Jump to content

2014 ஆசிய கோப்பை போட்டிக்கான செய்திகள்


Recommended Posts

ஆசிய கோப்பை : இந்தியா.பாக்., மோதல்
பிப்ரவரி 19, 2014.

 

 மிர்புர்: ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் ‘பரம எதிரி’களான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வரும் மார்ச் 2ம் தேதி மோதுகின்றன.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) சார்பில், 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் வரும் பிப்., 25ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகளுடன், முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்கிறது.

இத்தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஒவ்வொரு அணிகளும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ‘ரவுண்டு ராபின்’ முறையில் லீக் சுற்றில் மோதும். லீக் சுற்றின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் வரும் மார்ச் 8ம் தேதி மிர்புரில் நடக்கும் பைனலில் மோதும். பைனல் உட்பட மொத்தம் 11 போட்டிகள் பதுல்லா, மிர்புர் மைதானங்களில் நடக்கின்றன.

வரும் பிப்., 25ம் தேதி பதுல்லாவில் நடக்கவுள்ள தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில், வங்கதேச அணியை பிப்., 26ம் தேதி பதுல்லாவில் சந்திக்கிறது. அதன்பின் இலங்கை அணியை பிப்., 28ல் பதுல்லாவில் எதிர்கொள்கிறது. மிர்புரில், மார்ச் 2ம் தேதி நடக்கவுள்ள லீக் போட்டியில், ‘பரம எதிரி’களான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மார்ச் 5ம் தேதி மிர்புரில் நடக்கவுள்ள லீக் போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.

ஆசிய கோப்பை அரங்கில், இந்திய அணி அதிகபட்சமாக 5 முறை (1984, 88, 90–91, 95, 2010) சாம்பியன் பட்டம் வென்றது. இலங்கை அணி 4 முறையும் (1986, 97, 2004, 2008), பாகிஸ்தான் அணி 2 முறையும் (2000, 2012) கோப்பை வென்றன.

 

table_zps82f83fd7.jpg

 

 

http://sports.dinamalar.com/2014/02/1392829759/Dhawanindiacricket.html

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

ஆசியக் கிண்ணத்தில் இருந்து டோனி விலகல்


ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இருந்து இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் டோனி காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

நியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, டோனிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இப் போட்டியில் இருந்து விலக நேரிட்டுள்ளது.

ஆசிய கிண்ண போட்டிக்கு இந்திய அணியை  டோனிக்கு பதிலாக விராட் கோலி வழிநடத்தவுள்ளார். விக்கெட் காப்பாளராக தினேஷ் கார்த்திக் கடமையாற்றுவார்.

பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ணத் தொடரில் இந்திய அணி எதிர்வரும் 26ஆம் திகதி தனது முதல் போட்டியில் விளையாடுகிறது.

இந்தத் தொடரின் முடிவில், உலகக் கிண்ண இருபதுக்கு -20 தொடர் பங்களாதேஷில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/?q=node/361606

Link to comment
Share on other sites

ஆசிய கோப்பையில் அசத்துமா இந்தியா: கோஹ்லிக்கு சோதனை
பிப்ரவரி 23, 2014.

 

மும்பை: ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் நேற்று வங்தேசம் புறப்பட்டுச் சென்றனர்.

இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நாளை துவங்குகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை (பிப்.26) எதிர்கொள்கிறது. பின் மார்ச் 2ம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது.

தோனிக்கு ஓய்வு:

சமீபத்தில் முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தோனிக்கு காயம் ஏற்பட்டதால் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை விராத் கோஹ்லி ஏற்றுள்ளார். விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று மும்பையில் இருந்து வங்கதேசத்திற்கு கிளம்பியது.

இத்தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, இம்முறை மிகவும் இக்கட்டான நிலையில் களமிறங்குகிறது. ‘கேப்டன் கூல்’ தோனி இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தலாம். அன்னிய மண்ணில் சந்தித்த தொடர் தோல்விகள் இவரது தலைமை பதவிக்கு வேட்டு வைக்கலாம்.

இந்தச் சூழலில் அணியை வழிநடத்தும் விராத் கோஹ்லி சாதித்துக் காட்ட வேண்டும். நல்ல ‘பார்மில்’ உள்ள இவர், சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிரந்தர கேப்டனாக கூட நியமிக்கப்படலாம். தவான், ரோகித் சர்மா, புஜாரா, ரவிந்திர ஜடேஜா, பின்னி அடங்கிய இளம் பேட்டிங் படை எழுச்சி பெறுவது அவசியம். பந்துவீச்சில் அசத்த முகமது ஷமி, வருண் ஆரோன், அஷ்வின் உள்ளனர்.

இந்திய அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, புஜாரா, அம்பதி ராயுடு, ரகானே, தினேஷ் கார்த்திக், ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, ஈஷ்வர் பாண்டே.
தொடருமா 2வது இடம்

ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி(115 புள்ளி), ஐ.சி.சி., ஒருநாள் போட்டி அணிகளுக்கான ரேங்கிங்கில், 2வது இடத்தில் உள்ளது. இத்தொடரில் விளையாடும் இலங்கை (109, 4வது இடம்), பாகிஸ்தான் அணிகள் (101, 6வது இடம்), வங்கதேசம் (81, 9வது இடம்) ‘டாப்–10’ வரிசையில் உள்ளன.

கிடைக்குமா முதலிடம்:

தரவரிசையில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ஐ.சி.சி., சார்பில் விருது மற்றும் பரிசு வழங்கப்படும். இதற்கான கடைசி நாள் வரும் ஏப்., 1ம் தேதி. தற்போதுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி(117) ‘நம்பர்–1’ இடத்தில் உள்ளது. இந்திய அணி, ஆசிய கோப்பை தொடரில் பைனல் உட்பட அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றால் கூட 117 புள்ளிகள் மட்டுமே பெறும். தசம புள்ளிகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் நீடிக்கும்.

காத்திருக்கும் ஆபத்து:

இந்திய அணி, இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ள ஆசிய கோப்பையில் ஏதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் போதுமானது. இலங்கை அணி 2வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. இதற்கு இலங்கை அணி, ஆசிய கோப்பையில் பைனல் உட்பட அனைத்து போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில், இந்திய அணி அனைத்து போட்டியிலும் தோல்வி அடைய வேண்டும். அப்போது இலங்கை, இந்திய அணிகள் தலா 112 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். தசம புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை அணி 2வது இடத்துக்கு முன்னேறும். இந்திய அணி 3வது இடத்துக்கு தள்ளப்படும்.

ஆக்ரோஷ கேப்டன் வேண்டும்: சாப்பல்

‘‘தற்காப்பு ஆட்டத்தை கையாளும் தோனிக்கு பதில் டெஸ்ட் போட்டிகளில் ‘ஆக்ரோஷ’ விராத் கோஹ்லியை கேப்டனாக நியமிக்கலாம்,’’ என, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சாப்பல் தெரிவித்தார். இவர் கூறுகையில்,‘‘ ஒருநாள் போட்டிகளில் தோனியின் சிறந்த தலைமை குறித்து யாரும் எந்த குறையும் சொல்ல முடியாது.

