Jump to content

"சாத்திரம்" எனும் எல்லாம் வல்லவரும் நம்மவரும்..!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

OxfordSt_0802.JPG

என்ன கமலரஜனி..... லண்டனில.. ஏ/எல் சோதின மறுமொழி வந்திட்டுதாம்.. மகனுக்கு எப்படி... உங்க உள்ள பிரபல்யமான ஜூவலரி கடை முதலாளிட மகளுக்கு கேம்பிரிஜ் மெடிசின் கிடைச்சிருக்காம்.. கேள்விப்பட்டினியே..??!

ஓம் சுமதியக்கா. கேள்விப்பட்டனான். அதுக்குள்ள அந்தச் செய்தி யாழ்ப்பாணம் வரை வந்துட்டுதே. என்ர பொடியனும்.. நல்லா செய்ததெண்டு சொன்னான்.. ஆனால் ஒன்றிரண்டு பாடத்திற்கு எதிர்பார்த்ததை விட குறைவாத்தான் வந்திருக்குது. மற்றப் பாடங்களுக்கு நல்லா எடுத்திருக்கிறான். றீசிட் பண்ணப்போறன் எண்டான்..! இங்க தானே எத்தினை தரமும் றீசிட் பண்ணலாம். ஊர் போல இல்ல..! அதுபோக அக்கா ஒன்று சொல்லனும்.. இங்க லண்டனுக்கு வந்தப்பிறகு என்ர பெயர் கமலரஜனி இல்லையக்கா. சுருக்கி கமல்.. என்று வைச்சிருக்கிறன். எனி அப்படியே கூப்பிடுங்கோ. கூப்பிடச் சுகமெல்லே.

அட லண்டனுக்குப் போனதும்.. பெயரையும் மாத்திப் போட்டியே. பறுவாயில்ல..! லண்டன் நாகரிகம் உனக்கும் நல்லாப் பிடிச்சிருக்குப் போல.

இல்ல.... அக்கா. இங்க ஆக்கள் கூப்பிட சுகம் என்று தான். நீண்டுப் பெயர் என்றால் கூப்பிடுறது கஸ்டமெல்லோ..! அதுவும் இல்லாமல்.. அதென்ன.. சினிமாக்காரங்கட பெயரில தூக்கி கலந்தடிச்சு எனக்கு வைச்சு விட்டிருக்கினம்.. என்ற வெறுப்பும் தானக்கா.

சரி சரி.. அதை விடு.. இப்ப பொடிக்கு யுனீவேர்சிட்டி கிடைக்குமோ.. இல்ல...

இன்னும் சரியா தெரியல்லயக்கா. இன்னும் ஒரு கட்டம் சோதனைகள் இருக்குது. அது முடியத்தான் தெரியும் அக்கா. நேற்றும் ஒரே சண்டை. செய்தன் செய்தன் என்டா.. என்ன எல்லாம் குறைஞ்சு வந்திருக்குது... என்று பேசிப் போட்டன்.வெள்ள, கறுப்பெண்டு.. ரியூசனுகளுக்கும் காசைக் கொட்டிப் போறான். நான் அவனைப் பேச அவன் பதிலுக்கு படிச்சு என்னத்தைக் காணப் போறன்... அம்மா நீங்கள் படிச்சுப் போட்டோ லண்டனுக்கு வந்தனீங்கள் என்று கேட்கிறான்..! இந்தக் காலத்தில பிள்ளையளப் பெத்து வளர்க்கிறது சரியான கஸ்டம் அக்கா. அதுவும் வெளிநாட்டில இன்னும் சரியான கஸ்டம். பொம்பிளப் பிள்ளையள் என்றால் சொல்லி வேலை இல்ல. நாய் மொச்ச கணக்கா அதுகளின்ர வீட்டை மொய்ப்பாங்கள் பொடியங்கள்..! ஏதோ எங்களால இயன்ற மட்டும் சமாளிக்கிறது தான். இல்லது வீட்டை விட்டு ஓடிடுங்களே..!

உன்ர பொடியின்ர பலன் என்னவாம். சாத்திரம் கேட்டுப் பாத்தனியே..! இங்க சாத்திரம் கேட்டுச் சொல்லவே. நல்ல ஒரு சாத்திரி இந்தியாவில இருந்து வந்திருக்குது. போர் முடிஞ்சது தான் தாமதம்.. உந்த மலையாள.. மாந்திரிகள் எல்லாம் இப்ப யாழ்ப்பாணத்துக்க தான் நிற்குதுகள்.

