Jump to content

மேற்கிந்திய தீவுகள் எதிர் இங்கிலாந்து ஒரு நாள் போட்டிகள்


Recommended Posts

இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
மார்ச் 01, 2014.

 

 

ஆன்டிகுவா: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொறுப்பாக ஆடிய இங்கிலாந்து வீரர் மைக்கேல் லம்ப் சதம் வீணானது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டூவர்ட் பிராட், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

திணறல் துவக்கம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு போவல் (5) மோசமான துவக்கம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரர் டுவைன் ஸ்மித் (24) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்து வந்த கிர்க் எட்வர்ட்ஸ் (10), டேரன் பிராவோ (2) சொற்ப ரன்னில் வௌியேறினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

பிராவோ அபாரம்: பின் இணைந்த சிம்மன்ஸ், கேப்டன் டுவைன் பிராவோ ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்து, விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டனர். பொறுப்பாக ஆடிய சிம்மன்ஸ், ஒருநாள் அரங்கில் தனது 14வது அரைசதம் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்த போது சிம்மன்ஸ் (65) அவுட்டானார். அடுத்து வந்த டேரன் சமியுடன் இணைந்த டுவைன் பிராவோ, ஒருநாள் போட்டியில் தனது 10வது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த டேரன் சமியும் தன்பங்கிற்கு அரைசதம் அடிக்க அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஆறாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்த போது சமி (61) அவுட்டானார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. டுவைன் பிராவோ (87) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பல் டிம் பிரஸ்னன் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

லம்ப் சதம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு, அறிமுக வீரர்களான மைக்கேல் லம்ப், மொயின் அலி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்த போது மொயின் அலி (44) அவுட்டானார். அடுத்து வந்த லுக் ரைட் (1) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய மைக்கேல் லம்ப், அறிமுக போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இவர், 106 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

‘மிடில்–ஆர்டர்’ ஏமாற்றம்: ‘மிடில்–ஆர்டரில்’களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் (5), ஜோ ரூட் (37), ஜாஸ் பட்லர் (12) பெரிய அளவில் சோபிக்கவில்லை. கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டன. ரவி ராம்பால் வீசிய 50வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. ரவி போபரா (23), டிம் பிரஸ்னன் (14) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சுனில் நரைன் 2 விக்கெட் கைப்பற்றினார்.

ஆட்ட நாயகன் விருதை வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டுவைன் பிராவோ வென்றார். இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1–0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி ஆன்டிகுவாவில் நாளை நடக்கிறது.

 

http://sports.dinamalar.com/2014/03/1393643462/EnglandWestindiesOneDayInternationalCricket.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நவீனன்...!

Link to comment
Share on other sites

கோப்பை வென்றது இங்கிலாந்து : ராம்தின் போராட்டம் வீண் : வெ. இண்டீஸ் ஏமாற்றம்
மார்ச் 06, 2014.

 

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், 25 ரன்னில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தொடரை 2–1 என கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கடைசிவரை போராடிய ராம்தினின் சதம் வீணானது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டுவைன் பிராவோ, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

கைநழுவிய ‘ஹாட்ரிக்’:

இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் லம்ப் (20), பென் ஸ்டோக்சை (0) ஆகியோரை போட்டியின் 6வது ஓவரின் 4, 5வது பந்தில் டுவைன் பிராவோ வெளியேற்றினார். அடுத்த பந்தை ஜோ ரூட் சமாளித்து ஆட, பிராவோவின் ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு பரிபோனது.

அடுத்த ஓவரை ராம்பால் வீச, 5வது பந்தில் ஜோ ரூட்டின் வலது பெருவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு வலிநிவரணி மாத்திரை மட்டும் எடுத்துக்கொண்ட இவர்,தொடர்ந்து போட்டியில் பங்கேற்றார்.

மழை குறுக்கீடு:

இங்கிலாந்து அணி 9.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்த போது, மழை குறுக்கிட்டதால் போட்டி 45 நிமிட தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து அசத்திய மொயின் அலி (55) அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். எதிர்முனையில் வலியுடன் போராடிய ஜோ ரூட், சீரான இடைவேளையில் பவுண்டரிகள் அடித்தார். இவர், ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை (107) பதிவு செய்து அவுட்டானார்.

பட்லர் அதிரடி:

அடுத்து வந்த மார்கன் (1) ஏமாற்ற, கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்கள் சேர்த்த பட்லர், (99 ரன்கள், 7 பவுண்டரி, 4 சிக்சர்) சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதையடுத்து இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேப்டன் டுவைன் பிராவோ அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார்.

ராம்தின் பதிலடி:

கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாவெல் (1) போட்டியின் முதல் ஓவரிலேயே அவுட்டானார். டுவைன் ஸ்மித் (9) தாக்குபிடிக்கவில்லை. டேரன் பிராவோ (16), சிம்மன்ஸ் (16), சாமுவேல்ஸ் (23) என ‘டாப்–ஆர்டர்’ வீரர்கள் சொதப்ப, வெஸ்ட் இண்டீஸ் அணி, 80 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து தள்ளாடியது.