ஆனால், 2011–12ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை முழுமையாக இழந்ததன் மூலம் இவரது டெஸ்ட் தலைமை குறித்து சந்தேகம் எழுந்தது.

பின் சொந்த மண்ணில் சாதித்துக்காட்டிய இவர், மீண்டும் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து மண்ணில் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறினார்.

வெலிங்டன் டெஸ்டில் மெக்கலம், வாட்லிங் ஜோடியை பிரிக்க முடியாமல் தவித்தார். ரன்களை குறைப்பதில் அதிக கவனம் செலுத்திய இவர், சரியான முறையில் பவுலர்களை பயன்படுத்தவில்லை. 

நியூசிலாந்தில் எந்த மாற்றமும் செய்ய முன்வராமல் ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப செயல்பட்டார். தற்போது மாற்று கேப்டனாக செயல்பட கோஹ்லிக்கு தகுதி உள்ளது. இவருக்கு வழிவிடுவது அவசியம்.

ஒரு கேப்டன் என்பவர், துணிச்சலாக செயல்பட வேண்டும். தற்போது தோனிக்கு ஏற்பட்டுள்ள காயம், விராத் கோஹ்லியை சோதிக்க சிறந்த காலம். புதிய கேப்டனை தேர்வு செய்ய இதுவே சரியான நேரம். இவரிடம் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை தயங்காமல் வழங்கலாம்,’’என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/02/1393176878/asiacupkohli.html

Link to comment
Share on other sites

ஆசிய கோப்பை: சாதிக்க கோஹ்லி ரெடி : வெற்றிப் பாதைக்கு திரும்புமா இந்தியா
பிப்ரவரி 24, 2014.

 

பதுல்லா: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இதில், இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கும் விராத் கோஹ்லி, ஆசிய அணிகளுடன் மல்லுக்கட்ட தயாராக உள்ளார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று வங்கதேசத்தில் துவங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் புதிய வரவாக ஆப்கானிஸ்தான் என மொத்தம் 5 நாடுகள் பங்கேற்கின்றன.

முதலில் இந்தியாவில் நடப்பதாக இருந்த இத்தொடர் பின், வங்கதேசத்துக்கு மாற்றப்பட்டது. இங்கு நடந்த அரசியல் கலவரம், பாதுகாப்பு பிரச்னைகளை கடந்து, ஒருவழியாக இன்று போட்டிகள் துவங்குகின்றன.

புதிய கேப்டன்:

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தான் ‘டாப்’. தோனிக்கு காயம் காரணமாக, புதிய கேப்டன் விராத் கோஹ்லி தலைமையில் களமிறங்குகிறது. கடந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 183 ரன்கள் எடுத்த இவர், இம்முறை அணிக்கு வெற்றி தேடித்தருவார் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய துணைக்கண்டத்து ஆடுகளங்கள் என்பதால் ஷிகர் தவான், ரோகித் சர்மா நல்ல துவக்கம் தரலாம். ரகானே, ஒருநாள் போட்டிகளில் புதிதாக களம் காணும் புஜாரா, தினேஷ் கார்த்திக் இருந்தாலும் போட்டியை ‘பினிஷிங்’ செய்து தரும், தோனி, அனுபவ ரெய்னா, யுவராஜ் இல்லாதது ‘மிடில் ஆர்டரில்’ பலவீனம் தான்.

பவுலிங்கும் சுமார் ரகம் தான். இளம் வீரர்கள் முகமது ஷமி, வருண் ஆரோன், புவனேஷ்வர் குமார் கைகொடுத்தால் நல்லது. சுழலில் அஷ்வின், ஜடேஜாவுக்கு இடம் உறுதி.

முதல் சவால்:

இந்திய அணி, தனது முதல் போட்டியில் நாளை வங்கதேசத்தை சந்திக்கிறது. சமீபத்திய தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து தொடரில் ஒரு வெற்றி கூட பெறாத இந்திய அணி, இத்தொடரில் பாகிஸ்தான், இலங்கை அணிகளை சமாளிப்பதை பொறுத்து தான் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.

பாக்., மிரட்டல்:

‘பாகிஸ்தான் அணி, பேட்டிங்கில் கேப்டன் மிஸ்பா உல் ஹக்கை பெரிதும் நம்பியுள்ளது. மற்றபடி அனுபவ முகமது ஹபீஸ், அகமது ஷேசாத் ரன்கள் சேர்க்க முயற்சிக்கலாம். ‘வேகத்தில்’ உமர் குல், ஜூனைடு கான், ‘சுழலில்’ சயீத் அஜ்மல் மிரட்டலாம். ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைக்க வேண்டும் என்ற நெருக்கடி பாகிஸ்தானுக்கு உண்டு.

வலுவான இலங்கை:

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடர்களை வென்ற உற்சாகத்துடன் உள்ளது இலங்கை அணி. ‘சீனியர்’ வீரர் சங்ககரா, அணியின் முதுகெலும்பாக இருப்பார்.

தவிர, ஜெயவர்தனா, கேப்டன் மாத்யூஸ், திரிமான்னே உள்ளது கூடுதல் பலம்.  பவுலிங்கில் மிரட்ட ‘யார்க்கர்’ மலிங்கா உள்ளார். அதிரடி வீரர் தில்ஷன் இல்லாதது சிக்கலைத் தரலாம்.

சொந்தமண் பலம்:

வங்கதேச அணியை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு பைனலுக்கு முன்னேறி அசத்தியது. இம்முறை துவக்க வீரர் தமிம் இக்பால் இல்லாதது, தடை காரணமாக முன்னணி ‘ஆல் ரவுண்டர்’ சாகிப் அல் ஹசன், இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க முடியாதது என, குழப்பத்தில் உள்ளது.

தவிர, தன்னிடம் ஆலோசிக்காமல் அணியை அறிவித்து விட்ட கோபத்தில் கேப்டன் முஷ்பிகுர் ரகிம் உள்ளதால், வெற்றிக்கு கடுமையாக போராட வேண்டும்.

புதிதாக வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி தர முயற்சிக்கலாம்.

இன்று நடக்கும் முதல் போட்டியில், ‘நடப்பு சாம்பியன்’  பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன.

––

ராசியான தொடர்

ஆசிய கோப்பை தொடர் விராத் கோஹ்லிக்கு ராசியானது. இதில், 7 போட்டிகளில் 2 சதம் உட்பட 424 ரன்கள்(சராசரி 60.57) எடுத்துள்ளார். இத்தொடரில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இவர்(183, எதிர்–பாகிஸ்தான், 2012) முதலிடத்தில் உள்ளார்.

----

கேப்டனாக...

கோஹ்லி, 8 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில், 7ல் வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நடந்த முத்தரப்பு தொடரில் இலங்கைக்கு எதிராக தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்தார். பின் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வென்றார்.

அடுத்து, ஜிம்பாப்வேக்கு எதிராக ஒருநாள் தொடரை (5–0) முழுமையாக வென்றார்.

* கேப்டனாக 8 போட்டிகளில் 2 சதம் உட்பட 332 ரன்கள் எடுத்துள்ளார். 

