Jump to content

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சயீட் அஜ்மல் இடைநிறுத்தம்


Recommended Posts

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சயீட் அஜ்மல் இடைநிறுத்தம்
 

 

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னிலை சுழற்பந்துவீச்சாளரான சயீட் அஜ்மல் சர்வதேச போட்டிகளிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) இன்று அறிவித்துள்ளது.

சயீட் அஜ்மலின்  பந்துவீச்சுப் பாணி விதிகளுக்கு முரணானது என கண்டறியப்பட்டதையடுத்து   அவர் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6772#sthash.SXUY3STC.dpuf

Link to comment
Share on other sites

சயிட் அஜ்மால் ஐ.சி.சி.யினால் அதிரடியாக நீக்கம்: முறையற்ற பந்து வீச்சு என நிரூபணம்

101015250_cricket_254667c_zpsf0164554.jp
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயிட் அஜ்மால் ஐ.சி.சி.யினால் அதிரடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். சயிட் அஜ்மாலின் பந்து வீச்சு முறையற்றது என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்தே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இதனால் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலிருந்து சயிட் அஜ்மால் நீக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் உள்ள அதி உயர் தொழினுட்பத்தை கொண்ட தேசிய கிரிக்கெட் மையத்தில் ஐ.சி.சி. அதிகாரிகளினால் ஆராயப்பட்டு வந்த நிலையில் சயிட் அஜ்மாலின் பந்து முறையற்றது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

37 வயதுடைய சயிட் அஜ்மால் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து பந்து வீச்சாளர்களுக்கான ஐ.சி.சி. தரப்படுத்தலில் முதல் இடத்தில் உள்ளதோடு, சர்வதேச இருபது-20 போட்டிகளில் நான்காவது இடத்தில் உள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்து பந்து வீச்சாளர்களுக்கு ஐ.சி.சி. தரப்படுத்தலில் 9ஆவது இடத்தில் உள்ளார்.

சர்வதேச டெஸ்ட் அரங்கில் 35 போட்டிகளில் பங்கேற்றுள்ள அஜ்மால் 178 விக்கெட்டுகளையும், ஒரு நாள் அரங்கில் 111 போட்டிகளில் பங்கேற்று 183 விக்கெட்டுகளையும், இருபது-20 அரங்கில் 63 போட்டிகளில் 85 விக்கெட்டுகளை சயிட் அஜ்மால் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.virakesari.lk/articles/2014/09/09/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

 

Link to comment
Share on other sites

இவரின் பந்துவீச்சை கண்டபோது முதலில் நம்பவே முடியவில்லை!! இப்பவாவது ஐசிசி கண் விழித்தது நல்ல விடயம்.. :huh:

ஆசிய நாடுகள் தலையீட்டுக்குப் பின் ஐசிசியின் செயற்பாடுகள் மந்தமாகிவிட்டன. :blink:

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலுக்குத் தடை: ஐசிசி அதிரடி
 

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் வீசும் அனைத்துப் பந்துகளும் முறையற்றதாக இருக்கிறது என்று அவர் பந்து வீசத் தடை விதித்தது ஐசிசி.

ஐசிசி. பந்து வீச்சுத் தரவரிசையில் தற்போது முதலிடம் பெற்றுள்ள சயீத் அஜ்மல் மீது இலங்கை தொடரின் போது புகார் எழுந்தது. இதனையடுத்து பிரிஸ்பனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் அஜ்மல் பந்து வீச்சின் மீது பயோ-மெக்கானிக்கல் சோதனை நடத்தப்பட்டது.

 

இதனையடுத்து சோதனை முடிவுகளை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த போது அவர் வீசும் அனைத்துப் பந்துகளும் த்ரோ என்று முடிவு கட்டிய ஐசிசி உடனடியாக அவர் பந்து வீசத் தடை விதித்தது.

ஐசிசி விதிகளின் படி பந்து வீசும்போது 15 டிகிரி வரை பவுலரின் முழங்கை மடங்கலாம் ஆனால் அஜ்மல் வீசும் அனைத்துப் பந்துகளின் போதும் இந்த விதிமுறை மீறப்பட்டு த்ரோ செய்வதாக ஐசிசி முடிவு எடுத்துள்ளது.