அதையேன் அக்கா பேசுவான். இங்க லண்டனிலும் அதுகளிற்கு குறைவில்ல. வீதி வீதியா நின்று ஒரு துண்டையும் எழுதி வைச்சுக் கொண்டு போற வாற ஆக்களட்ட நீட்டிக் கொண்டு நிற்குதுகள். பொம்பிளையளையும் கூட்டிக் கொண்டு வந்து எப்படித்தான் உழைக்குதுகளோ.. தெரியல்ல..??! முழத்துக்கு முழம் நிற்குதுகள். இப்ப அங்கையும் வந்திட்டுதுகளே..??!

ஓமடியப்பா. இங்க சனம்.. படையெடுக்குது. வெளிநாட்டுக்கு போற பலன்.. படிப்பு.. பதவி.. காதல்.. குழந்தைப் பாக்கியம்.. வீடு.. வாகனம்.. வசியம்.. பில்லி.. சூனியம்.. என்று அவங்களும் சொல்லாத குறிகள் இல்ல..!

எங்கட சனங்கள் உதுகளை இன்னும் நம்புதுகளே அக்கா..?!

நீ வேற.. எங்கட பவளம் அன்ரி.. வீட்டுக்கு யாரோ சூனியம் வைச்சிட்டாங்கள் என்று சொல்லி.. அவான்ர மகன் கனடாவில இருந்து காசனுப்ப.. இரண்டு இலட்சம் செலவழிச்சு.. கழிப்பு கழிச்சவா எண்டால் பாரன். அதுவும் இல்லாமல் பர்வதம் பெத்தாச்சி.. பேத்திக்கு யாரோ லண்டனில வசியம் வைச்சிட்டாங்களாம் என்று அதை தேசிக்காய் வைச்சு வெட்ட வந்து நிண்டா..!

ஆஆ.. நீங்கள் உதுகளைச் சொல்லத்தான் எனக்கும் நினைவு வருகுது. இவன் என்ர பொடிக்கும்.. படிப்பை இடையில குழப்புவான் என்று முந்தி இந்தியா போன மூட்டம் கேட்க ஒரு சாத்திரி சொன்னவன். இவன்ர கதையை பார்த்தால் குழப்புவான் போலக் கிடக்கு. எதுக்கும் அவன்ர குறிப்பை ஈமெயிலில அனுப்பி விடுறன் பார்த்துச் சொல்லுறீங்களே அக்கா.

அதுக்கென்னடி. பார்த்துச் சொல்லுறன். அதுசரி.. உன்ர மகனுக்கு கேர்ள் பிரண்ட் அதுஇதெண்டு இருக்கே. அதனால சிலவேளை படிப்பில கவனம் குறைச்சிருக்கலாம் இல்லையே..!

அப்படி ஒரு சிலமனும் இல்ல. முந்தி ஒன்றோட கதைச்சுக் கொண்டு திரிஞ்வன் தான். அது வேற்று மதம்.. அம்மம்மா பேசுவா என்று சொல்லி முறிச்சு விட்டிட்டன். அவன் அம்மம்மா சொன்னால் கேட்ப்பான். அவாக்கு கலை வாறது தானே. ஒருக்கா இஞ்ச லண்டனுக்கு வந்து நிற்கேக்க கலை வந்திட்டுது. அப்ப அவா இவனுக்கு கலைல விபூதி அடிச்சுப் போட்டு சொன்னவா.. அம்மா அப்பா சொல் கேட்டு நட என்று. அதுக்குப் பிறகு அம்மம்மா என்றால் சரியான பயம். சாமி பக்தியும்..!

அதுதான் நல்லது. அப்படி வெருட்டி வைச்சால் தான் உந்தப் பிள்ளையள் கொஞ்சம் என்றாலும் அடக்க ஒடுக்கமா இருக்குங்கள். என்ன பாடுபட்டு என்றாலும் அவன யுனிவேர்சிட்டிக்கு அனுப்பிப் போடு. இல்ல இஞ்ச நான் தலைகாட்ட முடியாது. உன்ர ஒண்டவிட்ட தங்கச்சிட மகனுக்கு லண்டனில யுனிவேர்சிட்டி கிடைக்கல்லையாம். ரவுடியா சுத்துதாம் என்று நக்கலும் நளினமும் கூடிடும்..!