–––

கடினமான பணி

இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறியது:

இதற்கு முன் சில போட்டிகளில் வெற்றி பெற்றதால், ஆசிய கோப்பை தொடருக்கு கேப்டன் பொறுப்பு கொடுத்தனர். ‘ரெகுலர்’ கேப்டனாக இருப்பதில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமானது. போட்டிகளில் வெற்றி பெற்றால் பாராட்டுவர், தோல்வியடைந்தால் விமர்சிப்பர். கிரிக்கெட்டில் இது வழக்கமானது தான்.

மற்றபடி கேப்டன் பதவிக்கு பொருத்தமான நபர் நானல்ல. இதற்கான அனுபவமும் எனக்கு கிடையாது. ஏனெனில், இது கடினமானது. அனைத்துவித விமர்சனங்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு கோஹ்லி கூறினார்.

––––––––––––

யார் ஆதிக்கம்

* ஆசிய கோப்பை தொடரில் இதுவரை ஒவ்வொரு அணிகளின் செயல்பாடு

அணி போட்டி வெற்றி தோல்வி முடிவு இல்லை

இலங்கை 43 29 14 0

இந்தியா 39 24 14 1

பாகிஸ்தான் 35 21 13 1

வங்கதேசம் 33 4 29 0

ஹாங்காங் 4 0 4 0

யு.ஏ.இ., 4 0 4 0

–––––

வரவேற்பு இல்லை

கேப்டன் தோனியின் திடீர் விலகல், பெரும்பாலான நிறுவனங்கள் விளம்பரம் குறித்து எதுவும் தெரிவிக்காததால், ஆசிய கோப்பை தொடருக்கு இம்முறை போதிய வரவேற்பில்லை. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மட்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றபடி, வங்கதேசம், ஆப்கன் அணிகள் மோதும் போட்டியை ‘டிவி’யில் கூட பார்ப்பது கடினம் தான்.

தவிர, ‘டிவி’ ஒளிபரப்புக்கு நிம்பஸ் நிறுவனம் ரூ. 130 கோடி செலுத்த முன்வந்தது. ஆனால், தொடரை வேறிடத்தில் நடத்த வேண்டும் என நிர்பந்தித்தது. இதனால் ஸ்டார் நிறுவனம் ரூ. 80 கோடி மட்டும் கொடுத்து ஒப்பந்தத்தை தட்டிச் சென்றது.

இதேபோல, கடந்த ஆண்டு ‘டைட்டில் ஸ்பான்சருக்கு’ ரூ. 12 கோடி தரப்பட்ட நிலையில், இம்முறை ரூ. 5 கோடி மட்டும் கொடுக்கப்படுகிறது.

–––

பரிசு எவ்வளவு

ஆசிய கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 1.6 கோடி. இதில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 37 லட்சம் கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் பட்சத்தில் ரூ. 18. 5 லட்சம் பெறலாம்.

தொடர் நாயகன் (ரூ. 7.7 லட்சம்), பைனலில் ஆட்ட நாயகனுக்கும் (ரூ. 4.6 லட்சம்) பரிசு உண்டு. தவிர, லீக் போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 6.17 லட்சம் தரப்படும்.

––––––––––––––

ஐந்து கோப்பை

ஆசிய கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணி அதிகபட்சமாக 5 முறை (1984, 1988, 1990–91, 1995, 2010) கோப்பை வென்றது. அடுத்து இலங்கை அணி 1986, 1997, 2004, 2008 என, 4 முறை சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. பாகிஸ்தான் அணி 2000, 2012ல் பட்டம் வென்றது.

–––––––––––––––

பைனல் எப்படி

12வது ஆசிய கோப்பை தொடரில் 5 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று (10 போட்டி) முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்கள் பெறும் அணிகள் மார்ச் 8ல் நடக்கும் பைனலில் பலப்பரீட்சை நடத்தும்.

–––––––––––

புதிய வரவு

கடந்த 2001 ல் ஐ.சி.சி.,யில் உறுப்பினரானது ஆப்கானிஸ்தான். சீரான வளர்ச்சி பெற்று வரும் இந்த அணி 2010, 2012ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் பங்கேற்றது. 2009ல் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்து பெற்ற ஆப்கன், 2015 உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) விளையாடவுள்ளது. இந்நிலையில் முதன் முறையாக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கிறது.

–––––––––––––

http://sports.dinamalar.com/2014/02/1393260778/asiacupcricketindia.html

Link to comment
Share on other sites

ஆசியக் கிண்ணத்தை இலங்கை கைப்பற்றுமா?

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நாளை பங்களாதேஷில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றுமா என்ற ஆர்வம் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

பங்களாதேஷில் நாளை ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ணத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

ஆசிய கிண்ணத்தில் அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி ஏற்கனவே பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதுடன் சந்திமல் தலைமையில் இருபதுக்கு -20 தொடரையும் கைப்பற்றிய நிலையில் உள்ளது.
மூன்று தொடர்களையும் வென்ற உற்சாகத்துடன் இலங்கை அணியுள்ளதால் கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்புடன் போட்டியிடும். இதேவேளை எதிரணிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் இலங்கை அணி அனைத்து வியூகங்களை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றைய 4 அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. இந்த சுற்றின் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மார்ச் 8ஆம் திகதி இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. 

நாளை நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் பாகிஸ்தான் அணி இலங்கை அணியுடன் மோதுகிறது.

ஆசிய கிண்ணத்தை இந்தியா 5, இலங்கை 4, பாகிஸ்தான் 2 தடவைகள் கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் இலங்கை அணியில் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன மற்றும் டில்சான் ஆகியோர் இடம்பெற்றுள்ளதால் அணியின் பலம் நன்றாக அமையும். இந்நிலையில் இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

 

http://www.virakesari.lk/?q=node/361673

 

Link to comment
Share on other sites

பாகிஸ்தானுக்கு 297 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ஆசிய கிண்ண தொடரில் இன்று இடம்பெறும் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 297 ஓட்டங்களை பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ணத் தொடர் இன்று பங்கதேஷில் ஆரம்பமானது.

இந்நிலையில் இன்றைய முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 296 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான 102, சங்கக்கார 67 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க மெத்தியூஸ் ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும் பெற்றார்.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் உமர் குல் மற்றும் அப்ரிடி ஆகியோர் தலா இருவிக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

http://www.virakesari.lk/?q=node/361719

Link to comment
Share on other sites

மலிங்கா வேகத்தில் வீழ்ந்து பாக்: இலங்கைக்கு திரில் வெற்றி
பிப்ரவரி 25, 2014.

 

 

பதுல்லா: ஆசிய கோப்பை தொடரில் முதல் வெற்றியை இலங்கை அணி பதிவு செய்தது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் பாகிஸ்தானை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இலங்கை அணிக்கு திரிமன்னே(102), மலிங்கா(5 விக்.,) கைகொடுத்தனர்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நேற்று துவங்கியது. பதுல்லாவில் நடந்த முதல் லீக் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

திரிமான்னே சதம்:

இலங்கை அணிக்கு குசால் பெரேரா (14) ஏமாற்றினார். பின் இணைந்த திரிமன்னே, சங்ககரா ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சங்ககரா, ஒரு நாள் அரங்கில் 84வது அரை சதத்தை பதிவு செய்தார். 2வது விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்தபோது, சங்ககரா (67) அவுட்டானார். ஹபீஸ் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட திரிமன்னே ஒரு நாள் அரங்கில் 2வது சதத்தை எட்டினார். இவர் குல் பந்தில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அப்ரிதி அசத்தல்:

பின் வந்தவர்கள் பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்ரிதி ‘சுழலில்’ ஜெயவர்தனா (13), திசரா பெரேரா (6) நடையைக்கட்டினர்.  தனி ஆளாக மாத்யூஸ் போராடினார். அஜ்மல் பந்துவீச்சில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த இவர் அரை சதம் கடந்தார்.  இலங்கை அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்தது. மாத்யூஸ் (55), சண்டிமால் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.