 

ஒருநாள், டி20, மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என்று இவர் கடந்த 3 ஆண்டுகளில் அனைத்து வடிவங்களிலிம் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

35 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அஜ்மல் 178 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 111 ஆட்டங்களில் 183 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

ஐசிசி-இன் புதிய நிர்வாகம் தற்போது முறையான பந்து வீச்சு மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஏனெனில் ஐபிஎல் உள்ளிட்ட பணமழை கிரிக்கெட் பிரபலமடைந்துள்ள நிலையில் இளைஞர்கள் எப்படியாவது அணியில் நுழைய முற்படுகின்றனர். இதனால் பந்துகளை முறையாக வீசாமல் த்ரோ செய்வதும் பல கிரிக்கெட் தொடர்களில் பல நாடுகளில் நிகழ்ந்து வருகிறது.

 

இத்தகைய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதினால் தற்போது சயீத் அஜ்மலும் சிக்கியுள்ளார்.ஆனால் ஆஸ்திரேலியா அணி துபாயில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை ஆடும் தருணத்தில் இந்தத் தடை உத்தரவு வந்திருப்பது நெருடலாக உள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அஜ்மல் தனது பந்து வீச்சு ஆக்சனை சரி செய்து கொண்டு எப்போது வேண்டுமானாலும் மறுமதிப்பீடு கோரலாம்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF/article6394272.ece

Link to comment
Share on other sites

பந்து வீசும்போது 42 டிகிரி வரை முழங்கையை மடக்குகிறார் அஜ்மல்: ஐசிசி ரிப்போர்ட்

 

பந்துவீசாமல் த்ரோ செய்ததாக பாகிஸ்தான் பந்து வீச்சாளர் அஜ்மல் சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீசத் தடை விதித்தது ஐசிசி. அஜ்மல் அனுமதிக்கப்பட்ட 15 டிகிரியைத் தாண்டி அளவுக்கு அதிகமாகவே முழங்கையை மடக்கி வீசியுள்ளார் என்று ஐசிசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐசிசி அறிக்கையில் உள்ள விவரங்களை வெளியிட்டுள்ள கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் இது குறித்து கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:

பிரிஸ்பனில் பரிசோதனை நடத்தப்பட்ட போது அஜ்மல் பந்து வீச்சு பற்றி அதிர்ச்சி தரும் விவரங்கள் வெளியாகியுள்ளன.

ஏறக்குறைய அனைத்து பந்துகளுமே த்ரோ என்பதாகவே அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

 

அதாவது, ஓவர் த விக்கெட்டில் ஆஃப் ஸ்பின் வீசும்போது, அவரது முழங்கை 37 டிகிரி முதல் 39 டிகிரி வரை மடங்குவது தெரியவந்துள்ளது.

அதே போல் ரவுண்ட் த விக்கெட்டில் ஆஃப் ஸ்பின் வீசும்போது சுமார் 41 டிகிரி முதல் 42 டிகிரி வரை அவரது முழங்கை மடங்குகிறது.

தூஸ்ரா பந்துகளை வீசும்போது 40 டிகிரியும், ரவுண்ட் த விக்கெட்டில் வேகப்பந்துகளை வீசும்போது 38 டிகிரியும், ஓவர் த விக்கெட்டில் வேகப்பந்து வீசும் போது 42 டிகிரியும் அவரது முழங்கை மடங்குகிறது.

 

இந்த அறிக்கை வெளிவந்த பிறகுதான் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் யோசனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு விபத்து ஏற்பட்டதால் இந்த நிலை என்று அஜ்மல் தரப்பினர் கூறினாலும் சர்வதேச கிரிக்கெட்டில் த்ரோவை அனுமதிக்க முடியுமா? மருத்துவக் காரணங்களுக்காக த்ரோவை அனுமதிப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்ற கேள்விகள் இப்போது பாகிஸ்தான் தரப்பிலேயே பேசப்பட்டு வருகிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-42-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/article6407849.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.