எனக்கு தெரியும் தானேக்கா. உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாதெண்டு. என்னால இயன்ற மட்டும் முயற்சிப்பன். போறதும் விடுறதும் பிள்ளைகளின்ர பலனிலும் இருக்கல்லே அக்கா.

ஓம்.. நீ சொல்லுறதும் சரி தான். எதுக்கும் அவன்ர குறிப்பை மறக்காமல் அனுப்பி விடு. நான் சாத்திரியிட்ட கொடுத்து.. பார்த்துச் சொல்லுறன். சரியே.

சரியக்கா. உங்கட உதவிக்கு நன்றி. இப்பவே அனுப்பி விடுறன். அந்த பழைய ஈமெயில் தானே.. இப்பவும் பாவிக்கிறியள்.

ஓம்.. அதுதான்ரியப்பா இப்பவும் பாவிக்கிறன்.

சரி.. சரி.. மகன் ஸ்கூலால வந்திட்டான். சாப்பாடு போட்டு தீத்தி விடனும்.

என்ன.. அவனுக்கு இப்ப தானே பெரிய கோல் எடுத்து 18 வது பிறந்த நாள் கொண்டாடினா. இன்னும்.. சாப்பாடு தீத்தி விடுறியோ..??!

அதையேன் அக்கா கேட்கிறீங்கள்.. அவனுக்கு படிக்கிறதும்.. லப் டொப்பில படம் பாக்கிறதும்.. ஐபொட்டில பாட்டுக் கேட்கிறதும்.. கேம் விளையாடிறதும்.. கால்பந்து விளையாடுறதும் தான் தெரியும். ஒரு வீட்டு வேலை செய்யமாட்டான். உடுப்பை வாசிங் மிசினில போடக் கூடத் தெரியாது. கசங்கின உடுப்பை அயன் பண்ணத் தெரியாது. சாப்பாடும் போட்டுக் கொடுத்தால் தான் சாப்பிடுவான். சில நேரம் தீத்தி விடனும். இல்ல தூக்கி வீசிட்டு.. மக்டொனால்ட் போறன் என்று போயிடுவான். சமைச்ச சோறு கறி கிடந்து இழுவிண்டும்..!

நல்ல பழக்கம் பழக்கி வைச்சிருக்கிறா. உவன் எப்படி வெளில போய் பிழைக்கப் போறானோ..??!

அவனுக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்குது. யுனிவேர்சிட்டிக்கு போனால் எல்லாம் பழகிடுவான். எதுக்கும் யுனிவேர்சிட்டிக்கு போற பலன் இருக்கோ என்று நீங்கள் ஒருக்கா சாத்திரிட்ட கொடுத்து மறக்காமல் பார்த்துச் சொல்லுங்கோ. அவன்ர வாழ்க்கையே யுனிவேர்சிட்டில தான் இருக்குது. அது சாத்திரியின்ர வாக்கில தான் தங்கி இருக்குதக்கா.

சரி சரி..ஒன்றுக்கும் யோசிக்காத. எல்லாத்தையும் கடவுள் மேல பாரமாப் போட்டிட்டு... சாத்திரியை நம்பு.. அப்புறம் பார்.. அவன் எல்லாம் பாஸாகி.. யுனிவேர்சிட்டி போய்.. பட்டமும் எடுத்திடுவான்.

சரி அக்கா. நீங்கள் சொல்லுற படியே செய்யுறன். எப்படியாவது அவனை யுனிவேர்சிட்டிக்கு அனுப்பிட்டன் என்றால் அது போதும் அக்கா.

வேற என்ன.. அப்ப நான் வைக்கிறன். இங்கையும் பொழுது இரவு 8 ஆச்சுது. அவர் வெளில போனவர் வரப் போறார். புட்டுக் கொத்திப் போட வேணும்.

சரி அக்கா.. நானும் அவனுக்கு சாப்பாடு போட்டுக் கொடுக்கப் போறன். வைக்கிறன் அக்கா.

சரிடி. பிறகு கதைக்கிறன். பாய்.

பாய் அக்கா.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கள உறவுகளினதும் மோகன் அண்ணாவினதும் அபிப்பிராயப்படி கதையின் தலைப்பில் தவறான புரிதலுக்கு இடமில்லாத வகையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!

*****************************************************************************************************************************************************

நன்றி.

