Jump to content

வெட்டலுக்கு ‘லாரஸ்’ விருது (sebastian vettel)


Recommended Posts

வெட்டலுக்கு ‘லாரஸ்’ விருது
மார்ச் 26, 2014.

 

 

கோலாலம்பூர்: உலகின் சிறந்த வீரருக்கான ‘லாரஸ்’ விருதை, ஜெர்மனி ‘பார்முலா–1’ கார்பந்தய வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதன்முறையாக பெற்றார்.

 

Sebastian-Vettel-300_9_zps4e1375a4.jpg

‘லாரஸ் உலக விளையாட்டு விருது’ கடந்த 2000ம் ஆண்டு முதல், வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலுக்கு, உசைன் போல்ட்(தடகளம்), கிறிஸ்டியானோ ரொனால்டோ(கால்பந்து), ரபெல் நடால்(டென்னிஸ்), செரினா வில்லியம்ஸ்(டென்னிஸ்), இசின்பெயவா(தடகளம்) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். விருது வழங்கும் விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடந்தது.

சிறந்த வீரருக்கான விருதை, ‘பார்முலா–1’ கார்பந்தயத்தில் தொடர்ந்து நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல், 26, வென்றார். இவர், முதன்முறையாக இவ்விருது வென்றார். ஜெர்மனியின் மைக்கேல் சூமாக்கருக்கு (2002, 2004) பின், இவ்விருது வென்ற ‘பார்முலா–1’ கார்பந்தய வீரர் என்ற பெருமை பெற்றார்.

சிறந்த வீராங்கனைக்கான விருதை அமெரிக்காவின் நீச்சல் வீராங்கனை மிஸ்ஸி பிராங்க்ளின், 18, முதன்முறையாக தட்டிச் சென்றார். இதன்மூலம் இளம் வயதில் இவ்விருது வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபெல் நடாலுக்கு, சிறந்த எழுச்சி வீரர் விருது கிடைத்தது. இவர், 2011ல் சிறந்த வீரருக்கான விருது வென்றார். சிறந்த அணிக்கான விருது, ஜெர்மனியை சேர்ந்த பேயர்ன் முனிக் கால்பந்து அணிக்கு வழங்கப்பட்டது. விளையாட்டு உணர்வுடன் நடந்து கொண்ட அணிக்கான விருது, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கிடைத்தது.

 

http://sports.dinamalar.com/2014/03/1395852471/vettelformulaoneaward.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.