‘டாப்–ஆர்டர்’ ஏமாற்றம்:

பாகிஸ்தான் அணிக்கு ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். ஷார்ஜல் கான்(26), அகமத் ஷெகாதத்(28), முகமது ஹபீஸ்(18) விரைவில் கிளம்ப, 83 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த தடுமாறியது.

அக்மல் அதிரடி:

இதன் பின் கேப்டன் மிஸ்பா, உமர் அக்மல் ஜோடி அணியை மீட்கும் முயற்சியில் இறங்கியது. லக்மல் பந்துவீச்சில் உமர் அக்மல் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து அரை சதம் 18வது அரை சதம் எட்டினார்.

மலிங்கா நெருக்கடி:

இப்படி இருவரும் மாறி மாறி எதிரணி பந்துவீச்சை சிதறடித்து, வெற்றி வாய்ப்பை நெருங்கினர். 5வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தநிலையில், அக்மல் (74) அவுட்டானார். இதன் பின் ஆட்டம் அப்படியே தலைகீழானது.  மலிங்காவும் அசுர வேகம் காட்டினார். இவரிடம் அப்ரிதி (4), மிஸ்பா (73), உமர் குல் (2) சிக்கினர். சயீத் அஜ்மல்(10), பிலாவல் (18) இவரிடமே சரணடைந்தனர். பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில், 284 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி தோல்வி அடைந்தது.

இலங்கைக்கு ‘திரில்’ வெற்றி தேடித் தந்த மலிங்கா 5 விக்கெட் வீழ்த்தினார். இவரே ஆட்டநாயகன் விருதை வென்றார்.      

முதன்முதலாக....

*முதல் டாஸ் வென்றது இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ்.

*முதல் பந்துவீசியது பாகிஸ்தானின் முகமது ஹபீஸ்.

*இதை எதிர் கொண்டது இலங்கையின் குசல் பெரேரா.

*உமர் குல் வீசிய பந்தை அடித்த திரிமான்னே முதல் பவுண்டரி விளாசினார்.

* ஹபீஸ் வீசிய பந்தை பறக்கவிட்ட இலங்கையின் திரிமான்னே முதல் சிக்சர் அடித்தார்.

* வேகப்பந்துவீச்சாளர் உமர் குல், குசல் பெரேராவை வீழ்த்தி முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.
சங்ககரா 12 ஆயிரம்

நேற்றைய போட்டியில் சங்ககரா 12 ரன்கள் எடுத்தபோது, ஒரு நாள் அரங்கில் இலங்கை அணிக்காக விளையாடி 12 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர் ஒரு நாள் அரங்கில் 365 போட்டியில் பங்கேற்று, 12319 ரன்கள் எடுத்துள்ளார். இதில், இலங்கை அணிக்காக 12060 ரன்கள், ஆசிய லெவன் அணிக்காக 121, உலக லெவன் அணிக்காக எடுத்த 138 ரன்கள் அடங்கும்.

ஜெயவர்தனா ‘600’

இப்போட்டியில் களமிறங்கியதன் மூலம், இலங்கை அணியின் ஜெயவர்தனா சர்வதேச அரங்கில் (408 ஒரு நாள், 143 டெஸ்ட், 49 ‘டுவென்டி–20’) 600 போட்டியில் பங்கேற்ற இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார். முதலிடத்தில் 664 போட்டியில் விளையாடிய, இந்தியாவின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின் (200 டெஸ்ட், 463 ஒருநாள், 1 டுவென்டி–20) உள்ளார்.

அவுட் சர்ச்சை

இலங்கையின் லக்மல் வீசிய, போட்டியின் 35வது ஓவரின் 3வது பந்து, மிஸ்பா பேட்டில் பட்டது. இதை விக்கெட் கீப்பர் சங்ககரா கேட்ச் பிடித்தார். இதனால், அவுட்டாக்கிய உற்சாகத்தில் இலங்கை வீரர்கள் துள்ள, ஆனால் அம்பயர் ஜோகன் கிளாட்டே (தென் ஆப்.,) அவுட் தரவில்லை. இதனால், சர்ச்சை உண்டானது.

அப்பா–மகன் வர்ணனை

நேற்றைய ஆசிய கோப்பை லீக் போட்டியை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர், தனது மகன் ரோகன் கவாஸ்கருடன் சேர்ந்து வர்ணனை செய்தது வித்தியாசமாக இருந்தது.

லக்மல், அக்மல் மோதல்

போட்டியின் 35வது ஓவரை இலங்கையின் லக்மல் வீசினார். எதிர் முனையிலிருந்த உமர் அக்மல், ‘கிரீசுக்கு’ திரும்ப முயன்றார். அதற்குள் முந்திக் கொண்ட லக்மல், அவரை நோக்கி பந்தை எறிய முயன்றார். இதனால், கோபமடைந்த அக்மல், இவரின் அருகில் வர இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

 

http://sports.dinamalar.com/2014/02/1393348625/LahiruThirimannesrilanka.html

 

Link to comment
Share on other sites

முஸ்பிகுர் சதம்: இந்தியாவுக்கு 280 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ஆசிய கிண்ணத் தொடரில் இன்றை இரண்டாவது லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கும் 12 ஆவது ஆசிய கிண்ணத் தொடர் நேற்று பங்களாதேஷில் ஆரம்பமானது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.

அணியின் துடுப்பாட்டத்தில் அனாமுல் ஹக் 77, முஸ்பிகுர் ரஹ{ம் 117 ஓட்டங்களை பெற்றனர். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினர்.

இந்திய அணியின் பந்து வீச்சில் முஹமட் ஹமி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

http://www.virakesari.lk/?q=node/361741

Link to comment
Share on other sites

வின்னர் விராத்: இந்தியாவிடம் வீழ்ந்தது வங்கதேசம்
பிப்ரவரி 26, 2014.

 

 

பதுல்லா: ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. நேற்றைய தனது முதல் லீக் போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லியின் சதம் கைகொடுக்க, 6 விக்கெட் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது. வங்கதேசம் சார்பில் கேப்டன் முஷ்பிகுர் ரஹிமின் சதம் வீணானது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. நேற்றைய லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, தோனியின் ‘பார்முலா’ படி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

சொதப்பல் ஆரம்பம்:

வங்கதேச அணிக்கு துவக்க வீரர் ஷம்சுர் (7) ஏமாற்றினார். பின் வந்த மோமினுல் ஹக் (23) தாக்குப்பிடிக்கவில்லை. இதையடுத்து வங்கதேச அணி 49 ரன்களுக்கு 2 விக்கெட்டை பறிகொடுத்து, தள்ளாடியது. தொடர்ந்து அனாமுல் ஹக்குடன், கேப்டன் முஷ்பிகுர் ஜோடி சேர்ந்தார்.