நட்புடன்

நெடுக்ஸ்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு....தலைப்பை மாற்ற முயற்சியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சுமதியக்கா. கேள்விப்பட்டனான். அதுக்குள்ள அந்தச் செய்தி யாழ்ப்பாணம் வரை வந்துட்டுதே. என்ர பொடியனும்.. நல்லா செய்ததெண்டு சொன்னான்.. ஆனால் ஒன்றிரண்டு பாடத்திற்கு எதிர்பார்த்ததை விட குறைவாத்தான் வந்திருக்குது. மற்றப் பாடங்களுக்கு நல்லா எடுத்திருக்கிறான். றீசிட் பண்ணப்போறன் எண்டான்..! இங்க தானே எத்தினை தரமும் றீசிட் பண்ணலாம். ஊர் போல இல்ல..! அதுபோக அக்கா ஒன்று சொல்லனும்.. இங்க லண்டனுக்கு வந்தப்பிறகு என்ர பெயர் கமலரஜனி இல்லையக்கா. சுருக்கி கமல்.. என்று வைச்சிருக்கிறன். எனி அப்படியே கூப்பிடுங்கோ. கூப்பிடச் சுகமெல்லே.

நெடுக்கர், கதை நல்லாயிருக்கு!

அதைவிடக் கமலரஜனி அக்காட ஆங்கிலம், படு திறம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு....தலைப்பை மாற்ற முயற்சியுங்கள்.

தலைப்பு நிஜ சாத்திரியை குறிக்கிறது கு.சாண்ணா. நிஜ சாத்திரிகளை எல்லாம் வல்லவராக நினைக்கிற எமது சனத்தின்ர மூட நம்பிக்கைகளின் மையமே கதை..! அவையை நம்பி.. பொன்னை.. பொருளை.. பணத்தை.. நிம்மதியை.. சொந்த முயற்சியை.. தினமும் இழக்கிறார்கள் நம்மவர்கள். மேலும் தலைப்பில் கருத்து முரண் வரக்கூடாது என்பதற்காகவே "---" பாவிச்சு போட்டிருக்கிறம். :):icon_idea:

நெடுக்கர், கதை நல்லாயிருக்கு!

அதைவிடக் கமலரஜனி அக்காட ஆங்கிலம், படு திறம்!!!

நன்றி புங்கையூரன். கமலரஜனி அக்கா மட்டுமல்ல.. உங்க பல பேர் உப்படி தான். இலவச ஆங்கில வகுப்புக்கள் நடத்துது அரசாங்கம். ஒரு சிலரை தவிர மிச்சாக்கள் போறதே இல்ல. அப்படி போனாலும்.. அரச உதவிப் பணம் எடுக்க ஆதாரம் காட்ட என்று.. தான் போவார்கள்..! படிக்கப் போறதில்ல..! :lol::):icon_idea:

கதை நல்லாயிருக்கு நெடுக்ஸ், நல்ல கிராமத்து வசனங்கள்!!

எமது கிராமத்து வழக்கை அடையாளம் கண்டுகொண்டதற்கு நன்றி. எனக்கொரு பயமிருந்தது.. நம்மவர்கள் அதனையும் மறந்திருப்பார்களோ என்று..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea: :icon_idea: :icon_idea:
Link to comment
Share on other sites

கதை நல்லாயிருக்கு.

அண்மைய கதைகளில் 'லண்டன் டாமில்ஸ்' ஐப் போட்டு இந்த வாங்கு வாங்குகிறீர்கள். இப்பத்தான் தமிழ் சமூகத்தோடு பழகத் தொடங்கியிருக்கிறீர்கள் போலக் கிடக்கு. :lol:

சிலர் தமிழ்நாட்டு சினிமா தொலைகாட்சி கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்டு ஊரில் இருந்ததை விட இன்னும் மோசமாக இருக்கிறார்கள்.

ஆமாம். தப்பிலி. பொதுவாக தமிழ் சமூகத்தோட பழகிறது உண்டு. ஆனாலும் இப்படி பல தரப்பட்ட அந்த சமூக அங்கத்தவர்களையும் சந்திக்கிற வாய்ப்பு முந்தி அவ்வளவா இருக்கல்ல. எந்தச் சமூகத்திலும் இளைய சமூகத்தோடு தான் அதிக உறவாடல் இருந்தது. இப்ப தான்.. எல்லா மட்டத்திலும் ஊடுருவ முடியுது..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.. எல்லா மட்டத்திலும் ஊடுருவ முடியுது..! :lol::icon_idea:

நல்லதொரு ஊடுருவல்....

