Jump to content

மறுபடியும் உளறி கொட்டிய குஷ்பு -அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?


Recommended Posts

மறுபடியும் உளறி கொட்டிய குஷ்பு -அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

 
2.jpgகுஷ்புவால் கொஞ்சம் நேரம் கூட சும்மா இருக்க முடியாது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு வாயை வைத்து சும்மா இல்லாமல் கற்பை பற்றி தப்பாக பேசி பல பேரிடம் திட்டுகளையும், அவமரியாதையும் பெற்று கொண்டவர்.அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் கலைஞருக்கு வலது கை போல் செயல் பட்டார். பின்பு ஆட்சி மாறிய பிறகு சினிமா தயாரிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார்.

 

சினிமாவை பற்றியும் அரசியல் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் உளறி ரசிகர்களிடம் மொக்க வாங்கவது இவரின் வழக்கம். தற்போது மறுபடியும் ஒரு அனல் பறக்கும் விஷயத்தை பற்றி அவதுறாக பேசியுள்ளார் குஷ்பு.

அதாவது திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதில் தவறில்லை எனும் தொனியில் நடிகை குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.

 

வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷ் சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டர் மற்றும் ‘ஜிகர்தண்டா’ படத்தில் வன்முறை காட்சிகள், சிகரெட் மற்றும் மது அருந்தும் காட்சிகள் இருப்பது போன்றவற்றுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.

வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அப்படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஒரு நடிகர் நல்லது செய்யும்போது, அதனை யாருமே பின்பற்றுவது இல்லை. ஒரு நடிகர், ஏழைகளுக்கு உதவுவது, நன்கொடைகளை வழங்குவது, சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உள்ளிட்டவற்றை செய்கிறார். அதையெல்லாம் யாரும் பின்பற்றாதபோது, சிகரெட் பிடிக்கும் விஷயத்தை மட்டும் கருத்தில்கொள்வது எந்த வகையில் சரி?” என்று கருத்துகளை பதிந்துள்ளார்.

இது பற்றி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பல பேர் குஷ்புக்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்த வந்த வண்ணம் உள்ளனர்.

http://tamilnewsbbc.com/2014/08/15/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் நான் குஷ்புவின் பக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் நான் குஷ்புவின் பக்கம்.

எந்த பக்கம் ரகு, முன்பக்கமா, பின்பக்கமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் கேட்டு என்னை சங்கடப்படுத்தப்படாது. இரண்டுபக்கமும்தான்....ஹி...ஹி..ஹீ....! :D

Link to comment
Share on other sites

இப்படியெல்லாம் கேட்டு என்னை சங்கடப்படுத்தப்படாது. இரண்டுபக்கமும்தான்....ஹி...ஹி..ஹீ....! :D

அண்ணாச்சி இது நல்லாயில்லை. பின்விளைவுகள் மோசமாக இருக்கும். பறவாயில்லையா ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமதாஸ் இவருடன் அரசியல் பேரம் பேசினால் அவருடன் சாயக்கூடியவர்தான் இந்த குஷ்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.