அனாமுல் அரைசதம்:

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி கொஞ்சம் கொஞ்சமாக அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியது. துவக்கத்தில் நிதான ஆட்டத்தை கையாண்ட, அனாமுல், போகப்போக அதிரடிக்கு மாறினார். முதலில் புவனேஷ்வர் வேகத்தில் இரண்டு பவுண்டரி அடித்த, அனாமுல், ஆரோன் பந்தில் 2 சிக்சர் அடித்து ஒருநாள் அரங்கில் தனது அரைசதத்தை பதிவு செய்தார்.

ஷமி ஆறுதல்:

எதிர்முனையில் முஷ்பிகுர் தன்பங்கிற்கு, ஜடேஜா பந்தை சிக்சருக்கு அனுப்பினார். தொடர்ந்து அதிரடியாக ரன்கள் சேர்த்த இவர், ஆரோன் வேகத்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 133 ரன்கள் சேர்த்த போது, அனாமுல் (77) அவுட்டானார்.

பின் வந்த நயீம் இஸ்லாம் (14), நாசிர் ஹெசைன் (1) ஆகியோரை அவுட்டாக்கிய ஷமி ஆறுதல் அளித்தார்.

வள்ளல் விராத்:

தொடர்ந்து வந்த ஜியாவுர் ரஹ்மான் (18) ஒத்துழைக்க, முஷ்பிகுர் ரஹிம் அடித்த பந்தை தேவையில்லாமல் எறிந்த இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, ரஹீம் ஒருநாள் அரங்கில் தனது 2வது சதத்தை எட்ட இலவசமாக 5 ரன்களை வழங்கினார். தொடர்ந்து ஷமி வேகத்தில் இரண்டு பவுண்டரி அடித்த, முஷ்பிகுர் ரஹிம், 117 ரன்களில் அவுட்டாக, வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்தது.

இந்திய அணிக்கு முகமது ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட் சாய்த்தார்.

நிதான துவக்கம்:

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி நிதான துவக்கம் அளித்தது. முதலில் மொர்டசா வேகத்தில் இரண்டு பவுண்டரி அடித்த தவான், ரூபல் ஹொசைன் பந்தில் இரண்டு பவுண்டரி அடித்தார். எதிர்முனையில் ரோகித் சர்மா தன்பங்கிற்கு மொர்டசா சிக்சர் அடித்தார்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்த போது தவான் (28) அவுட்டானார். தொடர்ந்து ரோகித் சர்மாவும் (21) நடையை கட்டினார்.  இதையடுத்து இந்திய அணி 54 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்து தடுமாறியது.

ரகானே அரைசதம்:

பின் வந்த கேப்டன் கோஹ்லி, ரகானே துனணயுடன் விக்கெட் சரிவை தடுத்தார். வங்கதேச பந்துவீச்சை இந்த ஜோடி மிகச்சுலபமாக எதிர்கொண்டது. முதலில் ரஹ்மான், ரசாக் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கோஹ்லி, காஜி பந்தை சிக்சருக்கு அனுப்பினார். எதிர்முனையில் தன்பங்கிற்கு ஒரு சிக்சர், 3 பவுண்டரிகள் விளாசி ரகானே, ஒருநாள் அரங்கில் தனது 4வது அரைசதத்தை எட்டினார்.

அசத்தல் ஜோடி:

தொடர்ந்து ரன்வேட்டை நடத்திய கோஹ்லி, மோமினுல் பந்தில் 2 பவுண்டரி, நயீம் இஸ்லாம் பந்தில் ஒரு பவுண்டரி விரட்டினார். பின் மொர்டசா பந்தில் பவுண்டரி விளாசிய இவர், ஒருநாள் அரங்கில் தனது 19வது சதத்தை பூர்த்தி செய்தார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 214 ரன்கள் சேர்த்த போது, விராத் கோஹ்லி (136) போல்டானார்.

ரகானேவும் 73 ரன்னில் ‘பெவிலியன்’ திரும்பினார். பின் வந்த அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் கைகொடுக்க, இந்திய அணி, 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராயுடு (10), கார்த்திக் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4 புள்ளிகள் பெற்றது.

ஆட்டநாயகன் விருதை கோஹ்லி தட்டிச் சென்றார். வரும் 28ல் பதுல்லாவில் நடக்கும் லீக் போட்டியில் இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது.

தந்தைக்கு நன்றி

ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி கூறுகையில்,‘‘அணியின் செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. ஒவ்வொரு முறை சாதிக்கும் போது மறைந்த எனது தந்தைக்கு நன்றி தெரிவிப்பேன். நான் இந்த அளவுக்கு வளர்ச்சி காண, பெரும் பாடுபட்டார்,’’என்றார்.

‘விரட்டு’ மன்னன்

கேப்டன் பொறுப்பு தனது பேட்டிங்கை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை நிரூபித்தார் விராத் கோஹ்லி. வழக்கம் போல் ‘சேசிங்’ செய்வதில் திறமை காட்டிய இவர், ஒருநாள் அரங்கில் 19வது சதம் அடித்தார். இதில் 17 சதங்கள் அடித்த போது இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

* கேப்டனாக தனது 3வது சதத்தை எட்டிய கோஹ்லி,  வங்கதேச அணிக்கு எதிராக 3வது சதம் விளாசினார்.

* ஒருநாள் அரங்கில் இந்த ஆண்டில் இவர் அடிக்கும் 2வது சதம்.

* ‘சேசிங்கில்’ கோஹ்லி அடிக்கும் 13வது சதம் இது.

ஒரே ஆண்டில் 22

வங்கதேசத்தின் ரஹிம், அனாமுல் ஹக் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்தது. இது கடந்த ஒரு ஆண்டில் (34 ஒருநாள் போட்டிகள்) இந்தியாவுக்கு எதிராக அடிக்கப்படும் 22வது 100 ரன்கள் ‘பார்ட்னர்ஷிப்’.

பழிதீர்த்தது

கடந்த 2012ல் ஆசிய கோப்பை தொடரில் வங்கதேசத்திடம் சந்தித்த தோல்விக்கு நேற்று இந்தியா பழிதீர்த்தது.

மைதானம் ‘வெறிச்’

சொந்த மண்ணில் வங்கதேச அணி விளையாடிய போதும், போட்டி நடந்த பதுல்லா மைதானத்தின் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன. மொத்தமுள்ள 17,000 இருக்கையில் 7,000க்கும் குறைவான ரசிகர்கள் இருந்தனர்.

நரைனாக மாறிய அஷ்வின்....

இந்தியாவின் அஷ்வின், தனது பவுலிங் முறையை வித்தியாசமாக மாற்றினார். வெஸ்ட் இண்டீசின் சுழல் மாயாவி சுனில் நரைன் மாதிரி பந்துவீசினார்.

‘ஆபத்தான’ ஆரோன்

நேற்றைய போட்டியின் 39வது ஓவரின் கடைசி பந்தை ஆபத்தான ‘பீமர்’(பவுன்ஸ் ஆகாமல் பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேல் வீசுவது) முறையில் வீசினார் இந்தியாவின் வருண் ஆரோன். இது, வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிமின் நெஞ்சு பகுதியில் பலமாக தாக்க, அப்படியே சுருண்டு விழுந்தார். சிறிது நேர சிகிச்சைக்கு பின் தொடர்ந்து பேட் செய்தார்.