:lol::icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நடக்கும் பல விடயங்களை தொட்டு சென்று இருக்கின்றீர்கள்,

நானும் இங்கு சிலரை அவதானித்திருக்கின்றேன் அவர்கள் பிள்ளைகளுக்கு பொதுவான பழக்க வழக்கங்களை சொல்லி கொடுப்பதில்லை .......

மாறாக தனது பிள்ளை அந்த படிப்பு படிக்குது உன்ரபிள்ளை என்ன படிக்குது ? ரியூசனுக்கு எங்கு விடுகின்றாய் நான் ஒரு வெள்ளையிடம் விடுகின்றேன் என்று பெருமை பேசுவார்கள் பிள்ளைகளைப்பார்த்தால் வெளியில் வரும்போது மற்றவர்களுடன் கதைக்க கூடமுடியாது முழி பிதுங்கிப்போய் இருப்பினம் அங்கிளுக்கு காய் ..... சொல்லு என்றால் ஹாய் அவ்வளவுதான் பேசுவார்கள்,

இவர்களைப்பற்றி நான் எழுத வெளிக்கிட்டால் ..... நான் ஒரு தொடர்கதை எழுதுவது போல் ஆகிவிடும். :lol:

தொடர்ந்தும் எழுதுங்கள் நெடுக்ஸ், கதை சூப்பர்.

கதை என்று கற்பனைகளையும் மற்றவர்களை இகழும்.. இட்டுக்களையும் செருகி எழுதுவதிலும் கண் முன்னால்.. நம்முன்னால் நடப்பதை பிரதிபலிபத்து எழுதுவதே.. சமூகம் தன் தவறை.. நடத்தையை இனங்காணவும்.. திருத்த வேண்டியதை திருத்தவும்.. சீர்திருத்த வேண்டியதை.. சீர்செய்யவும்.. வகை செய்யும்..! அதையே தான் நாங்கள் பிரதானமாக கையில் எடுத்துள்ளோம்..!

நன்றி தமிழரசு. உங்களின் சில கதைகளையும் படித்திருக்கிறேன். நல்ல சமூக நோக்கோடு அவை எழுதப்படுவதையும் அவதானித்திருக்கிறேன்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

கண்டதை சொல்லியிருக்கிறியள்.. கொஞ்சக் காலத்தால அனுபவிச்சதையும் சொல்லவேணும்.. அப்ப சிலதுகளோ இல்லாட்டி பலதுகளோ வித்தியாசப்படலாம்.

ஊரில பாருங்கோ சொந்தம் பந்தமெண்டு நெருக்கமா சுத்திச் சுத்தி ரண்டு மூண்டு ஒழுங்கேலை ஊருப்பட்ட சனம் இருந்ததுகள்.. ஆனா இஞ்சை.. குடும்பமெண்டு வந்தால் தாய் தேப்பன் பிள்ளையள்.. அதுவும் ஒண்டு ரண்டு பிள்ளையள்.. ஊரைப்போலை ஆறேழு பிள்ளையளும் இல்லை.. உந்த ரீவீயள் கொம்பியூட்டரள் ரெலிபோனளை அங்கால வைச்சுட்டு பாத்தால் தாய் தேப்பனுக்கு கொஞ்சமாலும் அன்போடை மனம்விட்டு உரிமையோடை கதைக்குறதுக்கு பிள்ளையள்தான் கெதி.. இந்த நாட்டு சனங்களைப்போல நாய் பூனையளை வளத்தலாவது அதுகளோட பொழுதைப் பிராக்காட்டி மனசை றிலாக்சாக்கலாம்..

இப்பிடி பிள்ளையளோட கொஞ்சம் செல்லங்குடுத்துப் பழக.. அதுகளும் சிலவேளை அப்பா அம்மா ஒண்டும் பேசாயினம் எண்டு கொஞ்சம் ஓவரா நடக்க வெளிக்கிடூதுகள்.. அடிச்சு வளக்காத பிள்ளையுமில்லை முறிச்சு வளக்காத முருங்கையுமில்லை எண்டு சொல்லுவினம்.. முருங்கை ஊரிலை எல்லோ கிடக்குது.. அதாலை அது இஞ்சை சரிப்படாது..

