Jump to content

என்னை ஒரு தமிழனாக உணரவைப்பது ‘பிரபாகரன்” என்ற பெயர்தான்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

prabakaran1-100x100.png

அண்மையில் ஸ்கன்டிநேவிய நாடொன்றுக்கு ஒரு பேராசிரியரை சந்திக்க சென்றிருந்தேன். அவர் தென்னாபிரிக்க தமிழர் ஆனால் தமிழ் சூழலுக்கு அப்பால் தனது வாழ்வை கட்டமைத்திருப்பவர்.

என்னை அவரிடம் அனுப்பிய நண்பர் “அவர் வன்முறை போராட்டங்களுக்கு எதிரானவர், எமது போராட்டம், புலிகள் தொடர்பாக ஏதாவது பேசி போன காரியத்தை கெடுத்து விடாதே” என்று எச்சரித்திருந்தார்.

நானும் நமக்கு ஏன் வீண் சோலி என்று முன்னெச்சரிக்கையுடனேயே அவருடன் உரையாடினேன். பல்கலைக்கழகத்தில்தான் சந்திப்பு நடந்தது. நான் விடைபெற ஆயத்தமாகும்போது வீட்டுக்கு உணவருந்த வருமாறு வற்புறுத்தி அழைத்தார். சென்றேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

என்னை சிரித்தபடி தலைவர் பிரபாகரனின் படம் வரவேற்றது. அதிர்ந்து போய் நண்பர் அவரைப்பற்றி சொன்ன கதையையும் கூறி, இது எப்படி உங்கள் வீட்டில் என்று கேட்டேன்.

அவர் கூறியது இதுதான், “நான் விரும்புகிறேனோ இல்லையோ தமிழர்களுக்கு தலைவர் அவர்தான். அவரது போராட்ட முறைகளோடு நான் முரண்படலாம் அதற்காக அவரது தலைமைத்துவத்தை நாம் எப்படி நிராகரிக்கமுடியும். கடல்கடந்து தேசம் கடந்து பல்லின பல் கலாச்சார, வேற்று மொழிச் சூழலில் எனது அறிவுஜீவித்தனத்தையும் புலமையையும் தாண்டி என்னை ஒரு தமிழனாக உணரவைப்பது ‘பிரபாகரன்” என்ற பெயர்தான்.

அதற்காகவே இந்த படத்தை இங்கு மாட்டியிருக்கிறேன். எனது பிள்ளைகளும் அவர்களது பூர்வீகத்தை மறக்ககூடாதல்லவா.. இந்த ஒற்றைப்படம் அவர்களுக்கு தமது பூர்வீகத்தை ஞாபகப்படுத்திகொண்டே இருக்கும்” என்றார்.

முகநூலில் எழுத்தாளர் பரணி கிருஷ்ணரஜனி

http://www.saritham.com/?p=56345

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த பெயர் இல்லாவிட்டால் தமிழர் என்று ஒரு இனம் இருப்பதே உலகத்திற்கு தெரிந்திருக்காது.

எனது உளவு துறை நண்பர் கூறியது போல், " அந்த ஆளை பிடிச்சால்  வருசத்திற்கு மில்லியன் பவுண்ட்ஸ் குடுத்து எங்கட மிலிடரி பேராசிரியர் ஆக்கிடுவோம்" 

Link to comment
Share on other sites

"கடல்கடந்து தேசம் கடந்து பல்லின பல் கலாச்சார, வேற்று மொழிச் சூழலில் எனது அறிவுஜீவித்தனத்தையும் புலமையையும் தாண்டி என்னை ஒரு தமிழனாக உணரவைப்பது ‘பிரபாகரன்” என்ற பெயர்தான்.

அதற்காகவே இந்த படத்தை இங்கு மாட்டியிருக்கிறேன். எனது பிள்ளைகளும் அவர்களது பூர்வீகத்தை மறக்ககூடாதல்லவா.. இந்த ஒற்றைப்படம் அவர்களுக்கு தமது பூர்வீகத்தை ஞாபகப்படுத்திகொண்டே இருக்கும்” என்றார்.

இவை விலை மதிக்கமுடியாத பொன்னான வார்த்தைகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகவரி அற்று உலகம் பூராவும் இருந்த ஒரு இனத்துக்கு முகவரி தேடிக்கொடுத்த மாபெரும் தலைவன் எங்கள் அண்ணன் பிரபாகரன் என்று கூறினால் மிகையாகாது.

பிரபாகரன் என்ற பெயரினாலேயே தமிழன் நான் பெருமை கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் என்றொரு இனம் உண்டு. தமிழன் என்றால் முதலில் மற்றையவர்களுக்கு ஞாபகத்திற்கு வருவது தலைவர் பிரபாகரன். உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக நின்று புலிகளை எதிர்த்து ஒடுக்கி இருந்தாலும் பிரபாகரன் என்று சொன்னால் பயம் கலந்த மதிப்பு இருக்கின்றது. வெல்லமுடியாத தலைவனும் இன்றைய தமிழினத்தின் தலைவனும் அவர்தான்.

உலகத்தில் எந்தத்தலைவர்களும் செய்யாத செயல்களைப் புரிநது சாதனை படைத்த தலைவன்

போhர்க்களத்தில் இறுதிவரை இருந்தது

போராளிகளுடன் போராளியாய் இருந்தது.

எடுத்த கொள்கைளை இறுதிவரை விற்காமல் கொள்கைக்காக நின்றது.

தன்னுடைய குடும்பத்தையே போராட்டத்தில் அர்ப்பணித்தது

ஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்து முப்படைகளையும் கொண்ட அணியாகி வாழும் காலத்தில் போருடன் நாட்டின் அரசியல் அமைப்பையும் கட்டி எழுப்பியது.

உலகம் போர்விதிகளை மீறி புலிகளை ஒடுக்கியது. தலைவர் பிரபாகரனின் ஆளுமையின் மேல் கொண்ட பொறாமை தான் காரணம்.

Link to comment
Share on other sites

தாம் தேசியவாதிகள் என்றும்,சிந்தனைகர்த்தாக்கள்,என்றும் எம் தேசியத்தை சிதைக்கும் நோக்கோடு பழத்தில் ஊசி ஏத்துவது போல்.நஞ்சுகலந்த கருத்துக்களை எம் சமுகத்தின் முன் வைக்கும் கோடாரிக்காம்புகள்.அனைவரும் புரிந்து கொள்ளவேண்டிய விடயம் ஒன்று.எம்மை இனி யாரும் குழப்பமுடியாது.ஏனனில் இன்று நடக்கும், இந்த அரசியல்,கருத்து யுத்தத்தை கூட நாம் ஆளுமையுடன் எதிர்கொண்டு,வெற்றிநடை போடுகிறோம் என்றால் அது எமது தேசியத்தலைவரின் வழிகாட்டப்பட்ட. வழிகாட்டிக்கொண்டிருக்கிற.இந்த பொன்னானகாலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற ஓர் காரணம்தான் என்றால் அது மிகையாகாது. இந்தக்காலத்தில்தான் எமக்கு விடிவு கிடைப்பது உறுதியாகிவிட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன்

ஒரு சரித்திரம்

அவர் வாழ் நாள்

இனி வருவோருக்கெல்லாம் வழி காட்டி

கொள்கைக்காக வாழ்வது

செய் அல்லது செத்துமடி என்பதன் ஊற்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.