இப்போட்டியில் இரு முறை ‘பீமர்’ வீசியதால் கிரிக்கெட் விதிமுறைப்படி தொடர்ந்து பந்துவீச ஆரோனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எஞ்சிய ஒரு பந்தை விராத் கோஹ்லி வீசினார்.

* நேற்று 74 ரன்கள் வாரி வழங்கிய ஆரோன், வங்கதேச அணிக்கு எதிராக அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார். இதற்கு முன் யு.ஏ.இ., பவுலர் குர்ரம் கான், அதிகபட்சமாக 78 ரன்கள் வழங்கினார்.

வீணான ‘பிரீ–ஹிட்’

போட்டியின் 7வது ஓவரின் 5வது பந்தை வங்கதேச வீரர் ரூபல் ஹொசைன் ‘நோ–பாலாக’ வீசினார். இதையடுத்து ‘பிரீ–ஹிட்’ அறிவிக்கப்பட்டது. இந்த பந்தை ரூபல் ஹொசைன் ‘யார்க்கராக’ வீச, ஷிகர் தவான் போல்டானார். இதையடுத்து ‘பிரீ–ஹிட்’ வீணானது.

இரண்டாவது வீரர்

நேற்று தனது இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்த வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், ஒருநாள் அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இதற்கு முன் கடந்த 2011ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ரஹிம், 101 ரன்கள் எடுத்திருந்தார்.

* முன்னாள் வங்கதேச வீரர் அலோக் கபாலிக்கு (115 ரன்கள், 2008) பின் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்த இரண்டாவது வங்கதேச வீரர் என்ற பெருமை பெற்றார் ரஹிம்.

* நேற்று 117 ரன்கள் எடுத்த ரஹிம், இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வங்கதேச வீரர் என்ற பெருமை பெற்றார்.

* தவிர, இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்த முதல் வங்கதேச கேப்டன் ஆனார் முஷ்பிகுர் ரஹிம். இதற்கு முன் கடந்த 2010ல் தாகாவில் நடந்த போட்டியில் கேப்டனாக இருந்த சாகிப் அல் ஹாசன், 85 ரன்கள் எடுத்திருந்தார்.

* சர்வதேச அரங்கில் எல்லா அணிகளுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வங்கதேச கேப்டன் என்ற பெருமை பெற்றார் ரஹிம். இதற்குமுன் கடந்த 2008ல் யு.ஏ.இ., அணிக்கு எதிராக முகமது அஷ்ரபுல் 109 ரன்கள் எடுத்தார்.

5வது சிறந்த ஸ்கோர்

நேற்று 279 ரன்கள் எடுத்த, வங்கதேச அணி, ஒருநாள் அரங்கில் இந்தியாவுக்கு எதிராக தனது 5வது சிறந்த ஸ்கோரை பதிவு செய்தது.

சிறந்த ஜோடி

நேற்று வங்கதேச அணியின் முஷ்பிகுர் ரஹிம், அனாமுல் ஹக் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற புதிய சாதனை படைத்தது.

* இதற்கு முன் 2012ல் தமிம் இக்பால், ஜக்குருல் இஸ்லாம் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.

 

http://sports.dinamalar.com/2014/02/1393435024/kohliindiacricket.html

 

Link to comment
Share on other sites

உமர் அக்மல் சதம்: பாக்., வெற்றி
பிப்ரவரி 26, 2014.

 

பதுல்லா: ஆப்கானிஸ்தான் அணி்க்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் உமர் அக்மல் சதம் கடந்து கைகொடுக்க, பாகிஸ்தான் அணி 72 ரன்கள் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசத்தில் 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்றைய லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி,  ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணிக்கு ஷார்ஜெல் கான் (25) நிலைக்கவில்லை. ஷெகாதத் அரை (50) சதம் எட்டினார். ஹபீஸ் (10), மசூத் (13) விரைவில் வெளியேற, கேப்டன் மிஸ்பா டக்–அவுட் ஆனார். அதிரடி காட்டிய உமர் அக்மல் சதம் விளாசினார். பின் வந்தவர்கள் சொதப்ப, பாகிஸ்தான் அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்தது. உமர் அக்மல் (102),  அஜ்மல் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு முகமது (9) ஏமாற்றினார். ஜாத்ரென் (44), அஸ்கார் (40), நவ்ரோஷ் (35) நம்பிக்கை தந்தனர். மற்றவர்கள் சோபிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் அணி 47.2 ஓவரில், 176 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

http://sports.dinamalar.com/2014/02/1393435129/MisbahulHaqpakistan.html

 

Link to comment
Share on other sites

6ஓட்டங்களால் 6ஆவது சதத்தை தவற விட்டார் தவான்: 265 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா
 

 

ஆசிய கிண்ணத் தொடரில் இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 265 ஓட்டங்களை இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ள 12–வது ஆசிய கிண்ணத் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது. இதில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் போட்டியின் 4அவது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) பாதுல்லா அரங்கில் நடைபெறுகின்ற  லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இலங்கையும் இந்தியாவும் மோதுகின்றன.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா வழமை போன்று 13 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார். மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தவானுடன் கோலி கைகோர்த்தார். தவான் நிதானமாக துடுப்பெடுத்தாடி கோலி சற்று அதிரடியாக துடுப்பெடுத்தாடினார்.

இருவரும் இணைப்பாட்டமாக 97 ஓட்டங்களை பெற்றிருந்த போது கோலி அஜந்த மெண்டிஸ் பந்து வீச்சில் 48 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்து அரைச்சதத்தை தவறவிட்டார்.

மறுபுறத்தில் அரைச் சதத்தை கடந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த தவானுடன் இணைந்த ரகானே 18 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார். இதன்பின்னர் தவானும் அஜந்த மெண்டிஸின் பந்து வீச்சில் போல்ட் முறையில் 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 6 ஆவது சசத்தை நழுவ விட்டார்.

இதன்பின்னர் களமிறங்கிய தினேஸ் கார்த்திக் 4, பினி 0, அஸ்வின் 18, புவனேஸ்குமார் 0 என சொற்ற ஓட்டங்களுடன் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை பொறுத்த வரையில் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். சச்சித்திர சேனாநாயக 3 விக்கெட்டுகளையும் அஜந்த மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

http://www.virakesari.lk/?q=node/361799

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள இந்தியனுக்கு நல்ல அடி...விரத் கோலியின் துள்ளல் கொஞ்ச நேரத்துக்கும் மட்டும் தான்....

Link to comment
Share on other sites

சங்கா அபாரச் சதம்: இந்தியாவை 2 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி

 


ஆசிய கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் குமார் சங்கக்காரவின் அபாரச் சதத்துடன் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ள 12–வது ஆசிய கிண்ணத் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது. இதில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் போட்டியின் 4அவது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) பாதுல்லா அரங்கில் நடைபெறுகின்ற  லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இலங்கையும் இந்தியாவும் மோதுகின்றன.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா வழமை போன்று 13 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார். மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தவானுடன் கோலி கைகோர்த்தார். தவான் நிதானமாக துடுப்பெடுத்தாடி கோலி சற்று அதிரடியாக துடுப்பெடுத்தாடினார்.