இப்படி கொஞ்சங்கொஞ்சமா தங்கடை இஸ்டத்துக்கு வளருற பிள்ளையள் கொஞ்சக்காலத்தால பெரிய படிப்பு அது இதெண்டு தனிய போகேக்கை.. அப்பா அம்மான்ரை சின்னச் சின்ன அட்வைசுகளையே ஏதோ பெரிய தொந்தரவெண்டமாதிரி நினைச்சு.. ரெலிபோன் எடுத்தா கதைக்காம.. இப்பிடி அப்பிடி எண்டு தூரத்தூர விலகிக் கொண்டே போறது கனவீடுகளில நடக்குது.. பாவம் தாய் துப்பனும் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு எண்ட மாதிரி பிள்ளை என்ன செய்யுறானோ.. படிக்கிறானோ.. ஒழுங்காச் சாப்பிடுறானோ எண்டு வீட்டுக்கை இருந்து யோசிச்சு யோசிச்சு.. பிள்ளையபற்றி வேறையாக்களிட்ட விசாரிச்சால் மானம் போவிடும் எண்டு இல்லாத பொல்லாத மானத்தையும் நினைச்சு.. யோசிச்சு யோசிச்சு.. பிறசரும் ஏறி... என்னத்தை சொல்ல.. என்னத்தை பறைய..??!!

இப்ப கனபேருக்கு பிறசரால கை கால் வாயெல்லாம் ஒருபக்கம் இழுக்குதாம்.. :o:D:rolleyes:

Link to comment
Share on other sites

கதை நன்றாக உள்ளது . ஆனால் இதில் ஒரு சிக்கல் நிர்வாகத்தால் தடைசெய்த ஒரு துரோகி மனிசரை ஏன் தலப்பாய் போட்டியள் ? இதைவைச்சே களவிதிப்படி உங்களுக்கே ஆப்படிச்சுபோடுவினம் . பேந்து அந்தாளின்ரை ஜல்றா கோஸ்ரியள் தொடங்குவினம். யோசியுங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன்

நீங்கள் சொன்னவிடயம் உண்மை

ஆனால் சொன்னவிதம்

இதை நீங்களும் நாங்களும் ரசிப்பது போலுள்ளது.

ஆனால் இதுவும்தமிழரது அவலங்களில் ஒன்றல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக நடப்பை நகைச்சுவையுடன் விபரிக்கும் நெடுக்கருக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

உந்த எல்லாம் வல்ல சாத்திரியிடம் இறுதிப்போருக்கு ஆரம்ப திகதியை கேட்டிருக்கலாம்

அய்ய்ய்... நம்மட சோழியண்ணா. எதிர்பார்க்கவே இல்ல. எப்படி இருக்கீங்க.. நான் உங்களுக்கு வைத்தியப் பார்க்க என்றே தானே படிக்கிறன்..! கவலைப்படாதேங்கோ சோழியண்ணா..! ஓகேவா..! :):lol:

தங்கள் நேரத்துக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி அண்ணா. :)

Link to comment
Share on other sites

கதை நன்றாக உள்ளது . ஆனால் இதில் ஒரு சிக்கல் நிர்வாகத்தால் தடைசெய்த ஒரு துரோகி மனிசரை ஏன் தலப்பாய் போட்டியள் ? இதைவைச்சே களவிதிப்படி உங்களுக்கே ஆப்படிச்சுபோடுவினம் . பேந்து அந்தாளின்ரை ஜல்றா கோஸ்ரியள் தொடங்குவினம். யோசியுங்கோ .

எந்த விதத்தில் என்ன செய்து சாத்திரி உங்களுக்கு துரோகியானார் என்று கூற முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது . ஆனால் இதில் ஒரு சிக்கல் நிர்வாகத்தால் தடைசெய்த ஒரு துரோகி மனிசரை ஏன் தலப்பாய் போட்டியள் ? இதைவைச்சே களவிதிப்படி உங்களுக்கே ஆப்படிச்சுபோடுவினம் . பேந்து அந்தாளின்ரை ஜல்றா கோஸ்ரியள் தொடங்குவினம். யோசியுங்கோ .

நன்றி.

