Jump to content

இசைப்பிரியா படத்துக்கு அம்மா அக்கா எதிர்ப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இசைப்பிரியா படத்துக்கு அம்மா அக்கா எதிர்ப்பு!
NT_140327150245000000.jpg
விடுதலைபுலிகள் அமைப்பின் ஊடக பிரிவில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்தவர் இசைப்பிரியா. இலங்கையில் நடந்த இறுதி போரில் சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இசைப்பிரியா ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.
 
இசைப்பிரியாவின் வாழ்க்கையை, போர்க்களத்தில் ஒரு பூ என்ற பெயரில் சினிமாவாக எடுத்து வருகிறார்கள். கன்னட மொழி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கணேசன் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். படத்தின் பூஜையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, புலவர் புலமைப்பித்தன் இளையராஜா கலந்து கொண்டனர். அனு என்ற புதுமுகம் இசைப்பிரியவாக நடித்து வருகிறார்.
 
படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வரும் நிலையில் என் மகள் கதையை சினிமாவாக எடுக்க கூடாது என்று லண்டனில் வசிக்கும் இசைப்பிரியாவின் தாய் வேதரஞ்சனியும், அக்கா தர்ஷினியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இதுபற்றி அவர்கள் கூறியிருப்பதாவது: இசைப்பிரியா எங்கள் குடும்பத்து செல்லப் பெண். அவள் ஒரு போராளியாக வளர்ந்தாள், வாழ்ந்தாள். அவளது கொடூர மரணத்தின் சோகத்தில் இருந்து நாங்கள் விடுபடவில்லை. இந்த நிலையில் அவளது கதையை சினிமாவாக எடுப்பதாக கேள்விப்பட்டோம். இணைய தளத்தில் அது தொடர்பாக தேடிய போது அந்தப் படத்தின் விளம்பரங்கள் ஆபாசமாகவும், அரைகுறை உடையுடன் இருந்தது. இது எங்களை மேலும் கவலைக்குள்ளாக்குகிறது. தயவு எங்கள் இசைப்ரியாவின் வாழ்க்கையை கொச்சைப்படுத்தாதீர்கள். அவளை இன்னொருமுறை பலாத்காரம் செய்யாதீர்கள். இசைப்பிரியா பற்றி படம் எடுப்பதை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
 
"இசைப்பிரியாவை களங்கப்படுத்தும் ஒரு காட்சிகூட படத்தில் கிடையாது. போர்க்களத்தில் நடந்த ஆதாரத்துடன் வெளியான உண்மையைத்தான் படமாக எடுக்கிறோம். இலங்கையில் நடந்த கொடூரத்தை தமிழ் மக்கள் உணர வேண்டும் என்பதற்காகத்தான் படம் எடுக்கிறோம்" என்று பட தயாரிப்பு தரப்பு கூறியிருக்கிறது. (அருகில் உள்ள படத்தில் இசைப்பிரியாவும், இசைப்பிரியாவாக நடித்து வரும் அனுவும்)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை, கட்டுரை, கவிதை, சினிமா!

 

எங்கள் வீட்டில் நெருப்பு எரிந்தால், நாங்கள் கதை சொல்லுவோம் கட்டுரை எழுதுவோம் கவிதை வடிப்போம் சினிமாவும் எடுப்போம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.