இருவரும் இணைப்பாட்டமாக 97 ஓட்டங்களை பெற்றிருந்த போது கோலி அஜந்த மெண்டிஸ் பந்து வீச்சில் 48 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்து அரைச்சதத்தை தவறவிட்டார்.

மறுபுறத்தில் அரைச் சதத்தை கடந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த தவானுடன் இணைந்த ரகானே 18 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார். இதன்பின்னர் தவானும் அஜந்த மெண்டிஸின் பந்து வீச்சில் போல்ட் முறையில் 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 6 ஆவது சசத்தை நழுவ விட்டார்.

இதன்பின்னர் களமிறங்கிய தினேஸ் கார்த்திக் 4, பினி 0, அஸ்வின் 18, புவனேஸ்குமார் 0 என சொற்ற ஓட்டங்களுடன் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை பொறுத்த வரையில் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். சச்சித்திர சேனாநாயக 3 விக்கெட்டுகளையும் அஜந்த மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


இதனையடுத்து 265 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்களை பெற்று த்ரில் வெற்றி பெற்றது.


ஆரம்ப துடுப்பாட்ட வீரராக கமிளங்கிய திரிமனே 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க குசேல் ஜனித் பெரேரா 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.


சாதனை நாயகன் சங்கா மாத்திரம் நிலைத்து ஆடிய போதும் ஏனைய வீரர்களான மஹேல ஜயவர்தன 9, சந்திமால் 0, மெத்தியூஸ் 6, சேனாநாயக 12, சத்துருங்க டி சில்வா 11 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்


இறுதிவரை போராடி சங்கக்கார ஒருநாள் அரங்கில் தனது 18 ஆவது சதத்தை கடந்து 103 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க களத்தில் இருந்த திசர பெரேரா 11, ஜீவன் மெண்டிஸ் 5 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இந்திய அணியின் பந்து வீச்சில் முஹமட் சமி மற்றும்  ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்த இலங்கை அணியின் நட்டசத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

 

http://www.virakesari.lk/?q=node/361803

 

Link to comment
Share on other sites

நவீனன் நீங்கள் இலங்கை கிறிக்கெட் ரீமில இருந்தனீங்களோ??? உங்கட அவதார் சொல்லுது ........

 

ஹாய் அலை ஏன் இந்த கொலைவெறி :lol:  இந்த கிரிக்கெட் திரிக்குள் அலை என்ன எழுதி இருக்கிறா என்று வந்தன் :D

Link to comment
Share on other sites

கள்ள இந்தியனுக்கு நல்ல அடி...விரத் கோலியின் துள்ளல் கொஞ்ச நேரத்துக்கும் மட்டும் தான்....

 

 

ஓ............. அப்ப நீங்கள் சிலோன் ரீமுக்கா சப்போட்

Link to comment
Share on other sites

SL won by two wickets with 4 balls remaining. What a game and well done Sanga....

 

Good that SL had some balls left..!  :D

Link to comment
Share on other sites

தினேஷ் கார்த்திக்  சங்காவின்  ஸ்டம்பை செய்திருந்தால் இந்தியா வென்றிருக்கலாம் .(விக்கெட்டில் முட்டாமல் கையை சுழட்டினார் )

நான் எப்பவும்  லங்காதான். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ............. அப்ப நீங்கள் சிலோன் ரீமுக்கா சப்போட்

 

நான் வெஸ்சீன்டிஸ் டீமுக்கு தான் எப்பவும் ஆதரவு.........கள்ள இந்தியன் கூட மற்ற அணிகள் எதுவானாலும் மற்ற அணிகள் வெல்லனும் என்று நினைக்கிறவன் நான்............

Link to comment
Share on other sites

ஆசியாவில் இந்தியா–பாக்., போர்: இன்று விறுவிறு மோதல்
மார்ச் 01, 2014.

 

மிர்புர்: ஆசிய கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், வெற்றி பெற்றால் மட்டுமே பைனலுக்கான வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இரு அணிகளும் களமிறங்குகின்றன. இதனால், உச்சக்கட்ட பரபரப்பை எதிர்பார்க்கலாம்.

வங்கதேசத்தில், 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மிர்புரில் உள்ள ‘ஷேர்–இ–பங்களா’ மைதானத்தில் இன்று நடக்கும் தொடரின் 6வது லீக் போட்டி, கிரிக்கெட் ‘போர்’ போல கருதப்படுகிறது. இதில் இந்திய அணி, ‘பரம எதிரி’யான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

கட்டாய வெற்றி:

வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் துவக்கிய இந்திய அணி, இலங்கை அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால், பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

வருவாரா புஜாரா:

இலங்கைக்கு எதிரான போட்டியில் 94 ரன்கள் எடுத்து எழுச்சி கண்ட ஷிகர் தவான், இன்றும் பொறுப்பாக விளையாட வேண்டும். மற்றொரு துவக்க வீரர் ரோகித் சர்மா தொடர்ந்து ஏமாற்றுகிறார். இவருக்கு பதிலாக புஜாரா களமிறங்க வாய்ப்பு உண்டு. கேப்டன் விராத் கோஹ்லி நல்ல ‘பார்மில்’ இருப்பது பேட்டிங்கில் பலம் சேர்க்கிறது.

ரெகுலர் கேப்டன் தோனி இல்லாமல், இந்திய அணியின் ‘மிடில்–ஆர்டர்’ பலவீனமாக உள்ளது. ரகானே ஓரளவு ஆறுதல் தருகிறார். மற்றபடி அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், ரவிந்திர ஜடேஜா பெரிய அளவில் சோபிக்கவில்லை. இவர்கள் இன்று எழுச்சி பெற வேண்டும்.

ஷமி நம்பிக்கை:

வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி நம்பிக்கை தருகிறார். இரண்டு போட்டியிலும் சேர்த்து 7 விக்கெட் வீழ்த்திய இவர், ரன் வழங்குவதை கட்டுப்படுத்தினால் நல்லது. புவனேஷ்வர் குமார் எழுச்சி காண வேண்டும். வருண் ஆரோனுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்ட ‘ஆல்–ரவுண்டர்’ ஸ்டூவர்ட் பின்னி, பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சொதப்பினார். எனவே சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக அமித் மிஸ்ரா தேர்வு செய்யப்படலாம். ‘சுழலில்’ அஷ்வின், ஜடேஜா ஆறுதல் தருகின்றனர்.

பீல்டிங் ஏமாற்றம்:

இலங்கைக்கு எதிரான கடந்த போட்டியில் இந்திய வீரர்களின் ‘பீல்டிங்’ படுமோசமாக இருந்தது. ‘கேட்ச்’ மற்றும் ‘ஸ்டெம்பிங்’ வாய்ப்புகளை வீணடித்தனர். பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

வெற்றி முக்கியம்:

இந்தியாவை போல பாகிஸ்தான் அணிக்கும் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது அவசியமானது. இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில், கடைசி நேரத்தில் சொதப்பியதால் தொடரை தோல்வியுடன் துவக்கியது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது போட்டியிலும் ஒரு கட்டத்தில் பின்னடைவை சந்தித்த பாகிஸ்தான் அணி, பின் சுதாரித்துக் கொண்டதால், ‘போனஸ்’ புள்ளியுடன் முதல் வெற்றியை பதிவு செய்தது.

