பெரும் நாடுகள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் இந்தியாவின் அதிகாரத்தினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த முப்பெரும் நாடுகள் குறித்து கடந்த புதன்கிழமை வெளியான கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டென் சஞ்சிகையின் 151ஆவது பதிப்பில் இந்தியாவின் ஆதிக்கத்தில் உருவான 'காலணித்துவ பாணியிலான பிரிப்பு மற்றும் விதிமுறை' என லோவ்ரென்ஸ் பூத் எழுதியுள்ளார். 


மத்திய தலைமை பொறுப்பை இந்திய எடுக்க தயாராவதனால் சர்வதேச கிரிக்கெட் தனது மூச்சை நிறுத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-http://metronews.lk/article.php?category=sports&news=5123

Link to comment
Share on other sites

இந்த ஊழல் நாடு இந்தியாவின் கையில் அதிகாரம் போனால் கிரிக்கட் அதற்கான தனித்தன்மையை இழந்துவிடும். Gentleman's game என அழைக்க முடியாது.

ஆனால் தவறு இந்தியாவினது அல்ல. ஐசிசியின் தவறு இது.

Link to comment
Share on other sites

எங்களை ஓரங்கட்டினால் 2 ஆண்டுகளில் போண்டியாகிவிடுவோம்- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

1397292825-8465.jpg

ஐசிசி. கிரிக்கெட் நிர்வாகத்தின் அனைத்துப் பகுதிகளையும் இந்தியா, ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து என்ற மூவர் பவர் கூட்டணி கையில் எடுத்ததையடுத்து பாகிஸ்தானும் இந்தக் கூட்டணியின் நிர்வாகப் பொறுப்பேற்பை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 
ஆகவே நிபந்தனையின் அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மூவர் கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது.
 
ஏன் மூவர் கூட்டணிக்கு ஆதரவு? என்ற கேள்விக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி லாகூரில் செய்தியாளர்களிடையே தெரிவித்தபோது:
"தனிமைப்படுத்தப்படுவோம் என்பதை கருத்தில் கொன்டே ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளோம். பெரிய அணிகளுடன் நாம் விளையாடவில்லையெனில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் 2 ஆண்டுகளில் திவாலாகிவிடும். ஆகவே இந்தியாவுடன் உள்நாட்டு தொடரில் ஆடியே ஆகவேண்டும். சர்வதேச கிரிகெட்டை ஆடுவதன் மூலமே நமது உள்கட்டமைப்பு நடந்து வருகிறது.
 
இந்தியாவுடன் விளையாடியே ஆகவேண்டும், ஏனெனில் அதுதான் இன்று பண வருவாய்க்கு முதற்காரணம். நாம் நமது கிரிக்கெட்டை நடத்தியாகவேண்டும், தனிமைப்பட்டு போய் விடக்கூடாது. எனவே அனைத்து பெரிய அணிகளுடன் பாகிஸ்தான் விளையாடுமாறு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  என்றார் சேத்தி.
 
ஏற்கனவே பாகிஸ்தான் பட்ஜெட் பற்றாக்குறை ரூ.50 கோடியை எட்டிவிட்டது.
 
மூவர் கூட்டணியை பாகிஸ்தான் ஆதரிக்காததால் இருதரப்பு டெஸ்ட் தொடர்களை மற்ற நாடுகள் தங்களுக்குள் முடிவு செய்து கொள்ள தொடங்கிவிட்டன. ஒருவரும் ஆதரிக்காத பாகிஸ்தானுடன் பேசக்கூட தயாராக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்த பயங்கரத்தை நிகழ்த்தி கிட்டத்தட்ட மிரட்டி பாகிஸ்தான் அடிபணிய வைக்கப்பட்டுள்ளது.
 
பாலஸ்தீனத்தை மிரட்ட இஸ்ரேல் ஒன்றுமே செய்யாது. உணவுப்பொருட்கள் செல்லும் ஒரு 10, 15 டிரக்குக்களை சிறைபிடித்து வைத்து விடுவர். அவ்வளவுதான் பாலஸ்தீன மக்கள் பட்டிணி கிடந்து சாகவேண்டியதுதான்.
 
அதுபோன்ற ஒரு மோசமான கீழ்த்தரமான செயலையே பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆகியவை பாகிஸ்தானுக்குச் செய்துள்ளது என்றால் அது மிகையாகாது

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.