பின் கேப்டன் டுவைன் பிராவோவுடன் கைகோர்த்த, ராம்தின் பொறுப்பாக செயல்பட்டார். அணியை சரிவுப்பாதையில் இருந்து மீட்க போராடிய ராம்தின், ஸ்டீபன் பாரி பந்துவீசச்சில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி அரைசதம் கடந்தார். தன்பங்கிற்கு போபாரா, ஸ்டோக்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய டுவைன் பிராவோ (27) நிலைக்கவில்லை.

சமி ஏமாற்றம்:

பின் வந்த சமி (24) ஏமாற்றினார். இதன் பின் ராம்தின், இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறம் சிதறடித்தார். முதலில் பிராட் வேகத்தில் 2 பவுண்டரி அடித்த இவர், தொடர்ந்து பாரி, டிரெட்வெல் பந்துவீச்சில் 3 சிக்சர்கள் பறக்கவிட்டு, ஒருநாள் அரங்கில தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்த நேரத்தில் ‘டெயிலெண்டர்களான’ மில்லர் (10), நரைன் (10) ‘பெவிலியன்’ திரும்ப, வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு கடைசி 3  ஓவரில் 40 ரன்கள் தேவைப்பட்டது. பிரஸ்னன் வீசிய போட்டியின் 48வது ஓவரின் முதல் பந்தை ராம்தின் சிக்சருக்கு அனுப்பினார். அடுத்த இரண்டு பந்தையும் இவர் பவுண்டரிக்கு விரட்ட, வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது.

அடுத்த பந்தில் ராம்தின் (128) ‘போல்டாக’, வெஸ்ட் இண்டீஸ் அணி 47.4 ஓவரில் 278 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டாகி’ 25 ரன்கள் வித்தியாசத்தல் தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, வெஸ்ட் இண்டீஸ் அணி, 1–2 என பறிகொடுத்தது.

ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் வென்றார். இதைதொடர்ந்து இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரிலும் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி, வரும் 9ல் பிரிட்ஸ்டவுனில் துவங்குகிறது.

–––

பிராட்க்கு எச்சரிக்கை

இரண்டாவதாக வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்த போது,  பந்தின் வடிவம் மாறியதால், அம்பயர் எராஸ்மஸ் மாற்று பந்தை தேர்வு செய்தார். இதற்கு எராஸ்மசுடன் இங்கிலாந்து கேப்டன் ஸ்டுவர்ட் பிராட் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை எச்சரித்துள்ள ஐ.சி.சி., தொடரில் எஞ்சியுள்ள போட்டியில் பிராட், மீண்டும் இப்படி நடந்து கொள்ளும்பட்சத்தில் எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/03/1394087641/westindiesenglandcricket.html

––––

Link to comment
Share on other sites

இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
மார்ச் 10, 2014.

 

பிரிட்ஜ்டவுன்: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி–20’ போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்று பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாமுவேல்ஸ் (69*), கிறிஸ் கெய்ல் (43), டுவைன் ஸ்மித் (27), ரசல் (23*) கைகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் ரவி போபரா 2 விக்கெட் வீழ்த்தினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு ரவி போபரா (42), டிம் பிரஸ்னன் (47*) மட்டும் ஆறுதல் தந்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்ற இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீறா் சார்பில் பத்ரி 3, சாமுவேல்ஸ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 1–0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருதை வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ் வென்றார். இரண்டாவது போட்டி பிரிட்ஜ்டவுனில் நாளை நடக்கிறது.
 

http://sports.dinamalar.com/2014/03/1394419622/WestIndiesEnglandT20Cricket.html

Link to comment
Share on other sites

கோப்பை வென்றது வெஸ்ட் இண்டீஸ் :இங்கிலாந்து ஆறுதல் வெற்றி

மார்ச் 14, 2014.

பிரிட்ஜ்டவுன்: மூன்றாவது ‘டுவென்டி–20’ போட்டியில், இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி 2–1 என தொடரை கைப்பற்றியது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் காட்ரெல் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

ஜோர்டன் அசத்தல்:

இங்கிலாந்து அணிக்கு லம்ப், ஹேல்ஸ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அரை சதம் கடந்த லம்ப் 63 ரன்களில் அவுட்டானார். ஹேல்ஸ் 38 ரன்கள் எடுத்தார். மார்கன் (18), பட்லர் (3) உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். கடைசி ஓவரில் களமிறங்கிய ஜோர்டன் 4 சிக்சர்கள் அடித்து மிரட்டினார். இங்கிலாந்து அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் டுவைன் ஸ்மித் டக்–அவுட் ஆனார். ஜோர்டன் வேகத்தில் சார்லஸ் (4), சாமுவேல்ஸ் (15) வெளியேறினார். பொறுப்பாக ஆடிய சிம்மன்ஸ் (69) அரை சதம் அடித்தார். ராம்தின் 33 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொதப்ப, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை இங்கிலாந்து அணியின் ஜோர்டன் வென்றார். தொடர் நாயகன் விருதை வெஸ்ட் இண்டீஸ் அணியின் டேரன் சமி கைப்பற்றினார்.

http://sports.dinamalar.com/2014/03/1394765839/sammywestindies.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.