அக்மல் அபாரம்:

பாகிஸ்தான் அணிக்கு ஷார்ஜீல் கான் சிறந்த துவக்கம் கொடுக்க வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அரைசதம் அடித்த அகமது ஷேசாத் இன்றும் கைகொடுக்கலாம். முகமது ஹபீஸ், கேப்டன் மிஸ்பா, நம்பிக்கை அளிக்கின்றனர். கடந்த போட்டியில் சதம் அடித்த உமர் அக்மல், அப்ரிதி ரன் வேட்டையில் இறங்கினால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படலாம்.

குல் அசத்தல்:

வேகப்பந்துவீச்சில் உமர் குல் அசத்துகிறார். இவருக்கு ஜுனைடு கான், அன்வர் அலி உள்ளிட்ட ‘வேகங்கள்’ ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். ‘சுழலில்’ சயீத் அஜ்மல், அப்ரிதி, ஹபீஸ் மூவரும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தரலாம்.

இந்தியாவின் வலுவான பேட்டிங்கிற்கும், பாகிஸ்தானின் பலமான பவுலிங்கிற்கும் இடையிலான மோதலாக இப்போட்டி கருதப்படுகிறது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால், விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது.

இதுவரை இவ்விரு அணிகள்

சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், இந்தியா–பாகிஸ்தான் அணிகள் 125 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 50, பாகிஸ்தான் 71 போட்டியில் வெற்றி பெற்றன. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை.

* ஆசிய கோப்பை வரலாற்றில், இவ்விரு அணிகள் 10 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 5, பாகிஸ்தான் 4 போட்டிகளில் வெற்றி பெற்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

* இன்றைய போட்டி நடக்கவுள்ள மிர்புர் மைதானத்தில், இவ்விரு அணிகள் மூன்று போட்டிகளில் விளையாடின. இந்தியா 2, பாகிஸ்தான் ஒரு போட்டியில் வென்றன. கடைசியாக 2012ல் இங்கு நடந்த ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

370

மிர்புர் மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. கடந்த 2011ல் இங்கு நடந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் குவித்தது.

இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி (361 ரன்கள், எதிர்–வங்கதேசம், 2011) உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு முறை (2008, 2012) 330 ரன்கள் எடுத்த இந்திய அணி, மூன்றாவது இடத்தில் உள்ளது.

185

மிர்புர் மைதானத்தில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் (185*, எதிர்–வங்கதேசம், 2011) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரண்டு இடங்களை இந்தியாவின் விராத் கோஹ்லி (183, எதிர்–பாகிஸ்தான், 2012), சேவக் (175, எதிர்–வங்கதேசம், 2011) உள்ளனர்.

 

 

http://sports.dinamalar.com/2014/03/1393695945/kohliindiacricket.html

Link to comment
Share on other sites

வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்: வங்கதேச அணிக்கு அவமானம்
மார்ச் 01, 2014.

 

பதுல்லா: கிரிக்கெட் அரங்கில் இனி ஆப்கானிஸ்தானை ‘கத்துக்குட்டி’ அணி என்று சொல்ல முடியாது. உள்ளூர் போர் பாதிப்புகளை கடந்து, ஆசிய கோப்பை தொடரில் சாதித்துக் காட்டியது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் வங்கதேசத்தை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக முதல் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.       

வங்கதேசத்தில் 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த 5வது லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

விக்கெட் சரிவு:

ஆப்கானிஸ்தானுக்கு முகமது ஷாஜத் (2), கரீம் சாதிக்(12), நஜிபுல்லா (21), நவ்ராஜ் மங்கள் (24), கேப்டன் நபி (7) ஏமாற்றினர். இதையடுத்து 90 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

அசத்தல் ஜோடி:

பின் ஷென்வாரி, அஸ்கர் ஜோடி அசத்தியது. இவர்கள் 6வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தனர். அஸ்கர் ஒரு நாள் அரங்கில் 4வது அரைசதம் எட்டினார். மறுமுனையில் சென்வரியும் 4வது அரைசதத்தை பதிவு செய்தார். எதிரணி பந்துவீச்சை இருவரும் சிதறடிக்க, கடைசி 10 ஓவரில் மட்டும் 107 ரன்கள் கிடைத்தன. ஷென்வாரி 81 ரன்களில் அவுட்டானார்.

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்தது. அஸ்கர் (90) அவுட்டாகாமல் இருந்தார்.

வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக சன்னி 2 விக்கெட் வீழ்த்தினார்.

சொதப்பல் பேட்டிங்:

பின் களமிறங்கிய வங்கதேச அணியின் ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். அனாமுல் (1), சம்சுர் (0) நிலைக்கவில்லை. முஷ்பிகுர் ரஹிம் 23 ரன்களில் நடையைக் கட்டினார். மோமினுல் ஒரு நாள் அரங்கில் 2வது அரை சதம் (50) கடந்து அவுட்டானார். நாசிர் ஹொசைன் (41), நயீம் இஸ்லாம் (35) போராடினார். ரசாக், சன்னி ‘டக்–அவுட்’ ஆகினர்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஜியார் ரஹ்மான், சிக்சர், பவுண்டரிகளாக பறக்க விட ஆட்டத்தில் சூடு பிடித்தது. இவர் 41 ரன்களில் (22 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) நபி பந்தில் ஆட்டமிழக்க, ஆப்கன் வெற்றி உறுதியானது. ரூபல் ஹொசைன் 17 ரன்களில் கிளம்பினார். வங்கதேச அணி 47.5 ஓவரில் 222 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, தோல்வியடைந்தது.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற வங்கதேச அணி, ஆசிய கோப்பை தொடரில் முதல் முறையாக பங்கேற்கும் ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது அவமானமான விஷயம். அதிலும் சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது, அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்திருக்கும்.

ஆட்ட நாயகன் விருதை ஆப்கானிஸ்தான் அணியின் ஷென்வாரி வென்றார்.

 

box-F_zpsc07b5700.jpg

 

http://sports.dinamalar.com/2014/03/1393696608/nabicricket.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓவ்வொரு அணிக்கும் இன்னும் தலா 2 போட்டிகள் இருக்கின்றன. பலம்வாய்ந்த அணிகளான பாக் மற்றும் இந்திய அணிகளை வீழ்த்தியதன் மூலம் இலங்கை இறுதிப் போட்டியில் நுழைந்து விட்டது என்று சொல்லலாம். ஏனெனில் இலங்கை அணி இனி எதிர்கொள்ளப்போவது பலங்குன்றிய வங்கதேச மற்றும் ஆப்கான் அணிகளை மட்டுமே. இதில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட உறுதியாகிவிடும். இந்திய மற்றும் பாக் அணிகளுகிடையில் நடைபெறும் போட்டியில் வெல்லும் அணியே இறுதிப் போட்டிக்கான மற்றையை அணியாக இருக்கும்.

 

இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாக் அணிகள் மோதும் என எதிர்பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.