அது வேற.. இது வேற. ஆட்டுக்க ஏன் மாட்டைக் கலக்கனும்..! தயவுசெய்து சாத்திரி என்ற கள உறவோடு நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. அவர் நமக்கு நல்ல நண்பர். உங்களுக்கு அவரோட தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தா.. அதை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கோ. இந்த தலைப்பு அவருக்கானதல்ல..! இது நிஜ சாத்திரிகள் பற்றியது.. மட்டுமே..! :):icon_idea:

உந்த எல்லாம் வல்ல சாத்திரியிடம் இறுதிப்போருக்கு ஆரம்ப திகதியை கேட்டிருக்கலாம்

இதுக்கையும் அரசியலா. ஒருவேளை புளொட்டு ராஜீவ் காந்திக்கு சாத்திரம் சொல்லுற சாத்திரியோட பேசி இருந்தா.. தமிழீழம் இல்ல.. இப்ப மாலைதீவையாவது ஆட்சி செய்திருக்கலாம். :lol::D

Link to comment
Share on other sites

உந்த எல்லாம் வல்ல சாத்திரியிடம் இறுதிப்போருக்கு ஆரம்ப திகதியை கேட்டிருக்கலாம்

மாலைதீவு தாக்குதலும் இந்த நாள் பாக்காததால் தான் பிழைச்சதாம்.மெய்யே?? :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக நடப்பை நகைச்சுவையுடன் விபரிக்கும் நெடுக்கருக்கு பாராட்டுக்கள்

கதை சொல்வது போல நிஜத்தில... நடக்காதவைக்கு இது நகைச்சுவை. நடக்கிறவைக்கு கடுப்பு..! அந்த வகையில் நிலாமதி அக்காவிற்கு நகைச்சுவையாக அமைந்துள்ளது. நன்றி அக்கா..! :)

Link to comment
Share on other sites

நல்ல கதை நெடுக்ஸ்.

என்ன, இங்கேயெல்லாம், எம்மவருக்கு, மொழிப் பிரச்சனை இருப்பதால், பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்று தெரிவதில்லை. மேலும் இங்குள்ள பல பள்ளிக்கூடங்களில் பாடங்கள் நன்றாகவே நடத்தப்படும். என்றாலும் ரியூஷன் ஒரு பேஷனாகி இருக்கிறது. பிள்ளைகள் பாடசாலை homework செய்யவும் ரியூசனுக்கு போய் காசை விரயம் செய்வதை கவனித்துள்ளேன்.

கதை நன்றாக உள்ளது . ஆனால் இதில் ஒரு சிக்கல் நிர்வாகத்தால் தடைசெய்த ஒரு துரோகி மனிசரை ஏன் தலப்பாய் போட்டியள் ? இதைவைச்சே களவிதிப்படி உங்களுக்கே ஆப்படிச்சுபோடுவினம் . பேந்து அந்தாளின்ரை ஜல்றா கோஸ்ரியள் தொடங்குவினம். யோசியுங்கோ .

துரோகி?

ஒருமனிதனை எப்படியெல்லாம் திடீரென்று தூற்றுகிறீர்கள்.

அதுசரி, தமிழராயிற்றே.

Link to comment
Share on other sites

தலைப்பு நிஜ சாத்திரியை குறிக்கிறது கு.சாண்ணா. நிஜ சாத்திரிகளை எல்லாம் வல்லவராக நினைக்கிற எமது சனத்தின்ர மூட நம்பிக்கைகளின் மையமே கதை..! அவையை நம்பி.. பொன்னை.. பொருளை.. பணத்தை.. நிம்மதியை.. சொந்த முயற்சியை.. தினமும் இழக்கிறார்கள் நம்மவர்கள். மேலும் தலைப்பில் கருத்து முரண் வரக்கூடாது என்பதற்காகவே "---" பாவிச்சு போட்டிருக்கிறம். :):icon_idea:

என்றாலும் களத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, தலைப்பு இந்த நேரத்துக்கு சரியானதாகத் தெரியவில்லை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை நெடுக்ஸ்.

என்ன, இங்கேயெல்லாம், எம்மவருக்கு, மொழிப் பிரச்சனை இருப்பதால், பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்று தெரிவதில்லை. மேலும் இங்குள்ள பல பள்ளிக்கூடங்களில் பாடங்கள் நன்றாகவே நடத்தப்படும். என்றாலும் ரியூஷன் ஒரு பேஷனாகி இருக்கிறது. பிள்ளைகள் பாடசாலை homework செய்யவும் ரியூசனுக்கு போய் காசை விரயம் செய்வதை கவனித்துள்ளேன்.

நன்றி அண்ணா.

பல பெற்றோர் நினைக்கினம்.. இங்க இங்கிலாந்தில் படிக்கிறது ஊரில படிக்கிறது போல என்று. ஆனால் இங்க கொஞ்சம் வேறுபாடு உண்டு. அங்கே போட்டிப் பரீட்சைக்குப் படிக்கிறார்கள். இங்கே தரமறி பரீட்சைக்குப் படிக்கிறார்கள். அங்கே பல்கலைக்கழக நுழைவு இன்றேல்.. வேறு வழி கண்டறிவது கடினம். இங்கே பல்கலைக்கழகம் போக பல்பேறு வழிகள் உள்ளன.

