Jump to content

வேர்ணன் ஃபிலாண்டர் பந்தை சேதப்படுத்திய காட்சி ஒளிபரப்பப்படுவதை உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்


Recommended Posts

வேர்ணன் ஃபிலாண்டர் பந்தை சேதப்படுத்திய காட்சி ஒளிபரப்பப்படுவதை உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்
2014-07-22 12:04:55

 

தென் ஆபிரிக்க வேகப்பந்துவீச்சாளர் வேர்னன் ஃபிலாண்டர் பந்தை சேதப்படுத்தியமை தொடர்பான வீடியோ காட்சியை, அச்சம்பவம் இடம்பெற்று 48 மணித்தியாலங்களின்பின் ஒளிபரப்பு செய்யப்படுவதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

 
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் 3 ஆம் நாள் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான குறிப்பிட்ட காட்சியை ஒளிபரப்ப வேண்டாம் என ஒளிபரப்பாளர்களான டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு தென் ஆபிரிக்க அணி அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சம்பவம் குறித்து தென் ஆபிரிக்க அணி எவ்வித கருத்தையும் வெளியிட மறுத்துவிட்டது.


தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளன்று ஃபிலாண்டர் தனது விரல்களால்  பந்தை சேதப்படுத்துவதை அவதானிக்க முடிந்தது. இது தொடர்பான காட்சி டெஸ்ட் போட்டியின் கடைசிக் கட்டத்தில் ஒளிபரப்பப்பட்டது.

பந்தின் சொரசொரப்பான பகுதியை குறைந்தது இரண்டு தடவைகள் ஃபிலாண்டர் தனது நகத்தால் சுரண்டுவதை அவதானிக்க முடிந்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன வட்டாரம் குறிப்பிட்டது.


இந்தக் காட்சியை டென் ஸ்போர்ட்ஸ் தயாரிப்புப் பிரிவு அணியினரும் போட்டி மத்தியஸ்தர்களுமே பார்வையிட்டதாக தெரியவருகின்றது.

இந்தக் காட்சியை போட்டியின் கடைசி நாளன்று 69ஆவது ஓவர் முடிவில் தாக சாந்தி நேரத்;திற்குப் பின்னர் டென் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு செய்தது. அடுத்த 20ஆவது நிமிடத்தில் மைதானத்தில் கடமையில் இருந்த டென் ஸ்போர்ட்ஸ் உற்பத்தி அணியினரை அணுகிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரி ஒருவர், இந்தக் காட்சியை ஒளிப்பரப்புமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.


எனினும் தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனத்தினரும் தென் ஆபிரிக்க அணி முகாமைத்துவத்தினரும் காட்சி ஒளிபரப்பவேண்டாம் என கொடுத்த அழுத்தங்களின் காரணமாக இரண்டு தினங்கள் கழித்தே இந்தக் காட்சி ஒளிப்பரப்பானது. 

இந்த காட்சி ஒளிபரப்பப்பட்டால் தென் ஆபிரிக்க அணிக்கு அபகீர்த்தி ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகின்றது.


ஃபிலாண்டர் பந்தை சேதப்படுத்தியமை தொடர்பான காட்சி தொலைக்காட்சி கமெராக்களால் படம்பிடிக்கப்பட்டன. ஆனால், ஒளிபரப்பாமல் விட்ட டென் ஸ்போர்ட்ஸ் குழுவினர்;, அது குறித்து போட்டி பொது மத்தியஸ்தர் ஜெஃவ் குரோவின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதனை அடுத்;து  அக் காட்சியை தேநீர் இடைவேளையின்போது பார்வையிட்ட போட்டி பொது மத்தியஸ்தர் போட்டி முடிவடைந்த பின்னர் மீண்டும் பார்வையிட்டு ஃபிலாண்டர் குற்றவாளி என கண்டு அவருக்கு 75 வீத அபராதம் விதித்தார்.

எவ்வாறாயினும் குறிப்பிட்ட வீடியோ பதிவுக் காட்சி ஒளிப்பரப்படவேயில்லை.


'இந்த சம்பவம் தொடர்பான காட்சியை ஒளிப்பரப்பினால் அது தங்களுக்கு மனக் கஷ்டத்தைக் கொடுக்கும் என தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனத்தின் பெரும் புள்ளிகள் உறுதிபட கூறினர்' என சம்பவம் தொடர்பாக நன்கு அறிந்திருந்த உள்ளுர் வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

இந்த சம்பவத்தினால் இலங்கை அணி ஏமாற்றப்பட்டதா எனக் கேட்கப்பட்டபோது, மெத்யூஸ் சாதுரியமாக பதிலளித்தார்.

'இது விதிகளுக்கு முரணானது. பந்தை சேதப்படுத்த முடியாது. எனினும் அது குறித்து மத்தியஸ்தர்களே தீர்மானிக்கவேண்டும். இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதை அவர்கள் உறுதி செய்யவேண்டும்' என்றார்.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6265#sthash.aqQgqqYs.dpuf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.