Jump to content

ஜெர்மனி கேப்டன் ஓய்வு


Recommended Posts

ஜெர்மனி கேப்டன் ஓய்வு

ஜூலை 18, 2014.

பெர்லின்: ஜெர்மனி கால்பந்து அணி கேப்டன் பிலிப் லாம், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலில், ஜெர்மனி அணி 1–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இத்தொடரில் ஜெர்மனி அணியின் கேப்டனாக பிலிப் லாம், 30, செயல்பட்டார்.

இந்நிலையில் நேற்று திடீரென இவர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக, இவரது ஏஜென்ட் ரோமன் கிரில் தெரிவித்தார். சிறந்த தற்காப்பு ஆட்டக்காரரான இவர், ஜெர்மனிக்காக இதுவரை 113 போட்டிகளில் பங்கேற்று 5 கோல் அடித்துள்ளார். பேயர்ன் முனிக் அணியுடனான இவரது ஒப்பந்தம் வரும் 2018ம் ஆண்டு வரை உள்ளதால், இந்த அணிக்காக தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடுவார்.

பிலிப் லாம் கூறுகையில், ‘‘சர்வதேச போட்டிகளில் இருந்து விடை பெறும் முடிவை, பிரேசில் உலக கோப்பை தொடரின் போது எடுத்தேன். எனவே, இது எனது கடைசி தொடர். சரியான நேரத்தில் நல்ல முடிவு எடுத்துள்ளேன்,’’ என்றார்.

http://sports.dinamalar.com/2014/07/1405704036/PhilipLahmsoccer.html

Link to comment
Share on other sites

நன்றி உங்கள் இணைப்புக்கு நவீனன் அண்ணா!!  மற்ற திரிகளையும் எட்டிப் பாருங்கோ  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.