Jump to content

பேயார்ன் முனிக் சாம்பியன்( bayern munich 2013/2014 deutsche meister)


Recommended Posts

பேயார்ன் முனிக் சாம்பியன்
மார்ச் 26, 2014.

 

பெர்லின்: ஹெர்தா பெர்லின் அணிக்கு எதிரான பன்டஸ்லிகா( bundesliga )      தொடரின் லீக் போட்டியில் வெற்றி பெற்ற பே‌‌யார்ன் முனிக் அணி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது.

Bayern-Munich-300_zpse1cdf22f.jpg

 

 

 

ஜெர்மனியில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் ஜெர்மன் பன்டஸ்லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் பே‌யார்ன் முனிக், ஹெர்தா பெர்லின் அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய முனிக் அணிக்கு டோனி கிராஸ் (6வது நிமிடம்), மரியோ (14) ஆகியோர் கோல் அடித்தனர். இதற்கு பெர்லின் அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை.

பின் இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் பெர்லின் அணிக்கு ஏட்ரியன் (66) ஒரு கோல் அடித்தார். இதற்கு முனிக் வீரர் பிரான்க் ரிபரி (79) பதிலடி கொடுத்தார். இறுதியில், பேயார்ன் முனிக் அணி, 3-–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தற்போது 27 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ள முனிக் அணி 77 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இன்னும் 7 போட்டிகள் எஞ்சியுள்ள போதும் வேறு எந்த அணியும் சாம்பியன் பட்டம் ‌வாய்ப்பு இல்லை. இதையடுத்து இம்முறை பேயார்ன் முனிக் அணி கோப்பை ‌வெல்வது உறுதியானது.

சாதனை பட்டியல்...

* இந்த  வெற்றியின் மூலம் இத்தொடரில் தனது 24வது சாம்பியன் பட்டத்‌தை முனிக் அணி உறுதி செய்தது. தவிர, இத்தொடரில் முனிக் அணி, தொடர்ச்சியாக வெல்லும் 19வது சாம்பியன் பட்டம் இது.

* தவிர, இத்தொடர் துவங்கி 27வது நாளில் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ள முனிக் அணி, குறைந்த நாட்களில் பட்டம் வென்ற தன முந்தைய சாதனையை (28 நாட்கள்) தகர்த்தது.

 

 

http://sports.dinamalar.com/2014/03/1395853977/BayernMunichteam.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இது தலைக்கனம்,சண்டித்தனம் கூடின விளையாட்டுக்கழகம்.... :D

Link to comment
Share on other sites

 இது தலைக்கனம்,சண்டித்தனம் கூடின விளையாட்டுக்கழகம்.... :D

 

உண்மைதான், உங்களது கருத்துதான் எனதும் ஆனால் அவர்களை வெல்ல கூடிய வேறு ஒரு கழகம் தற்சமயம் இல்லை.

Link to comment
Share on other sites

ஜேர்மன் உதைப்பந்தாட்டப் போட்டியை சரியாகத்தான் உச்சரித்துள்ளதா தினமலர்?  :rolleyes:  :lol:

Link to comment
Share on other sites

ஜேர்மன் உதைப்பந்தாட்டப் போட்டியை சரியாகத்தான் உச்சரித்துள்ளதா தினமலர்?  :rolleyes:  :lol:

 

அதுதான் நான் அடைப்பு குறிக்குள் சரியான உச்சரிப்பை போட்டேன்.  :D  இல்லை என்றால் யாராவது அவசரத்தில் வாசித்துவிட்டு report பண்ண எனக்கு தான் செம்புள்ளி :o:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.