அதுமட்டுமன்றி ஊரில் சாதாரண தரமோ.. உயர்தரமோ.. குறித்த ஆண்டில் ஒரு தடவை தான் தோற்றலாம். ஆனால் இங்கு சாதாரண தரத்தில் கூட.. ஒரு பாடத்தையே பகுதி பகுதியாக பிரித்து ஆண்டுக்கு பல தடவை தோற்ற வைத்து சித்தியடைய வைக்கிறார்கள்.

பள்ளிப் படிப்பிப்புக்களின் தரம் ஊரில் கிரமமாக பரிசோதிக்கப்படுவதில்லை. ஆனால் இங்கு அவை கிரமமாக பரிசோதிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு தகுந்த வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன.

இருந்தும் எம்மவர்கள்.. பிள்ளைகளுக்கு அதிக வேலைப்பளு உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மணித்தியாலத்துக்கு 20.. 25 பவுன் கொடுத்து படிக்க அனுப்புகிறார்கள். அங்கே அவர்கள் பள்ளியில் படித்ததையே திருப்பிப் படிக்கிறார்கள். பல மாணவர்கள் பெற்றோரின் நிர்ப்பந்தத்திற்காகவே இப்படிப் படிக்கின்றனர். இதனால் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் எதிர்பார்க்கும் சுய கற்றல் ஆற்றல் இன்றி மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.

தமிழ் பெற்றோர் ஒன்றை மனதில் இருத்த வேண்டும். இங்கிலாந்து சிறீலங்கா அல்ல. அங்கு வேறு வகையான கல்வித்திட்டம் நுழைவு முறைமைகள். இங்கு இலகுபடுத்திய செயல்முறை ரீதியான கல்வித்திட்டமும்.. கூடிய அளவு திறந்த நுழைவும்.. எல்லோருக்கும் உயர் கல்வி வாய்ப்பும் என்பது அமுலில் உள்ளது. இங்கே பல்கலைக்கழகம் போவது சாதனை அல்ல.. தேவை..! அங்கே தான் அது சாதனை.. காரணம் அங்கு இலவசக் கல்வி.. போட்டிச் சூழல்..!

பல பெற்றோர் தாம் சிறீலங்காவில் இழந்த கல்வியை எண்ணி இங்கிலாந்தில் பிள்ளைகளைப் போட்டு வாட்டி வதைக்கின்றனர். இது மிகவும் தவறான ஒரு அணுகுமுறை. இதனால் பல்கலைக்கழகத்தில் அது எதிர்பார்க்கும் திறமைகள் இன்றி மாணவர்கள் உள் நுழைவதையே ஊக்குவிக்க முடிகிறது. இதனால் பெற்றோர் அல்ல சிரமப்படுவது. மாணவர்களே. அதனால் தான் பல தமிழ் மாணவர்கள் தொடங்கிய பட்டப்படிப்பையே நிறைவு செய்ய முடியாமல் இடை நடுவில் விட்டு வேறு துறைகளுக்கு தாவித் தாவி காலத்தையும் அரசின் நிதிக் கடனையும் வீணாக்குகின்றனர்..!

இதனை தமிழ் பெற்றோர் நன்கு உணர்ந்து கொண்டு செயற்படுவது அவசியம்..! இதை.. உணரும் பக்குவம்.. படித்த பெற்றோரில் இருந்து சாதாரண பெற்றோர் வரை அநேகரில்.. இருப்பதாகத் தெரியவில்லை.

இதனை இங்கு எழுத வாய்ப்பளித்த ஈஸ் அண்ணாவுக்கு மீண்டும் நன்றி. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும் களத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, தலைப்பு இந்த நேரத்துக்கு சரியானதாகத் தெரியவில்லை. :(

நாமே ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி வைத்துக் கொண்டு அதற்குள் தான் நிற்போம் என்ற நிலையில் இருந்து பார்ப்பதால் வரும் குழப்பம் இது என்று நினைக்கிறேன். இந்தத் தலைப்பு அந்த வழக்கத்தை மாற்ற முனைந்தால் அதுவும் ஒரு வகை சீர்திருத்தமாகவே கருத்தப்பட வேண்டும்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.